Tuesday, December 1, 2015

சாய் சரோவரில் பீதி...!


                                           சாய் சரோவரில் பீதி.....!
                                           ------------------------------------சாய் சரோவரில் பீதி
பெங்களூருவை விட்டு வந்து ஒரு வார காலத்துக்கும் மேலாகியும் நிலைமை சகஜ நிலைக்கு வரவில்லை. நான் சென்னை வந்த நோக்கமும் நண்பர்களைசந்திப்பது நிறைவேறவில்லை. நேரத்தைக் கழுத்தைப்பிடித்துத் தளளுவதுபோல் இருந்தது. பெங்களூரிலாவது கணினி என் வசம் இருந்தது. எதையாவது படித்து எதையாவது எழுதி என்னைஓரளவாவது பிசியாக வைத்துக் கொள்வேன்  ஒன்றுமில்லாவிட்டல் என் வீட்டைச் சுற்றி வருவேன் ஒரு காலத்தில் வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாய் இருந்தது.  இப்போதெல்லாம் வாசிப்பதில் ஆர்வம் இல்லை. கண் சரியாக ஒத்துழைப்பதில்லை. படிக்கும்போது கண்முன்னே நிழலாடி  படிக்க முடியாமல் செய்யும்  அவ்வப்போது வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சம் படிக்கலாம்

இந்த மாதிரியான சமயத்தில் என் மருமகள் செய்திருந்த க்வில்லிங் வேலைப்பாடுகள் சிலவற்றைக் கவனித்தேன் ஒரு முறை பதிவர் ஒருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை அவர் செய்திருக்கும் சில பொருட்களின்  புகைப் படங்களைப் பதிவிட்டிருந்ததும் அதன் செய்முறையை நான் கேட்டு எழுதி இருந்ததும் நினைவுக்கு வந்தது நாமும் ஏன் இதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதுநுணுக்கமான சில வேலைப்பாடுகளுக்கு  you need deft fingers. என் கை அமைப்பே அதற்கு சரியாகாது. இருந்தாலும் என்னால் முடியும் என்னும்  தன்னம்பிக்கையே என் பலம் என் மருமகளிடமிருந்த பொருட்களைக் கொண்டே என் பயிற்சியை ஆரம்பித்தேன் முதலில் இரு ஜிமிக்கிகள் செய்தேன் . நன்றாக வந்திருப்பதாக என் மருமகள் உற்சாகமூட்டினாள் அதை அணிந்தும் காட்டினாள். ஆனால் அதை நான் பெங்களூரு வந்ததும் தொடர்வதற்கான ஆதாரப் பொருட்களை என் மகன் வாங்கிக் கொடுத்தான்என் மகனுக்கு 23-ம் தேதி முதல் டூர் இருந்தது. 22-ம் தேதி காலை சதாப்திக்கு பயணச்சீட்டு வாங்கினான் அதிகாலை ஆறு மணிக்கு ரயில் புறப்பாடு. ஏறத்தாழ 18 கி மீ தூரம் போகவேண்டும் ஆகவே நாங்கள் காலை மூன்றரை மணிக்கு எழுந்து புறப்படுவதாகத் திட்டம்  அனைவரும் சீக்கிரமாகவே படுக்கப் போய் விட்டோம்

சுமார் பத்தரை மணிவாக்கில் குடியிருப்பில் இருந்த சிலர் கதவைப் படபடவெனத் தட்டி எங்களை எழுப்பி அனைவரும் கீழ்தளத்துக்குச் செல்லப் பணித்தனர் என்ன வென்று தெரியவில்லை. ஆனால் கட்டிடத்திலிருந்து ஏதோ புகையும் வாசனை வந்தது. ஏதோ மின்சாரப் பிரச்சனை ஒருவேளை கட்டிட வைரிங் எரிந்து போகிறதோ என்று சந்தேகம் சாய் சரோவர் ஒரு பத்துமாடிக் கட்டிடம் மொத்தம் 89 குடியிருப்புகள் உள்ளன. அனைத்துக் குடும்பங்களும் கீழ்தளத்துக்கு வந்து விட்டனர் மெயின் பவரை ஆஃப் செய்து விட்டனர் ஈபி க்கு தகவல் கொடுக்கப் பட்டது அவர்கள் வந்து பார்த்தனர் சப்ளையில்  ஏற்ற இறக்கம் இருந்ததால் பல மின் சாதனங்கள் பழுதாகி விட்டன. கட்டிடத்துக்கான ஜெனரேட்டரில்  சில விளக்குகள் எரிந்தன. ஓரிரு மணிநேரத்துக்குப் பின் ஆல் க்லியர் சிக்னல் கிடைத்ததும் எல்லோரும் அவரவர் இடத்துக்குத் திரும்பினோம் மின்சாரம் அதிகம் தேவைப்படும் சாதனங்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்/
பிறகென்ன சென்னையில் கடைசிநாளும் அரை குறைத் தூக்கத்தோடு கழிய விடிகாலை மகன் ரயில் நிலையத்துக்குக் கூட்டி வந்து எங்களை ரயிலேற்றினான்  பதினொரு மணி அளவில் பெங்களூரு ரயில் நிலையத்தில் இரண்டாம் மகன் காத்திருந்து அழைத்து வந்தான் சென்னையில் மழை குறையத் தொடங்கி விட்டது என்று எண்ணும்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி சென்னையையும் தமிழகத்தையும் மழை விட்ட பாடில்லை

video
 27 comments:

 1. இப்போது சென்னை மிதக்கிறது. மறுபடி கனமழை.

  ReplyDelete
 2. தங்களின் கைவண்ணம் நன்றாக இருக்கின்றது..
  இப்போது மீண்டும் மழை ஆரம்பித்திருக்கின்றது..
  ஒன்றும் சொல்ல இயலவில்லை..

  ReplyDelete
 3. ஜிமிக்கிகள் அழகு...

  சென்னை மீண்டும் தத்தளிக்கிறது...

  ReplyDelete
 4. புதிதாக ஒரு திறமையைக் கற்று வந்திருக்கிறீர்கள்
  வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 5. தங்களது கலை வண்ணம் கண்டோம் அய்யா! அருமை!
  "மழை படுத்திய பாடு"அனுபவம் உணர்த்திய உணர்வுகளை உரைநடையில் உயிர்பித்த உயர் செயலை படித்துணர்ந்தோம்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. அருமையாக இருக்கிறதே
  தங்கள் ஆர்வம் மிக்க மகிழ்வளிக்கிறது
  கிடைப்பவற்றுள் இருப்பவற்றுள்
  ஆர்வம் கொள்வது கூட ஒருவகையோக நிலைதான்
  அந்த அந்த ஷணத்தில் வாழுதல் தான்
  வாழ்வாங்கு வாழுதல் இது எத்தனைப் பேருக்குப் புரியும்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 7. //என் மருமகள் செய்திருந்த க்வில்லிங் வேலைப்பாடுகள் சிலவற்றைக் கவனித்தேன் ஒரு முறை பதிவர் ஒருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை அவர் செய்திருக்கும் சில பொருட்களின் புகைப் படங்களைப் பதிவிட்டிருந்ததும் அதன் செய்முறையை நான் கேட்டு எழுதி இருந்ததும் நினைவுக்கு வந்தது .//

  அவர் தில்லி வாழ் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள். தனது மகள் செய்திருந்ததை படமெடுத்து பதிவில் போட்டிருந்தார்.

  தாங்கள் செய்திருப்பது அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்!

  சென்னையில் நாங்கள் மழையின் அடுத்த தாக்குதலை எதிர்நோக்கி கவலையுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 8. அழகான தோடு நேரத்தை கற்றுக்கொள்வதில் செலவிடுவது என்பது மன நிறைவான ஒன்று...நல்ல வேளை சென்னையை விட்டுச்சென்று விட்டீர்கள்..கன மழை...சார்.

  ReplyDelete

 9. இப்படி செய்து பழகுவதற்க்கு பொறுமை வேண்டும் ஆச்சர்யமாக இருக்கிறது
  சென்னை மீண்டும் மழையில் மிதக்கின்றது.

  ReplyDelete
 10. க்வில்லிங்க் தோடுகள் அழகு. என் மகளும் அவளுக்கான தோடுகளை செய்து கொள்கிறாள்.....

  மழை மீண்டும் பெய்கிறது. சென்னை மிதப்பதைப் பார்த்தேன் - செய்திகளில்....

  ReplyDelete
 11. புதிதுபுதிதாய்க் கற்றுக்கொள்வது முதுமையை அயற்சியின்றி வாழவைக்கும் அருமருந்து என்பர்.. நுணுக்கமான கைவேலைப்பாட்டையும் இனிதே கற்றுத்தேர்ந்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete

 12. @ ஸ்ரீராம்
  /சென்னை இப்போது மிதக்கிறது மிண்டும் கனமழை/ சென்னையை விட்டு வந்தாலும் எங்கள் மனம் சென்னையிலேயேதான் இருக்கிறது. நிலைமை விரைவில் சீரடைய வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 13. @ துரை செல்வராஜு
  மழைமீண்டும் தொடங்கி உள்ளதால் மனமும் வேதனைப் படுகிறது. மழையால் அவதிப்படுவோர் சீக்கிரமே அதிலிருந்து மீள வேண்டும் என்பதே நினைப்பு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 14. @ நாகேந்திர பாரதி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 15. @ திண்டுக்கல் தனபாலன்
  பாராட்டுக்கு நன்றி. தமிழகமே மழை என்று செய்திகள் கூறுகின்றன. உங்கள் ஏரியாவில் எப்படி?

  ReplyDelete

 16. @ கரந்தை ஜெயக்குமார்
  பொழுதைக் கழிக்க இதுவும் ஒரு வழி/ வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ யாதவன் நம்பி
  மழைபடுத்திய பாட்டில் நான் எழுதியது மிகக் குறைவே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 18. @ ரமணி
  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 19. @ வே.நடனசபாபதி
  ஐயா வணக்கம் வெங்கட நாகராஜின் மகளது கைவண்ணம் அவர் பதிவில் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் நான் பதிவுகளில் முதன் முதல் பார்த்தது அது அல்ல. அது பற்றி அவரிடம்கேட்கவுமில்லை. பதிவர் தமிழ் முகில் பிரகாசம் என்பதே என்நினைவு. அவரிடம்தான் கேட்ட நினைவு. வருகைக்கு பாராட்டுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 20. @ எம் கீதா
  இன்னும் நிறையவே கற்றுக் கொள்ள இருக்கிறது. சென்னையை விட்டுச் சென்றது நல்லதாகப் போயிற்று. இருந்தாலும் மனம் சென்னையிலேயே இருக்கிறதுமழை நிற்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 21. @ கில்லர்ஜி
  கற்றுக் கொள்ள பொறுமை இருக்கிறது ஆனால் திறமைதான் குறைவு ஆம் ம்சென்னை மீண்டும் மிதைக்கிறது. இந்தமுறை பாதிப்பு இன்னும் கூடுதல். நன்றி ஜி

  ReplyDelete

 22. @ வெங்கட நாகராஜ்
  நான் செய்யும் தோடுகள் அணிய பெண்குழந்தைகள் இங்கு யாருமே இல்லை. நானே செய்து பார்த்து திருப்தியோ அதிருப்தியோ கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ கீதமஞ்சரி
  நுணுக்கமான வேலைப் பாட்டைக் கற்க முயற்சி செய்கிறேன் என்பதே சரி. முதுமைபற்றி நான் நினைப்பதே குறைந்துவிட்டது வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete
 24. முதுமையில் நம்மை நாமே புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள இது போன்ற கற்றல்கள் இல்லை ஏதேனும் நமக்குப் பிடித்தவற்றைச் செய்யவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. உங்களுக்கு அது கைவந்த கலையாகவே உள்ளது...அருமையாகச் செய்துள்ளீர்கள் சார்.

  கீதா: நானும் செய்வதுண்டு சார். நிறைய செய்ததுண்டுவிதம் விதமாக..

  ReplyDelete

 25. @ துளசிதரன் தில்லையகத்து
  பொழுது ஏராளமாக இருந்த நேரத்தில் கற்றுக் கொள்ளச் செய்த முயற்சிஅது. முதுமைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன் டிவி இல்லாமல் மின்சாரம் இல்லாமல் எந்த தொடர்பு சாதனங்களும் கை கொடுக்காத நேரங்களில் என் மருமகள் என்னென்னவோ கை வேலைகள் செய்கிறாள்/ கீதாவும் செய்ததுண்டு என்று தெரிவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் கீதா. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 26. தங்களது கைவண்ணத்தில் ஜிமிக்கிகள் அழகு ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete