கதை மழை அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை மழை அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 டிசம்பர், 2015

பல்சுவைப் பதிவு


                                                      பல்சுவைப்பதிவு
                                                      --------------------------

இடியாப்பச் சிக்கல் என்று ஒரு கதை எழுதி இருந்தேன் அதை நன்றாக முடிப்பவர்களுக்கு ரூ1000-/ பரிசு என்றும் அறிவித்திருந்தேன் வாசகர்கள் முயற்சி செய்து கூடப் பார்க்கவில்லை. சில சந்தர்ப்பங்களையும் சூழ் நிலைகளையும் கொடுத்திருந்தேன். அது நடப்பில் இருக்கும் ஒரு வழக்கின் கதைபோல் இருக்கும் ஆனால் அந்த வழக்கின் முடிவு இன்னும்  வரவில்லை. விசாரணையும் தொடர்கிறது. இம்மாதிரியான சூழலில் கற்பனைக்கு கடிவாளம் இடாமல் செலுத்தினால் ஒரு நல்ல கதை முற்றுப் பெறும் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் போட்டி அறிவித்திருந்த சமயம் வலைப்பதிவர்களுக்கு பல தலைப்புகளில் போட்டியும் இருந்ததால்  பலரும் பங்கு கொள்ள முடியாமல் போயிருக்கலாம் இப்போது சொல்வது போட்டிஅல்ல. கதையைத் தொடர அழைக்கிறேன் 


அண்மையில் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்
ஒரு அமெரிக்கச் செல்வந்தர் உலகில் பெரு நகரங்களில் இருக்கும் சர்ச்சுகளைப் பார்வையிட்டு  விபரங்கள்  சேகரிக்க விரும்பினார் அதற்காக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். . முதலில் சீனாவுக்குச் சென்று அங்கிருந்த  தேவாலயங்களைப் பார்வையிட்டார். அப்படிப் பார்வையிடும் போது அங்கிருந்த ஒரு சர்ச்சில் ஒரு பொன்னால் ஆனஒரு தொலைபேசி அவரைக்  கவர்ந்தது அதிலிருந்து பேச கட்டணம் 10000 டாலர் என்று எழுதி இருந்தது. ஆச்சரியப்பட்டு ஏன் அவ்வளவு கட்டணம்  என்று அங்கிருந்த மேலாளரைக் கேட்டார். அவர் அந்தத் தொலைபேசி நேராக சொர்க்கத்தில் கடவுளுடன் தொடர்பு ஏற்படுத்தும் என்றார்.விஷயத்தை உள்வாங்கிக் கொண்டவர் ஏதும் கூறாமல் வந்து விட்டார்.  அடுத்து ஜப்பானுக்குச் சென்று அங்கிருந்த தேவாலயங்களைப் பார்வை இட்டார் . அங்கும் ஒரு தேவாலயத்தில் ஒரு பொன் தொலைபேசி நேரே கடவுளுடன் தொடர்பு கொள்ள வைக்கும் என்றும் அதில் பேச 10,000 டாலர் என்றும் அறிந்தார். இப்படியாக சிங்கப்பூர்  ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளிலும் இதேபோல் பொன் தொலைபேசி இருப்பதையும்  பேச கட்டணம் 10,000 டாலர் என்றும் அறிந்தார்.  கடைசியாக இந்தியா வந்தவர் இங்கிருந்த பெயர் பெற்ற தேவாலயங்களிலும் பொன்னால் ஆன தொலை பேசிகள்  இருந்ததைக் கண்டார்/  ஆனால் அதில் பேச ஒரு ரூபாய்க் கட்டணம் என்று எழுதி இருந்தது. ஆச்சரியப்பட்டு அவர்

அது பற்றி  விசாரித்தார் பிற நாடுகளில்  சொர்க்கத்தில்கடவுளைத் தொடர்பு கொள்ள  10000 டாலர் வசூலிக்கப் படும்போது இங்கு மட்டும் ஏன்  ஒரே ஒரு ரூபாய் என்று கேட்டார் அதற்குப் பதிலாக  இந்தியா ஒரு சொர்க்கம் ஆகவே இங்கு கடவுளிடம் பேசுவது  ஒரு லோகல் கால் என்றும்  அதனால்தான் ரூபாய் ஒன்று என்றும் பதில் வந்தது…..! 


சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு பற்றி இரு விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்  பெங்களூரில் தினேஷ் ஜெயின் என்பவர்  சென்னையில் எங்கும் வெள்ளம் இருந்தும் குடி நீர் பிரச்சனையாக இருப்பதை அறிந்து 20000 லிட்டர் கொள்ளளவு கொள்ளக் கூடிய அமிர்ததாரா எனும் வண்டியை சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்இதன் விசேஷம் என்னவென்றால்  மழை வெள்ள நீரையும் குடிநீராக மாற்றும் ஊர்தி அது.  Reverse osmosis என்னும் வசதி பொருந்திய ஊர்தி அது. சமூக தளங்களில் இருந்து வந்த 200 க்கும்  மேற்பட்டசெய்திகளால் உந்தப்பட்டு இத்தொண்டினைச் செய்கிறார். முதலில் தாம்பரத்திலும் பின் வேளச்சேரியிலும்  அது இயங்கும்  என்றும் தெரிகிறது  வெள்ளிக்கிழமை பெங்களூர் த ஹிந்து பதிப்பில்வெளியான செய்தி இது.


இன்னொரு செய்தி நேரில் கண்டது. வெள்ள நிவாரணம் என்னும் பெயரில் பணம் வசூலிக்கப் படுவது. பெங்களூரு ராமமூர்த்திநகர் ஜங்க்‌ஷனில் ஒரு மாது (திரு நங்கையாகவும் இருக்கலாம் ) பெரிய குங்குமப் பொட்டும் மஞ்சள்பூசிய முகமுமாக  நாற்சந்தியில் சென்னை வெள்ள நிவாரணத்துக்காக நிதி வசூலிக்கிறார் ஒரு அட்டைப் பெட்டியில் சென்னை வெள்ள நிவாரண நிதி என்று எழுதி  போகும் வரும் கார்களில் பயணம் செய்வோரிடமிருந்து பணம் வசூலிக்கிறார் நிவாரணத்துக்காக மனம் உவந்து பணம் தருபவர்களையும் காணலாம் அல்லது இதுவும் ஒரு கௌரவப் பிச்சையாக இருக்கலாம் ( பிச்சையா ஏமாற்றா )