Wednesday, January 6, 2016

மழை வேண்டுமா கூப்பிடுங்கள்........


                                     மழைவேண்டுமா  கூப்பிடுங்கள்..........
                                     ----------------------------------------------------------


 பதிவு எழுத விஷயங்களே புலப்படாத வேளையில் என் பழைய பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தேன் 2014 –ம் ஆண்டு ஃபெப்ருவரி மாதம் மீண்டும் பதிவுகளில் தொடர என்னும் பதிவில் நான் சென்னைக்குச் சென்றிருந்ததையும் பதிவுலக நண்பர்கள் பலரையும்  சந்தித்தது பற்றியும் எழுதி இருந்தேன்  அது என்ன ராசியோ நான் சென்னை போகும்போதெல்லாம்  மழை வருகிறது என்று எழுதி இருந்தேன்  அதன் பின்னூட்டத்தில் அப்பாதுரை அவர்கள்மழை வேண்டும் என்றால் ரிஷ்ய சிருங்கரை  அழைப்பார்களாம்  என்று எழுதி இருந்தார்.  நான் எனது மறு மொழியில்  யார் அந்த ரிஷ்ய சிருங்கர் என்று கேட்டு எழுதி இருந்தேன்  இப்போது அதைப் படித்ததும் எனக்குத் தெரிந்த ரிஷ்ய சிருங்கர் கதையை எழுதலாம் என்று தோன்றவே இதோ துவங்கிவிட்டேன்

 அங்க தேசத்து  அரசர் ரோமபாதரும் தசரத மஹாராஜாவும் நண்பர்கள் ஒரு முறை ரோமபாதர் தசரத ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்  தசரத ராஜாவுக்கு மூன்று மனைவிகள் கௌசல்யா சுமித்திரா கைகேயி என்று யாவரும் அறிந்ததே. ஆனால் பலரும் அறியாதது தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் ஒரு பெண்குழந்தை இருந்தது என்றும் அவள் பெயர் சாந்தா என்பதும் . அவள்  ராமலக்ஷ்மண சகோதரர்களுக்கும் மூத்தவள் என்பதுமாகும்
 அங்க தேச ராஜா ரோமபாதருக்கும் மக்கட் செல்வம் இல்லை. அவர் தசரதரிடம் அவரது பெண்ணை  தத்துகொடுக்க வேண்டிக் கேட்டுக் கொண்டார் தசரதரும் தமக்கு மூன்று மனைவிகள் இருப்பதாலும் இன்னும் குழந்தைகளைப் பெற வாய்ப்பு இருந்ததாலும்  மிகுந்த யோசனைக்குப் பின் தன் மகள் சாந்தாவை தத்து கொடுக்க சம்மதித்தார்அங்க அரசர் மிக்க மகிழ்ச்சியுடன் சாந்தாவைத் தத்து எடுத்துக் கொண்டார்
அங்க தேச அரசகுமாரியாக சாந்தா வளர்ந்துவந்தாள்
ஒரு முறை அங்கதேசம் மழையின்மையால் மிகவும் வரண்டு போய் இருந்தது. அரசரும் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தார்  அப்போது அவரிடம் முனி குமாரன் ரிஷ்ய சிருங்கரை வரவழைத்தால் மழைபெய்யும் என்று ஆலோசனை கூறப்பட்டது யார் இந்த ரிஷ்ய சிருங்கர்?
அங்க தேசத்து வனாந்திரத்தில் காஷ்யப முனிவரின் மகன்  விபாந்தகருக்குப் பிறந்தவர்தான் இந்த ரிஷ்ய சிருங்கர். மான் கொம்பைத் தலையில் தாங்கியதால் அப்பெயர் பெற்றார்.  சிருங்க என்றால் மான் கொம்பு என்னும் பொருள் உண்டாம்  விபாந்தகருக்கும் ஒரு மானுக்கும் பிறந்தவர். முனிவரின் ஆசிரமத்தில் வேற்றுலக மக்களின் கண்படாமல் வளர்ந்து வந்தவர். தவவலிமை மிக்கவர். இவரை அங்க தேசத்துக்கு வரவழைத்தால் மழைபெய்து வரட்சி நீங்கும் என்று கூறப்பட்டது ஆனால் அவரை எப்படி வரவழைப்பது?நேரில் சென்று கூப்பிட்டால்  விபாந்தக முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாபம் கிடைக்கப் பெறலாம் வேற்று மனிதரின் வாடையே தெரியாத ரிஷ்யசிருங்கரை ஏதாவது யுக்தி செய்துதான் வரவழைக்க வேண்டும்  அங்க தேசத்து அழகு மிகு வேசிகள் சிலரை அழைத்துஎப்படியாவது ரிஷ்ய சிருங்கரை மயக்க்கி அங்க தேசத்துக்கு கூட்டிவர பணித்தார் ஆனால் இது விபாந்தக முனிவருக்குத் தெரியக் கூடாது என்றும் தெரிந்தால் சாபத்துக்கு ஆளாகக் கூடும்  என்றும் எச்சரிக்கப்பட்டனர். அவர்களும் ஒரு அழகிய கப்பலைத் தோப்புபோல் அலங்கரித்து  ஆசிரமம்  ஒன்றமைத்து இவர்களும் முனிவர்கள் போல் வேடமணிந்து கானகம்  சென்றனர். விபாந்தக முனிவர் இல்லாத நேரத்தில்  ரிஷ்ய சிருங்கரை சந்தித்து நட்பைப் பெற்றனர் சிறிது நேரம் கழித்து திரும்பி விட்டனர். ரிஷ்யசிருங்கருக்கு அது புது அனுபவம்  மறு நாள் வந்தபோது  அவரை நாட்டியமாடி மயக்கி அவர் மனதில்  ஆவலை உண்டு பண்ணினர்  மறுபடியும் அவர்கள் திரும்பும் போது அவர்களுடன் வந்தால் இன்னும் அழகிய மக்களைச் சந்திக்கலாம் என்று கூறி ஆசையை வளர்த்தனர் விபாந்தக முனிவருக்குத்தெரியாமல் அடுத்தமுறை ரிஷ்ய சிருங்கரை அங்க தேசத்துக்கு
கூட்டி வந்தனர்  அங்கதேசத்தில் இவரது கால் பட்டதும் மழை பெய்தது ரோமபாதர் நன்றி மிகுதியால் அவருக்கு சாந்தாவை மணமுடித்து ரிஷ்யசிருங்கரை  அரச பீடத்தில் அமர்த்தினார்
 விபாந்தக முனிவர் திரும்பி வந்து பார்த்தபோது  ரிஷ்ய சிருங்கரைக் காணாமல்  கோபமடைந்து அங்க தேசத்துக்கு வந்தார். வந்தவரை எல்லா மரியாதைகளுடனும் ரோமபாதர் வரவேற்றார். முனிவரின் கோபம் சற்றே தணிய  அவரை மேலும் மரியாதைகளுடன் அரச மண்டபத்துக்குக் கூட்டி வந்தார் .அங்கு ரிஷ்ய சிருங்கர் அரச குமாரனாகவும் அரச குமாரி சாந்தாவின்  கணவனாகவும் இருந்தது கண்டு கோபத்தை அறவே ஒழித்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார் இந்தக் கதையைத்தான் திரு அப்பாதுரை குறிப்பிட்டு இருந்தார் என்று நினைக்கிறேன் 
ரிஷ்ய சிருங்கரின் கதை இதோடு முடியவில்லை.
கௌசல்யாவின் மகளை ரோமபாதருக்குக் கொடுத்த தசரதருக்குஅதன் பின் புத்திர பாக்கியம் இருக்கவில்லை. தனக்குப் பின் அரசாள வாரிசில்லையே என்னும் கவலை மிகுந்து வாடிய தசரதரிடம் வசிஷ்ட முனிவர் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் செய்யவும் அதை நடத்திக் கொடுக்க ரிஷ்ய சிருங்கரே தகுந்தவர் எனவும் கூறினார். அதன் படி தசரதர்  ரிஷ்ய சிருங்கரை வேண்டி அழைக்க அவரும் மனமுவந்து வந்து புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்திக் கொடுக்க  அந்த யாகத்தில் மகிழ்ச்சியடைந்த அக்னி பகவான் யாகத் தீயில் வந்து பாயசம் கொடுத்ததும்  தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து ராம லக்ஷ்மண பரத சத்துருக்கனர் ஆக வளர்ந்தது அநேகமாக அனைவரும் அறிந்ததே                        


