பல்சுவைப்பதிவு
--------------------------
இடியாப்பச் சிக்கல் என்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதை நன்றாக முடிப்பவர்களுக்கு ரூ1000-/ பரிசு என்றும் அறிவித்திருந்தேன் வாசகர்கள் முயற்சி செய்து கூடப் பார்க்கவில்லை. சில சந்தர்ப்பங்களையும் சூழ் நிலைகளையும் கொடுத்திருந்தேன். அது நடப்பில் இருக்கும் ஒரு வழக்கின் கதைபோல் இருக்கும் ஆனால் அந்த வழக்கின் முடிவு இன்னும் வரவில்லை. விசாரணையும் தொடர்கிறது. இம்மாதிரியான சூழலில் கற்பனைக்கு கடிவாளம் இடாமல் செலுத்தினால் ஒரு நல்ல கதை முற்றுப் பெறும் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் போட்டி அறிவித்திருந்த சமயம் வலைப்பதிவர்களுக்கு பல தலைப்புகளில் போட்டியும் இருந்ததால் பலரும் பங்கு கொள்ள முடியாமல் போயிருக்கலாம் இப்போது சொல்வது போட்டிஅல்ல. கதையைத் தொடர அழைக்கிறேன்
அண்மையில் நான்
படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்
ஒரு அமெரிக்கச் செல்வந்தர் உலகில் பெரு நகரங்களில்
இருக்கும் சர்ச்சுகளைப் பார்வையிட்டு
விபரங்கள் சேகரிக்க விரும்பினார்
அதற்காக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். . முதலில் சீனாவுக்குச் சென்று
அங்கிருந்த தேவாலயங்களைப் பார்வையிட்டார்.
அப்படிப் பார்வையிடும் போது அங்கிருந்த ஒரு சர்ச்சில் ஒரு பொன்னால் ஆனஒரு தொலைபேசி
அவரைக் கவர்ந்தது அதிலிருந்து பேச கட்டணம்
10000 டாலர் என்று எழுதி இருந்தது. ஆச்சரியப்பட்டு ஏன் அவ்வளவு கட்டணம் என்று அங்கிருந்த மேலாளரைக் கேட்டார். அவர்
அந்தத் தொலைபேசி நேராக சொர்க்கத்தில் கடவுளுடன் தொடர்பு ஏற்படுத்தும்
என்றார்.விஷயத்தை உள்வாங்கிக் கொண்டவர் ஏதும் கூறாமல் வந்து விட்டார். அடுத்து ஜப்பானுக்குச் சென்று அங்கிருந்த
தேவாலயங்களைப் பார்வை இட்டார் . அங்கும் ஒரு தேவாலயத்தில் ஒரு பொன் தொலைபேசி நேரே
கடவுளுடன் தொடர்பு கொள்ள வைக்கும் என்றும் அதில் பேச 10,000 டாலர் என்றும்
அறிந்தார். இப்படியாக சிங்கப்பூர்
ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளிலும் இதேபோல் பொன் தொலைபேசி இருப்பதையும் பேச கட்டணம் 10,000 டாலர் என்றும் அறிந்தார். கடைசியாக இந்தியா வந்தவர் இங்கிருந்த பெயர்
பெற்ற தேவாலயங்களிலும் பொன்னால் ஆன தொலை பேசிகள் இருந்ததைக் கண்டார்/ ஆனால் அதில் பேச ஒரு ரூபாய்க் கட்டணம் என்று
எழுதி இருந்தது. ஆச்சரியப்பட்டு அவர்
அது பற்றி விசாரித்தார் பிற நாடுகளில் சொர்க்கத்தில்கடவுளைத் தொடர்பு கொள்ள 10000 டாலர் வசூலிக்கப் படும்போது இங்கு மட்டும்
ஏன் ஒரே ஒரு ரூபாய் என்று கேட்டார்
அதற்குப் பதிலாக இந்தியா ஒரு சொர்க்கம் ஆகவே இங்கு கடவுளிடம் பேசுவது ஒரு லோகல் கால் என்றும் அதனால்தான் ரூபாய் ஒன்று என்றும் பதில் வந்தது…..!
சென்னையில் மழை
வெள்ளத்தால் பாதிப்பு பற்றி இரு விஷயங்களைப் பகிர விரும்புகிறேன் பெங்களூரில் தினேஷ் ஜெயின் என்பவர் சென்னையில் எங்கும் வெள்ளம் இருந்தும் குடி
நீர் பிரச்சனையாக இருப்பதை அறிந்து 20000 லிட்டர் கொள்ளளவு கொள்ளக் கூடிய
அமிர்ததாரா எனும் வண்டியை சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்இதன் விசேஷம்
என்னவென்றால் மழை வெள்ள நீரையும் குடிநீராக
மாற்றும் ஊர்தி அது. Reverse osmosis
என்னும் வசதி பொருந்திய ஊர்தி அது. சமூக தளங்களில் இருந்து வந்த 200 க்கும் மேற்பட்டசெய்திகளால் உந்தப்பட்டு இத்தொண்டினைச்
செய்கிறார். முதலில் தாம்பரத்திலும் பின் வேளச்சேரியிலும் அது இயங்கும்
என்றும் தெரிகிறது வெள்ளிக்கிழமை
பெங்களூர் த ஹிந்து பதிப்பில்வெளியான செய்தி இது.
இன்னொரு செய்தி நேரில் கண்டது. வெள்ள நிவாரணம்
என்னும் பெயரில் பணம் வசூலிக்கப் படுவது. பெங்களூரு ராமமூர்த்திநகர் ஜங்க்ஷனில் ஒரு
மாது (திரு நங்கையாகவும் இருக்கலாம் ) பெரிய குங்குமப் பொட்டும் மஞ்சள்பூசிய
முகமுமாக நாற்சந்தியில் சென்னை வெள்ள
நிவாரணத்துக்காக நிதி வசூலிக்கிறார் ஒரு அட்டைப் பெட்டியில் சென்னை வெள்ள நிவாரண
நிதி என்று எழுதி போகும் வரும் கார்களில்
பயணம் செய்வோரிடமிருந்து பணம் வசூலிக்கிறார் நிவாரணத்துக்காக மனம் உவந்து பணம்
தருபவர்களையும் காணலாம் அல்லது இதுவும் ஒரு கௌரவப் பிச்சையாக இருக்கலாம் ( பிச்சையா ஏமாற்றா )
தொலைபேசி கதை அருமை ஐயா இந்தியா சொர்க்கமே...
ReplyDeleteமற்ற தகவல்கள் நன்று
சென்னையில் இன்று வெயில் அடித்தாலும், நாளை முதல் மழை மறுபடி மிரட்டும் என்கிறது செய்தி. கவலை.
ReplyDeleteஅனைத்தும் அருமை அய்யா!
ReplyDeleteஅதிலும் கடவுளுடன் பேசும் தொலைபேசி, சென்னையில் குடிநீர் வழங்கும் லாரி இரண்டும் சூப்பர்.
தாங்களின் பல்சுவைப்பதிவு- சிந்தனையின் சிறப்பு- ஒரு இராகமாலிகை- ... பதிவின் ஆரம்பத்தில் உங்களின் கேள்வி "நான் ராஜா மகள் புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா...?" என்கிற.... இராகமாலிகைப் பாடல் நினைவுக்கு வருகிறது ... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. உத்திராகண்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து....
ReplyDeleteஇந்தியா சொர்க்கம்தான். என்ன, சென்னையில் கொஞ்சம் கூடுதல் மழை. அவ்வளவுதான்.
ReplyDeleteஇந்தியா சொர்க்கமே! துன்பம் வரும் போது தான் நம் மக்களின் மனித நேயம், நட்புறவு என்றெல்லாம் வெளிப்படுகிறது . அதை நினைத்துப் பார்க்கும் போது நிஜமாகவே இந்தியா சொர்க்கம் தான்.
ReplyDeleteஇந்த மஞ்சள் முகங்களும், குங்குமப் பொட்டுகளும் எந்த சமயத்தில் என்ன செய்யுமோ, தெரியாதே!கையிலே சொம்பு. மனதிலே வம்பு?
ReplyDeleteஉதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
ReplyDeleteசில வேண்டுதல்கள்...
இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...
அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..
1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.
2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..
3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.
4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.
5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..
நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.
உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.
அப்படின்னா கடவுள் இந்த உலகத்தில் இல்லையா :)
ReplyDelete
ReplyDelete@ கில்லர் ஜி
வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஜி.
ReplyDelete@ ஸ்ரீராம்
உங்கள் பின்னூட்டம் காண மகிழ்ச்சியாய் இருக்கிறது ஹோப் ஃபர் த பெஸ்ட் அண்ட் பி ப்ரிபேர்ட் ஃபர் த வொர்ஸ்ட்
ReplyDelete@ செந்தில் குமார்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்
ReplyDelete@ கோபால கிருஷ்ணன்
உத்தரகாண்டத் திட்டப் பணிமனையிலிருக்கும் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது நன்றிகள்
ReplyDelete@டாக்டர் கந்தசாமி.
என்ன சென்னையில் கொஞ்சம் கூடுதல் மழையா ?தமிழகமெங்கும் மழை பெய்கிறதே . கோவையில் இல்லையா.
ReplyDelete@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
என்ன செய்வது இந்தியாவில் இடர் வரும்போதுதான் மனித நேயம் மிளிர்கிறது வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ ஏகாந்தன்
ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கவே அந்தச் செய்தி வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ அன்பேசிவம்
ஒரு பதிவுக்கான செய்தி பின்னூட்டத்தில்...! நன்றி ஐயா.
ReplyDelete@ பகவான் ஜி
சொர்கத்தில்தானே கடவுள் இருக்கிறார். இந்தியா சொர்க்கம் என்றால் இந்தியாவில் கடவுள் இருக்கிறார் என்றுதானே அர்த்தம் நன்றி ஜி.
தங்களின் வித்தியாசமான எழுத்து நடை, எங்களை பிறிதொரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. நன்றி.
ReplyDeleteவெள்ள நிவாரணம் என்ற பெயரில் சில தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க நன்கொடைகளை நமக்குத் தெரிந்த அரசு சாரா நிறுவனங்களிடம் (NGO) தருவதே சிறந்தது.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுகிறேன் வித்தியாசமாக எழுத எந்த தனி முயற்சியும் இல்லை. வருகைக்கு நன்றி சார்
வெள்ள நிவாரணப் பொருட்களை அரசு சாரா நிறுவனத்தார் எடுத்துச் செல்லும்போது கடலூர் அருகே வழிப்பறி செய்யப்பட்டனராம்
ReplyDeleteஇந்தியா சொர்கம்தான்... இங்கு லா என்ஃபோர்ஸ்மென்ட் இல்லையே. எங்கு வேண்டுமானாலும் துப்பலாம். கழியலாம்., குப்பை போடலாம், சத்தமாகப் பேசலாம், நடு ரோட்டிலும் குடும்பம் சண்டிய போடலாம்...ந்மக்கு வேலை செய்ய வீட்டு வேலை செய்ய நிறையபேர் கிடைப்பார்கள்...டிக்கெட் எடுக்காமல் கூட ப்யணிக்கலாம். பிடிபட்டால் என்ன ரூபாய் கொடுத்தால் போதும்..டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு ஓசியில் பேப்பர் படிக்கலாம் டீக்கடையில் கணக்கு வைத்துக் கொள்ளலாம், வம்படிக்கலாம்...இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்..
ReplyDeleteஅட அருமையான வண்டி மழை வெள்ள நீரையும் குடிநீராக்க மாற்றும் மொபைல்வண்டி அருமை....நல்ல உள்ளம்...
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
நீங்கள் பட்டியலிடும் விஷயங்கள்தான் சொர்க்க வாழ்க்கையா. ?மழைவெள்ள நீரையும் குடி. நீராக்கும் வண்டி பற்றிய செய்தியை ஊடகங்களில் பார்க்கவில்லையே வருகைக்கு நன்றி சார்