என்றென்றும் எப்பொழுதும் என்னருகே
-------------------------------------------------------
ஔவையார் “இனிது இனிது ,ஏகாந்தம் இனிது” என்று கூறியதாகப் படித்த நினைவு. ஔவையர்ர் தனித்தே இருந்ததால்
அதுவே அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம் இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது
“தனிமையிலே இனிமை காண முடியுமா” சரி இப்போது இந்த ஆராய்ச்சிக்குக்
காரணம் என்ன. இரண்டு மூன்றாம் முறையாக என்னைத் தனியே விட்டு விட்டு என் மனைவி பெங்களூர்
இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு “லலிதாசஹஸ்ரநாம“ பாராயணம் செய்யப் போயிருக்கிறாள்.இராஜராஜேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஒரு மில்லியன் முறை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள் இந்த ஆண்டு ஜூலை மூன்றாம் தேதியுடன் முடிவடைகிறது இதில் இவள் பங்காக ,சேது கட்டும்போது அணிலின் சேவை போல பாராயணத்தில் பங்கு கொள்ள விரும்புகிறாள். அவள் என்னிடம் அருகில் ஐயப்பன் கோவிலிலிருந்து பேரூந்து ஏற்பாடு செய்யப்
பட்டிருக்கிறது. முப்பது நாற்பது பேர் போகிறார்கள் நானும்போகட்டுமா.?என்று
கேட்டபோது நானும் மிகப் பெருந்தன்மையாக”உன்
மனசுக்குப் பிடித்ததை நீ செய்ய நான் என்றும் தடை சொல்லமாட்டேன்”என்று கூறினேன் . அவளுக்கு என்னைப் பற்றிய கவலை. காலை உணவு மதிய
உணவு எல்லாம் செய்துவிட்டுத்தான் போவாள். நானே பார்த்துக் கொள்கிறேன் என்றாலும்
அவளுக்கு மனசு கேட்காது. நேரத்துக்கு எடுத்துப் போட்டு நான் உண்ண வேண்டும் என்னும்
கவலை. அவளுக்குத் தெரியும் உணவு விஷயங்களில் நான் எப்போதுமே கவனம் செலுத்தியது
கிடையாது. ஆக்கிப் போட்டு எடுத்து உண்ண சோம்பல்படுவேன் என்பது அவள் கணிப்பு.
இருந்தாலும் மனசில் ஆண்டவன் பெயர்பாட ஆவலும் அதிகம்.என்னைத் தனியே விட்டுப் போக மனசில்லாமல் எல்லாவற்றையும்
செய்து வைத்துக் கிளம்பினாள். முதல் முறை போனபோது உண்மையைச் சொல்லப்போனால் ஒரு
படத்தில் ஜனகராஜ் ”தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்று கூவுவாரே அதுபோல் இருந்தது. ஆனால்..........போனபிறகு ஒரு
வெறுமையை உணர்ந்தேன்
காலை ஏழரை மணிக்குக் கிளம்பினாள் நான் எழுந்து காலைக் கடன்களை மட்டும்
முடித்திருந்தேன் குளிக்க வேண்டும் காலை உணவு உண்ண வேண்டும். வேலைக்காரி
எந்நேரத்திலும் வரலாம் அவளுக்குக் குறிப்பிட்ட நேரம் இல்லை. நான் குளிக்கச்
செல்லும் போது அவள் வந்தால்.....அவள் வந்து போனபிறகு குளிக்கலாம் . அதற்குள் காலை
உணவு நேரம் தவறலாம். காலை எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் தினமும் அழைக்கும் என் மகன்களின்
தொலை பேசி அழைப்பு வரும்போது அதை அட்டெண்ட் செய்யாவிட்டால் கலவரமடைவார்கள். நான்
குளிக்கச் சென்றிருக்கும்போது அழைப்பு வந்தால்...?என் கேட்கும் திறன் பற்றி நான் கூறத் தேவையில்லை குளியலைத் தள்ளிப் போட்டேன்.
குளிக்காமல் உண்ணும் பழக்கமில்லாததால் காலை உணவு உண்பதையும் தள்ளிப் போட்டேன்.
எதிலும் மனம் ஒட்டவில்லை. சரி சிறிது நேரம் கணினியில் மெயில் பார்க்கலாம் என்று
உட்கார்ந்தேன். மகனின் அழைப்பு வந்தது. வேலைக்காரி இன்னும் வரவில்லை. சரி, வழக்கத்துக்கு
விரோதமாக காலை உணவு உண்டேன். வேலைக்காரி வந்தாள். ஒன்பதே முக்கால் மணி. அவள் வேலை
செய்து போனபின் குளிக்கப் போனேன். குளிக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஏதும்
வரக்கூடாதே என்று எண்ணியே குளியல் முடித்தேன் காஃபி டிகாக்ஷன் இருந்தது.கலந்து
குடித்தேன். ஒரு வழியாக பதினோரு மணி ஆயிற்று, வாஷிங் மெஷினில் அன்றைய உடுப்புகளை
இட்டேன். ஒரு மணிநேரம் ஆகும் முடிய. காலையில் இருந்து தினசரி வாசிக்கவில்லை.
தினசரி வாசிக்காவிட்டால் நாளே சரியாக இருக்காது பதினொன்றரை மணிக்கு மனைவி தரும்
ஓட்ஸ் இன்று கிடையாது. இருந்தாலும் அவள் தொலைபேசியில் அழைத்து ஓட்ஸ் குடித்தீர்களா
என்று கேட்பாள். இல்லை அதற்குப் பதில் பிஸ்கட்டுகள் தின்றேனென்று சொல்ல வேண்டும்
பொய் சொல்லக் கூடாது அல்லவா. இரண்டு பிஸ்கட்களைத் தின்றேன் எது செய்யும்போதும் ஒரு
ரெஸ்ட்லெஸ்னெஸ் ஏற்படுகிறது. இத்தனைக்கும் நான் சமைக்க வேண்டாம் எந்த வேலையும்
செய்ய வேண்டாம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துவிட்டுப்
போயிருக்கிறாள். தினசரியைப் புரட்டுகிறேன். மனம் செல்லவில்லை. ஒரு வேளை என் மனைவி
அருகில் இல்லாததே எனக்கு இவ்வளவு குறையாகத் தெரிகிறதே ! ஒரு வேளை........ நினைக்கவே மனம் அஞ்சுகிறது மதிய உணவுக்குப் போகுமுன்
மனசில் இருப்பதைஎழுத்தில் கொட்டி விட்டேன். ஏறத்தாழ ஐம்பதாண்டு கால மண வாழ்வில்
அவளைப் பிரிந்து நான் தனியே இருந்தது கணக்குப் பார்த்தால் சில மணித் துளிகளே இருக்கும்
.அன்றொரு நாள் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது படித்துப்பார்க்கிறேன் அதைப்
பகிரவும் மனம் விழைகிறது அது இங்கே .
படம்:- நன்றி இணையம் .
![]() |
ஒருவருக்குள் ஒருவர் |
.
தங்களது எண்ணக்கிடக்கையினை உணர்ந்து எழுதியுள்ளீர்கள். பல சமயங்களில் நான் இவ்வாறு உணர்கிறேன். அவ்வாறான ஓர் நினைப்பை மனதில் நினைக்கும் அளவு இருப்பதால்தான் வாழ்க்கைத் துணைவியோ? இதே சூழல் அவருக்கும் (மனைவிக்கும்)ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய பாரத்தைத் தாங்கள் பகிர்ந்தது மனதைத் தொட்டது என்பதைவிட மனதை அதிகம் பாதித்தது எனலாம். நன்றி.
பதிலளிநீக்குஎன்றென்றும் எப்பொழுதும்
பதிலளிநீக்குஎண்ண அலைகள் ..
எண்ணிப்பார்க்க கிடைத்தது நேரம்..!
ம்ம்ம்ம்ம் வயது ஆக ஆகத் துணையைத் தேடித் தவிக்கும் மனம்! அவங்களுக்கும் இப்படித் தான் இருக்கும்.
பதிலளிநீக்குஉண்மையான அன்பு.
பதிலளிநீக்குதண்டவாளத்தில் உள்ள இரு கம்பிகளில் ஒன்று விலகிச்சென்றாலும் கூட, வாழ்கை எனும் வண்டியை ஓட்டுவது சிரமம் என்பதை நிரூபிக்கிறது தங்கள் பதிவு.
நீங்கள் இருவரும் "மேட் பார் ஈச் அதர் கபுள்ஸ்" ஐயா..
நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களின் பதிவு மனதை உருக்குகின்றது ஐயா..
