நாடகமேடை நினைவுகள்
-------------------------------------.
( நினைவுகள் சுமை என்று போனபதிவில் எழுதியவன் இப்போது நினைவுகள்சுகம் என்று எழுதுகிறேன். What an irony.....!)
நான் பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் என்பதை என் பழைய
பதிவுகள் மூலம் தெரிவித்திருக்கிறேன் பார்க்க ;”நான் போட்டநாடகங்கள் “என் பழைய எழுத்துக்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திருச்சியில்
குடியிருப்பில் மனமகிழ் மன்ற போட்டிக்கான துண்டுபிரசுரம் ஒன்று கண்ணில் பட்டது.
ஏற்கனவே நான் போட்ட நாடகங்கள் குறித்து எழுதி இருந்தாலும் அவற்றில் வெளியிடாத சில
நிகழ்வுகள் மனத்திரையில் வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை அந்தப் பதிவின்
பின்னூட்டமாக திரு ஜீவி எழுதி இருப்பதை மீண்டும் படிக்கும் போது மனம் மகிழ்கிறது
என்பதும் நிஜம் நாடகம் அரங்கேறியபோது கிடைத்தமகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது
. ஜீவி எழுதி இருந்தார்
ஜீவி said...
//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//
//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//
1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.
சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!
ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//
//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//
1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.
சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!
ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!
நான் பார்த்த துண்டு பிரசுரம் அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற இருந்ததை
விளம்பரப் படுத்தியது
பெங்களூரில் முரசொலி சொர்ணம் எழுதி இருந்த விடை
கொடு தாயே எனும் நாடகத்தை அப்போதைய கல்வி அமைச்சர் திருமதி கிரேஸ் டக்கர்
தலைமையில் அரங்கேற்றினோம் .
திருமதி கிரேஸ் டக்கர் முன்னிலையில் |
பணியில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து ஒத்திகை எல்லாம் பார்த்து நாடகம்
நடைபெற இருக்கும் ஒரு நாள் முன்னர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருந்தவர்
நோய்வாய்ப்பட செய்வதறியாது திகைத்து நின்றோம் நான் அந்த நாடகத்தை இயக்கி வந்ததால்
அந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியும் . இருந்தாலும் அந்த பாத்திரத்துக்கான உடல்வாகு
இல்லாததால் கதாநாயகியின் தந்தை வேடத்தில்
கால் நொண்டியாக நான் நடிக்கவும் முக்கிய கதாபாத்திரத்துக்குக் குழுவில் இருந்த
இன்னொருவரையும் போட்டு தயாரானோம் புதிய வேடத்தில் அவரும் புதுசாக ஒரு வேடத்தில்
நானும் அன்று இரவு முழுவதும் ஒத்திகை செய்து தயாரானோம்
நாடகத்தில்
கதாநாயகியாக நடிக்க ஒரு நடிகையும் இன்னொரு முக்கிய பாத்திரத்துக்காக இன்னொரு
நடிகையும் தேவைப் பட்டனர். தமிழ் தெரிந்த தொழில் நடிகைகள் நாடகத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களைத்
தேடிப்போகவேண்டும் எங்கெல்லாமோ விசாரித்து நடிகைகளைக் கண்டு பிடித்தோம் நாடகம்
நன்றாயிருக்க ஒரு பாடலும் ஆடலும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர் நாடகத்தில்
இடைச் செருகலாக பாட்டையும் நடனத்தையும் வைத்துக் கொள்வதில் எனக்கு
விருப்பமிருக்கவில்லை. இருந்தாலும் டிக்கட் விற்று பார்வையாளர்களைக் கொண்டு வர
வேண்டி இருந்ததால் காம்ப்ரமைஸ்செய்ய வேண்டியதாயிற்று, ( அமெச்சூர் நாடகத்திலேயே
அப்படி என்றால் தொழில் முறை சினிமாவில் ஒரு டான்ஸ் ஒரு ஃபைட். ஒரு குத்துப் பாட்டு
என்று வருவதில் ஆச்சரியம் இல்லை. தொழில்முறை நடிகைகள் கூடவே அம்மா அல்லது யாராவது
துணைக்கு என்று அழைத்து வருவார்கள். அவர்கள் போக வர போக்குவரத்துப்படி
(ஆட்டோசார்ஜ்) டிஃபின் காஃபி என்று செலவுகள் எகிரும். ஆகவே நடிகைகளை ஒத்திகைக்கு
நான்கு முறைக்குமேல் வரச் சொல்ல மாட்டோம். அந்த நான்கு ஒத்திகைக்குள் வசனம் மனப்
பாடம் செய்து நடிக்கவும் வேண்டும் நமக்கு திக் திக் என்று இருக்கும். ஆனால்
அவர்கள் அது பற்றிக் கவலைப் படவே மாட்டார்கள் கடைசி நாள் ஒத்திகையின் போது இசை
சகிதம் நடக்க வேண்டும். நாடகத்தில் நடிப்பவர்களுக்கு இருக்கும் அதே பொறுப்பு,
சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பு மேடை விஷயங்களை ஒருங்கிணைப்பவருக்கு உண்டு, வசனம்
சரியாக மனப் பாடம் செய்யாதவர்களோ , அல்லது மேடையில் மறந்து போகிறவர்களுக்கென்றே
ப்ராம்ப்டர் ஒரு வரப் பிரசாதி. மறக்கும் வசனத்தை எடுத்துக் கொடுக்க வேண்டி
இருக்கும் . அதே நேரம் அவர் குரல் கேட்கக் கூடாது. இதற்காகவே வசனம் மறப்பதுபோல்
இருந்தால் நடிகர் ப்ராம்ப்டர் இருக்குமிடம் நாச்சுரலாகத் தோன்றுவதுபோல் வந்து விட
வேண்டும்
பாட்டும் டான்சும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர், பாடவைக்கவும்
ஆடவைக்கவும் தகுதி எனக்கிருக்கவில்லை. அதே சமயம் பாட்டும் டான்சும் வேண்டும்
அப்போது பிரபலமாயிருந்த “காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பெண்ணு மணவிழா
“என்றபாட்டை ரெகார்டில் ஒலிக்கவிட்டு நடிகையர் இருவரையும் இடைவேளையின் போது
அவர்களுக்குத் தெரிந்தபடி ஆடச் சொன்னோம். இடை வேளையின் போது ஒருவர் ( பெயர்
நினைவில்லை )உயிருள்ள தவளை மீன் போன்றவற்றை முழுங்கி வெளியில் உயிருடன்
எடுப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி இருந்தது பெங்களூரில் பெயர் பெற்ற குப்பி தியேட்டரில்
நிகழ்ச்சி நடந்தது.
அந்த நாடகம் மேடையேற்றியதும்
கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.நாடக உலகம் நிறையவே குழிகளும் குண்டுகளும்
நிறைந்தது. மனசிலுறுதி இல்லாவிட்டால் கெட்டுப் போகும் வாய்ப்புகள்நிறையவே இருக்கும்
.நாடகத்துக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாத நடிகைகள்தான் கிடைத்தனர். நாடகம்
ஒத்திகைக்கு வருபவர் வந்ததும் அனைவரையும் greet செய்ய வேண்டுமென்றும்
போகும்போது விடை பெற்றுப் போக வேண்டும் என்று ஒரு விதி செய்திருந்தோம். அதன் படி
ஒரு நடிகை வரும்போது வணக்கம் சொல்வார் போகும் போது “எல்லோருக்கும் வரேனுங்க “என்று
சொல்வாள். அப்படிச் சொல்வது சரியல்ல என்று புரிய வைப்பதற்குள் போதுமென்றாகி
விட்டது. ஒரு நடிகை கூட வந்தவர் ஒரு முறை “பதம் பார்ப்பது என்றால் என்னங்க
அர்த்தம் வேறு ஒரு நாடகத்தில் அந்த வசனம்
வருகிறது “என்று கேட்டாள். பதம் பார்ப்பது என்றால் சுவைப்பது என்னும் பொருள் உண்டு
என்று தெரியப் படுத்தினேன் அதற்கு அவள் அந்த நடிகையைப் பதம் பார்க்கிறீர்களா என்று
கேட்டாளே பார்க்கலாம்..! என் சப்த நாடியும் பயத்தால் நடுங்கியது. பிறகு அம்மாதிரி
பேசுவது அநாகரிகம் என்று எடுத்துரைத்தேன்
திருச்சியில் “ஆராமுதா அசடா “என்னும் நாடகத்தை ஒருதடவை கிருஷ்ண கான
சபாவுக்கும் மறுமுறை ஸ்ரீரங்கத்திலும் மேடை யேற்றினோம். அதில் நடித்த பலரும் சக
அதிகாரிகள். தொழிற்சாகையில் பணி வாங்குவதை விட நாடகம் மேடை யேற்றுவது சிரமம் என்று
புரிந்து கொண்டார்கள். ஒத்திகைக்காக நடிகையை வரவழைக்க அதிகாலையில்
புறப்பட்டுப்போய் அவர்கள் வீட்டில் செய்தி சொல்ல என்னுடன் வந்த சக அதிகாரி ,
இந்தப் பிழைப்பே வேண்டாம் பாலு என்பார். ஆனால் நடிப்பது அவருக்கு விருப்பமானதாய்
இருந்தது . என் மனசாட்சி சிறுகதையை நாடக வடிவில் எழுதி மேடை ஏற்றினோம். அதில் வரும்
கதாநாயகன் impotent
என்று சித்தரிக்கப் பட்டு இருக்கும் அந்த
வேஷத்தில் நடிக்க பலரும் தயங்கினர்.இருந்தாலும் நாடகத்தின் மேல் இருந்த
காதலால்கத்திமேல் நடப்பது போன்ற பாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்தார் கதாநாயகன்
1963-ல் பெங்களூரில் மேடையேற்றிய ”வாழ்ந்தே
தீருவேன் “என்னும் நாடகம் திருச்சியில் எனக்குப் பரிசு பெற்றுத் தந்தது
ஓ....! அந்த உலகமே தனி...! அதன் நினைவுகளும் சுகமே.
.
.
நினைவுகளும் சுகமே.
ReplyDeleteபரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்..!
பழைய நினைவுகளை அசைபோடுவது சுகம்தான்.
ReplyDeleteநாடகம் நடத்துவது எளிதான விஷயமில்லை. ’வாழ்ந்தே தீருவேன்’ நாடகம் பரிசு பெற்றது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
அந்தக்கால மலரும் நினைவுகள் அருமை.
ReplyDelete1963 இல் நம் BHEL திருச்சி, மனமகிழ் மன்றத்தில் போடப்பட்ட நாடகத்தின் நோட்டீஸ் இன்னும் பத்திரமாக தங்களிடம் உள்ளது மிகவும் ஆச்சர்யம் தான்.
அப்போது நான் பள்ளியில் 8வது படித்துக்கொண்டிருந்தேன் !
சினிமா ஈஸியாக எடுத்து விடலாம். நாடகம் போடுவது என்பது மஹா மஹா கஷ்டமான வேலை. நாடக இயக்குனராக இருந்துள்ள எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு.
பரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பெரிய விஷயங்கள் எல்லாம் செய்திருக்கிறீர்கள் ஸார்!
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteதங்களின் அனுபவம் எங்களுக்கெல்லாம் பாடம். நினைவுகள் நீந்துவதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. அதும் உங்கள் நினைவுகளோடு நாங்களும் நீந்தியிருக்கிறோம் என்றால் சொல்லவா வேண்டும். சிறப்பான பகிர்வு ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி
/பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்/ அது ஆயிற்று 40 வருஷங்கள்.....!வருகைக்கு நன்றி
ReplyDelete# ராமலக்ஷ்மி
/பழைய நினைவுகளை அசை போடுவது சுகம்தான்/ சுமையான நினைவுகள் என்று போனபதிவில்தான் எழுதினேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நினைவுகள் படிக்கக் சுவையாய் இருந்தது. தாங்கள் ஒரு பன்முக கலைஞர் என அறிய மகிழ்ச்சி. திருமதி கிரேஸ் டக்கர் அவர்கள் முன்னிலையில் பேசுவது நீங்கள் தானே?
ReplyDelete@ வை.கோபுசார்
ReplyDeleteஒரு திருத்தம். 1963-ல் பெங்களூரில் போட்ட நாடகம். மீண்டும் திருச்சி குடியிருப்பில் 1973-ல் போட்ட நாடகத்தின் நோட்டிஸ்தான் அது.1963-ல் BHEL தொடங்கப் படவில்லை என்று நினைக்கிறேன் வருகை தந்து கருத்திட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDelete@ ஸ்ரீராம்
/பெரிய விஷயங்களெல்லாம் செய்திருக்கிறீர்கள் சார்/நன்றி ஸ்ரீ. என்னென்னவோ செய்ய நினைத்திருந்தேன் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது “ஆசை இருக்கு தாசில் பண்ண......”
ReplyDelete@ அ.பாண்டியன்
என் பதிவுகளில் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் அனுபவங்களின் பகிர்வாயிருக்கும். சில நினைவுகள் சுகம் சில சுமை. வருகைக்கு நன்றி
ReplyDelete@ வெ.நடனசபாபதி
கிரேஸ் டக்கர் முன் பேசுவது 1963-ல் இருந்த நானேதான். பல விஷயங்களில் ஈடுபாடு கொண்டவன் எனலாம் பன்முகக் கலைஞர் என்பது டூ மச் வருகைக்கு நன்றி
//@ வை.கோபுசார்
ReplyDeleteஒரு திருத்தம். 1963-ல் பெங்களூரில் போட்ட நாடகம். மீண்டும் திருச்சி குடியிருப்பில் 1973-ல் போட்ட நாடகத்தின் நோட்டிஸ்தான் அது.//
OK .... OK Sir. Now I understood.
அந்த திருச்சி நோட்டீஸிலும் 1973 என்று தான் உள்ளது.
//1963-ல் BHEL தொடங்கப் படவில்லை என்று நினைக்கிறேன் //
1960 க்கு முன்பே திருச்சி BHEL Foundation Work + Civil Work etc., Start ஆகிவிட்டதாகக் கேள்வி.
1968 இல் Production Start ஆகி, 1969 இல் First Bonus Declare செய்தும் விட்டார்கள். ஆனால் நான் அங்கு பணியில் சேர்ந்தது 04.11.1970
Just for your information, please.
vgk
மலரும் நினைவுகளாக - தங்களின் நாடக அனுபவங்கள்.. அந்த பழைய நோட்டீஸை பத்திரமாக வைத்திருப்பது வியப்பு!.. இனியதொரு பதிவு ஐயா..
ReplyDeleteஇனிய நினைவுகள் என்றும் சுகம் தான்... அசத்தி உள்ளீர்கள்...! வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDelete//மனம் மகிழ்கிறது என்பதும் நிஜம் நாடகம் அரங்கேறியபோது கிடைத்தமகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது .//
ReplyDeleteஇப்பொழுதும் தங்கள் மனம் மகிழ்ச்சி கண்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதில் எனக்கும் சந்தோஷம். இந்த மாதிரியான டானிக்கை அடிக்கடி சுவையுங்கள். உடல் நலனுக்கு நல்லது.
வணக்கம்
ReplyDeleteஐயா.
மலரும் நினைவுகள். அதை மீட்டு பதிவாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பல கலை வித்தகரே, வாழ்த்துக்கள்.
ReplyDeleteநினைவுகள் என்றுமே
ReplyDeleteசுகமானவைதான்
நன்றி ஐயா
ReplyDelete@ கோபு சார்
மீள்வருகை தந்து புரிந்து கொண்டதை தெரிவித்ததற்கு நன்றி.
ReplyDelete@ துரை செல்வராஜு
எதையோ தேடப் போக அந்தநோட்டிஸ்கண்ணில் பட அதுவே பல நினைவுகளைக் கிளற பதிவாயிற்று.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி.
ReplyDelete@ ஜீவி
என் பழைய பதிவுகள் பலவற்றில் உங்கள் பின்னூட்டம் எனக்கு டானிக் காகவே இருந்திருக்கிறது. இப்போதும் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நன்றி
ReplyDelete@ ரூபன்
என்னைப் போன்றோருக்கு நினைவுகளே வாழ்க்கை. நான் பகிர்கிறேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
இந்த நினைவுகள் வாழ்க்கையை மீண்டும் அசை போட வைக்கின்றன. வருகைக்கு நன்றி ஐயா.
பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகமான அனுபவம்தான். நீங்கள் ஒரு நாடக ஆசிரியர் மட்டுமல்லாமல் நடிக்கவும் தெரிந்தவர் என்பதில் மகிழ்ச்சி. அந்த ஆர்வம்தான் உங்களை இன்னும் எழுத வைத்துக்கொண்டிருக்கிறது போலும். இது தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅதென்ன நடிப்புக்கு சிவாஜியையும், ஜெமினியையும் விட்டால் வேறே யாருமே இல்லையா? :)))))
தொடர
ReplyDelete
ReplyDelete@ டி.பி.ஆர் ஜோசப்
நான் மேடையேற்றிய இரண்டு நாடகங்களைப் பதிவாக்கி இருக்கிறேனே.என்னவெல்லாமோ செய்ய ஆசை இருந்தது.ஹூம்....! இப்போது பெருமூச்சுவிடத்தான் முடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
அந்தக் காலத்தில் நடிப்புக்கு என்றால் இவர்கள் தான் உதாரணம் வருகைக்கு நன்றி மேடம்
ஓ....! அந்த உலகமே தனி...! அதன் நினைவுகளும் சுகமே. //
ReplyDeleteஆமாம் ஐயா! தங்கள் மலரும் நினைவுகள் எங்களது நினைவுகளையும் கொண்டுவந்துவிட்டது! நாங்களும் பல நாடகங்கள் எங்கள் கல்லூரி காலத்தில் இயக்கி நடித்துள்ளோம்! தாங்கள் விவரித்து உள்ளது போலவெ பல தடங்கல்கள் வரும். எல்லாம் சமாளித்து மேடையேற்றி பார்வையாளர்கள் மத்தியில் கைதட்டலும், கருத்துக்களும் பெறும் சுகம் இருக்கின்றதே....நாம் பட்ட கஷ்டங்கள் எல்லம் பனி போல விலகி மனம் மகிழ்சியில் திளைக்கும்! ஐயா! தங்கள் மேடை அனுபவங்கள் பல விஷயங்களைச்க் ஹொல்லுகின்றட்ன...மட்டுமல்ல தாங்கள் எவ்வ்ளவு செய்திருக்கின்றீர்கள் சார்!!!...Hats Off to you Sir!!
This comment has been removed by the author.
ReplyDeleteபடித்து ரசித்து ரசித்து படித்தேன்.
ReplyDeleteஎல்லாருக்கும் வரேனுங்க... funny.
ReplyDelete
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
உங்கள் அனுபவம் நான் எழுதியதை உணர வைக்கிறது. உங்கள் ஆர்வம் குறும்படம் இயக்கும் அளவுக்கு வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ReplyDelete@ அப்பாதுரை
படித்து ர்சித்து ரசித்துப் படித்ததற்கு நன்றி may be Because it was funny I remember that, வருகைக்கு நன்றி சார்.
ஒரு நாடகத்தை எழுதி தயாரித்து பாத்திரங்களுக்கேற்ப நடிகர்களைத் தேர்வு செய்து, வசனம் ஒப்புவித்து, ஒத்திகை பார்த்து நடிக்கவைப்பதோடு, மேடை அமைப்புகள், ரசிகர்களை ஈர்த்தல், முக்கியப் புள்ளியை வரவழைத்தல் போன்ற எக்ஸ்ட்ரா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதென்பது அதுவும் பணிகளுக்கிடையில் என்பதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. எல்லாம் நல்லபடியாக முடியும்போது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடும் இல்லை. உண்மைதான். தங்கள் நாடகமேடை அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDelete
ReplyDelete@ கீத மஞ்சரி
ஒரு நாடகத்தை மேடையேற்றுவது ஒரு தனி நபரால் சாத்தியமாவதல்ல. ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது அதில் முக்கிய பங்கு ஏற்றேன் என்பது வேண்டுமானால் சரியாய் இருக்கலாம் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்கும் நன்றி மேடம்
அக்கால நினைவுகளைத் தாங்கள் பகிர்ந்துகொண்ட விதம் அருமையாக இருந்தது. பழைய நோட்டீசை பாதுகாத்து வைத்து உரிய பதிவாக அதிகமான செய்திகளோடு தந்தமைக்குப் பாராட்டுகள். நன்றி.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
இனிமையான நினைவுகள்.
ReplyDeleteகல்லூரி சமயத்தில் ஒரே ஒரு முறை ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறேன்....
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
உங்கள் கல்லூரி நாடக அனுபவங்களை என் பதிவு நினைவு படுத்தியதா.?வருகைக்கு நன்றி