ZUKO-வைக் காணப் போனோமே
-----------------------------------------------
ஆங்கிலப் புத்தாண்டுச் சிந்தனைகள்
என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதன் பிறகு முன்பே எழுதி வைத்திருந்த இரண்டு
பதிவுகள் வெளியிட்டேன். அதன் பின் தையலே தைப் பெண்ணே என்று எழுதினேன். பதிவுகள்
எழுத உடலும் உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும்
உள்ளம் அடிக்கடி உடல் உபாதையை சுட்டிக்காட்டுகிறது. சுவர் இருந்தால்தானே
சித்திரம்.?இருந்தாலும் நான் நலமாக இருக்கிறேன் என்று எனக்கு நானே தேற்றிக் கொள்ள
இதை எழுதுகிறேன்
.
ஜனவரி 12-ம் நாள் என் மச்சினனின்
பெண் திருமணம் இனிதே நடந்தது. இந்தப் பெண்பற்றி sky dive என்று முன்பே எழுதி இருந்தேன்.ஊரார் உற்றார்
முன் கொட்டியது மேளம் கட்டினான் தாலி,கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய பெண்ணின் கை
பிடித்து வரனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் என் மச்சினன்.திருமணம் முடிந்த கையோடு
மாலை என் மனைவியின் அக்காள் மகள் வீட்டுக்குக் கூட்டிப்போனார்கள்.அவர்கள்
இல்லத்துக்குச் சென்று நாட்கள் பல ஆகி இருந்தன. இந்த முறை எங்கள் விஜயம்
முக்கியமாக ZUKO வைப் பார்ப்பதற்கென்று இருந்தது. என்
இளைய பேரனின் வற்புறுத்தலும் ஒரு காரணம் zuko யாரென்று சொல்ல
வில்லையே. “எங்களைப் பார்க்க என்று யாரும் வருவதில்லை. ஆனால் zuko வைப்
பார்க்க மட்டும் எல்லோரும்வருகிறார்கள்” என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள் ZUKO ஒரு
சைபீரியன் ஹஸ்கி நாய். நாய் என்று
சொன்னால் நம்பமுடியாது. நரி மாதிரி இருக்கிறது. ஆறு வார ஆண் நாய்க் குட்டி. சுமார்
40,000/ ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். என் பேரனுக்கு அதேபோல் ஒரு நாய்
வாங்கி வளர்க்க வேண்டுமாம் . நாய் நம் வீட்டைக் காக்கும் என்பதைவிட நாம்தான்
இம்மாதிரி நாய்களைக் காபந்து செய்ய வேண்டும் . ஏமாந்துஇருந்தால் நாயையே லவட்டிக்
கொண்டு போய் விடுவார்கள். பனிப்பிரதேசத்தில் sledge வண்டியை இழுக்க
உபயோகமாகும் நாய். நம் நாட்டு தட்ப வெட்பத்துக்குப் பழக்கமான pedigree
இது. குரைப்பதில்லை. ஊளையிடுகிறது.
செல்லி என்று பெயருடன் நாங்கள்
வளர்த்த cocker spaniel நாய்க்குப் பிறகு செல்லப் பிராணி வளர்ப்பையே
தவிர்த்து வருகிறோம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நாய் வளர்ப்பது பலருக்கும்
இடைஞ்சலாகும். என் பேரன் பிடிவாதமாய் இருக்கிறான். சாதக பாதகங்களை அலசி நாய்
வாங்கி வளர்ப்பதில் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் மகனும் மருமகளும்.
பார்ப்போம். எது வெல்கிறது என்று. அறிவா உணர்வா.?.
சொகுசாக சூகோ பீன் இருக்கையில் |
அரவணைப்பில் சூகோ |
இப்படியிருக்கும்வளர்ந்தால் |
நாயா நரியா.? |
இந்த நாயைப் பற்றிய செய்திகளுக்கு பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Siberian_Husky
http://en.wikipedia.org/wiki/Balto
இரண்டாவது சுட்டி பால்டோ என்னும் நாயைப் பற்றியது. கடுங்குளிரிலும் உயிர் காக்கும் மருந்தை ஸ்லெட்ஜ் வண்டி மூலம் கொண்டு சென்ற பால்டோவுக்கு சிலை யெழுப்பி நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
இரண்டாவது சுட்டி பால்டோ என்னும் நாயைப் பற்றியது. கடுங்குளிரிலும் உயிர் காக்கும் மருந்தை ஸ்லெட்ஜ் வண்டி மூலம் கொண்டு சென்ற பால்டோவுக்கு சிலை யெழுப்பி நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
.