பதிலளிநீக்கு//போனபிறகு ஒரு வெறுமையை உணர்ந்தேன்.. //
பதிலளிநீக்குஎக்ஸாட்லி கரெக்ட்! வீட்டில் தனிமையில் இருப்பது ஒரு வெறுமையை உணர்த்தும் தான்!
நானும் இதே மாதிரி பலதடவைகள்
உணர்ந்திருக்கிறேன்.
மனைவி என்றில்லை (இதை முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்) மகள், மகன் என்று யாராவது கூட இருந்தால் கூட இந்த வெறுமை தெரியாது.இன்னொருத்தர் வீட்டில் கூட இருந்தே பழகிவிட்டதால் இந்த தனிமை நம்மை பாதிக்கிறது.
அந்தக் கால கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் ஆகப் பெரிய அர்த்தமும் இது தான்!
அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இந்த வெறுமை கொஞ்சம் குறைந்து இருக்கும். வெளிக்கதவை திறந்து வைத்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாலோ, இல்லை காரிடாரில் உலாத்தினாலோ, "என்ன சார், எப்படி இருக்கீங்க...?" என்று கேட்டு அளவளாவுதற்கோ, அரசியல் பேசவோ யாராவது கிடைப்பார்கள்.
பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் இருந்தால் கூட சில மணி நேரங்களை சமாளித்து விடலாம்.
டி.வி.யை இயக்குங்கள். வீட்டில் இன்னொருத்தர் இருக்கிற உணர்வு ஏற்படும். இல்லை, ஜன்னல் வழியாக ரோடு சந்தடிகளைப் பார்க்கிற மாதிரி செளகரியம் இருந்தால் ஜன்னல் அருகே ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பாருங்கள். உங்களுக்கென்று மிகப் பிடித்தமான ஒரு வேலையில் ஆழ்ந்த ஈடுப்பாடோடு அமிழ்ந்து போனாலும் ஓரளவு நேரம் போவது தெரியாது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருகே எப்போதுமே இருந்தால் சிலருக்கு ......
பதிலளிநீக்குWIFE IS A KNIFE ஆகத்தெரியும்.
வேறு சிலருக்கோ ......
அருகே இல்லாது போனால்
WHAT IS LIFE WITHOUT WIFE
எனத்தோன்றும்.
மொத்தத்தில் ......
W Wonderful
I Instrument
F For
E Enjoyment !
WIFE is a
Wonderful
Instrument
For
Enjoyment
;)))))
vgk
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமன்னிக்கவும்... (இன்னும்) குழப்பமாக இருக்கிறீர்கள் ஐயா...
பதிலளிநீக்கு// எங்கள் வாழ்வும் வளமும் நீ தந்த வரமே,
பதிலளிநீக்குஅன்றுபோல் இன்றும் என்றும்
தொடர உன் ஆசி வேண்டும் இறைவா,
என இறைஞ்சவே இக்கவிதை சமர்ப்பணம். //
என்ற உங்கள் கவிதை வரியையே இங்கு கருத்துரையாக பாவிக்கிறேன்.
