சனி, 12 ஜூலை, 2014

ஹம்பி ...ஒரு விசிட்


                                            ஹம்பி ..... ஒரு விசிட்
                                            -------------------------------


முன்பெல்லாம் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது பல இடங்களுக்குப் போய் வருவதைத் தவற விட்டதில்லைஅப்போது என் மச்சினன் பெல்லாரியில் இருந்தான் நாங்கள் அவனிருப்பிடம் சென்றிருந்தோம் பெல்லாரியில் இருந்து காரிலேயே ஹம்பி சென்று வந்தோம். இன்னொரு சமயம் மந்த்ராலயா சென்று வந்தோம் இரண்டும் ஒரே நாளா என்னும் சந்தேகம் எழுந்தது. நினைவுகளை முழுவதும் நம்பமுடிவதில்லை. நாங்கள் 24-09-2005 அன்று ஹம்பி சென்று வந்தோம். 19-09-2005 அன்று மந்த்ராலயா சென்று வந்தோம். நினைவுகளை சரிசெய்ய நான் எடுத்திருந்த புகை படங்கள் உதவின இப்போது அதே புகைப்படங்களின் உதவியோடு மறுபடியும் ஹம்பி சென்றுவந்தேன் (மானசீகமாக.) அன்று எடுத்தபுகைப்படங்களை இன்று என் காமிராவில் மீண்டும் எடுத்து கணினியில் இணைத்தேன் புகைப் படங்கள் தரக் குறைவாய் இருப்பதுபோல் தோன்றினால் இதுவே காரணம். சரித்திரப் புகழ் பெற்ற இடங்களுக்குப் போனால் நானும் என்னை அந்தக் கால சூழ்நிலைக்குள் புகுத்திப் பார்ப்பேன் என் நினைவுகளை அதிகம் சோதிக்காமல் வாசகப் பதிவர்களையும் என்னுடன் ஹம்பிக்குக் கூட்டிச்செல்கிறேன் முழுவதையும் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டுமானால் ஒரு பொழுது போதாது கிடைத்த நேரத்தில் பார்த்த இடங்களை புகைப்பட வாயிலாகப் பார்க்கலாம். அப்போது என் மனைவி அவரது அக்கா ,என் மாமியார் என் மச்சினன் அவன் மனைவி இவர்களுடன் நானும் சென்றிருந்தோம். அங்கு ஒரு ம்யூசியம் இருந்ததாகவும் அதில் வரலாறுகளை ஒளி பரப்பிக் கொண்டிருந்ததாகவும் நினைவு. ஹரிஹரன் புக்கன் எனும் இரு சகோதரர்களால் ஸ்தாபிக்கப் பட்ட விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராக ஹம்பி இருந்ததாக வரலாறு.
விருபாக்ஷி கோவில் உள்ளே ஏதோ சிறப்பு செய்தி சொன்னார்கள். நினைவுக்கு வரவில்லை.கோவிலின் எதிரே ஒரு பெரிய அங்காடி இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாகவும் அறியப் படுகிறது. ஒரு பரந்து விரிந்து இருந்த சாம்ராஜ்யம் காலத்தின் கோலத்தால் சிதைவு அடைந்திருப்பது மனசை என்னவோ செய்கிறது. சரி. ஒரு புகைப்பட உலாவுக்குத் தயாராகுங்கள்.

ஹம்பி போகும் வழியில் ரகுநாத் கோவில்-- பின்னணியில்
போகும் வழியில் ஒரு குகைக் கோவில்  முன்பாக
குகைக்குள் பூசாரியுடன் . நிமிர்ந்து நிற்க முடியாது
ஹம்பியில் விட்டலா கோவில்
விட்டலா கோவில் மண்டபம் முன்னால்
விட்டலா கோவிலில் கல் ரதம் முன்னால்
விட்டலா கோவில் மண்டபத்தில் இருக்கும் கல் தூண்கள்-இசைக்க நாதம் வரும்
கல் தூணின் நாதம் -இசைத்துப் பார்க்க

விட்டலா கோவில் சிதைவுகள்.

மண்டபத்தில் இருந்து காணும் சிதைவுகள்-இடது ஓரத்தில் கல் ரதம்

ஹம்பி  புகழ் லக்ஷ்மி நரசிம்மர்
ஹம்பியில் புகழ் பெற்ற யானை கொட்டடி( லாயம்)
வாட்டர் டாங்க்
விருபாக்ஷி கோவில்
துங்கபத்திரா நதி  ஒரு காட்சி
தொல்பொருள் அகழ்வாராய்ச்சி
 
மண்டபம் முன்னால்

43 கருத்துகள்:

  1. பிரம்மாண்டமான நகரம் அல்லவா ஹம்பி.. தங்களுடன் இனிய சுற்றுலா.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  2. ஹம்பி இதுவரை சென்றதில்லை! படங்களுடன் அழகிய பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஹம்பி பயணப் புகைப்படப் பகிர்வுகள் சிறப்பாக இருக்கின்றன. பாராட்டுக்கள்..

    நாங்களும் குடும்பத்தோடு சென்று களித்த நாட்களை மீட்டிப் பார்த்துக் கொள்ள வாய்ப்பளித்ததது .. நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் படித்தது
    நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது தங்கள் பதிவு.
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. படங்களைப் பார்க்கும்போது ஹம்பிக்கு நம்பிப் போகலாம் போல! பார்க்கும் ஆசை பெருகுகிறது. எனக்கும் இது மாதிரி இடங்களைப் பார்க்க ரொம்பவே பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. Nice photos!we also had a bird's eye view of one heritage location through your photos.The quality of the photos is ok despite being clicked twice.

    பதிலளிநீக்கு
  7. ஹம்பி பற்றி வாசிக்கையில் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்கள் நன்றாகத்தான் உள்ளன.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  9. அன்பு ஐயா.. வணக்கம்..

    தங்களின் சுற்றுலா அனுபவம் காண்பதற்க்கும் வாசிப்பதற்க்கும் இனியதாய் இருந்தது ஐயா..

    ஹம்பி கோவில் பற்றி வரலாறு புத்தகத்தில் படித்த நியாபகம் வருகிறது..இப்பொது தான் படத்தில் காணமுடிந்தது.. நன்றி..

    பல சினிமா பாடல்களில் இக்கோவிலை காணமுடிகிறது ஐயா..

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. இனிய நினைவலைகளை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அய்யா.

    வணக்கம்.

    அற்புதங்கள். பிரமிப்புகள்.
    பிருமாண்டங்கள். வியப்புகள். வரலாற்றின் செதுக்கல்களும் சிதைவுகளும். அனுபவிக்க அனுபவிக்க ஆனந்தங்கள் கூடவே கொஞ்சம் வலிகளும்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    அறியமுடியாத படங்களின் தொகுப்பை தங்களின் பதிவின் வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. வரலாற்றின் மிச்ச சொச்ச சாட்சியங்களாய் நிற்கும் அருமையான தளங்களை நாங்களும் அறியத்தரும் புகைப்பட சாட்சியங்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. முன்பெல்லாம் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது பல இடங்களுக்குப் போய் வருவதைத் தவற விட்டதில்லை//நான் உங்களுக்கு நேர் எதிர். வெளியில் செல்லவே விரும்ப மாட்டேன். மும்பையில் இருந்த காலத்தில் கூட வீடு விட்டால் அலுவலகம் என்று மட்டுமே இருந்தேன். அலுவலக பணிகளுக்கு மட்டுமே வேண்டா வெறுப்பாக பயணங்களை மேற்கொள்வேன். புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  15. அருமையான படங்கள். கண்ணீரை வரவழைக்கும் படங்கள். ஹம்பியையும் அதன் வீழ்ச்சியையும் நினைத்தாலே மனம் நொந்து போகிறது. :(

    பதிலளிநீக்கு
  16. http://geethasmbsvm6.blogspot.in/2010/06/blog-post_09.html

    http://geethasmbsvm6.blogspot.in/2010/06/blog-post_11.html

    http://geethasmbsvm6.blogspot.in/2010/06/blog-post_24.html

    http://geethasmbsvm6.blogspot.in/2010/07/blog-post.html

    http://geethasmbsvm6.blogspot.in/2010/08/blog-post.html

    http://geethasmbsvm6.blogspot.in/2010/08/blog-post_23.html

    ஹம்பியைக் குறித்து எழுத ஆரம்பிச்சேன். அங்கே போய்ப் பார்க்கும் ஒரு எண்ணம் இருந்ததால் போயிட்டு வந்து தொடர நினைச்சுக் கடைசியிலே போகவே இல்லை. அதனால் பாதியிலே நிற்கிறது இந்தப் பதிவுகள். :)))) என்னிக்கோ ஒரு நாள் போக முடிஞ்சால் போய்ப் பார்த்துட்டுப் படங்களோடு எழுதணும். :)))

    பதிலளிநீக்கு

  17. 1967 இல் தார்வாரில் பணிபுரிந்தபோது ஹம்பி போயிருக்கிறேன். தங்களது பதிவில் படங்களைப் பார்த்ததும் திரும்பவும் அங்கு போனது போன்ற உணர்வு ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. வரலாற்று சிறப்பு மிக்க இடத்திற்கு கூட்டி சென்று விட்டீர்கள். நன்றி.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

  19. @ துரை செல்வராஜு
    சிதைவுகள் அந்த பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  20. @ தளிர் சுரேஷ்
    சரித்திரத்தில் விருப்பம் உள்ளவர்கள் ஹம்பி பார்க்க வேண்டும். வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  21. @ இராஜராஜேஸ்வரி
    ஹம்பியை நாங்கள் ஒரு போழுது நேரம்தான் கண்டோம். குறைந்தது இரு தினங்களாவது தேவைப்படும் ஓரளவு புரிந்து கொள்ள. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  22. @ டி என் முரளிதரன்.
    வரலாற்றில் படித்ததை நேரில் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  23. @ ஸ்ரீராம்
    சந்தர்ப்பம் வரவழைத்துக் கொண்டு அவசியம் போய்ப் பாருங்கள். ஓரிரு நாட்களாவது செலவு செய்து சிறந்த பதிவாய் எழுதுங்கள் . வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  24. @ ஆதி வெங்கட்.
    ஆர்வம் வந்துவிட்டால் செய்து விட வேண்டியதுதான் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  25. @ கரந்தை ஜெயக்குமார்
    பாராட்டுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  26. @ இல. விக்னேஷ்
    ஹம்பி ஒரு சுற்றுலாத் தலமாகி வருகிறது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  27. @ வை. கோபால கிருஷ்ணன். ஹம்பியின் நினைவலைகளே பதிவிடச் செய்தது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  28. @ திண்டுக்கல் தனபாலன்
    பாராட்டுக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  29. @ ஹரணி
    ஐயா சரியாகச் சொன்னீர்கள். பிரம்மாண்டத்தையும் கலை நுணுக்கங்களையும் பார்க்கும் போது ஆநந்தம் . சிதைவுகளைப்பார்க்கும்போது மனசில் வலி தோன்றுவது நிஜம். வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  30. @ ரூபன்
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  31. @ ராமலக்ஷ்மி
    பாராட்டுக்கு நன்றி. உங்களைப் போன்ற புகைப்படக் கலைஞர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும் இடம் ஹம்பி

    பதிலளிநீக்கு

  32. @ கீத மஞ்சரி
    வரலாற்றின் மிச்ச சொச்சங்களும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றன. வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  33. @ டி.பி.ஆர் ஜோசப் இந்தமாதிரியான குணத்தால் நிறையவே இழந்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. பாராட்டுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  34. @ கீதா சாம்பசிவம்
    ஆம் வரலாற்றுச் சிதைவுகள் வருத்தம் தருகிறது/

    பதிலளிநீக்கு

  35. @ கீதா சாம்பசிவம்.
    உங்கள் கடைசி சுட்டிப் பதிவைப்படித்தேன் வரலாற்றை எழுத முற்படுவதுபோல் தோன்றியது. முடிந்தால் ஒரு முறைப் பார்க்க வேண்டிய இடம். சுட்டிகள் கொடுத்ததற்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு

  36. @ வே.நடனசபாபதி.
    நீங்கள் பார்த்ததற்கு 40 ஆண்டுகள் பிந்தையது என் விசிட். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  37. @ கோமதி அரசு
    பாராட்டுக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  38. ஹம்பிக்கு நாங்கள் சென்றுவந்ததைப் பற்றிப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நினைவிருக்கலாம். தங்களது பதிவு எங்களது அந்த நாள்களை நினைவுகூர்ந்தது. அருமையான புகைப்படங்கள். அவசியம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம். நன்றி.

    பதிலளிநீக்கு
  39. மிக அருமையான பதிவு ஐயா! நானும் பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய படங்களை இணையத்தில் வெளியிடுவதுப்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருப்பதால் முக்கியமான படங்களை வெளியிட முடியாமல் இருக்கிறது. வெறும் கட்டுரையில் சுவை இருக்காதே! எனவே தங்கள் பதிவுகளையும் புகைப்படங்களையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  40. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இது வேறு கோணத்தில் பகிர்வு ஐயா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  41. @ செல்லப்பா யக்ஞசாமி.
    இதுவரை யாரும் என்னிடம் இதுபற்றிக் குறையாகக் கூறவில்லை. அதுவரை நான் லக்கிதான். வருகைதந்து கருத்துப் பதிவிட்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு