கடன் பட்டார் நெஞ்சம்
-----------------------------------
என்ன
எழுத என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது
கடன் பட்டார் நெஞ்சம் போல என்னும் வரி நினைவுக்கு வந்தது. அதுவே
பதிவின் தலைப்பு என்று முடிவு செய்தேன்
கடன்
பட்டவர் நெஞ்சம் எல்லாம் கலங்குமா என்னும்
அடிப்படைக் கேள்வி எழுந்தது கடன் வாங்காதவர் இருக்கிறார்களா நாடே கடன் பட்டு நாம் எல்லோருமே கடனாளியாகத்தானே
இருக்கிறோம் நாடு கடன் பட்டால்
நமக்கேன்ன அரசாங்கம் நோட்டடித்து சமாளிக்கும்
காப்பிப்பொடி முதல் சர்க்கரை வரை அடுத்த
வீட்டில் கடன்வாங்குதலும் கொடுத்தலும் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறது அதில்
அதிக பாதகமில்லைகடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனும்போதுதான்கடன்
பட்ட நெஞ்சம் எல்லாம் வருகிறது. கடன்
ஏன் வாங்குகிறோம் நம்மிடம் இல்லாதபோது.
வாங்கியதை நம்மால் திருப்பிக்கொடுக்க முடியும் என்றுநம்பிக்கை இருக்கும் போது.
ஆனால் ஒரு முறை கடன் வாங்கிவிட்டால் எந்த
ஒரு பொருளும் இல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லைகடனோ உடனோ வாங்கி சமாளிக்கலாம்
என்று தோன்றிவிடும் ( கடனோ சரி அது என்ன உடனோ ?.புரியாமலேயே எழுதிவிட்டேன் )
திருமணம்
ஆன புதிதில் மனைவி கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியாதபோது எப்படியும்
திருப்பிக் கொடுக்கத்தானே போகிறோம்என்ற எண்ணம் வரும்போது கடன் வாங்குகிறோம். ஆனால்
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கஎண்ணும்போது அதற்கான ரிசோர்ஸ் இல்லாதபோது பிரச்சனை
வருகிறது
திருமணம்
ஆன புதிதில்சென்னையில் குடி போனோம் வில்லி
வாக்கம் நான் அப்போது பணி புரிந்த
லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் அடுத்து இருந்ததால் அங்கு வீடு வாடகைக்கு
எடுத்தேன் நான் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால் என்மனைவி தனியே இருக்கவேண்டும் நிறைய
குடித்தனங்கள் இருந்த இடத்தில் கடன்கொடுத்து வசூலிக்க பட்டாணியர் என்று
சொல்லப்படும் மீசை தாடி வைத்துத் தலைப்பகையுடன் ஆஜானுபாகுவான ஒருவர் அடிக்கடி வருவார் அவரைப் பார்த்தே என் மனைவி
அச்சமுறுவாள் அப்படிப்பட்டவர்களிடம் கடன் வாங்கி கொடுக்காமல் எப்படி இருக்க
முடியும் அவர்களும் அன்னிய தேசத்தில் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில்
எப்படித் துணிந்து வாழ்கிறார்களோ என்று தோன்றும்ஒரு முறை கடன் வாங்கிப்
பழக்கப்பட்டால் எதையும் இல்லை என்று நினைக்கத் தோன்றாது
ஒரு
வீட்டை வாங்க வேண்டுமென்றால் இப்போது
யாரும் கை இருப்பைப் பற்றி நினைப்பது இல்லைபத்துலட்சம் பெறுமானம் உள்ள வீடு தவணை முறையில் பதின் மூன்றோ பதினாலோ கூட கொடுக்க வேண்டி
இருக்கும் இ எம் ஐ மாதாந்திரமாகக் கட்டும் போது உயரும் மதிப்பு தெரிவதில்லை தவணைகளை கட்டாமல் பணத்தை இழந்தோரும் உண்டு
சிலருக்கு கடன் கொடுத்து மற்றவரை வசப்படுத்தும்
குணமும் உண்டு / திருச்சியில் பணியில் இருந்த போது ஒருவர் வட்டி எனும்
அடைமொழியுடன் அவர் பெயர் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்டும் கூட
ஆவார். புதிதாகப் பணியில் சேருபவரை மடக்கி பாலிசி எடுக்க வைப்பார் எப்படியாவது
ஒருவரைக் குறிவைத்தால் பாலிசி விற்காமல்
விடமாட்டார் . அதற்கு அவரிடம் இருந்த ஒரு உபாயம் பாலிசி கொடுக்க வேண்டியவருக்கு
எப்படியாவது கடன் கொடுத்து விடுவார் அதைத்
திருப்பிக் கேட்கவும் மாட்டார் கடன் கொடுப்பது என்பது அவருக்கு பாலிசி விற்க தூண்டில் போடுவது போல் அவரைக்
கடனாளியாக்கி அதையே சாக்காக வைத்து பாலிசி
விற்றுவிடுவார் ஒரு முறை அவரிடம் இன்னாருக்குப் பாலிசி விற்க முடியாதென்று பந்தயம்
கட்டித் தோற்றிருக்கிறேன்
கடன்
பற்றி எழுதும்போதுஇன்னொரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருகிறது அப்போது நான் விஜயவாடாவில்
இருந்தேன்
வேண்டப்பட்டவர்
ஒருவரிடமிருந்து உருக்கமான கடிதம் ஒன்று வந்தது. அதில் அவரது வேலை
போய்விட்டதாகவும் அவசரத் தேவைகளைச்
சமாளிக்கத் திண்டாடுவதாகவும் போன வேலை
இன்னும் பதினைந்து நாட்களில் திரும்பக் கிடைக்கும் என்றும் அப்படிக்
கிடைத்தவுடன் என்னிடம் வாங்கும் கடனைத்
திருப்புவதாகவும் எழுதி இருந்தார் இல்லாமையின் கொடுமை எனக்குத் தெரியும் ஆகவே கடிதம்கிடைத்தவுடன் ரூ500/-உடனே ட்ராஃப்ட்
எடுத்து அனுப்பினேன்
ஆயிற்று
ஏறத்தாழ நாற்பது வருடங்கள் கடன் பற்றிய
பேச் மூச் எதுவும் இல்லை நானும் இதுவரைக் கேட்கவில்லை. ஆனால் ஓரோர் சமயம் அந்தக் காலத்து ரூ 500/ -ன் மதிப்பு இப்போது
எவ்வளவு என்று நினைத்துப் பார்ப்பதுண்டு
என்
இளவயதிலேயே பொறுப்புகளைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார் என் தந்தை. ஒரே ஆறுதல் என்னவென்றால் எந்தக் கடனும் இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார் நிச்சயமாக கடன் பட்ட நெஞ்சத்தோடு போயிருக்க மாட்டார் என்பதே மனசுக்கு நிம்மதி
/
வணக்கம் ஐயா நல்லதொரு விடயத்தை எடுத்து இருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குஇப்பொழுது க்ரெடிட் கார்டு வந்த பிறகு எல்லா மனிதர்களுமே கடன் வாங்கிப் பழகி விட்டார்கள் கையில் இருப்பு என்றால் அதன் செலவு வகைகள் ஒரு மா3யிருக்கும் கடன் அட்டைதானே மாதம் முடிந்த பிறகு பார்க்கலாம் என்ற நிலையில் இன்றைய வாழ்க்கை ஓடுகின்றது
கடனோ உடனோ அதாவது எமர்ஸென்ஸி கடனோ ?
எனது ஆசையும் இதுதான் ஐயா மரணத்தின் போது யாருக்கும் கடன் பாக்கி இல்லாதவனாக போக வேண்டும்.
கடனே என்றோ, கடமைக்கோ எழுதாமல் கலகலவென்று எழுதி இருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குஒன்பதாம் வகுபுமுடித்து பத்தாம் வகுப்புப் போன உடன் பழைய புத்தகங்களை விற்று வரும் காசை அப்பாவிடம் தருவது வழக்கம். என் நண்பன் ஒருவன் (அவன் பெயர் பாஸ்கர். போலீஸ்காரர் மகன்) என்னிடம் இருந்த பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாகச் சொல்லிச் சென்றான். ஆள் அட்ரசே இல்லை. போய்ப் பார்த்தால் அவன் வீட்டை விட்டு ஓடி விட்டானாம்!!! அவன் நண்பர்கள் பலரிடமும் இதே போல பழைய புத்தகங்கள் வாங்கி வேறு பள்ளியில் விற்று விட்டு ஓடிப் போனான்!
அந்த வயதிலேயே வித்தியாசமாகச் சிந்தித்து ஏமாற்றினான் அவன்! நானும் (நாங்களும்) ஏமாறினோம்!
பழைய புத்தகத்தை விற்று வந்த காசை அப்பா கிட்ட கொடுத்தீங்களாக்கும்? பேஷ் பேஷ், ரொம்ப நல்ல பிள்ளை !
நீக்குபழைய புத்தகத்தை விற்று வந்த காசை அப்பா கிட்ட கொடுத்தீங்களாக்கும்? பேஷ் பேஷ், ரொம்ப நல்ல பிள்ளை !
நீக்குகடன் என்று நினைக்கையிலேயே நடுங்குகிறது.
பதிலளிநீக்குதிருமணமான புதிதில் பிலிப்ஸ் ரேடியோ எனக்காக வாங்கினார். 750 ரூபாய் விலை. அப்போது இன்ஸ்டால்மெண்ட் முறை பிரபலம். என்னடா மாதம் சம்பளக் கவரில் 75 குறைகிறதே என்று கேட்ட பிறகே தெரியும். போனஸ் வந்ததும் முதல் வேலை மிச்ச பணத்தைக் கட்ட சொன்னேன்,. நிம்மதி.
உங்கள் பதிவு சுவாரஸ்யம். இப்ப க்ரெடிட் கார்ட் வந்து எல்லோரையும்
பாழடிக்கிறது. புரியவே இல்லை.
அனைத்தும் ஒரு நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது ஐயா...
பதிலளிநீக்குகடன் அன்பை முறிக்கும்.. சமயத்தில் எலும்பையும் முறிக்கும்!..
பதிலளிநீக்கு- என்று கடைகளில் எழுதிப் போட்டிருப்பார்கள் - கிராமங்களில் கண்டிருக்கின்றேன்..
கஷ்டத்திற்காக கடன் வாங்கி - அந்தக் கடனால் கஷ்டப்பட்டவர்கள் அநேகம் பேர்..
இன்றைய காலத்திற்குப் பொருத்தமான பழமொழி என்னவென்றால் "கடன் கொடுத்தார் நெஞ்சம்போல்". இதுதான் இன்றைய உலகிற்குப் பொருத்தமானது.
பதிலளிநீக்குநாங்க பொதுவாக தீபாவளித் துணிகள் மட்டும் கடனில் வாங்குவோம். அதுவும் அம்பத்தூரிலேயே உள்ள ஒரு துணிக்கடையில் அல்லது கோ ஆப்டெக்சில்! மற்றபடி வெளியாரிடம் கடன் வாங்கியதோ மளிகைக் கடைகளில் கடன் வாங்கியதோ எதுவும் இல்லை!
பதிலளிநீக்குஇன்று கடன் வாங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுடிந்தவரை தனிநபர் கடனைத் தவிர்த்து விடுவது நல்லது. அய்யா பழனி. கந்தசாமி அவர்கள் சொல்வதைப் போல ‘கடன் கொடுத்தார் நெஞ்சம்’ போல என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நெருங்கிய உறவினரிடம், பெருந்தொகை ஒன்றை (கையெழுத்து எதுவும் கிடையாது; வட்டி ஏதும் கிடையாது, கைமாற்றாக நம்பிக்கையின் பேரில்) கொடுத்துவிட்டு , அதை வாங்குவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குகடன் என்பது உறவினர்கள் அல்லாதவர்களிடம் வாங்குவது. உடன் என்பது உறவினர்களிடம் வாங்குவது. இப்படி சொல்லலாம்.
ஐயா
பதிலளிநீக்குகடன் என்பது உறவினர்கள் அல்லாதவர்களிடம் வாங்குவது. உடன் என்பது உறவினர்களிடம் வாங்குவது. இப்படி சொல்லலாம்.
If the bank gives 1 or 2 lachs as loan the person who took the loan has to worry. But if the bank gives 5000 chores to industrialist the bank has to worry.
பதிலளிநீக்குIf the bank gives 1 or 2 lachs as loan the person who took the loan has to worry. But if the bank gives 5000 chores to industrialist the bank has to worry.
பதிலளிநீக்கு`கடன்பட்டார் நெஞ்சம் போலே கலங்கினான் இலங்கை வேந்தன்` என்று கம்பன் எழுதியது சூடு, சொரணையில்லாத இந்தக் காலத்தில் அல்ல. குடும்ப கௌரவம், தனிமனித கௌரவம், தன்மானம் எல்லாம் போற்றப்பட்ட வேறொரு காலத்தில்!
பதிலளிநீக்குகடன் என்றது அங்கே வெறும் பணம் சம்பந்தப்பட்டது அல்ல. பணத்தேவையோடு, தன்மான உணர்ச்சியும் சம்பந்தப்பட்டிருந்தது. கடன் வாங்கியவர், சொன்ன தேதிக்குக் கொடுக்க முடியாமல் போக, நாலுபேருக்கு முன்னால், கொடுத்தவர் சத்தமாகக் கடன் எங்கே எனத் திருப்பிக் கேட்டுவிட்டால் நம் கௌரவம் என்னாகும் என்று கலங்கி, அவமான உணர்ச்சியில், கடன்கொடுத்தவரைப் பொது இடங்களில் தவிர்க்க நினைத்த காலம். உடனே கடனைத் திருப்பமுடியாததால், ஒரு தர்மசங்கடத்தில் கொடுத்தவரைப் பார்ப்பதைத் தவிர்க்கமுயலல்; ஏமாற்ற அல்ல. கண்ணியமான ஒருவர் கடன்வாங்க நேர்ந்தபின், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அவர் மனம் என்ன பாடுபடும்? நாலுபேருக்குத் தெரிந்தால் நம் குடும்ப கௌரவம் என்னாவது? வீட்டைவிட்டு வெளியே வரவே நடுங்கும் மனம். அந்த மனதின் வேதனையை அந்தக்காலச் சூழலில் சொன்னான் கம்பன்.
நாம் இப்போதிருக்கும் காலம் போற்றத் தகுந்த பொற்காலம். கையில் பணமிருந்தும், அதனை ஒருபுறம் இன்வெஸ்ட் செய்து பணம் குட்டிபோட வைத்துவிட்டு, காருக்கும், வீட்டுக்கும், வீடு ரிப்பேருக்கும்கூட கடன் வாங்குவது; கடனில்தான் இதை வாங்கினேன், அதை வாங்கினேன் எனப் பெருமைப்பட்டுக்கொள்வது. சிறப்புமிகு காலம், செம்மையான காலம் இது.
சமீபத்தில் உங்களிடமிருந்து வந்த விறுவிறு கட்டுரை!
கடன் என்பது காசு பண சமாசாரம் மட்டும் இல்லை.
பதிலளிநீக்கு'எனக்கு இவ்வளவு செய்த அவருக்க்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன்' என்றார் ஒருவர்.
இந்தக் கடன் எதில் சேர்த்தி?.. அவருக்குத் திருப்பிச் செய்வது ஒன்றினாலேயே அந்தக் கடன் நிவர்த்தியாகும். உழைப்பால் திருப்பிச் செய்யும் கடன்களும் உண்டு.
இந்தக் கடனைத் தான் கம்பர் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
'அண்டா குண்டா அடகு வைச்சு,
பி.எ., எம்.ஏ., படிக்க வைச்சு
பட்டம் வாங்கி வேலை தேடினா
நோ வேகன்ஸி.. நோ வேகன்ஸி..'
--என்று இருபது முப்பது வருடங்களுக்கு முன் இளைஞர்க்ள் ரோடுக்கு வந்து ஊர்வலம் போன மனதைக் குமைய வைக்கும் காட்சிகள் கண்டதுண்டு.
படித்த இளைஞர்களுக்கு அவரவ்ர் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கச் செய்வது அரசாங்கம் மக்களுக்குப் பட்ட கடன். இந்தக் கடன் தீர்ந்தால் தான் மகன், மகள்கள் அண்டா, குண்டா அடகு வைச்ச பெற்றோருக்கான கடனைத் தீர்க்க முடியும்.
இப்பொழ்து கால மாற்ற்த்தில் காட்சிகள் மாறீயிருக்கலாம். இருந்தாலும் தீராக்கடன்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் என் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவர் காலி செய்து போய் ஆண்டுகள் ஆனபோதிலும் பாங்கிலிருந்து கிரெடிட் கார்ட் கடனை வசூலிக்க ஆட்கள் அவ்வப்போது வருகிறார்கள் நன்றி ஜி
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
முதலில் பாராட்டுக்கு நன்றி /ஒன்பதாம் வகுபுமுடித்து பத்தாம் வகுப்புப் போன உடன் பழைய புத்தகங்களை விற்று வரும் காசை அப்பாவிடம் தருவது வழக்கம். /வழக்கம் என்னும் வார்த்தை என்னை இதை எழுதச் செய்கிறது ஒன்பதாம் வகுப்பு ஒரு முறைதானே சும்மா தமாசுக்கு வருகைக்கு நன்றி ஸ்ரீ
ஆமாம். அந்த வார்த்தை அமைப்புகளின் தவறுகளை நீக்கி,ஃபேஸ்புக்கில் ஒரு பதிவாக்கி விட்டேன்.
நீக்கு:))))
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
இந்தப் பின்னூட்டம் ஸ்ரீராமுக்கு என்று நினைக்கிறேன் நன்றி சார்
பதிலளிநீக்கு@ வல்லி சிம்ஹன்
கடன் வாங்கி பலரும் அவதிக்குள்ளானது தெரியும் ஆனால் இப்போதெல்லாம் கடன் வாங்கிச் செய்வதே வழக்கமாகி விட்டது வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் ஏதோ நம்பிக்கையில்தான் செய்கிறார்கள் விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
கடன் அன்பை மட்டுமல்ல மதிப்பையும் குறைக்கிறது ஆனால் இப்போதெல்லாம் கடன் வாங்குவது அத்தியாவசியமாகி விடுகிறதுவருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
நான் சொன்னது பழமொழி அல்ல. ஆனால் நீங்கள் சொல்வது புதுமொழியாகி விடும் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
எங்களுக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவருக்கு நாங்கள் துணி வாங்கினால் போதும் பணம் பற்றிப் பேசமாட்டார் இருந்தாலும் நமக்கு அது கடன்தானே வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ திதமிழ் இளங்கோ
கொடுத்தகடன் திரும்பவந்ததே. இருந்தாலும் அவர் மீது உங்கள் மதிப்பும் குறைந்திருக்கும்தானே வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@jk 22384
உடனுக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ jk 22384
வங்கிகள் எந்த collateral surety யும் இல்லாமல் கடன் தருவார்களா வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஏகாந்தன்
இன்றும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு மனித மனம் பெரிதாக மாறிவிடவில்லை.இன்வெஸ்ட்மெண்டில் வரும் பணம் கடன் வட்டியை விட அதிகம் வருமா? நான் நிறைய விஷயங்களில் பின் தங்கி இருக்கிறேன் போல் இருக்கிறதுவருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஜீவி
நான் எழுதியது சாதாரணமான கொடுக்கல் வாங்கல் பற்றியதே அண்டா குண்டா அடகு வச்சுக் கடன் வாங்கிப் படித்தால் படிப்பின் அருமை தெரியும் உழைப்பின் அருமையும் தெரியும் நீங்கள் சொல்லிப் போகும் கடன் படுவது அந்த அர்த்தத்தில் சரியாகிப் போகும் .
தங்கள் பதிவை சமூக கடப்பாடு உடைய வேறு தளத்திற்கு கொண்டு போவதற்காகவே அப்படி எழுதினேன்.
பதிலளிநீக்குஅந்த தெருப்பாடல் கவிதை வரிகளில் ஒரு வரியை மறைத்திருந்தேன். இப்பொழுது இதோ முழுமையானது: முதல் வரிக்கும் மூன்றாம் வரிக்கும் இடையே எவ்வலவு சோகம் பாருங்கள். ஆம்! அந்தக்கால ஏழ்மை நிலையிலான மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது!
அண்டா குண்டா அடகு வைச்சி
அம்மா தாலியையும் சேர்த்து வைச்சி
பி.ஏ., எம்.ஏ., படிக்க வைச்சு
பட்டம் கிடைச்சு வேலை தேடினா
நோ வேகன்ஸி.. நோ வேகன்ஸி!
anbulla ayya
பதிலளிநீக்குvanakkam. ungalin ovvoru pathivulum oru poruppu unarcci ullathu.
vaazthukkal.
inru kadan vaanguvathuthaan kadanaaka ullathu. irandavathu kadan kadamai enpathu porul. en kanipporiyil tamil software sariyaanathum niraiya ezuthukiren. nanri. vanakkam.
பதிலளிநீக்குகடன் வாங்குவது தவறில்லை.(வங்கியாளன் அல்லவா அப்படித்தான் சொல்வேன்) தேவைப்பட்டால் வங்கியில் கடன் வாங்கலாம். ஆனால் திருப்பித்தர வருமானம் மற்றும் மனம் இருக்கவேண்டும்.
சார் மிக மிக நல்லதோர் பதிவு. கடன் நல்ல நட்பைக் கூட முறிக்கும் என்பது உண்மை. நட்பு முறியாவிட்டாலும் விலகல், ஒதுங்கல் இருக்கும். கடன் வாங்கியதுண்டு. வங்கியில். சில கடன்கள் தவிர்க்க முடியாத ஒன்றானதால். ஆனால் முறைதவறாமல் கட்டுவதுண்டு. எனவே பிரச்சனை இல்லை.
பதிலளிநீக்குகீதா:கடன் வாங்கினால் நம் மானம் மரியாதை எல்லாமே கொஞ்சம் கீழாகும். பிறர் நம்மை கீழ்த்தரமாகப் பார்ப்பதுண்டு. வங்கியில் பெற முடியாத கடன்களை வேறு வழியின்றி உறவினரிடமோ, நண்பர்களிடமோ வாங்கினால் அதுவும் அந்தக் கடன் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் - படிப்பிற்காகத்தான் என்றாலும் கூட நாம் திருப்பிக் கொடுப்போம் என்றாலும் கூட அதுவும் வட்டியுடன் என்றாலும் கூட பல சமயங்களில் மனம் புண்படும்படி நிகழ்வுகள் ஏற்படலாம். இப்போதைய காலத்தில் கல்விக்கடன் என்பதும், வீடு வாங்கும் கடன் என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது அதுவும் சாதாரண குடும்பத்தார்க்கு. வங்கியில் என்றால் பிரச்சினை இல்லை.
கொடுத்து ஏமாறுவதும் உண்டு. நல்ல பதிவு சார்...
பதிலளிநீக்கு@ ஹரணி
ஐயா வருகைக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதி உள்ளேன் அதில் பொறுப்புணர்ச்சி இருப்ப்தாக நீங்கள் கருதுவது என் பாக்கியம் தொடர்ந்து வாருங்கள்
பதிலளிநீக்கு@ வே நடனசபாபதி.
வங்கியில் கடன் கொடுத்தால் அதை வசூலிக்க சுவர்டி அடமானம் போன்ற பல வழிகள் இருக்கின்றன.இருந்தும் பெரிய தொகைகள் பலதும்வசூலிக்கப்படாமல் போவதாயும் கேள்விப்படுகிறேன் என் வீட்டில் குடியிருந்த ஒருவர் க்ரெடிட் கார்ட் பணத்தைச் செலுத்தாமல்இருந்திருக்கிறார் அவர் என் விட்டைக் காலி செய்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்போதும் என் முகவரியில் வந்து விசாரிக்கிறார்கள் புரியவில்லை.
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து.
வருகைக்கு நன்றி இப்போது இருக்கும் நிலையில் கடன்வாங்காதவர்களே இருக்க முடியாதுவாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் எல்லா அவமானங்களையும் சந்திக்க நேரலாம் கடன் என்னும்வகையில் நாம் திருப்பிக் கொடுக்கும் பணம் மிக அதிகமாக இருக்கிறது. எதிலும் அகலக் கால் வைக்காதிருக்க வேண்டும்
பதிலளிநீக்கு@ ஜீவி
என்னால் புரிந்து கொள்ள முடிகிறதுநான் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டியதே கடன் ஏதும் வாங்காமல்தான் என்னுடைய பிராவிடெண்ட் ஃபண்ட் சேமிப்பு இன்ஷூரன்ஸ் சேமிப்பு தவிர என் மனைவியின் சில நகைகளை விற்று . என்னாலேயே நம்பமுடியவில்லை. என் மக்கள் ஃப்லாட்டுகள் வாங்கி இருக்கிறார்கள் ஈஎம் ஐ மற்றும் வட்டி கட்டுவதற்குள் அவர்கள் விழி பிதுங்கி விடுகிறது அகலக் கால் வைக்காதவரை சரியே
நல்ல பதிவு சார்! :)
பதிலளிநீக்குபொருட்கடனோ, பணக் கடனோ, இல்லை செய்த உதவிக்காக திருப்பிச் செய்யும் கடனோ, ஒருவருடைய "டெம்பெர்மெண்ட்" மற்றும் "மாரல்ஸ்" சம்மந்தப் பட்டது என்பேன் நான். ஒரு சிலருக்கு கடன் என்பது பெரிய சுமை, அகலக்கால் வைப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு இதெல்லாம் பெரிய விசயம் இல்லை. நான் முந்திய வகையைச் சேர்ந்தவன் உங்களைப் போல்தான். பிரச்சினை என்னவென்றால் நாம் அப்படியிருப்பதால் நம் நண்பர்களிடமும் அதேபோல் எதிர்பார்ப்பு வந்து விடுகிறது. வாங்கியதை சொன்னபடி திருப்பித் தரவில்லையென்றால் சுத்தமாகப் பிடிக்காது. I really really become rude to people when they behave silly and not taking this seriously. I never take the advice from others saying "I should take it easy" when I am dealing with "irresponsible people" (I really dont care who that is) either. If fact such advisers irritate me MOST! I have burnt lots of bridges like this! :)
பதிலளிநீக்கு@ வருண்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
About the bank's worry about the 5000 crore loan. I am referring to Mallya's Kingfisher. Banks have United Breweries Share. Can the Bank take over the brewery?
பதிலளிநீக்குJayakumar
பதிலளிநீக்கு@ jk 22384
மல்லையா யுனைட்டெட் ப்ரூவரிஸி லிருந்து விலகி விட்டாரா/ ராஜினாமா செய்து விட்டாராவங்கிகள் தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன்
"தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன்"-வசூல் செய்யமாட்டார்கள் ..செய்யமுடியாது ..அது தான் நமது நாட்டின் இன்றைய இருப்பு நிலை !
பதிலளிநீக்குமாலி
பதிலளிநீக்கு@ வி மாலி
நான் ஒரு ஆப்டிமிஸ்ட் வருகைக்கு நன்றி சார்
கடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு. ஒருவேளை அதெல்லாம் என் போன ஜென்மத்துக்குக் கடனோ என்று நினைத்துக் கொள்வேன்.
பதிலளிநீக்கு