வாழ்க்கையின் உண்மையை தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇதுபோன்ற எண்ணங்கள் தேவைதானா என்று தோன்றுகிறது. நாளை என்ற ஒரு நாளைப் பற்றி எண்ணாமல், இந்நாளை மகிழ்வாய்க் கழிப்போம்
பதிலளிநீக்குஇதுபோன்ற எண்ணங்கள் தேவைதானா என்று தோன்றுகிறது. நாளை என்ற ஒரு நாளைப் பற்றி எண்ணாமல், இந்நாளை மகிழ்வாய்க் கழிப்போம்
பதிலளிநீக்குYou have decribeed your feeling of loneliness in as many words.AS for me I am very much accustomed to this loneliness when my wife leaves for blore or chennai.She is in chennai right now! I feel that despite the loneliness we get experience in managing everything oursleves and wont feel bieng left in da lurch.sorry I cant write in chaste Tamil.kindly bear with me!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅறுபது அகவையைக் கடந்த அனைவருக்கும் தற்காலிக தனிமையால் ஏற்படும் எண்ணங்களை அழகாய் கவிதையைப்போல் சொல்லியிருக்கிறீர்கள். ‘ஆசி கொடு இறைவா’ கவிதையையும் படித்தேன். உள்ளத்திலிருந்து வந்த உணர்ச்சிபூர்வமான கவிதை அது. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
எண்ணிப்பார்க்க எனக்குத் தனியாக நேரம் தேவைப்பட்டது இல்லை மேடம் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வயதாக ஆக துணையின் தேவை அதிகம் உணரப்படுகிறது என்றே நினைக்கிறேன் அவளுக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும் .வருகைக்கும்பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ இல.விக்னேஷ்
தண்டவாளம் , ஒரு வண்டியில் பூட்டிய இரு மாடுகள், என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் நாங்கள் எங்களைஇருவராக உணர்ந்தது இல்லை என்றே நினைக்கிறேன் அதையே படத்தில் depict செய்ய முயன்றிருக்கிறேன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி விக்னேஷ்,
பதிலளிநீக்கு@ ஜீவி
/மனைவி என்றில்லை (இதை முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்)/ குறிப்பிட்டிருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்னைப் பொறுத்தவரை யார் இல்லாவிட்டாலும் அவள் என்னுடன் இருக்கவேண்டுமென்றே விரும்புகிறேன் என் தனிமை ஆளரவமற்ற தனிமையைக் குறிக்கவில்லை. மனசின் வெறுமையைக்குறித்தது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம் வருகைக்கும் கருத்தூட்டத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ஜீவி
/மனைவி என்றில்லை (இதை முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்)/ குறிப்பிட்டிருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்னைப் பொறுத்தவரை யார் இல்லாவிட்டாலும் அவள் என்னுடன் இருக்கவேண்டுமென்றே விரும்புகிறேன் என் தனிமை ஆளரவமற்ற தனிமையைக் குறிக்கவில்லை. மனசின் வெறுமையைக்குறித்தது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம் வருகைக்கும் கருத்தூட்டத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வை.கோபு சார்
ஒவ்வொருவர் அனுபவம் ஒவ்வொரு மாதிரி. நான் என் மனைவியை ஒரு போகக் கருவியாக என்றும் நினைத்ததில்லை. நினைக்கவும் முடியாது. வித்தியாசமான பின்னூட்டத்துக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வை.கோபு சார்
ஒவ்வொருவர் அனுபவம் ஒவ்வொரு மாதிரி. நான் என் மனைவியை ஒரு போகக் கருவியாக என்றும் நினைத்ததில்லை. நினைக்கவும் முடியாது. வித்தியாசமான பின்னூட்டத்துக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
எனக்கு ஒரு குழப்பமும் இல்லை டிடி. உள்ளம் உணர்ந்தது எழுத்தில் .அவ்வளவுதான் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ தி.தமிழ் இளங்கோ
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
தேவையான எண்ணங்களே தோன்ற வேண்டுமென்பதில்லை. எதை வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ அதுவே முன் வந்து நிற்கும் . மனம் ஒரு கடிவாளமிடப்படாத குதிரை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ hns.mani
எனக்கு பழக்கப்படாத அனுபவம் மேலும் என் மனைவிக்கும் என்னைத் தனியே விட்டுப் போவதில் மனமிருப்பதில்லை. எனக்காக நிறையவே விட்டுக் கொடுப்பவள். வருகைக்கு நன்றி மணி.
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
வருகைக்கும் புரிதலுடன் எழுதிய பின்னூட்டத்துக்கும் நன்றி சார். கவிதையை ரசித்ததற்கும் நன்றி
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
வருகைக்கும் புரிதலுடன் எழுதிய பின்னூட்டத்துக்கும் நன்றி சார். கவிதையை ரசித்ததற்கும் நன்றி
உங்களுக்கு எழுதறதுக்குன்னு தனியா விஷயம் தேவையைல்லேங்கறதை மறுபடியும் ப்ரூஃப் பண்ணியிருக்கீங்க. ஒரு காலைப் பொழுதை தனிமையில் கழிக்க நேர்ந்ததை எவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாக கூறியுள்ளீர்கள். முதுமையில்தான் தனிமை அதிகம் வாட்டுகிறது. நான் ஏறக்குறைய பத்து வருடங்கள் மனைவி மகள்களை பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாத தனிமை இப்போதுதான் தெரிகிறது. ஒரு மணி நேரம் குடும்பத்தார் இல்லையென்றால் கூட தனிமையாக தெரிகிறது.
பதிலளிநீக்கு@ வை.கோபு சார்
பதிலளிநீக்கு//ஒவ்வொருவர் அனுபவம் ஒவ்வொரு மாதிரி.//
ஆம் ஐயா. அதையே தான் நானும் சொல்லியுள்ளேன்.
//நான் என் மனைவியை ஒரு போகக் கருவியாக என்றும் நினைத்ததில்லை. நினைக்கவும் முடியாது. //
தாங்கள் அவ்வாறு நினைப்பதாக நான் சொல்லவே இல்லையே, ஐயா.
ஒருவேளை சிலர் அப்படியே நினைத்தாலும் அதில் தவறேதும் இல்லையே ஐயா.
இன்று இவ்வளவு திருமணங்கள் நிகழ்கின்றன என்றால் அதற்கு என்ன காரணம்? ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் ஆதரவுமாக இருந்து ஏதோவொரு ஒழுங்கு + கட்டுப்பாட்டுக்குள் இன்பமாக வாழ வேண்டும் என்பதால் மட்டும் தானே !
சில நாடுகளில் மக்கட்தொகை கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகின் மக்கட்தொகை பெருகி வருவதற்கு என்ன காரணம்?
இதன் பின்னனியில் உள்ள மிகப்பெரிய இன்பம் மட்டும் தானே !
;)))))
//வித்தியாசமான பின்னூட்டத்துக்கு நன்றி சார்.//
மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் VGK
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர். ஜோசப்
உள்ளம் உணர்ந்ததைப் பதிவாக்கி விட்டேன். பாராட்டுக்கும் மேலான பின்னூட்டத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கோபு சார்
ஆண்பெண் இன்பம் அதன் விளைவுகள் எல்லாம்சரிதான்.மனைவியை ஒரு போகக் கருவியாக சிந்திப்பதுதான் நிரடுகிறது. மீள் வருகைக்கும் பின்னூட்டத்தை விவரித்ததற்கும் நன்றிசார்.
உள்ளத்து உணர்வை படிப்பவரும்
பதிலளிநீக்குஉணரும் வண்ணம் எழுதியது மனம் கவர்ந்தது
தவிர்க்க இயலாதவைகளை ஏற்றுக் கொண்டுதானே
ஆகவேண்டும்.
பதிலளிநீக்கு@ ரமணி
வாருங்கள் ஐயா வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி
//என் தனிமை ஆளரவமற்ற தனிமையைக் குறிக்கவில்லை. மனசின் வெறுமையைக்குறித்தது, //
பதிலளிநீக்குஇதை உங்கள் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கலாமே, சார்!
//இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது “தனிமையிலே இனிமை காண முடியுமா” //
இந்த பாட்டிலேயே இந்த வெறுமைக்கு மருந்திருக்கிறதே!
மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையிலே...
கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையிலே..
கடலிருந்தால் அலை இருக்கும்
தனிமையிலே..
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை..
ஆம்! தனிமை என்பது வெறுமையை
ஏற்படுத்திவிடக்கூடாது. அது வேறுவித சிக்கல்களில் கொண்டு போய் விடும்.
இயற்கையின் படைப்பில்
உலகில் எதுவுமே தனித்து விடப்படுவதில்லை.. ஒன்றிற்குள் ஒன்று உள்ளூர அடங்கியிருக்கிறது..
அந்த மருந்தை கண்டுபிடித்து துய்த்துணர்ந்து வெறுமையை விரட்டியடியுய்ங்கள்!
சக்தி இல்லையேல் சிவம் இல்லைதான் ஐயா! நாங்கள் உங்களை விட வயதில் சிறியவர்கள்தான்! நாங்கள் சொல்லுவது தவறு என்றால் மன்னிக்கவும் ஐயா! வயதாகும் போது பலருக்கும் தோன்றும் எண்ணங்கள்தான் இவை!..ஆனால் நாம் எல்லோருமே ஒரு நாள் இந்த உலகில் தனியாகத்தான் இருக்கவேண்டிய சூழ் நிலை வரலாம்! எனவே தாங்கள் மாற்றி யோசித்து, நமனதை மகிழ்விக்கும் எழுத்தையும், பாடல்களையும் கர்நாடக சங்கீதம், பஜன்ஸ், இறை உணர்வுமிக்க எம் எஸின் பாடல்கள், ஸ்லோகங்கள் - எல்லாம் ககேளுங்கள் ஐயா! நிறைய எழுதுங்கள் ஐயா! அது தங்களின் மனதை இன்னும் இளமையாக்கும்!
பதிலளிநீக்குதங்கள் மனதினை பகிர்ந்து கொண்டது மிகவும் நல்லதே! இத்தனை பேர் தங்களுக்கு அன்பர்களாகவும், நண்பர்களாகவும் கேட்டு, கருத்து பகிர்ந்து கொள்வது தங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும் இல்லையா ஐயா?!! அதை அசை போடுங்கள்! மனம் தளராதீர்கள் ஐயா!
பதிலளிநீக்கு@ ஜீவி
மீள்வருகைக்கு மிக்க நன்றி./மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையிலே...
கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையிலே..
கடலிருந்தால் அலை இருக்கும்
தனிமையிலே..
நாம் காணும் உலகில் தனிமை ஏதுமில்லை. /கூடவே நான் சேர்ப்பது ”நானிருந்தால் நினைவிருக்கும் தனிமையிலே”ஒரு காலைப் பொழுதை தனிமையில் கழித்தபோது எழுந்த நினைவோட்டங்களே பதிவானது. இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது “என்னருகே நீ இருந்தால்.....” என்னைத் தேற்றுவது என்ற முடிவோடுதான் நீங்கள் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, நன்றி
பதிலளிநீக்கு@ துளசிதர்ன் தில்லையகத்து
நண்பரே என் வலையின் முகப்பில் காணும் வாசகங்களை இன்னொரு முறை பாருங்கள். அதன் படி எழுதியதே பதிவு. என் மீது காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி
நல்ல புரிதலுடன் வாழும் தாம்பத்யத்தில் அதுவும் முதுமைப்பொழுதுகளில் கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் விட்டு விலகியிருப்பதை அது கணநேரமானாலும் விரும்புவதில்லை. தங்களுடைய மனத்தின் வெறுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதை அருமையாய் எழுத்தாகவும் பதிவு செய்யமுடிகிறது தங்களால். இப்பதிவை தங்கள் மனைவி வாசித்தால் மிகவும் பெருமை கொள்வார். இருவருக்கும் என் அன்பான வணக்கம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
நல்ல புரிதலுடன் கூடிய உங்கள் மேலான பின்னூட்டத்துக்கு நன்றி
பெரிய உண்மையை அசாதாரணமாக சொல்லியிருக்கிறீர்களோ?
பதிலளிநீக்குபதப்பட்ட மனதுக்கும் பழக்கப்பட்ட உடலுக்கும் இடையிலான போராட்டம்.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
முதல் வரி பாராட்டா.? இரண்டாவது வரியில் உடல்.... எங்கே சொன்னேன்.? வருகைக்கு நன்றி.
எல்லா வரியுமே பாராட்டு தான் ஜிஎம்பி சார்.
பதிலளிநீக்குஉடலும் மனமும் ஒட்டியிருந்தாலும் வெட்டியிருக்கு இல்லையா - அதான் போராட்டம். உடல் சொன்னதை மனம் கேட்பதில்லை மனம் சொல்வதை உடல் கேட்பதில்லை. கேட்கும் நேரங்களில் அந்த இணைப்பின் இனிமை அலாதி இல்லையா? மனம் இல்லாவிட்டால் உடலிருந்து என்ன பயன்? உடல் இல்லாவிட்டால் மனதுக்கு அவசியமே இல்லை.
இதில் நீங்க உடல்னு நீங்க சொல்லாத போனா என்ன சார்? சொல்லிப் புரிந்து கொள்ளும் வயது தாண்டி சொல்லாமல் அறிந்து கொள்ளும் வயதில் அடியெடுத்து வைத்து வருஷக்கணக்காச்சு சார்!
பதிலளிநீக்கு@ அப்பாதுரை.
சில நேரங்களில் புட்டுப்புட்டு வைத்தால்தான் புரிந்து கொள்ள முடிகிறது. சொல்லாமல் அறிந்து கொள்ளும் வயதை நானும் தாண்டி இருந்தாலும் சொல்லாததைப் புரிந்து கொள்ளும் தவறு செய்யக் கூடாதல்லவா. செய்யாத குற்றம் ஆங்கில மொழியாக்கம் எதிர் பார்க்கிறேன் . மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.
சரி.. புட்டு வச்சா போச்சு.. :)
பதிலளிநீக்கு