.
அன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் உடல் நலமுடன் திகழ வேண்டுகின்றேன்.
பதிலளிநீக்குவெல்லப்போவது அறிவா உணர்வா என்பது மிக கடினமான கேள்வி. எங்கள் வீட்டில் அல்சேஷனுக்கும் பாமரேனியனுக்கும் பிறந்த ஒரு நாயை பல வருடங்கள் வளர்த்தோம். பார்க்க ஓனாய் மாதிரி இருக்கும். கடைசியில் அது நோய்வாய்ப்பட்டு இறந்த போது எங்களால் அதிலிருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகின.
பதிலளிநீக்குபார்ப்போம். எது வெல்கிறது என்று. அறிவா உணர்வா.?.
பதிலளிநீக்குஐயா, உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும்... பதிவுகள் எல்லாம் அப்புறம்...
பதிலளிநீக்குநாயை வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்ப்பதை விட கடினம் என்பார்கள். ஆனால் அதைவிட கடினம் அதைப் பிரியும்போது ஏற்படும் சோகம்.
பதிலளிநீக்குதாங்கள் தந்த இரண்டு விக்கிபீடியா இணைப்புகளைப் பார்த்தேன். அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி!
உடல் நலத்தில் கவனமாக இருங்கள் பாலு சார்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவில் போட்டிருக்கும் போட்டோவைப் பார்த்தேன். நாயா ? நரியா? என்கிற சந்தேகம் வருகிறது.
விலையைக் கேட்டால் மயக்கமே வருகிறது.
விக்கி இணைப்பு கொடுத்து பதிவை மேலும் சிறப்பாக்கி விட்டீர்கள்.
அன்பை பொழியும் உயிர்கள் குட்டிப்பயங்கள்.
பதிலளிநீக்குஉடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா
பதிலளிநீக்குநாய் வீட்டையும் நம்மையும் காக்கிறதோ இல்லையோ, நாயை நாம் காபந்து பண்ணவேண்டியது அவசியம் என்பதை மிகச் சரியாக சொன்னீர்கள். இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதோடு அதற்கு போஷாக்கான உணவு, மருத்துவம், இதர செலவுகள் என்று சொத்தையே எழுதிவைத்தால்தான் முடியும். அன்பையும் விசுவாசத்தையும் காட்டுவதில் நாய்களுக்குள் என்ன வித்தியாசம்? நல்ல பதிவு. புதிய தகவல்களையும் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா.
பதிலளிநீக்குஉடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் சார்.
பதிலளிநீக்குஇது போன்ற நரி மாதிரி நாய்களை அமெரிக்காவில் பார்த்து இருக்கிறேன்.
நாயை வளர்ப்பது மிகவும் கஷ்டம் தான். அதை வெளி இடங்களுக்கு அழைத்து போகும் போது அந்த நாயின் பாதுகாவலர்கள் படும் பாட்டை பார்த்து ஐயோ பாவம்! என்று தான் நினைத்து இருக்கிறேன்.
நாய் குழந்தை மாதிரி வளர்க்கும் நம்மிடம் இருக்கும், ஆனால் மற்றவர்களுக்கு பயம் தான்.
பேரனின் ஆசை உண்ர்வு சம்பந்த பட்டது அல்லவா?அறிவை உணர்வு வெல்லலாம். பார்ப்போம்.
உங்கள் சுட்டிகளைப் பார்க்கிறேன்.
உடல் நலத்தினை பார்த்துக் கொள்ளுங்கள்.....
பதிலளிநீக்குநாயா நரியா? படம் பார்த்தபோது எனக்கும் அதே சந்தேகம்.....
செல்ல பிராணிகளை பேணுவது அதுவும் முதிர்ந்த வயதில் மிகவும் சிரமம். என்னுடைய மகளுக்கு எப்படியாவது ஒரு நாயை வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல். ஆனால் இதுவரை எங்களுடைய எதிர்ப்பால் அது சாத்தியமாகவில்லை. தனி வீடுதான் என்றாலும் நாய் போன்ற பிராணிகளை பேணும் பொறுமை எனக்கோ என் மனைவிக்கோ இல்லை.
பதிலளிநீக்குஉங்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.நன்கு ஓய்வெடுங்கள். சமீபத்திய திரைப்படமான 'தங்க மீன்கள்' தன் மகளுக்குப் பிடித்த பக் (PUG) நாய் வாங்கத் தந்தை என்ன பாடு படுகிறார் என்று துல்லியமாக விளக்கியது. என் குழந்தைகளுக்கும் நாய் வளர்க்க ஆசைதான்,ஆனால் சகதர்மினிக்குப் பயம். முக்கியமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் கடினம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
@ expatguru
@ இராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்
@ வே. நடனசபாபதி
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ நண்டு@ நொரண்டு
@ கரந்தை ஜெயக்குமார்
@ கீதமஞ்சரி
@ கோமதி அரசு
@ வெங்கட் நாகராஜ்
@ டி.பி.ஆர்.ஜோசப்
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
வருகை தந்த அனைவருக்கும் என் நென்க்சார்ந்த நன்றிகள். என் உடல் நலனில் அக்கறை பாராட்டும் அனைவருக்கும் நன்றி. உடல் நலம் பேணுதல் ஓரளவுக்குத்தான் நம்மால் சாத்தியம். ஆனால் அதனால் பிறருக்கும் உடனிருக்கும் உறவுகளுக்கும் கஷ்டம் கொடுப்பதுதவிர்க்க முடியாததாய் விடுகிறது. என் உடல் சுகவீனம் குறித்து எழுதுவதா வேண்டாமா என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கிறது.தெரிவிப்பதால் என்ன மாதிரி சுகக் குறைவுகள் ஏற்படுகிறடு என்பது தெரிய வருவதால் நஷ்டம் ஏதுமில்லை. பிறிதொரு சமயம் எழுதுவேன். நாய் வளர்ப்பு பற்றி அனுபவப் பட்டவர்கள் நாங்கள். அது பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன். மீண்டும் நன்றியுடன்.
GMB அய்யா அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குநீங்கள் நலமாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். Zuko – ஒரு சுவாரஸ்யமான வளர்ப்பாகவே தெரிகிறது
// செல்லி என்று பெயருடன் நாங்கள் வளர்த்த cocker spaniel நாய்க்குப் பிறகு செல்லப் பிராணி வளர்ப்பையே தவிர்த்து வருகிறோம்.//
செல்லி என்ற அந்த செல்லப்பிராணியின் நினைவுகளைப் பற்றி பதிவில் எழுதலாமே. எங்கள் வீட்டிலும் ஜாக்கி என்ற செல்லநாய் இருந்தது. அது இறந்தபோது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உங்கள் பேரனுக்காக நாய் வளர்ப்பது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நாய் வளர்ப்பது எல்லா விதத்திலும் நல்லதல்ல. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சண்டைதான் மிஞ்சும். நாய் வளர்க்க ஆசைப்பட்டால் தனி வீடு போவதுதான் நல்லது.
ஹஸ்கி இந்தியாவில் கிடைப்பதே ஆச்சரியமாக இருக்கிறது (இந்தியா தானே?).
பதிலளிநீக்குமிக மிக அழகான பெடிகிரி நாய். குழந்தைகள் இடையே கவனமாக இருக்க வேண்டும். ரொம்ப பொசஸிவ் டைப். எஞ்சாய் பண்ணட்டும்.
காபந்து என்றால் என்ன?
தங்களின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். தாங்கள் மென்மேலும் எழுதவேண்டும் என்பதே எங்கள் அவா.
பதிலளிநீக்குபதிவு அருமை ஐயா.வருத்தப்படாதீர்கள் ஐயா..உடம்பைக் கவனித்துக்கொள்ளவும்.
பதிலளிநீக்குநாயின் கண்கள் அழகு!
பதிலளிநீக்கு