Wednesday, December 31, 2014

புத்தாண்டே வருக வருக.


                                        புத்தாண்டே வருக வருக.
                                        -----------------------------------
 
    ஆண்டொன்று   போக  அகவை ஒன்று  கூட
         
நடந்ததை  எண்ணி  அசை போட
        
நன்கே  வாய்த்த  புத்தாண்டே
        
உன்  வரவு  நல்வரவாகுக..

வேண்டத்தான்  முடியும்எண்ணியபடி
மாற்றத்தான்  முடியுமா.?
நடைபயிலும்  அருணோதயத்தில்
வந்துதித்த   ஞானோதயமா .?

         
வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
         
நினைத்தாயோ   என்றவனே
         
வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
         
அவன் பாட்டின் தாக்கம் அது இது
         
என்றே கூறி பலன் பல பெறுவதே
         
பலரது நோக்கம் என்றானபின்
         
அவன் இருந்தபோது இல்லாத பெயரும்  புகழும்
          
இறந்தபின்  வந்தார்க்கென்ன  லாபம்.?


எனக்கொரு  நூறு  இளைஞர்கள்  தாரீர்
மாற்றிக்காட்டுகிறேன்   இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப்   பெற்றானா, இல்லை
சொன்னததனை செய்தானா.?

         
அக்கினிக் குஞ்சான  அவர்தம் வார்த்தைகள்
         
வையத்து   மாந்தரின்  உள்ளத்தே
         
ஆங்காங்கே  கணப்பேற்றி இருக்கலாம்
          
சில  கணங்கள்  உள்ளத்து  உணர்வுகளை
          
உசுப்பேற்றி  இருக்கலாம் - என்றாவது
         
அவனிதன்னை  சுட்டுத்தான்  எரித்ததா.?  

நன்மையையும்  தீமையும், இரவும் பகலும்,
நாளும்  நடக்கும் நிகழ்வுகள்  எல்லாம்
இயற்கையின்  நியதி.
கூடிப் புலம்பலாம்ஒப்பாரி  வைக்கலாம்,
நடப்பதென்னவோ  நடந்தே  தீரும்.
நீயும்  நானும்  மாற்றவா  முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத  ஒன்று.


    புத்தாண்டுப்   பிரமாணம் ஏற்க
         
எண்ணித் துணிந்து விட்டேன்.
         
நாமென்ன  செய்ய  என்றே
         
துவண்டாலும்- நலந்தரும்
         
சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க
         
செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்
.
         
ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
         
முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
         
எண்ணில்  சொல்லில் செயலில்
            
நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்
 
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இ


மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிட
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

நாம் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?.



கடந்த செப்டம்பரில் மயிலாடுதுறையில் அரசு தம்பதியினருடன் மயூரநாதர் கோவிலில் ஒரு படம் வாங்கினேன். அதை கண்ணாடியில் ஓவியமாக்கினேன்.முதலில் அவுட்லைனும். பின் கண்ணாடிஓவியமும் 



கோவிலில்வாங்கிய படமும்  என் ஓவியமும்

( வலையுலக வாசக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!)



 
.


58 comments:

  1. கவிதை,கதை,கட்டுரை,ஓவியம் பலகலை வித்தகர் தாங்கள் . ஒவியம் புகைப்படம் போலவே உள்ளது . புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா !

    அருமையான ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் .இறைவன் தங்களையும்
    ஆசீர்வதிக்கட்டும் !மிக்க நன்றி ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்திற்கு.

    ReplyDelete
  3. அருமையான ஓவியம்! பன்முகக் கலைஞர் ஐயா தாங்கள்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    தங்கள் பதிவுகள் எங்கள் மெயிலுக்கு வரும்...இப்போது வருவதில்லையே ஏன் சார்....

    ReplyDelete

  4. கவிதையும், ஓவியமும் அருமை ஐயா
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ***நன்மையையும் தீமையும், இரவும் பகலும்,
    நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்
    இயற்கையின் நியதி.
    கூடிப் புலம்பலாம், ஒப்பாரி வைக்கலாம்,
    நடப்பதென்னவோ நடந்தே தீரும்.
    நீயும் நானும் மாற்றவா முடியும்.?
    எண்ணி மருகினும் இயலாத ஒன்று.***

    முற்றிலும் உண்மை, சார். :)

    ***நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்க
    எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
    என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இட


    மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
    நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

    எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
    நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

    வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
    இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
    நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.***

    நான் எனக்கு சொல்ல வேண்டியதை அழகாக சொல்லீட்டிங்க சார்.

    இந்த வருடமும், வரும் வருட்டங்களும் நிறைய எழுதுங்க சார்! :)

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. படமும் அருமை. புத்தாண்டுக்கான பாடலு(மு)ம் அருமை. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  12. கவிதை ஓவியமும்
    ஓவியக் கவிதையும்
    அருமையிலும் அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  14. ஓவியம் அருமை.

    புத்தாண்டு சபதங்கள் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் நம் மனச்சுமையைக் குறைக்கின்றன.

    ReplyDelete
  15. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. உங்கள் திறமை வியக்க வைக்கிறது. ஓவியம் அருமை. கவிதையும் நன்று.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், நம் சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  17. @ டி என், முரளிதரன்.
    ஓவியத்தைப் புகைப்படம் எடுத்துத்தானே பதிவிட்டிருக்கிறேன். பாராட்டுக்கு நன்றி முரளி.

    ReplyDelete
  18. @ அம்பாளடியாள்
    உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  19. @ துளசிதரன். கீதா
    பாராட்டுக்கு நன்றி. மெயில் வராமலேயே பதிவுக்கு வந்து விட்டீர்களே. இனி மெயில் வரும்.

    ReplyDelete

  20. @ கில்லர்ஜி
    வருகை த்ந்து பாராட்டியதற்கு நன்றி ஜி.

    ReplyDelete

  21. @ வருண்
    என்னைப் போன்ற குணங்கள் உங்களுக்கும் இருக்க வேண்டும். அதனால்தான் பதிவின் வரிகள் பொருந்துகின்றன. சரி. என்னைப் போல் பிரமாணம் எடுத்து விட்டீர்களா.?வருகைக்கு நன்றி வருண்.

    ReplyDelete

  22. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  23. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிடி.

    ReplyDelete

  24. @ ஆதி வெங்கட்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  25. @ வே நடன சபாபதி
    வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  26. @ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்

    ReplyDelete

  27. @ ஆறுமுகம் அய்யாசாமி
    முதல்(?) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா.

    ReplyDelete

  28. @ ரமணி
    வஞ்சனை இல்லாமல் பாராட்டும் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  29. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  30. @ டாக்டர் கந்தசாமி
    புத்தாண்டு நம்மை நாமே introspect செய்து கொள்ள உதவுகிறது.குறைகள் தெரிய வரும்போது நிவர்த்தி செய்து கொள்ள இம்மாதிரி புத்தாண்டுப்பிரமாணங்கள் உதவாஅம். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  31. @ யாழ்பாவாணன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  32. @ ஸ்ரீ ராம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  33. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  34. "கூடிப் புலம்பலாம், ஒப்பாரி வைக்கலாம்,
    நடப்பதென்னவோ நடந்தே தீரும்" எனதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நடக்க வேண்டியவற்றைத் திசைமாற்றிவிட முடியும், மனித எத்தனத்தால்.
    தங்கள் தொடர்ந்த எழுத்துப் பணிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  35. @ யாதவன் நம்பி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete

  36. @ செல்லப்பா யக்ஞசாமி
    நடக்கைருப்பதை திசை மாற்றி விட முடிந்தால் ஆஹா எவ்வளவோ நலம் பயக்குமே
    வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  37. கண்ணாடி ஓவியம் அழகு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  38. மயூரநாதர் கோவிலில் வாங்கிய அபயாம்பிகை படம் மாதிரி கண்ணாடி ஓவியம் வரைந்து விட்டீர்களா? மிக அழகு.

    கவிதை மிக அருமை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  39. @ ராமலக்ஷ்மி
    ஓவியத்திற்கு பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  40. @ கோமதி அரசு
    கண்ணாடி ஓவியம் இன்னும்நன்றாக வந்திருக்கலாம். முன்பு போல் நுணுக்கமாக பெயிண்ட் செய்ய முடிவதில்லை. மேலும் அவுட்லைன் வரையும் போது இடம் வலம் மாறி இருக்கும். அதைப் பெயிண்ட் செய்வதில் சிரமம் தெரிகிறது. எப்படியோ முடித்து விட்டேன்பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  41. ஓவியம் மிக அழகாய் இருக்கிறது....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. // நன்மையையும் தீமையும், இரவும் பகலும்,
    நாளும் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்
    இயற்கையின் நியதி.
    கூடிப் புலம்பலாம், ஒப்பாரி வைக்கலாம்,
    நடப்பதென்னவோ நடந்தே தீரும்.
    நீயும் நானும் மாற்றவா முடியும்.?
    எண்ணி மருகினும் இயலாத ஒன்று.//

    புத்தாண்டு சிந்தனை. மறுக்க இய்லாத வாழ்வியல் உண்மை.

    தங்கள் ஆசீர்வாதம் வேண்டும். வாழ்த்த வயதில்லை. இருப்பினும் மரபு காரணமாக, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்களை உளமார சொல்லிக் கொள்கிறேன்..

    ReplyDelete

  44. @ வெங்கட் நாகராஜ்
    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்நன்றி வெங்கட்ஜி

    ReplyDelete

  45. @ மனோ சாமிநாதன்
    புத்தாண்டு வாழ்த்து உங்களுக்கும் உரித்தாகுக.வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  46. @ தமிழ் இளங்கோ
    உங்கள் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  47. வணக்கம் ஐயா!

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    மனந்திறந்து பேசினீர் மாற்றம் வரட்டும்!
    தினம்..ஆற்று வீர்செய்கை தேர்ந்து!

    மனந்திறந்த பேச்சு.. உங்கள் மனதிற்கு சற்றுப் பாரத்தை இறக்கிவைத்த உணர்வினைத் தந்திருக்கும்!
    வருத்தம் வேண்டாம் ஐயா!
    தொடர்ந்து இயங்குங்கள்!..

    ஓவியம் மிக அருமை ஐயா!
    அற்புதக் கலைஞர் நீங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. பிரமிக்க வைத்த கண்ணாடி ஓவியம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

  49. @ இளமதி
    மனப் பாரத்தை இறக்கி வைக்க எழுதியது அல்ல, என்படைப்பு. புத்தாண்டில் ஒரு சுய அலசல். அவ்வளவுதான். வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  50. @ கீதா சாம்பசிவம்
    வருகை தந்து பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  51. படம் பிரமாதம். ஒரிஜினலை விட sharp. முருகர் தானே?

    ReplyDelete
  52. இந்தப் பதிவிலும், முந்தைய பதிவிலும் கருத்துச் சொல்லி இருக்கிறேன். மறந்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன்.:)

    ReplyDelete

  53. @ A Durai
    துரை சார் இதுதான் குசும்பு எனப் படுகிறதோ? அந்த ஓவியம் அபயாம்பிகை என்று எண்ணி வரைந்து விட்டேன். முருகன் போல் தெரிகிறதா. என் பின்னூட்ட மறு மொழி ஒன்றில் இப்போதெல்லாம் நுணுக்கமாக பெயிண்ட் செய்வது கஷ்டமாய் இருக்கிறது என்று சொன்னது நிஜம் அபயாம்பிகை என்று பதிவில் குறிப்பிடவில்லை.உங்கள் பின்னூட்டம் உயர்வு நவிற்சி அணியில் சேர்க்கட்டுமா. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  54. @ கீதா சாம்பசிவம்
    சாரி மேடம். கவனப் பிசகு என்றே நினைக்கிறேன் . தெளிவு செய்ததற்கு நன்றி.

    ReplyDelete
  55. பல்துறை அறிஞரான தங்களின் பகிர்வுகள் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  56. பல்துறையில் மிளிரும் தங்களின் பகிர்வுகள் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. நன்றி.

    ReplyDelete

  57. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைஉக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete