புதன், 9 ஜூலை, 2014

BABIES’S DAY OUT....


                                                     ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..!                                              --------------------
பிறந்த நாள் கேக்...!



கடந்து வந்த நாட்களை அசை போடுவது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுதான். சிறு வயதில்  ஓடியாடிய இடங்கள், இருந்து வளர்ந்த வீடு சென்று வந்த பள்ளிக்கூடம் எல்லாமே நினைவில் ஆடும். என் நினைவுகளை அவ்வப்போது வலையில் பகிர்ந்து வந்திருக்கிறேன் . என் மனைவிக்கும் அம்மாதிரி நினைவுகள் வருவதில் வியப்பேதுமில்லையே. நான் படித்த பள்ளி இருந்த இடம் இவற்றுக்கெல்லாம் அவளையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன். விருப்பம் இருந்ததோ இல்லையோ என் உடன் வந்திருக்கிறாள். என் உணர்வுகளை முதலில் அவளுடன்தான் பகிர்வது வழக்கம் ஆகவே அவளுக்கும் அவள் படித்த பள்ளிக்கும் அதைச் சுற்றிலும் இருக்கும் இடங்களைப் பார்க்கவும் விருப்பம் தெரிவித்தபோது நான் ரெடி என்றேன். ஆனால் நான் கூட வருவதில் அவளுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று தெரிந்தது. எனக்குப் பதில் அவளது மூத்த சகோதரியுடன் போகவே விரும்பினாள். மூத்த சகோதரிதான் என்றாலும் எதோ காரணத்த்தால் ஒன்றாகவே ஒரே வகுப்பில் படித்து ஏறத்தாழ நண்பிகளாகவே வளர்ந்திருந்தனர்.
ஜூலை இரண்டாம் நாள் அவளது சகோதரியின் பிறந்த நாள். ஜூலை மூன்றாம் நாள் என் மனைவியின் பிறந்த நாள். எனக்கு இந்த ஒரு நாள் வித்தியாசம் சற்றே வியப்பளிக்கிறது. பிறந்த நாள் என்று அவர்கள் சர்டிஃபிகேட்களில் உள்ளதுதானே செல்லுபடியாகும்.  இந்தமாதத்தில் ஜூலை இரண்டாம்நாள் அக்கா தங்கையைப் பார்க்க ஒரு திட்டத்தோடு வந்திருந்தாள். என்னைத் தவிர்த்துவிட்டு அவர்கள் கடந்த கால வாழ்க்கையை அசை போட விரும்பி வந்திருந்தாள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை குறைக்க நான் விரும்பவில்லை. இரண்டாம் தேதி அக்காள் வருகிறாள் என்றவுடன் தங்கைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள். முன்பே தன் ஆசையைத் தெரிவித்திருந்தால் நானே ஒரு கேக் செய்திருப்பேனே என்றேன். இருப்பது நாங்கள் இருவர். வருவது அக்காவும் அவரது மகளும் என்று தெரிந்தது.என் மனைவியே கடைக்குப் போய் ஒரு சிறிய கேக் வாங்கி வந்தாள். பின் என்ன. விளக்கேற்றி HAPPY  BIRTH DAY  பாட கேக் வெட்டப்பட்டது. சகோதரிகள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறந்த நாள் பரிசாக சென்ற முறை சிதம்பரம் சென்றிருந்தபோது வாங்கி இருந்த ஒரு கண்ணாடி மணியும் ( பூஜை மணி) ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் கொடுத்தாள். அப்போது எடுத்த புகைப் படத்தில் அவர்கள் மகிழ்ச்சி வெளிப்படுவது நன்றாகவே தெரிகிறது. இதுவரை நடந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அதன் பின் அவர்கள் சிறுவயதில் படித்த பள்ளிக்குச் சென்று வந்தது புகைப்படக் காட்சியாகவே. என்னென்ன நினைவுகள் பகிர்ந்து கொள்ளப் பட்டனவோ தெரியாது. நிச்சயமாக மகிழ்ச்சியானதாகத்தான் இருக்க வேண்டும் இந்த வயதிலும் குழந்தைகள்போல் மகிழ்ச்சியாக ஒரு நாள் அமைந்ததில் எனக்கும் சந்தோஷமே. 

சகோதரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
  
படித்த பள்ளியில்....?

பள்ளியின் பெயர் படத்தில் வரவில்லையே

அந்த நாள் மாணவியர் இன்றைய ஒரு மாணவியோடு...
ஸ்வீட் எடு .. கொண்டாடு..
பள்ளியின் வாசலில்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து  சாந்துவுடையவும்  நாமத்தினாலே
  
பள்ளி என்பது வாழ்க்கைப் படிக்கட்டு....!?

கொண்டாட்டம் புடவை இல்லாமலா...!

    .

32 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியும் மங்கலமும் என்றென்றும் நிறையட்டும்..

    பதிலளிநீக்கு
  2. இனிமையான நினைவுக்கு அழைத்து செல்லும் பள்ளி நாட்கள்! படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கடைசி சில படங்கள் திறக்கவில்லை. அதனால் என்ன? அவர்கள் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் அதே ஊரில் உள்ள தங்கள் பழைய பள்ளிக்குச் சென்று வந்தார்கள். நான் 38 வருடங்களுக்குப் பின் தஞ்சை சென்று நான் படித்த பள்ளியைப் பார்த்து வந்தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தது!

    பதிலளிநீக்கு

  4. # இராஜராஜேஸ்வரி
    அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டதால் இந்தப் பகிர்வு. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  5. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  6. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  7. @ ஸ்ரீராம்
    இதே ஊரில் இருந்தாலும் இப்போதுதான் பள்ளிக்குச் சென்று நினைவுகளைப் புதுபித்துக் கொண்டார்கள்.ஒரு மாறுதலுக்கு அவர்கள் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொண்டேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  8. சகோதரிகள் என்பதால் முக ஜாடையில் அவர்களுக்குள் ஒற்றுமை நன்கு தெரிகிறது.

    மகிழ்ச்சியான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. எங்களுக்கும் சந்தோசம் ஐயா...

    மகிழ்ச்சியான பகிர்வு... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. பெங்களூரில் படித்த பெண்கள் எப்போதுமே அதிக ஆளுமை உடையவர்கள் என்று என் நண்பன் சொல்லுவான்.நகரத்தின் பாதிக்குமேல் ஆக்கிரமித்திருக்கும் கிறித்தவ ஆங்கிலப் பள்ளிகள் காரணமாக இருக்கலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அவர்கள் இருவருக்கும் எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அந்த நாள் நினைவுகள்
    எந்த நாளும் மாறாது
    இனிமை இனிமை

    பதிலளிநீக்கு

  12. பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு தனி சுகம்தான். சகோதரிகள் இருவரது முகத்திலும் தெரியும் மகிழ்ச்சியே அதை பறை சாற்றுகிறது. வாழ்த்துக்கள் இருவருக்கும்! மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் தான் !

    பதிலளிநீக்கு
  13. எத்தனை வயதானாலும் பிறந்த நாளை சொந்தங்களுடன் கொண்டாடுவதே தனி சுகம்தான். அதுவும் படித்த பள்ளிக்கு சென்று அந்த கால நினைவுகளை அசை போடும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. பிறந்த ஊரில் தொடர்ந்து இருப்பவர்கள் எத்தனை பேர். அந்த பாக்கியம் இவர்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

  14. @ வை.கோபாலகிருஷ்ணன்
    சகோதரிகள் என்பதுபோல் அல்லாமல் நண்பிகள் போதான் பழகுகிறார்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  16. @ செல்லப்பா யக்ஞசாமி
    /நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்/ என்னை ஆளுகிறாள் என்பதாலா.? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    ஆம். அந்த நாள் நினைவுகள் என்றும் மாறாது. இனிமையானது. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  18. @ வே.நடனசபாபதி
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  19. @ டி.பி.ஆர். ஜோசப்
    அக்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என் வீட்டில் நிகழ்ந்தது தற்செயலே. இத்தனை நாள் இதே ஊரில் இருந்தாலும் இருவரும் சேர்ந்து பள்ளிக்குச் சென்று அந்த நாட்களை அசைபோடுவதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  20. அவர்களின் மகிழ்ச்சி அவர்களின் முகங்களில் பிரதிபலிக்கிறதே..

    சந்தோஷ பகிர்வு. அருமை.

    பதிலளிநீக்கு
  21. நமக்கு நெருக்கமானவர்களின் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

  22. @ ஆதி வெங்கட்
    அத்திபூத்தாற்போல வருகை தந்திருக்கும் உங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  23. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    வாருங்கள் ஸ்ரீநிவாசன்.உங்கள் வருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  24. A blog "with a difference".very nice to read your post with photos.your Ms and her sister seem to really enjoy reliving the nostalgic memories of younger days!

    பதிலளிநீக்கு

  25. @ hariharan mani
    I strive to keep it so. Yes ,they really enjoyed their outing .Thanks for your visit and comments.

    பதிலளிநீக்கு
  26. சகோதரிகளின் மகிழ்ச்சி பகிர்வு அருமை.
    அந்தக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டது. பள்ளி படிக்கட்டுகளில் அன்று துள்ளி ஏறியதை நினைத்து மகிழ்ந்து இருப்பார்கள். இன்றும் அந்த துள்ளல் வந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. அவர்களது மகிழ்ச்சி புகைப்படத்தில் தெளிவாக......

    இனிமையும் மகிழ்ச்சியும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

  28. @ கோமதி அரசு.
    அவர்கள் நிச்சயம் மகிழ்ந்திருப்பார்களென்று தெரியும். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  29. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  30. ரொம்ப நாளாகவே எனக்கும் நான் ஆனா ஆவன்னா படித்த எனது பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த பதிவைப் படித்ததும் எனக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்குள் வந்துவிட்டது. நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்ததும் ஒரு கிறிஸ்தவ மெஷினரி பள்ளிதான். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  31. உள்ளூர்தானே. மனசு வைத்தால் போகலாம். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே தடைக்கல்லாக இருக்கிறதோ.?

    பதிலளிநீக்கு