கேள்விபதில்கள் -என் வழியில்
----------------------------------------------
அது என்னவோ தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே ஏன் எப்படி எதற்கு என்று கேள்விகேட்டே பழகிவிட்டதுசிறுவயதில் சாக்ரடீசைப் படித்ததின் தாக்கமோ தெரியவில்லை. ஆனால் கேள்வி கேட்காமல் எதையும் ஏற்க முடிவதில்லை சில விஷயங்களைத் தெளிவிக்க நானே என்னையே கேள்வி கேட்டு பதில்களையும் கூற முயல்வேன் நான் கற்றது அதனால் பெற்றது எல்லாவற்றையும் கூறி ஏதாவது தெளிவு கிடைக்கிறதா என்று பார்ப்பேன். அதே உத்தியை பதிவிலும் கொண்டுவர இதை எழுதுகிறேன் இந்தமுறை சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம். என்ன செய்வது என் வழி தனி வழி.ஆனால் எழுதியது வெறும் பொழுது போக்குக்கல்ல என்று உறுதி அளிக்கிறேன் ஊன்றிப் படியுங்கள் நண்பர்களே. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:- எனக்கு எல்லாக்
கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின்
சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால்
நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:- கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும்
உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்
பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக்
கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது
என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயுதங்களும்
கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள்
புரியவும் நம்மைக் கட்டுப் படுத்தவும்
பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல்
அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின்
வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையே manifestation, establishment and withdrawal ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு
இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே
.உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக்
கூறுகிறேன் இதை
விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று
மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி
விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில் ‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது.
நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய்
இருந்தது,
ஒரு பானையாக மாறி பின்
உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது
கேள்வி:- நாம் கேள்விப்படும்
ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?
கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும்
படித்திருக்கிறாயா.?
பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக்
கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து
கொண்டதைத்தான் சொல்ல முடியும்
கேள்வி. :- வேதங்களில் இந்திரன்
,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் ,
கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?
பதில்.:- நான் வேதம் படித்ததில்லை.
மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில்
நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என்
கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே
வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர்
வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை
பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது
நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே
பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த
வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை
என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள்
இருக்கின்றன.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில்
சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும்
எச்சரிக்கையா.?
பதில்:- நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை.
ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத்
தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு
வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம்
கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும்
அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப்
பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த
காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம்
நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும்
அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. .
செய்யும் தொழில்முறைக்கேற்ப பிரிக்கப்பட்ட
நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம்
என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே
இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப்
படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால்
உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று
சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம்.
உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது.
என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.
நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home என்பார்கள். நாம்
நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே
மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ
தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .
கனமான சிந்தனைகள். ஆழ்ந்து படிக்கச் சொல்லி இருக்கிறீர்கள். இரண்டு மூன்று முறை படிக்க வைக்கிறது பதில்கள். மகாபாரதம் உள்ளிட்ட வேதங்கள் உபநிஷத்துகளில் எவ்வளவு இடைச் செருகல்களோ.. ஆரம்பத்தில் கர்ண பரம்பரையாய் சொல்லப்பட்டு வந்தவைதானே.. சொல்பவர்களே எத்தனை எழுத்துகள், வார்த்தைகளைத் தங்கள் விருப்பத்தில் சேர்த்தனரோ... ஆயினும், நல்வழியைக் காட்டுவதால் அவை நல்லதே என்ற உங்கள் கருத்தே எனக்கும்!
பதிலளிநீக்குகேள்வி பதில் அருமை.
பதிலளிநீக்குகேள்வியை நீங்களே கேட்டாலும் சிக்கலான கேள்விகளைக் கேட்டு அதற்கு பொருத்தமான பதில்கள் அளித்துள்ளீர்கள்
தங்கள் அனுபவமும் அறிவாற்றலும் வெளிப்படும் பதில்களாக அமைந்துள்ளன ஐயா!
அருமையான கேள்வி பதில்கள்! தங்கள் கருத்துக்கள் மிகச் சரியே! big bang theory - வெடிஹ்துச் சிதறலில் தான் பிரபஞ்சம் ஆரம்பம்...அதில் நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தி நம் எல்லோருள்ளும் இருக்கின்றது...சக்தி என்பதே அணுக்கள் நிறைந்தது தானே....அணுக்களுள் எல்க்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டன் .... இதில் எலக்ட்ரான் நெகடிவ் எனர்ஜி....ரஜஸ்....ப்ரோட்டான்...பாசிட்டிவ்- சாத்விக்....நியூட்ரான்-தமஸ்-நடு நிலை சக்தி....ஆணு ஆக்கவும் முடியாது...அழிக்கவும் முடியாது....சிதறச் செய்யலாம் ஆனால் அழிக்க முடியாது....நம் உடம்பும் அணுக்களால் ஆனது...அதனால் தான் நம்முள்ளும் அந்த சக்தி-அதாவது இறாய்வன் இருக்கின்றான்...அதை நாம் உணர்தல் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது....அதாவது....நெகட்டிவும் உள்ளது பாசிட்டிவும் உள்ளது....நாம் எதை வளர்க்கின்றோமோ அதாகின்றோம்....அதனால் தான் நல்லதைப் பார்...நல்லதைக் கேள்...நல்லதைச் செய் நல்லதைச் சிந்தி என்றும் சொல்லப்படுகின்றது...அப்படிச் செய்தால்...நாம் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்து...கடவுளை உணர்வோம் எனப்தும்.....இந்த சக்தி எல்லோருள்ளும் துங்கிக் கிடக்கின்றது...பொடென்ஷிய எனர்ஜியாக....அதைக் கைனெட்டிக் எனர்ஜியாகத் தூண்டிவிட்டால் நாம் பேரானந்த நிலை அடைவோம் என்றும் மெய்ஞானம் சொல்லுவதும்....
பதிலளிநீக்குஎப்படி அணுவின் சக்தியை வைத்து அணுகுண்டு தயாரித்து அழித்தலும் செய்யலாம்....அதை வைத்து மின்சாரம் தயாரித்து ஆக்கலும் செய்யலாமோ அதைப் போன்று நம் உடம்பில் உள்ள இந்த சக்தியை வைத்து ஆக்கல், அழித்தல் இரண்டும் செய்யலாம்...அதான் பாசிட்டிவ், நெகட்டிவ்....கடவுள் பாதி...மிருகம் பாதி...கலந்த கலவை மனிதன்....பரிணாம வளர்ச்சியிலும் இதைச் சொல்லலாம்.....தசாவதாரம் என்று சொல்லப்படுவதும் இதைத்தான்...
தாங்கள் சொல்லி இருப்பது போல அந்த சக்திக்கு மனிதர்தான் உருவம் கொடுத்தது.....மேலே சொன்ன எலெக்ற்றான், நியூற்றான், ப்ரோட்டான் அடிப்படையில்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் சொல்லப்பட்டது...மூன்றும் பிரிக்க முடியாத சக்தி.....என்றும்...
இப்படி நிறைய சொல்லலாம் ஐயா! ஏற்கனவே ஒரு இடுகை போட்டிருக்கின்றோம்! இன்னும் நிறைய இருக்கின்றது...விஞ்ஞானம், மெய்ஞானம் பற்றிப் பேச....
மிக நல்ல ஒரு பதிவு ஐயா...தங்கள் விளக்கங்களும் அருமை!
பாடம் - எங்களுக்கு...
பதிலளிநீக்குஇந்தக் கேள்விகள் தொடர்ந்து உங்களை அலைக்கழித்து வருவது தெரிகிறது.
பதிலளிநீக்குபடித்தேன், ரசித்தேன், திரும்பவும் படிப்பேன்.
பதிலளிநீக்குநல்ல கேள்விகள். நல்ல பதில்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎல்லோரும் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, நீங்களே கேள்விகள் கேட்டு பதில் அளித்தது உங்கள் வழி தனி வழி தான் என்று உறுதிப்படுத்தியுள்ளீர்கள். இறைவனைப்பற்றியும் அவதாரங்கள் பற்றியும்,வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதைப் பற்றியும் மிக அழகாக தங்கள் பாணியில் அருமையான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆழமான சிந்னையின் வெளிப்பாடு ஐயா தங்களின் பதிவு.
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள். Great!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆழ்ந்து படித்ததற்கு முதலில் நன்றி. எனக்கு இந்த மாதிரி கேள்விகள் ஏன் எழவேண்டும்./ஆரம்பத்தில் கர்ண பரம்பரையாய் சொல்லப்பட்டு வந்தவைதானே.. சொல்பவர்களே எத்தனை எழுத்துகள், வார்த்தைகளைத் தங்கள் விருப்பத்தில் சேர்த்தனரோ.../ இப்படிச் சேர்த்ததால் சிதைக்கப்பட்ட கருத்துக்களே இன்று நாம் காணும் ஏற்ற தாழ்வுக்குக் காரணம் என்று தோன்றுகிறது பதிவு எழுத உந்துதல் அளித்ததும் காரணம் காண முயன்றதனால்தானோ தெரியவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ டி.என். முரளிதரன்
கேள்வி பதில் ஒரு உத்தி அவ்வளவே. நிறையவே விஷயங்களைப் படிக்கிறோம் கற்கிறோம் . சிந்திக்கும்போதும் அவற்றைப் பகிரும் போதும் நம்மையே நாம் உணர வழி பிறக்கிறது. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
நான் மெய்ஞானம் பற்றிக் கூற எழுதவில்லை. விஞ்ஞானம் எனக்கு அவ்வளவாக பிடிபடாத விஷயம். நாட்டில் நிலவும் ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் காண முயன்றபோது தானாகவே பல விஷயங்களைச் சொல்லிப் போக நேர்ந்தது. முதலில் மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதே என் அவா. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
/பாடம் எங்களுக்கு/ பாடம் எடுக்கும் அள்வுக்கு எனக்குத் தகுதி இல்லை. இருந்தாலும் நினைத்ததைப் பகிர்வதில் எந்தத் தடையும் இல்லை.வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஜீவி
/இந்தக் கேள்விகள் தொடர்ந்து உங்களை அலைக்கழித்து வருவது தெரிகிறது/
என் பல பதிவுகளைப் படித்து வரும் உங்களுக்கு அவ்வாறு தோன்றுவது ஆச்சரியம்தான். இந்தப் பதிவையே சற்று ஊன்றிப் பார்த்தால் இது மெய்ஞானத் தேடல் அல்ல. நடப்பில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் காண முயன்றதன் விளைவே இது என்றும் புரியும் ஆரம்பத்தில் கடவுள் பற்றி அதிகக் கருத்துக்கள் இருந்ததால் அப்படி எண்ண வைத்ததோ தெரியவில்லை.கடைசியாக எழுதப்பட்ட மூன்று நான்கு பத்திகளில் நான் சொல்ல விரும்பியது இருக்கிறது என்று எண்ணுகிறேன் வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஜீவி சார்
பதிலளிநீக்கு@ டாக்ட கந்தசாமி
படித்து ரசித்த்தில் நன்றி. சரியான புரிதலுக்கு மேலும் சில முறை படிக்க வேண்டி வரலாம் மீண்டும் நன்றி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
பாராட்டுக்கு நன்றி. சில விஷயங்களைத் தெளிவு படுத்த எடுத்த முயற்சியே இது.
பதிலளிநீக்கு@ வே.நடன சபாபதி
கேள்விபதில் ஒரு உத்தியே. பாராட்டுக்கு நன்றி. சொல்ல வந்தது கடவுள் பற்றியும் அவதாரங்கள் பற்றியும் அல்ல. உயர்வு தாழ்வு நம்மில் இருக்கும் சீரழிவுக்கு ஒரு காரணம் அதை ஆராய முயன்றபோது பலவிஷயங்களும் சொல்வது அவசிய மாகிறது. மீண்டும் நன்றி.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர்.ஜோசப்
/எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள். great.வலையுலகில் இருப்பதால் சிந்தனை வடிவம் பெறுகிறது. பாராட்டுக்கு நன்றி.
//கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?
பதிலளிநீக்குபதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவற்றை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்..//
அன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம். அனைத்தும் அழகாக அருமையாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது மேற்குறித்த வினாவும் விடையும்!..
எனது தளத்தின் மேற்குறிப்பு!..
அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்!..
நல்லதொரு பதிவு கண்டு மகிழ்ச்சி!..
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
நம் கருத்துக்களோடு ஒத்துப்போகும் எழுத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை உங்கள் பின்னூட்டம் தெரிவிக்கிறது. வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
அன்புள்ள ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்.
ஜமாயுங்க ஐயா.
ஆமாம் ரொம்ப வசதியாக படிச்சு அனுபவிச்சேன். ரொம்ப ரொம்பப் புடிச்சிருக்கு இதுமாதிரியான ஒரு தொடர்கேள்விபதில் அந்த பாற்கடலைக் கடைந்த பாம்பைப்போல நீளமாய்.
ரசனையான அதேசமயம் தத்துவப் போக்கிலேயும் அமைந்துவிட்ட பதில்கள் அதனை உருவாக்கிய கேள்விகள்.
ஹரணி அவர்களின் கருத்தே
பதிலளிநீக்குஎன் கருத்தும்
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ ஹரணி
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். ஆனால் என் சித்தம் போன போக்கில் எழுதியது உங்களைப் போன்றோர் பாராட்டுதலைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ரமணி.
பாராட்டுதல்கள் பெறும்போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. வாழ்த்துக்கு நன்றி சார்.
தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் // ஐயா நான் தோப்புத்தான் கோபம் என்றால் முதுகில் குத்துங்க பொதுவில்!ஹீ தவறு திருத்தப்படவேண்டும் அதுவே சிறப்பு!
பதிலளிநீக்குஉங்களைப் போல் சிந்தனை கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தனிமரம்
தவறுகள் திருத்தப்பட வேண்டும் அது தனி மனிதனிடமிருந்து துவங்கப் படவேண்டும் .வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
இருக்கவேண்டும் என்பதே என் விருப்பமும். வருகைக்கு நன்றி சார்
நல்ல கேள்விகள். அருமையான பதில்கள். ரசித்துப் படித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பக்கிரிசாமி
வருகைதந்து ரசித்துப் படித்ததற்கு நன்றி ஐயா.
நல்ல கேள்விகள்.
பதிலளிநீக்குமிக நல்ல பதில்கள்.
தங்களின் ஒவ்வொரு கருத்தும் அதிகம் சிந்திக்க வைக்கிறது. தங்களின் அனுபவமான பதிவுகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி.
பதிலளிநீக்குகேள்வியும், பதிலும் அருமை.
பதிலளிநீக்குசிந்திக்கவும், சிறப்பானவைகளை ஏற்றுக் கொள்ள்வும் சொல்கிறீர்கள்.
நன்றி பதிவுக்கு.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
எண்ணங்களின் வெளிப்பாடு எழுத்துக்களில் கேள்வி பதிலாக. சிந்திக்க வைத்தலே எழுதுவதின் இலக்கு. சிறப்பானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,மேடம்
பதிலளிநீக்கு@ தருமி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
சிந்திக்க வைக்கிறது என்னும்போதேஇலக்கு எட்டப்படும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.