                   

 



57 comments:

  1. இந்தக் கதை குறித்து சமீபத்தில் முகநூலில் கூட நண்பர் ஒருவர் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார். எனது தொடர்ந்த பயணம் மற்றும் உடல்நிலை காரணமாக அதைக் குறித்து ஆய்ந்து எழுத முடியவில்லை. ஆனால் ரிஷ்யசிருங்கருக்கும் சாந்தலைக்கும் சிருங்கேரியில் கோயில் இருக்கிறது. சிருங்கேரி சென்றிருந்தபோது அங்கே தரிசித்தோம். அப்போதும் இதே கதைதான் சொல்லப்பட்டது.

    ReplyDelete
  2. நான் எதுவுமே சொல்லவில்லை சென்னைவாசிகளே.. மழை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது..

    ReplyDelete
  3. ருஷ்யசிங்கரின் பலம் அவரது தூய்மை என்பார்கள்.
    அது சரி.. சுவாரசியமான சமாசாரம் ஒன்றை மானுக்குப் பிறந்தவர்னு கதையில் மேம்போக்காக சொல்லி நழுவிட்டீங்களே? இதையெல்லாம் என்ன ஏதுனு படிக்கிறவங்க கேட்க மாட்டாங்களா?

    ReplyDelete
  4. நல்ல சுவாரஸ்யம் ஐயா புதிய விடயம் அறிந்து கொண்டேன் ராம்-லக்ஷ்மணனுக்கு சகோதரி இருந்த கதை இன்றே அறிந்தேன்.

    ReplyDelete
  5. ஒரு புது தகவல் அறிந்தேன்.

    ReplyDelete
  6. நல்ல பிரம்மசாரி ரிஷ்யசிங்கர் அவர் பாதம் பட்டால் மழை வரும் என்று அழைத்து வருவார்கள்.

    ReplyDelete
  7. இதுவரை அறியாத கதை!நன்றி!

    ReplyDelete
  8. #அப்பாதுரை said...

    Nathi moolam ....Rishi moolam parkagudathu......

    (else problem...no sleep)

    ReplyDelete
  9. ராம லட்சுமனர்களுக்கு சகோதரியா-?????????

    ReplyDelete
  10. ரிஷ்யசிருங்கர் பற்றி அறிவேன். அவர் ராமனின் அக்கா கணவர் என்பதை இன்றுதான் அறிந்தேன்.

    ReplyDelete
  11. ஸ்ரீ ராமருக்கும் அவருக்கு முன் பிறந்த சகோதரி சாந்தாவுக்கும் 14 வயது வித்தியாசம் என்று அதற்க்கு ஒரு கதையையும் சேர்த்து பாட்டி சொன்ன கதை...அந்தக்காலத்தில் 10,11 வயதிலேயே பெண்கள் தாய்மையடைந்து விட்டார்கள் என்றும்... மாகாபாரத யுகம் வரை பிறந்த குழந்தையும் உடனே எழுந்து நடந்து பேசும் தன்மை இருந்தது என்றும். கலியுகத்தில் குழந்தை பிறந்து முதல் 6 மாதம் வரை தலை எலும்புகளின் வளர்ச்சியினால் முகமானது மாறும் என்றும் குழந்தைகளை குளியல் செய்விக்கும்போது அவர்களின் மூக்கு காது கண் போன்ற பாகங்களை வெந்நீர் சூட்டில் நீவி விட்டு அந்த உறுப்புக்களின் வடிவம் சரியான நிலைக்கு வரும்படி செய்வார்களாம். அப்படி செய்யவில்லை என்றால் முகம் விகாரமாக முக எலும்புகள் வளர்ந்துவிடுமாம். அப்படித்தான் ரிஷ்யசிங்கர் பிறந்தபோதும் அவரின் முகத்தை தினமும் அழுத்தி நீவி விட்டு ஒரு வழியாக வட்ட முகமாக ஆனது என்று பாட்டி கூறினார், இவரின் தாயார் மான் உருவில் தேவலோகப் பெண்ணான அவர்,(ரிஷி புத்திரர்களின் கண்களுக்கு அழகான பெண்ணாக தெரிவாராம்) சாபத்தின்காரனமாக பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது என்று ஏதேதோ பெயர்கள் கூறினார்... சரியாக ஞாபகம் இல்லை.....ரிஷ்யசிங்கரின் முகத்தை சரி செய்தாலும் மான் கொம்பை எப்படி மறைப்பது ... இந்த பூலோகத்தில் பிறந்த (ரிஷ்யசிங்கர்) நீதான் மிகவும் அழகன் வேறு எவருக்கும் இல்லாத சக்தியும் அழகும் உனக்கு இருப்பதால் நீ ரிஷி சிங்காரமாய் இப்படி பிறந்தாய் என்று கூறி, தாழ்வு மனப்பான்மை ஏற்ப்படாமல் இருக்க ரிஷிகள் பல அஷ்டமா மந்திர சக்திகளை அவருக்கு வழங்கியதாக கூறியது ஞாபகம் உள்ளது... இதெல்லாம் சமஸ்கிரத மொழியில் கதைகள் என பாட்டி கூறியது.... இதில் அசுரன் கதையில், மகா அசுரன் ஒருவன் உலகத்தை பாயாக சுருட்டி கை அக்குளில் வைத்துக்கொண்டு (சமுத்திரம்)கடலுக்குள் குதித்து மறைந்துவிட்டான் என்று கூறிய கதைகளை.... ஆ வென வாயை பிளந்து கேட்டதும்........அசுரன் உலகத்தைத்தான் பாயாக சுருட்டிவிட்டானே அந்த உலகத்தில் தானே கடலும் இருக்கிறது என் யாரும் அப்போது பாட்டியை கேட்கவில்லை .... அன்புடன் கோகி ரேடியோ மார்கோனி.

    ReplyDelete
  12. இந்த தடவையும், நீங்கள் சென்னை வந்த சமயம் (2015) பெரும் மழை, வெள்ளம். “ சென்னைக்கும் எனக்கும் ராசி இல்லை.” என்ற தலைப்பினில் ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறீர்கள். சென்னையும் மழையும் உங்களுக்கு ராசி போல. (ரிஷ்ய சிருங்கர் கதை, இங்கு பொருத்தம்தான்))

    ReplyDelete
  13. #அக்னி பகவான் யாகத் தீயில் வந்து பாயசம் கொடுத்ததும் தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து #
    புராணக் கதையா ,புரூடா கதையா :)

    ReplyDelete
  14. அட! ராம லக்ஷமணருக்குச் சகோதரி என்பது இப்போது இந்தக் கதை மூலம்தான் தெரிய வந்தது சார். இதுவரைக் கேட்டதில்லை...

    ReplyDelete
  15. http://sivamgss.blogspot.in/2006/05/51.html

    http://sivamgss.blogspot.in/2008/03/4.html

    ReplyDelete
  16. ரிஷ்யசிருங்கரையும், சாந்தலை குறித்தும் கீழ்க்கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.

    http://tinyurl.com/jjpccew

    ReplyDelete
  17. மிக சுவாரசியமான கதை. சாந்தா ராமலெக்ஷ்மணர்களின் சகோதரி என்பதை அறிந்தேன் :)

    ReplyDelete
  18. அருமையான பொருத்தமான கதை தான்..!

    ReplyDelete

  19. @ கீதா சாம்பசிவம்
    சிருங்கேரி கோவில் பற்றி அறியாத செய்தி. பகிர்வுக்கு நன்றி மேம்

    ReplyDelete

  20. @ அப்பாதுரை
    என் பழைய பதிவுக்கு வந்த உங்கள் பின்னூட்ட்டம்தான் இப்பதிவுக்குக் காரணி. மழை என்றாலேயே சென்னை வாசிகளுக்கு அலெர்ஜியாக இருக்கும் என் ராசி காரணம் சென்னை செல்ல எனக்கும் தயக்கம் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  21. @ அப்பாதுரை
    கதைகளை கதைகளாகத்தான் நான் அணுகுகிறேன் புராணக் கதை என்றால் நம் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் மீண்டும் வந்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ கில்லர்ஜி
    பலரும் கேள்விப்பட்டதில்லை என்று பின்னூட்டங்கள் கூறுகின்றன. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  23. @ டாக்டர் கந்தசாமி
    ஹை. டாக்டருக்குத் தெரியாத ஒன்றை நான் எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  24. @ கோமதி அரசு
    ரிஷ்ய சிருங்கர் பிரம்மசாரியாக இருந்த போதுதான் மழை வருவித்ததாகக் கதை. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  25. @ புலவர் இராமாநுசம்
    வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  26. @ சேஷ்
    அப்பாதுரை நதி மூலம் ரிஷி மூலம் கேட்கவில்லை. கதையைத்தான் கேட்டார் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  27. @ கரந்தை ஜெயக்குமார்
    ராமலக்‌ஷ்மணர்களுக்குச் சகோதரியா...????நமக்குத் தெரியாத கதைகள் அநேகம் இருக்கிறது ஐயா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  28. @ ஸ்ரீராம்
    வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  29. @ கோபால் கிருஷ்ணன்
    குழந்தைகளை நீவிக் குளிப்பாட்ட ஒரு காரண காரியத்தோடு கதை. பெரும்பாலும் நம் தாத்தா பாட்டிகளே புராணக் கதைகளின் கடத்திகள் அந்தவயதில் கேள்வி கேட்க தோன்றாத பெரிசுகளின் அன்பு. இவை எல்லாம் நாம் எதையும் நம்பும் அளவுக்கு நம்மை வளர்த்து விட்டன. நாம் படித்து அறிந்ததை விட வாய் பிளந்து கேட்டறிந்ததே அதிகம் வருகைக்கும் கொசுறு கதைகளுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  30. @ தி தமிழ் இளங்கோ
    எனக்கு சென்னை செல்லவே தயக்கமாய் இருக்கிறதுநான் போனபோதெல்லாம் மழை பெய்திருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  31. @ நண்டு @ நொரண்டு ஈரோடு
    / ம்/....... ஆம்....! நன்றி

    ReplyDelete
  32. காயத்ரி மந்திரத்திற்கு உரை என்று கூட நீங்கள் ஒரு பதிவு எழுதியிருந்ததாக நினைவு..

    ReplyDelete

  33. @ பகவான் ஜி
    புராணக்கதையோ புருடாக் கதையோ ரசித்தீர்கள் இல்லையா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  34. @ துளசிதரன் தில்லையகத்து
    பல கதைகள் நமக்குத் தெரிய்யதவை இருக்கின்றன சார் வீட்டில் எல்லாக் கதைகளும் பெரியவர்களால் கூறப்படுவதில்லை. நாம் படித்து அறிவது குறைவு கேட்டு அறிவதே அதிகம் வருகைக்கு நன்றி சார்./ மேடம்

    ReplyDelete

  35. @ கீதா சாம்பசிவம்
    உங்கள் பழைய பதிவுகளின் சுட்டிகளுக்கு நன்றி மேம்

    ReplyDelete

  36. @ கீதா சாம்பசிவம்
    இந்தப் பின்னூட்ட சுட்டியை படித்தேன் தற்போது தொடராக வரும் சீதையின் ராமன் தொடரைப் பற்றிய விமரிசனம் நான் இந்தத் தொடரைப் பார்க்கவில்லை. இந்தப் பதிவை எழுதியவருக்கு ராமாயணக் கதைகள் பல உண்டு என்று தெரியவில்லையா. அதில் கருத்துக் கூற விரும்பவில்லை. பின்னூட்டமிடுபவர்கள் பொறுப்பாக இடவேண்டும் என்று வாசித்தபோது வேண்டாம் என்றே தோன்றியது

    ReplyDelete

  37. @ தேனம்மை லக்ஷ்மணன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  38. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  39. @ ஜீவி
    நான் காயத்ரி மந்திரத்துக்கு உரை என்று எழுதியது இல்லை ஏதாவது பதிவில் அம்மந்திரம் பற்றிக் குறிப்பிட்டு அதன் பொருளை நான் படித்திருந்தபடி எழுதி இருக்கலாம் ஜீவி சார் நினைவைச் சரிபாருங்கள் வருகைக்கு நன்றி .

    ReplyDelete
  40. காயத்ரி மந்திரத்திற்கு உரை எழுதியவர்கள் என்று எழுதியிருப்பீர்களோ?.. சரியாக நினைவில்லை.

    ReplyDelete

  41. @ ஜீவி
    நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை. இப்பதிவுக்கும் காயத்த்ரி மந்திரத்துக்கும் என்ன தொடர்பு ?

    ReplyDelete
  42. இப்பொழுதுதான் அறிந்தேன்.

    ReplyDelete
  43. இப்பொழுதுதான் அறிந்தேன்.

    ReplyDelete

  44. @ மாதேவி
    கதைகள் பல நாம் அறிந்தது சில வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  45. @ வெங்கட் நாகராஜ்
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  46. இதுவரை நான் அறியாத கதை இது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  47. @ வே நடன சபாபதி
    தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  48. `மழை வேண்டாம்!` என்பதற்கு யாரைக் கூப்பிடுவதென...

    ReplyDelete

  49. @ ஏகாந்தன்
    மழைவேண்டுமா கூப்பிடுங்கள்....... யாரைக் கூப்பிட என்று சொல்லவில்லையே யூகத்துக்கு விட்டமாதிரி வேண்டாம் என்றாலும் யூகிக்க வேண்டியதுதான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  50. ஆஹா.... சுவராஸ்யமான கதை ஐயா...

    ReplyDelete

  51. @ பரிவை சே குமார்
    வருகை தந்து கதையை ரசித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  52. உண்மையோ, பொய்யோ.. கதை ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  53. ரிஷ்ய சிருங்கரைப் பற்றிய கதை தமிழில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

    ஒன்றைப் பற்றி அறிவாலும், உணர்வாலும், தெரிதலாலும் அறியாத பொழுது அது பற்றிய அறியாமையெ இருக்கும் என்பதைச் சொல்ல வந்த கதை இது.

    (இப்பொழுது சந்திர மண்டலத்தைப் பற்றி தகவல்களாக சில விஷயங்கள் தெரியுமே தவிர முழு அறிவும் அது பற்றி இல்லாது இருப்பது போல. தகவல்களாகக் கூட தெரியாத விஷயத்திற்கு நம் நினைப்பில் கூட இடம் இருக்காது இல்லையா?-- அது மாதிரி. (A matter non-existing in our mind)

    பெண் என்று பேச்சு வந்தாலே அதனைத் தவிர்த்து விலகுவோரை, "பெரிய ரிஷ்ய சிருங்கர் என்று நினைப்போ?" என்று கிண்டலடிப்பதுண்டு.

    ReplyDelete

  54. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    கதை என்றாலேயே வெகு சில உண்மைகள் இருக்கக் கூடிய கற்பனைதானே. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  55. @ ஜீவி
    ரிஷ்ய சிருங்கர் திரைப்படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் மிகச் சிறிய வயதில் பார்த்தும் இருக்கலாம் அதனால்தானோ என்னவோ எழுதும்போது தெரியாதது என்று தோன்றவில்லை ரிஷ்ய சிருங்கர் பெண்வாடையே தெரியாமல் வளர்க்கப் பட்டவர் அதுவே அவரதுபலவீனமாகி அங்க நாடு வரை செல்ல வைத்து இருக்கலாம் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete