தொடர்பயணம் இராமேஸ்வரம் -1 நான் முதலிலேயே கூறி இருந்தேன் முதலில் பத்து
பெண்மணிகள் வருவதாக இருந்ததும்பின்னர்
ஒருவர் சேர்ந்ததும் 13 பேர் கொண்ட குழுவாக இருந்தது இருவர் வர இயலாத காரணத்தால் 11
பேர் கொண்ட குழுவாக மாறி இருந்தது இதில்நான்கு பேர் 60 வயதுக்கும் குறைந்தவர்கள் இப்படி
இருக்க டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்களைப் பரிசோதிக்கும் போது சீனியர்சிடிசன்களின் வயது ப்ரூஃப் கேட்கும்
முகாந்திரமாக எல்லோரது ஐடிக்களையும்கேட்டார். இதில் ஒரு டிக்கட்டுக்கான ஐடி புரூஃப் காண்பிக்க முடியாததால் ரூ
400 ஃபைன் கட்டவேண்டி இருந்தது
20ம் தேதி காலைஎட்டுமணி அளவில் இராமேஸ்வரம்
வந்தடைந்தோம் பொதுவாக இராமேஸ்வரம் வருபவர்களை வரவேற்பதே சில வழிகாட்டிகளாக
இருப்பர். ஆனால் இந்தமுறை யாருமே வரவில்லை ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை
கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்தது எங்களுக்கு அறைகள் முன் பதிவு
செய்திருந்த ஹோட்டல் சன் ரைஸ் வியூ. அன்றுதான் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க
இருந்தது. இதை நாங்கள் எதிர்
பார்க்கவில்லை என்றாலும் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி
அளித்தது எங்கள் முதல் கவனமே ஹோட்டல் போய்ச் சேருவதுதான் 11 பேருடைய இரண்டு வாரப்
பயணத்துக்கான லக்கேஜ் , ரயில் நிலையம் வாசலில் வராத ஆட்டோ ரிக்ஷாக்கள்( அதற்காகத்
தனி பாஸ் வேண்டுமாம்)மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஒரு எல்லைக்கு மீறி உள்ளே
போக விடாத காவல் கெடுபிடி. இவை எல்லாவற்றையும் மீறி ஹோட்டலுக்கு அரை கிலோ மீட்டர் வரை ஆட்டோக்களில்
பயணம் செய்து அங்கிருந்து லக்கேஜ்களை இழுத்துக் கொண்டு கூட்ட நடுவில்
முண்டியடித்து ஒரு வழியாய் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்வரும் வழியிலேயே ஒரு பாட்டில் குடி நீரும் ஒரு கை விசிறியும் தன்னார்வலர்கள் கொடுத்தார்கள்
ப்லாட்ஃபாரக் கோவில் இரண்டாம் ப்லாட்ஃபார்முக்காகத் தோண்டும் போது கிடைத்தசிலை என்று எழுதி இருக்கிறது
ரயில் நிலையத்துக்கு வெளியே கணபதி கோவில்
ஆட்டோவுக்காகக் காத்திருப்பு
ஹோட்டலின் முன்பிருந்து ஒரு காட்சி
சுவரில் வாசகம்
சற்று நேரத்தில் காலை உணவுக்காக ஒரு ராஜஸ்தானி
ஓட்டலுக்குச் சென்றோம் சுவையான பூரி சப்ஜி.
உண்டுமுடித்து வெளியில் வந்தால் கூட்டமான கூட்டம் காணொளி எடுத்தேன் அதில்
கோபுர உச்சியிலிருந்து அபிஷேக நீர் பீய்ச்சி அடிப்பதும் பதிவாகி இருக்கிறது
ஓட்டலின் உள்ளே எழுதி இருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.
அன்று இருந்த கூட்டத்தில் எங்கும்போவது இயலாததானதால் குளித்து முடித்து சுவாமி
தரிசனம் செய்யச் சென்றோம் அந்தக் கூட்ட நெரிசலில்அப்போதே சென்று பார்ப்பதே விசேஷம் என்று பலரும்
கருதியதால்தரிசன வரிசையின் கூட்டத்தில்
ஐக்கியமானோம்ஒரு வழியாக தரிசனம்
முடிந்தது. இராமநாதஸ்வாமி விஸ்வநாதர் பர்வத வர்த்தினி அனைவரையும் தரிசித்தோம்
காலை
உணவுநன்றாக இருந்ததால் மதிய
உணவுக்கும்அங்கே சென்றோம் பின் சிறிதுநேர
ஓய்வுக்குப் பின் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலைக் காணச் சென்றோம்
அக்னி தீர்த்தம் எனப்படும் கடல்
அக்னி தீர்த்தக் கரையில்
கிழக்கே கோபுரப் பின்னணியில்
காலை மதிய உணவு உண்ட ராஜஸ்தானி ஹோட்டல்.
இரவு உணவுக்காக அக்னி தீர்த்தம் அருகில் இருக்கும் குஜராத்தி போஜனாலயா சென்றோம் சப்பாத்தி சப்ஜியுடன் கிச்சடி என்று ஒன்றும் தருகிறார்கள். எதுவுமே ருசிக்கவில்லை. முதல் நாள் இராமேஸ்வரத்தில் கும்பாபிஷேகம் கண்டது தவிர எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியும் இல்லாமல் கடந்து போனது. அடுத்த நாளும் பிறகும் செல்ல வான் பேசி முடித்து இருந்தான் மச்சினன் ( தொடரும் )
பொதுவாய் குஜராத்தி சாப்பாடு நன்றாக இருக்கும். அன்று உங்களுக்குச் சரியாக கிடைக்கவில்லை போல! :) எப்படித் தான் அந்தக் கும்பலில் உள்ளே சென்று தரிசனம் செய்தீர்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. !!!!!!!!!!!!!!!
பயணக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவைதான். எழுத்தைவிடவும், படங்கள் நிறைய கதையளக்கின்றன.
கோயில் கட்டுகிறேனென்று அந்த ஆலமரத்தை ஏன் இப்படி சித்திரவதை செய்தார்களோ?(முதல் படம்). மரமாகப் பிறவி எடுத்தும் கர்மா விடுவதில்லை!
ராமேஸ்வரத்தில்போய் சாப்பாட்டிற்கு ராஜஸ்தானை நாடிய மர்மம் என்ன? ஹோட்டலின் பெயர் (தமிழில்) ஸ்ரீ மகேஸ்வரி பக்த நிவாஸ். ஆனால் ஹிந்தியில்? ஸ்ரீ மாகேஷ்வரி பக்த நிவாஸ்! அந்த மாகேஷ்வரிக்கே எல்லாம் வெளிச்சம்!
அந்த ஹோட்டல் வாசகம் போல் எல்லா ஹோட்டலிலும் எழுதி வைத்தால் உணவு வீணாவதைத் தடுக்கலாம் இல்லையா சார்.
அருமையான பயணம் போலத் தெரிகின்றது தொடர்கின்றோம்..
கீதா: மதிய உணவு என்ன உண்டீர்கள் என்று சொல்லவில்லையே.... ராஜஸ்தானி ஹோட்டல் என்பதால் ஆர்வம்..
குஜராத்தி ஹோட்டல் உணவு பொதுவாக நன்றாக இருக்குமே.
கூட்டம் என்றால் செல்லத் தயக்கம் உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவதுண்டு. நீங்கள் எப்படி சார் சென்றீர்கள்.
அக்னித் தீர்த்தம் கரையில் குளித்தது உண்டு ஆனால் பல வருடங்கள் முன்பு. இப்போது அங்கு ஏதோ கட்டிடம் எல்லாம் உங்கள் புகைப்படத்தில் தெரிகின்றதே...நாங்கள் அப்போதுக் குளித்த போது மனிதக் கழிவுகள் கூட வந்தது..பின்னர் சற்றுத் தள்ளிச் சென்று கூட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளித்துவிட்டு வந்தோம். கடலில், ஆற்றில், அருவியில் குளித்தல் பிடிக்கும் என்பதால் குளித்தோம் அல்லாமல் புண்ணியம் என்றெல்லாம் அல்ல... தொடர்கின்றோம்..
@ கீதா சாம்பசிவம் அன்று இரவு குஜராத்தி சாப்பாட்டில் சப்பாத்தி சப்ஜியுடன் கிச்சடி என்று ஏதோ தந்தார்கள் எதுவுமே ருசிக்கவில்லை.கொவிலுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்தால் ஆகுமா.?ஆனால் அவை ஓரளவுக்கு ஒழுங்கு படுத்தி தரிசனம் செய்வித்தனர் வருகைக்கு நன்றி மேம்
@ ஏகாந்தன் படத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் ஆலமரத்துக்கு எந்த சேதமும் இல்லாமல்தான்கோவில் இருப்பது தெரியும் இராமேஸ்வரத்தில் அனைத்து ரக ஹோட்டல்களும் இருக்கின்றன. ஒரு மாற்றத்துக்கு ராஜஸ்தானி ஹோட்டல் போனோம். காலை உணவாக பூரி சப்ஜி என் ஹாஸ்டல் வாழ்க்கையை நினைவு படுத்தியது வருகைக்கு நன்றி சார்
@ டாக்டர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் பற்றி முதலில் தெரிந்திருக்கவில்லை. எதிர்பாராத ஒன்று அது புண்ணியம் என்றால் இருந்து விட்டுப்போகட்டுமே வருகைக்கு நன்றி சார்
. கோபுரத்திலிருந்து பீச்சியடிக்கும் கும்பாபிஷேக நீரைஅருமையாக படம் பிடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! விசேட நாட்களில் உணவகங்களில் உணவு சுவையாக இருக்காது என்பது தெரிந்ததுதானே. படங்கள் யாவும் அருமை. தொடர்கிறேன்.
@ துளசிதரன்/ கீதா வாருங்கள் துளசி/ கீதா. இது இராமேஸ்வரத்துக்கு என் மூன்றாம் விசிட்.முதல் விசிட் முடிந்து பத்து வருஷங்களாயிருக்கும் அக்னி தீர்த்தக் கரையில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை.அந்த ஹோட்டல் வாசகம் ஒரு விழிப்புணர்வுக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன் எந்த வடக்கத்திய ஹோட்டலானாலும் சப்பாத்தி உண்டு. ஒரு சப்ஜியும் உண்டு. நான் உண்பதில் ஒரு மிதவாதி. நம் ஹோட்டல்களில் இருக்கும் சாம்பார் சட்னி போல. அதிகம் கவனிக்க வில்லை.கடலில் நான் மட்டும்தான் குளித்தேன் மற்றவர்கள் தலைக்குத் தண்ணீர் தெளித்ததோடு சரி. அது ஒரு அனுபவம் புண்ணியம் என்று நானும் நினைக்கவில்லை. வருகைக்கு நன்றி ஐயா/ அம்மா
@ வே நடனசபாபதி நான் படம் பிடிக்கும் போது அபிஷேக நீர் பீய்ச்சப்பட்டது அவ்வளவுதான் இராமேஸ்வரம் ஒரு யாத்திரைதலம் எப்போதும் கூட்டம் இருக்கும் அன்று கும்பாபிஷேகம் ஆதலால் உள்ளூர் கூட்டமும் சேர்ந்திருக்கும் வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி ஐயா.
உங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். நாங்கள் கோயில் உலா செல்லும்போது கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்களைப் போல உங்களது பயணத்திலும் காண்கிறோம். பகிர்வுக்கு நன்றி.
அருமை. கும்பாபிஷேகம், கோபுர தரிசனம் செஞ்சு வச்சுட்டீங்க. இவ்ளோ கூட்டம் இருந்தால் பொதுவாக உள்ளே போக தயங்குவேன். கோவில் பெருசு என்பதால் உள்ளே போனதும் நடமாட இடம் இருந்துருக்கும், இல்லே?
படங்கள் நல்ல தெளிவு!
மிகவும் தாமதமான வருகைக்கு மன்னிக்கணும். விட்டுப்போனவைகளை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவருகிறேன்.
பொதுவாய் குஜராத்தி சாப்பாடு நன்றாக இருக்கும். அன்று உங்களுக்குச் சரியாக கிடைக்கவில்லை போல! :) எப்படித் தான் அந்தக் கும்பலில் உள்ளே சென்று தரிசனம் செய்தீர்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. !!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குபயணக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவைதான். எழுத்தைவிடவும், படங்கள் நிறைய கதையளக்கின்றன.
பதிலளிநீக்குகோயில் கட்டுகிறேனென்று அந்த ஆலமரத்தை ஏன் இப்படி சித்திரவதை செய்தார்களோ?(முதல் படம்). மரமாகப் பிறவி எடுத்தும் கர்மா விடுவதில்லை!
ராமேஸ்வரத்தில்போய் சாப்பாட்டிற்கு ராஜஸ்தானை நாடிய மர்மம் என்ன? ஹோட்டலின் பெயர் (தமிழில்) ஸ்ரீ மகேஸ்வரி பக்த நிவாஸ். ஆனால் ஹிந்தியில்? ஸ்ரீ மாகேஷ்வரி பக்த நிவாஸ்! அந்த மாகேஷ்வரிக்கே எல்லாம் வெளிச்சம்!
கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியம் போனஸ்.
பதிலளிநீக்குகும்பலைக் கண்டால் எனக்கு அலர்ஜி!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா புகைப்படங்கள் அருமை காணொளி கண்டேன் விளக்கமான யாத்திரை விபரங்கள் நன்று எல்லாம் சரி உங்களுடைய புகைப்படம் எங்கே ? அப்பத்தானே நீங்கள் இராமேஸ்வரத்தில் இருப்பதை காணமுடியும்
பதிலளிநீக்குகும்பாபிஷேகம் கண்டமைக்கு வாழ்த்துகள்.
அந்த ஹோட்டல் வாசகம் போல் எல்லா ஹோட்டலிலும் எழுதி வைத்தால் உணவு வீணாவதைத் தடுக்கலாம் இல்லையா சார்.
பதிலளிநீக்குஅருமையான பயணம் போலத் தெரிகின்றது தொடர்கின்றோம்..
கீதா: மதிய உணவு என்ன உண்டீர்கள் என்று சொல்லவில்லையே.... ராஜஸ்தானி ஹோட்டல் என்பதால் ஆர்வம்..
குஜராத்தி ஹோட்டல் உணவு பொதுவாக நன்றாக இருக்குமே.
கூட்டம் என்றால் செல்லத் தயக்கம் உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவதுண்டு. நீங்கள் எப்படி சார் சென்றீர்கள்.
அக்னித் தீர்த்தம் கரையில் குளித்தது உண்டு ஆனால் பல வருடங்கள் முன்பு. இப்போது அங்கு ஏதோ கட்டிடம் எல்லாம் உங்கள் புகைப்படத்தில் தெரிகின்றதே...நாங்கள் அப்போதுக் குளித்த போது மனிதக் கழிவுகள் கூட வந்தது..பின்னர் சற்றுத் தள்ளிச் சென்று கூட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளித்துவிட்டு வந்தோம். கடலில், ஆற்றில், அருவியில் குளித்தல் பிடிக்கும் என்பதால் குளித்தோம் அல்லாமல் புண்ணியம் என்றெல்லாம் அல்ல...
தொடர்கின்றோம்..
படங்களுடன் பயண விவரம்அருமை ஐயா
பதிலளிநீக்குதொடருங்கள்
தொடர்கிறோம்
நன்றி
உணவு வீணாக்கினால் கட்டணம் வசூலிக்கப்படுவது சிறப்பு.
பதிலளிநீக்குமற்ற விவரங்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
அன்று இரவு குஜராத்தி சாப்பாட்டில் சப்பாத்தி சப்ஜியுடன் கிச்சடி என்று ஏதோ தந்தார்கள் எதுவுமே ருசிக்கவில்லை.கொவிலுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்தால் ஆகுமா.?ஆனால் அவை ஓரளவுக்கு ஒழுங்கு படுத்தி தரிசனம் செய்வித்தனர் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
படத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் ஆலமரத்துக்கு எந்த சேதமும் இல்லாமல்தான்கோவில் இருப்பது தெரியும் இராமேஸ்வரத்தில் அனைத்து ரக ஹோட்டல்களும் இருக்கின்றன. ஒரு மாற்றத்துக்கு ராஜஸ்தானி ஹோட்டல் போனோம். காலை உணவாக பூரி சப்ஜி என் ஹாஸ்டல் வாழ்க்கையை நினைவு படுத்தியது வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
கோவில் கும்பாபிஷேகம் பற்றி முதலில் தெரிந்திருக்கவில்லை. எதிர்பாராத ஒன்று அது புண்ணியம் என்றால் இருந்து விட்டுப்போகட்டுமே வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கும்பலைக்கண்டால் எனக்கும் அலர்ஜிதான் என்ன செய்வது தவிர்க்க முடியவில்லை. நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
வாருங்கள்ஜி. படங்கள் நான் எடுத்தது அது ஹாண்டி காம் அதில் செல்ஃபி வசதி இல்லை. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி.
ஸ்ரீ மகேஸ்வரி பக்த விலாஸ்,,,,
பதிலளிநீக்குஅருமை பயணம் அருமை, தொடர்கிறேன்.
.
பதிலளிநீக்குகோபுரத்திலிருந்து பீச்சியடிக்கும் கும்பாபிஷேக நீரைஅருமையாக படம் பிடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! விசேட நாட்களில் உணவகங்களில் உணவு சுவையாக இருக்காது என்பது தெரிந்ததுதானே. படங்கள் யாவும் அருமை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு@ துளசிதரன்/ கீதா
வாருங்கள் துளசி/ கீதா. இது இராமேஸ்வரத்துக்கு என் மூன்றாம் விசிட்.முதல் விசிட் முடிந்து பத்து வருஷங்களாயிருக்கும் அக்னி தீர்த்தக் கரையில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தோன்றவில்லை.அந்த ஹோட்டல் வாசகம் ஒரு விழிப்புணர்வுக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன் எந்த வடக்கத்திய ஹோட்டலானாலும் சப்பாத்தி உண்டு. ஒரு சப்ஜியும் உண்டு. நான் உண்பதில் ஒரு மிதவாதி. நம் ஹோட்டல்களில் இருக்கும் சாம்பார் சட்னி போல. அதிகம் கவனிக்க வில்லை.கடலில் நான் மட்டும்தான் குளித்தேன் மற்றவர்கள் தலைக்குத் தண்ணீர் தெளித்ததோடு சரி. அது ஒரு அனுபவம் புண்ணியம் என்று நானும் நினைக்கவில்லை. வருகைக்கு நன்றி ஐயா/ அம்மா
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
உணவை வீணாக்கினால் கட்டணம் வசூலிக்கிறார்களா தெரியாது அது ஒரு விழிப்புணர்வு வாசகம் என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ மகேஸ்வரி பாலசந்திரன்
ராமேஸ்வரத்தில் உங்களுக்கு ஒரு பக்த விலாஸ் .......! வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி
நான் படம் பிடிக்கும் போது அபிஷேக நீர் பீய்ச்சப்பட்டது அவ்வளவுதான் இராமேஸ்வரம் ஒரு யாத்திரைதலம் எப்போதும் கூட்டம் இருக்கும் அன்று கும்பாபிஷேகம் ஆதலால் உள்ளூர் கூட்டமும் சேர்ந்திருக்கும் வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி ஐயா.
உங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். நாங்கள் கோயில் உலா செல்லும்போது கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்களைப் போல உங்களது பயணத்திலும் காண்கிறோம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கு நன்றி சார் தொடர்ந்து வாருங்கள்
அருமை. கும்பாபிஷேகம், கோபுர தரிசனம் செஞ்சு வச்சுட்டீங்க. இவ்ளோ கூட்டம் இருந்தால் பொதுவாக உள்ளே போக தயங்குவேன். கோவில் பெருசு என்பதால் உள்ளே போனதும் நடமாட இடம் இருந்துருக்கும், இல்லே?
பதிலளிநீக்குபடங்கள் நல்ல தெளிவு!
மிகவும் தாமதமான வருகைக்கு மன்னிக்கணும். விட்டுப்போனவைகளை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவருகிறேன்.
@ துளசி கோபால்
பதிலளிநீக்குவரத் தாமதமானாலும் வந்து ரசித்ததற்கு நன்றி மேம்