Tuesday, December 22, 2015

ஜலஹள்ளி ஸ்ரீ ஐயப்பன் கோவில் திருவிழா


                                  ஜலஹள்ளி ஸ்ரீ அய்யப்பன் கோவில் திருவிழா
                                  -------------------------------------------------------------------------ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலேயே எங்கள் ஊர் ஐயப்பன் கோவிலில் கூட்டம் முண்டியடிக்கும் சபரி மலைக்குப் போகும்  பக்தர்கள் மாலையிடுவதும்  அதற்கேற்ப வேஷமிடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகும் மார்கழிமாதம் முதல் தேதியன்று த்வஜோத்ஸவம் துவங்கும் அன்றைய நிகழ்ச்சிகள் எங்கள் பகுதி மக்களின் ஏற்பாடாகும் அருகில் இருக்கும் கருமாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலம் துவங்கும்.ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம் வரை நீளும் ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஸ்ரீஐயப்பன் அமர்ந்திருக்க பஞ்ச வாத்தியம்  கொட்டுமேளம். எருமேலி விளக்கு  தெய்யம் சிங்காரி மேளம் நிலக்காவடி கோட்டக்காவடி  இன்னபிற கேளிக்கை வேடிக்கை வெடி வழிபாடுகளுடன்  ஊர்வலம் ஜகஜ்ஜ்யோதியாய் என் வீட்டு முன்பாகப் போகும்.தெருவின் இரு மருங்கிலும் கூட்டம் சொல்லி மாளாது.  இந்த ஊர்வலம்கோவிலை அடைந்தபின்  கோவிலில் கொடியேற்றம் நடக்கும்  அதன் பின் மண்டல பூசை முடியும் வரை தினமும் அபிஷேக ஆராதனைகள் விசேஷமாக நடக்கும்
 இந்தமுறை ஊர்வலத்தின் சில முக்கிய பகுதிகளை என் வீடியோவில் சிறை பிடிக்க முயன்றிருக்கிறேன்
இதுநாள் வரை எங்கள் கோவிலில் பிரதம பூசாரியாக இருந்தவர் இந்த ஆண்டு சபரி மலைக் கோவிலின் மேல் சாந்தியாகத் தேர்வாகி இருக்கிறார். இனி சில ஊர்வலக் காணொளிகளும் படங்களும் சில காணொளிகளை யூ ட்யூபில் ஏற்றியபின்தான்  பதிவிட முடிகிறது நேரம் விழுங்கும் பணி. 

காணொளியும் உண்டு 
தாலம் தூக்காத மலையாள விழாக்களைப் பார்ப்பது அரிது
       .


.நண்பர்களே  காணொளிகளைக் காணாமல் இருக்காதீர்கள் மிகவும் சிரமப்பட்டு படம் பிடித்தது பதிவில் ஏற்றியது 

30 comments:

 1. படங்கள் தெளிவாக இருக்கின்றன. "நண்பர்களே... காணொளியைக் காணாமல் இருக்காதீர்கள்" என்கிற உங்கள் ஆர்வத்துக்கு என் கணினி செவி சாய்க்க மறுக்கிறது!! "A plugin is needed to display this content" என்றே வருவதால் கண்டு ரசிக்க முடியவில்லை.

  ReplyDelete
 2. நல்ல செய்திகளுடன் - இனிய தரிசனம்..

  ReplyDelete
 3. புகைப்படங்கள் தெளிவு
  ஐந்து காணொளியும் பார்த்தேன் ஐயா
  இரண்டாவது காணொளி அருமை
  எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்திருக்கலாமே ஐயா

  ReplyDelete
 4. டண்டணக்கு டணக்கு டக்கு - ஆஹா, ஜெண்டை வாத்தியம் கன ஜோர். பொய்க்கால் குதிரை மாதிரி பொய்க்கால் யானை எல்லாம் வந்து விட்டது போல் இருக்கு. காளிங்க நர்த்தனம் அற்புதம்.

  உங்கள் திறமைக்கு வணக்கம்.

  ReplyDelete
 5. அனைத்துப் படங்களும் அருமை!

  ReplyDelete

 6. @ ஸ்ரீராம்
  நான் மொஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உலவியை உபயோகப் படுத்தும் போது காணொளி திறக்க இந்தன்மாதிரி செய்தி வரும் ஆனால் கூகிள் க்ரோமில் வராது பார்க்க முடியும் வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 7. @ துரை செல்வராஜு
  /நல்ல செய்திகளுடன் - இனிய தரிசனம்./.நடந்த நிகழ்வுகளின் ஒரு சிறிய தொகுப்பு வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 8. @ கில்லர்ஜி
  உங்கள் தளத்தில் சில காணொளிகளைப் பார்க்கும் போது ஆச்சரியப் படுவேன் காணொளி களை ஒன்றாய் இணைக்கும் நுட்பம் தெரியாது வருகைக்கு நம்ன்றி ஜி.

  ReplyDelete

 9. @ டாக்டர் கந்தசாமி. சில காணொளிகளைப் பதிவேற்ற முடியவில்லை 100 எம் பி க்கும் மேல் என்று வருகிறது சிலவற்றை முதலில் யூ ட்யூபில் ஏற்றியபின் தான் பதிவிட முடிந்தது நேரம் மிக அதிகமாகிறது பாராட்டுக்கு நன்றி பொய்க்கால் குதிரையை விட இந்தப் பொய்க்கால்கள் ஆச்சரியப்படுத்துகின்றன

  ReplyDelete

 10. @ கீதா சாம்பசிவம்
  வருகை தந்து ரசித்ததற்கு நன்றி மேம்

  ReplyDelete
 11. காணொளிகள் அருமையாக இருந்தது சார் ! செண்டைமேளம் அற்புதம். காளிங்கனை குழந்தைகளுக்காய் சேமித்துக் கொள்கிறேன். பிரயாசைப் பட்டிருக்கிறீர்கள். ஐயப்பன் நமக்கெல்லாம் அருளட்டும்!

  ReplyDelete
 12. அருமையாக கவர் செய்திருக்கிறீர்கள். படங்களையும் ஐந்து காணொளிகளையும் கண்டு இரசித்தேன்.

  ReplyDelete
 13. காணக்கிடைக்காதவற்றை எங்களுக்காகப் பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல விழா, நல்ல படங்கள், பதிவுகள். நேரடியாகப் பார்த்ததுபோலிருந்தது. நன்றி.

  ReplyDelete
 14. படங்களும் காணொளிகளும் அருமை. அதுவும் அந்த செண்டை மேளம் வாசித்தவர்கள் வியர்க்க விறுவிறுக்க வாசித்ததை பிரமிப்புடன் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete

 15. @ மோகன் ஜி
  இன்னும் சில காணொளிகள் உண்டு. பார்ப்பவருக்குச் சலிப்பு ஏற்படுத்துமோ என்று கருதியே பதிவிடவில்லைஉங்கள் வருகையே அருகிவிட்ட நிலையில் இந்தப்பின்னூட்டம் மகிழ்ச்சி தந்தது

  ReplyDelete

 16. @ ராமலக்ஷ்மி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

  ReplyDelete

 17. @ புலவர் இராமாநுசம்
  வருகைக்கும் நலம் விசாரிப்புக்கும் நன்றி ஐயா. நான் நலமே

  ReplyDelete

 18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ வே.நடனசபாபதி
  சிங்காரி மேளம் என்ற செண்டை மேளம் அதில் அவர்கள் ஆடிக்கொண்டே கொட்டும் லாகவம்(லாவகம்?) எல்லா வற்றையும் காணொளீயில் சிறை பிடிக்க முடியவில்லை. நான் ரசித்ததைப் பகிர்ந்தேன் வரவுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 20. பிரம்மண்டமாக இருக்கிறதே - எதிர்பார்க்கவில்லை.

  ஆடும் பாம்பின் தலைமேல் எப்படி நிற்க முடியும் என்று ஒரு குழந்தையாவது யோசித்திருக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 21. அழகான தருசனம் காட்சிகள் மிகவும் அருமை செண்டை மேளம் இன்னும் அதிகம் காட்சியாக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும் ஐயாபகிர்வு நன்றி

  ReplyDelete
 22. அருமையான தொகுப்பு
  சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

 23. @ துரை. ஏ
  யாரையும் எதையும் யோசிக்க விடமாட்டாங்க . கேள்வி கேட்கப்படாது ஹூம்...!

  ReplyDelete

 24. @ தனிமரம்
  நான் எந்த தரிசனமும் பதிவிடவில்லையே ஒரு ஊர்வலம் படங்களாகவும் காணொளியாகவும்தானே பதிவிட்டிருக்கிறேன்

  ReplyDelete
 25. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
  அருமையான தொகுப்பு ஓக்கே. சிறந்த பக்திப்பதிவு ?

  ReplyDelete
 26. பிற காணொளிகளை சேர்த்து இன்னமும் ஒரு பதிவை இரண்டாம் பாகமாய் இடுங்களேன் சார்!

  ReplyDelete
 27. அருமை. பகிர்வுக்கு நன்றி. உங்க வீட்டுக்கு வரும்வழியில் கோவிலைப் பார்த்தோம். உள்ளே போய் தரிசிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. பகல் நேரம். கோவில் பூட்டி இருந்தது. திரும்பி வரும்போது பார்க்கலாம் என்று நினைத்து பின்னே அதுவும் வாய்க்கலை:-(

  ReplyDelete

 28. @ துளசி கோபால்
  கார்த்திகை மார்கழி மாதங்கள் வந்தாலேயே இந்தக் கோவில் அமர்க்களப்படும் வருகைக்கு நன்றி அடுத்த முறை வரும்போதுஅவசியம் கோவிலில் தரிசனம் செய்யலாம்

  ReplyDelete


 29. @ மோகன் ஜி
  இன்னொரு பதிவுக்கு விஷயங்கள் இல்லை ஆனால் இன்னுமொரு காணொளியை முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete