Sunday, December 27, 2015

VALUE ENGINEERING மற்றும் தரமும்


                               VALUE ENGINEERING மற்றும் தரம்
                               ----------------------------------------------------
வலைப்பூ தொடங்கிய புதிதில் தரம் எனப் படுவது யாதெனில்என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்தப் பதிவு நான் எழுதிய பதிவுகளில் மிகவும் அதிகமாகப் படிக்கப்பட்ட பதிவுகளில் ஒன்று. ஆனால் நம்புவதே சிறிது கஷ்டமாக இருக்கிறது. அத்தனை பேர் படித்திருந்தாலும் ஒருவராவது கருத்து சொல்லவில்லை. இருந்தாலும் என்ன.? நான் எழுதுவேன், செய்தி போய்ச் சேர்ந்தால் சரி. இப்போது இது எதற்கு என்று தோன்றலாம். Fitness for use என்பதே தரத்தின் முதல் படி என்றிருந்தாலும் வாடிக்கையாளரின் திருப்தி மிகவும் முக்கியம் என்று எழுதி இருந்தேன். For reference….. gmbat1649.blogspot.in/2010/11/blog-post.html      இன்னொரு பதிவு இலவசமாக வருவதே தரம்“ வாடிக்கையாளரின் திருப்தியை கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிகள் பல எடுக்கிறார்கள். அந்தவகையில் ஒன்றுதான் வால்யூ எஞ்சினீரிங் அல்லது (value analysis.)உதாரணத்துக்கு தீப்பெட்டியை எடுத்துக் கொள்வோம். தீப்பெட்டியின் அளவு, அதில் இருக்கும் குச்சிகளின் எண்ணிக்கை, அவற்றின் தடிமன் நீளம், தலையில் இருக்கும் மருந்து, பெட்டியின் இரு  
பக்கமும் உராய்க்கும்போது எரிய மருந்து இன்ன பிற விவரங்கள் தீப்பெட்டியில் கவனிக்கப் படுகின்றன. ஏனெனில் இவை உற்பத்திச் செலவை அடிப்படையில் நிர்ணயிக்கும். சரி...... ஒரு தீப்பெட்டியை உபயோகிப்பவர், பெட்டியில் இருந்து குச்சியை எடுத்து பெட்டியின் பக்கவாட்டில் மருந்து தடவிய பக்கத்தில் உரசுகிறார். அது உரசிய முதல் முறையே தீப்பற்றினால் மகிழ்ச்சி. அது அதன் வேலையைச் செய்கிறது. இரண்டோ மூன்றோமுறை உரசவேண்டும் என்றால் அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. தீப்பெட்டி வேலை செய்தாலும் வாடிக்கையாளர் திருப்தி அடைவது இல்லை. காரணங்களை அலசினால், மருந்தின் தரம்,பூசிய விதம் முதல் குச்சி உடைவதுவரை , கைச் சூடாவது வரை, குச்சிகளின் எண்ணிக்கைவரை பலவற்றினால் திருப்தி பாதிப்படைகிறது. இந்தக் குறைகள் எல்லாம் நீக்கப்படவேண்டும் உபயோகிப்பவர் திருப்தியடைய வேண்டும்  கூடவே உற்பத்தி செலவையும்  குறைக்க வேண்டும்  என்பதும் முக்கியம் 

பெட்டியின் ஒரு பக்கம் மருந்து தடவி இருக்கும். அதிலும் விட்டுவிட்டு புள்ளிகளாக இருக்கும். குச்சியின் நீளம் குறைக்கப் பட்டிருக்கும். பெட்டியின் அளவும் குறைந்திருக்கும். மரக்குச்சிகளுக்குப் பதில் வாக்ஸ் தடவிய பேப்பர் குச்சிகள் இருக்கும். இவையெல்லாம் வால்யூ அனாலைசிஸின் விளைவுகளே. 

இன்னொரு கேஸ் எடுத்துக் கொள்ளலாம்.நன்றாக உடை அணிந்து டை கட்டிக் கொள்வது வழக்கத்தில் இருப்பதே. ஷர்ட்டுடன் டையைச் சேர்க்க டை பின் உபயோகிப்பதும் நாம் அறிவோம்
அந்த டையை ஷர்ட்டுடன் பிணைக்க ஒரு ஜெம் க்லிப் போதுமானதாய் இருக்கும். செலவே இல்லாதது. ஆனால் அதே பணியைச் செய்ய பல ரகங்களில் டை பின்கள்,பல விலைகளில் கடைகளில் விற்பனை ஆகின்றன. இப்போது நான் சொல்ல வருவது ஓரளவு விளங்க ஆரம்பிக்கும். குவாலிடி அல்லது தரம் என்பது ஃபிட்னெஸ் ஃபர்ர் யூஸ் என்று சொல்லப் பட்டாலும் வாடிக்கையாளரின் திருப்தியும் இருந்தால்தான் பொருள் விலை போகும். உபயோகிப்பவரின் திருப்தியைக் கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர் அதன் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும். அவரவர் திருப்திக்காக நிறைய விலை கொடுக்கத் தயாராய் இருப்பவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பொருள்களோ சேவைகளோ சந்தைக்கு வருகின்றன.VALUE ANALYSIS  மூலம் செலவைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் விலையைக் கட்டுப்படுத்தி உபயோகிப்பவர் திருப்தியடைகிறார்கள் என்றால் ஒரு பொருள் அல்லது சேவை சந்தையில் பெயர் பெறும். ஆனால் பெரிய கேள்விக்குறி என்னவென்றால் வாடிக்கையாளரின் திருப்தி என்பதற்கு சரியான அளவுகோல்  இருக்கிறதா என்பதுதான்.THAT IS AN EVER CHANGING FEELING......! THE YARDSTICK VARIES....!

.

27 comments:

  1. இந்தப் பதிவு டெக்னிகலான பதிவு. பொருட்களின் தர உயர்விற்கு தயாரிப்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியது. இதில் கருத்து மாறுபாட்டிற்கே இடமில்லை. ஆகவே படிப்பவர்கள் படிக்க மட்டும்தான் செய்வார்கள். கருத்துகள் குறைவாக, உங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து மட்டுமே வரும்.

    ReplyDelete
  2. ஆமாம். இந்த பதில் பதிவுக்கு மட்டும் இல்லை, கந்தசாமி ஸாரின் பின்னூட்டத்துக்கும்!

    ReplyDelete

  3. @ டாக்டர் கந்தசாமி
    தர உயர்வுக்கு அல்ல உற்பத்திச் செலவையும் குறைக்கதான் விலை குறைந்தால் விலை போகும் வாய்ப்பு அதிகம் ஏன் நாம் எழுதும் பதிவுகளிலும் கூட மதிப்பை ஏற்றலாம் கருத்துக் கூறுபவர்கள் பொதுவாக வேண்டப்பட்டவர்களும் நண்பர்களும் நாம் செல்லும் தள பதிவர்களும் என்பதை மறுக்க முடியாதுமேலும் கருத்திடுபவர்கள் மாறு பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்முதல் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  4. @ ஸ்ரீராம்
    டெக்னிகலான பதிவுக்கும் செறிவான பின்னூட்டங்கள் எழுதலாம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  5. டெக்னிகலான விஷயத்தையும் ரசிக்கும் விதத்தில் எழுதப்பட்ட பதிவு. கங்கிராட்ஸ்.

    நீங்கள் என் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதிலளிப்பீர்கள் என்றால் செறிவான பின்னூட்டங்களுக்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.

    ReplyDelete
  6. டெக்னிக்கலைக் குறித்த அலசல் இதசுவும் பல நல்ல கருத்துகளை வெளிக்கொண்டு வரும்.

    ReplyDelete
  7. மன்னிக்க இதுவும் என்று படிக்கவும்

    ReplyDelete
  8. தீப்பெட்டி உதாரணம் அருமை. உபயோகிக்கும் பொழுது உண்டான அனுகூலங்களைப் பொருத்து நிதர்சனமாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இந்த மாதிரியான பொருள்களில் கிடைக்கிறது. சரியே.

    தரம் என்பது இரண்டாம், மூன்றாம் நிலையில் இருந்தாலும் விளம்பரங்களின் மூலம் உபயோகிப்பார்களர்கள் மனசில் பொருளின் பிராண்ட் நேமைப் பதியவைக்கும் முயற்சிகளை அதிக அளவில் இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். சொல்லப்போனால் தரத்திற்கு சிரமப்படும் எல்லையைத் தாண்டி விளம்பரங்களுக்கு செலவு செய்யும் போக்கு காணப்படுகிறது. நாளாவட்டத்தில் தரத்திற்காக முக்கியத்துவமே மழுங்கிப் போய்விடும் போல் தோற்றம் தெரிகிறது. பொருள் விற்பனையில் விளம்பரங்களின் பங்கு பற்றி நுகர்வோர் விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete
  9. தரம் எப்படி நிரந்தரம் இல்லையோ அதுபோல் வாடிக்கையாளர்களின் திருப்தியும் நிரந்தரமானது இல்லை. அதனால் தான் தயாரிப்பாளர்கள் அடிக்கடி மக்களிடையே கருத்தாய்வு செய்து அவர்களின் விருப்பத்தை அறிந்து குறிப்பிட்ட இடைவேளையில் புதிய புதிய தயாரிப்புகளை சிலசமயம் பழையவைகளையே புதிய பெயரில் அல்லது புதிய Pack இல் வெளியிடுகிறார்கள். ஆனாலும் தரம் இல்லையென்றால் அந்த பொருள் சந்தையில் நீண்ட நாள் நிலைக்காது என்பதே உண்மை.

    ReplyDelete

  10. @ ஜீவி
    முதலில் பதிவைப்பாராட்டியதற்கு நன்றி பின்னூட்டங்களுக்கு நாம் கூடியவரை பதில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் பின்னூட்டங்கள் என்றும் செறிவுடந்தான் இருக்கின்றன.

    ReplyDelete

  11. @ இந்தப் பதிவு எழுதியதன் நோக்கமே டெக்னிகலான பகுதிகளையும் கொடுக்க வேண்டும் என்னும் அவாதான் வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  12. @ ஜீவி
    என் அபிப்பிராயம் பற்றி ஒரு பதிவு அளவுக்கு மறு மொழி எழுதினேன் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஒரேயடியாகக் காணாமல் போய்விட்டது. சுருக்கமாக மீண்டும் “ விளம்பரம் என்பதே வியாபார உத்தி. பொருள் முதலில் சந்தையில் அறிமுகமாக விளம்பரம் ஓரளவு தேவை இருந்தாலும் அதையே ஓவராகச் செய்தால் விளைவுகள் எதிர்வினைப் பலன் தரும் எத்தனையோ விளம்பரப்படுத்தியும் படுத்துவிடும்சில திரைப்படங்கள் இதைப் புரியவைக்கும் வாடிக்கையாளன் எதிர்பார்ப்பே தரம் என்று விரிவாகவே சுட்டியில் இருக்கும் பதிவில் எழுதி இருக்கிறேன் விளம்பரங்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் நம் மக்களுக்குப் பொதுவாகவே அதிக விலை அதிக தரம் என்னும் மாயை இருக்கிறது. இதை ஓரளவு எக்ஸ்ப்லாய்ட் செய்யலாம் ஆனால் குறைந்த காலத்தில் சாயம் வெளுத்து விடும் வாஷிங் பௌடருக்கான விளம்பரங்கள் முற்றிலும் தவறான எதிர்பார்ப்பைத் தருகின்றன. வாடிக்கையாளன் இம்மாதிரி பொருள்களில் தொடர்ந்து வாங்க மாட்டான் ஆகவேதான் தரம் பற்றிய புரிதல் முதலில் இருக்கவேண்டும் என்று எழுதுகிறேன் இதை உணர்ந்து வால்யூ எஞ்சினீரிங்கில் கவனம் செலுத்த வேண்டியது உற்பத்தியாளன் பொறுப்பு,

    ReplyDelete

  13. @ வேநடன சபாபதி
    நீங்கள் தரம் பற்றிய சுட்டியில் கொடுத்துள்ள பதிவைப் படித்தீர்களா. வாடிக்கையாளன் திருப்தி மாறுவது அவனது அனுபவத்தால் வருவதுகொடுக்கும் பணத்துக்க் அவன் எதிர்பார்ப்பு இவ்வளவு என்று நிச்சயம் செய்ய முடியாதவரை உற்பத்தியாளர் களும் அவர்களது டெக்னிக்கை மாற்றுகிறார்கள் தரத்துக்கு என்று தனி அளவுகோல் கிடையாது. அது வாங்குபவனைப் பொறுத்தது ஆனால் அதிக விலை அதிக தரம் என்னும் மாயை இன்னும் இருக்கிறது அதைத்தான் உற்பத்தியாளன் எக்ஸ்ப்லாய்ட் செய்கிறான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ ஜீவி
    என் அபிப்பிராயம் பற்றி ஒரு பதிவு அளவுக்கு மறு மொழி எழுதினேன் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஒரேயடியாகக் காணாமல் போய்விட்டது. சுருக்கமாக மீண்டும் “ விளம்பரம் என்பதே வியாபார உத்தி. பொருள் முதலில் சந்தையில் அறிமுகமாக விளம்பரம் ஓரளவு தேவை இருந்தாலும் அதையே ஓவராகச் செய்தால் விளைவுகள் எதிர்வினைப் பலன் தரும் எத்தனையோ விளம்பரப்படுத்தியும் படுத்துவிடும்சில திரைப்படங்கள் இதைப் புரியவைக்கும் வாடிக்கையாளன் எதிர்பார்ப்பே தரம் என்று விரிவாகவே சுட்டியில் இருக்கும் பதிவில் எழுதி இருக்கிறேன் விளம்பரங்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் நம் மக்களுக்குப் பொதுவாகவே அதிக விலை அதிக தரம் என்னும் மாயை இருக்கிறது. இதை ஓரளவு எக்ஸ்ப்லாய்ட் செய்யலாம் ஆனால் குறைந்த காலத்தில் சாயம் வெளுத்து விடும் வாஷிங் பௌடருக்கான விளம்பரங்கள் முற்றிலும் தவறான எதிர்பார்ப்பைத் தருகின்றன. வாடிக்கையாளன் இம்மாதிரி பொருள்களில் தொடர்ந்து வாங்க மாட்டான் ஆகவேதான் தரம் பற்றிய புரிதல் முதலில் இருக்கவேண்டும் என்று எழுதுகிறேன் இதை உணர்ந்து வால்யூ எஞ்சினீரிங்கில் கவனம் செலுத்த வேண்டியது உற்பத்தியாளன் பொறுப்பு,

    ReplyDelete
  15. இப்போதெல்லாம் எந்தத் தீப்பெட்டியும் நன்றாக இல்லை. மோசமான தரத்தில் தான் இருக்கிறது. இவ்விஷயத்தில் திருப்தி ஏற்படவே இல்லை. மற்றபடி இந்தப் பதிவைக் குறித்து அதிகம் சொல்லும் அளவுக்கு எனக்கு விபரங்கள் போதாது! :)

    ReplyDelete
  16. @ கீதா சாம்பசிவம்
    தீப்பெட்டி ஒரு உதாரணமே முக்கியமாக இப்பதிவு தரம் பற்றியும் அதை நிர்ணயிக்கும் பல வழிகள் பற்றியும் எழுதப்பட்ட ஒரு விழிப்புண்ர்வுப் பதிவேசில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனாவை புரிதலுக்கு உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. விளம்பரங்கள் ஓரளவு தேவையைத் தாண்டி 80% அளவுக்கு மார்க்கெட்டில் டாமினேட் பண்ணுஇவதாக நினைக்கிறேன். பொய்யோ மெய்யோ வாங்கிப்பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை நுகர்வோர் மனசில் விதைப்பதில் அதிக பங்கு வகிப்பது விளம்பரங்கள் தாம்.
    தரத்தை செக் பண்ண வேண்டும் என்கிற தேவையைக் கூட சிந்தனையில் பதியாமல் ஒரே பொருளுக்கான விளம்பரங்கள் கூட விதவிதமாக கோணத்தில் மக்கள் மனசை ஆக்கிரமித்துக் கொண்டு வலை விரிக்கின்றன. டி.வி.சேனல்கள், பத்திரிகைகள் இவற்றிற்கெல்லாம் விளம்பரங்கள் ஜீவநாடி. வியாபார உலகில் விளம்பரங்களின் தாக்கம் மியப்பெரிது.

    ஒரு பொருளின் தரம் என்னவென்று யோசிக்கக்கூட விடாமல் அதே பொருளின் அடுத்த கவர்ச்சிகரமான விளம்பரம் அடுத்து வாங்குவோரை ஆக்கிரமிக்கறது. இந்த ஆக்கிரமிக்த்தல் அடுத்து அடுத்து என்று வேகப்பாய்ச்சலில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    தரம் இல்லையெனில் விற்பனை இல்லை என்கிற காலம் மாறி விட்டதாக நினைக்கிறேன்.

    விளம்பரங்களுக்காக செலவிடுவதை தரத்திற்கு செலவிடுவோம் என்கிற எண்ணம் வியாபார உலகிலும் இல்லை. நுகர்வோரின் எதிர்பார்ப்பிலும் இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், இது விளம்பர யுகம்.

    ReplyDelete
  18. இப்பொழுது எல்லாமே விளம்பர மயம்தான்
    எல்லாம் கவர்ச்சியில் இருக்கிறது

    ReplyDelete

  19. @ ஜீவி
    தரம் என்பதே fitness for use என்னும் பொருள்பட பின்னூட்டம் எழுதிய மாதிரி தோன்றுகிறது தரம் என்பது அதையும் தாண்டியது. ஆனால் அதைப் பொய்யாக்க விளம்பரங்கள் முயற்சிக்கின்றன. விளம்பரமே தரத்தை நிச்சயிப்பது போல் ஒரு மாயத் தோற்றம் நுகர்வோர் முதலில் பலியாவதுபோல் தோன்றினாலும் விழித்துக் கொள்வார்கள் நிறையவே உதாரணங்கள் காட்டலாம் மீள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    எல்லோரும் கவர்ச்சிக்குப் பலியாவதில்லை ஐயா. விளம்பரம் தேவைக்கு மிகுதியானால் தெரிந்து கொள்ளப்படும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  21. கடைசி ஒரு சொற்றொடரிலேயே அனைத்துக் கருத்தையும் உள்ளடக்கிக் கூறிவிட்டீர்கள். அதுவே நிதர்சனம். The yardstick varies.

    ReplyDelete
  22. தரம் தான் தாரக மந்திரம். ரொம்ப சரி. ஆனால் தரத்தை நிரூபித்து பொருள்களை சந்தையில் விற்க வேண்டும் என்கிற தேவை இல்லாத பட்சத்தில் நாம் கொடுக்கும் விலைக்கேற்பவான தரத்தில் அமைய வேண்டிய அவசியமே இல்லாது போய்விடுகிறது. ஆக தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்ட பொருள்களுக்குள்ளேயே நம் தேர்வு அமைய வேண்டிய சூழ்நிலை. இந்த சூழ்நிலையில் விளம்பரம், அதன் வாசகங்கள், பரிந்துரைப்போர், அதன் பிர்மாண்டம் என்று தரத்தில் பதிய வேண்டிய நம் கவனம் சிதறிவிடுகிறது.

    இதில் இன்னொரு வேடிக்கை. சில பகாசுர உற்பத்தியாளர்கள் ஒரே பொருளிலேயே வெவ்வேறு பிராண்டுகள், பெயர்கள் என்று தம் விற்பனையை கொடிகட்டிப் பறக்க விடுவார்கள். இவர்கள் ஒரே நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களுக்குள்ளேயே பளிச்சென்ற விளம்பர நேர்த்தியில் ஒரு போட்டா போட்டி சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். இந்த போட்டா போட்டீயில் எது விஞ்சி வெற்றி பெற்றாலும் அது அவர்கள் நிறுவன உற்பத்திப் பொருளாகவே இருக்கும்.

    விளம்பர மாய உலகம் எல்லாவித விளையாட்டுகளுக்கும் ஏற்பவான ஆடுகளமாகவே இருக்கிறது.

    விளம்பரங்களுக்காகவே டி.வி. நிகழ்ச்சிகள், விளம்பரங்களுக்காகவே பத்திரிகைகள் என்று ஊடகங்களும் என்று எல்லா வழிகளிலும் விளம்பரன்ங்களே தம் சிறகுகளை விரிக்கின்றன.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். தரம் என்பதே ஆளாளுக்கு வித்தியாசமகப் புரிந்து கொள்ளப்படும்போது அந்த நிதர்சனத்தையும் குறிக்க வேண்டும் அல்லவா. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  24. @ ஜீவி
    அது செல்லெர்ஸ் மார்க்கெட்டா பையரஸ் மார்க்கெட்டா என்பதைப் பொறுத்தது. ஏறத்தாழ ஒரு தேவைக்கு அநேக பொருட்கள் கிடைக்கும் போது இந்த விளம்பர ஜிம்மிக்ஸ்நிவுவைக்கு வருகிறது. அதிக பட்சம் கவர்பவன் சந்தையில் தெரிய வருகிறான் . இருந்தாலும் அறிமுகமானபின் திருப்தி அடையும் வாடிக்கயாளனைச்சென்றடையும் பொருட்கள் தேவைக்கு மீறி விளம்பரம் செய்யப்படுவதில்லைபல கருத்துக்களைப் பகிர்ந்து விட்டோம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  25. புதுசு புதுசாக மார்க்கெட்டுக்கு வரும் பொருள்களின் வேகப்பாய்ச்சலில், விளம்பரம் இல்லையென்றால் தமக்குப் பிடித்ததைக் கூட மக்கள் மறந்து விடுவார்கள். அடுத்த பிடித்ததற்குப் போகும் வழிகாட்டி தான் தற்கால விளம்பரங்கள்.

    பல கருத்துக்களைப் பகிர்ந்து விட்டோம் என்று நீங்களே சொல்வதால், இத்துடன் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம். நீங்களும் அடுத்த பதிவுக்குப் போகும் நிலையில் இருப்பதும் புரிகிறது.

    ReplyDelete
  26. தரம் & செலவு ரெண்டுக்கும் ஏழாம் பொருத்தம்தான். தரம் வேண்டுமென்றால் செலவு செஞ்சுதான் ஆகணும். விளம்பரத்துக்கு ஆகும் செலவில் தரத்தை உயர்த்தினால் போதும்தான். ஆனால் விளம்பரதாரர்கள் பிழைக்கணுமே :-)

    ReplyDelete

  27. @ துளசி கோபால்
    நான் தரம் செலவு பற்றி எழுத வில்லை. தரம் அதன் மதிப்பு என்பது பற்றித்தான் விளக்க முயன்றிருக்கிறேன் தரம் என்பது வாடிக்கையாளரின் திருப்தி. அதற்க்காக செலவு செய்வதை யோசிக்கவே மாட்டார்கள்

    ReplyDelete