Monday, February 22, 2016

பயணங்கள் முடிவதில்லை


                                                      பயணங்கள் முடிவதில்லை
                                                      --------------------------------------------
ஏறத்தாழ எட்டு ஒன்பது பதிவுகள் தொடர் பயணம் பற்றி எழுதி பதிவிட்டிருக்கும் வேளையில் இன்னும் ஒரு பதிவு பயணங்கள் முடிவதில்லை என்னும் தலைப்பில் எழுதக் கோரி திரு தி தமிழ் இளங்கோ  கேட்டிருந்தார்  உண்மையிலேயே என் பயணங்கள் முடியவில்லை என்றே தோன்றுகிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் இதில் நான் எழுதுவது கட்டுப்படுத்தப் படுகிறது கேள்விகளுக்குப் பதில் என்னும்  முறையில்  இருந்தாலும் என்னை அத்தனை எளிதில் கட்டுப்படுத்த முடியுமா  என்  வழியில் தொடர் கட்டுரையைத் தொடர்கிறேன் பிறரால் அழைக்கப் படாத முதியவன் என்னையும் அழைத்த திரு தி தமிழ் இளங்கோ சாருக்கு நன்றி  இனிகட்டுரைக்குப் போவோமா.?
1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இந்த 77 வயது காலத்துக்குள் எத்தனையோ பயணங்கள் மேற்கொண்டாயிற்று. அவற்றில் முதல் ரயில் பயணம் என்று கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என் மாமா ஒருவரின்  திருமணம் கேரளா நம்மாரையில் நடந்தது  நாங்கள் கோவையில் இருந்தோம் அப்போது என் தந்தையின் சார்பாக என்னைத் திருமணத்துக்கு தனியே அனுப்பினார்கள் அது நான் தனியே மேற்கொண்ட பயணம்  என்பதால் நினைவுக்கு வருகிறது எனக்கு சுமார் 11 வயதிருக்கும்
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
இதற்கு பதில் சொல்வது சற்று தடுமாற்றம் ஏன் என்றால் அது பதிவின் நீளத்தைக் கூட்டிவிடும்
என் சின்ன அண்ணா காசி ஹரித்வார் எல்லாம் செல்லலாமா என்று கேட்டார்  நானும் சரி என்று கூறி விட்டேன் நானும் என் மனைவியோடு  அண்ணா அண்ணியையும் கூட்டிக் கொண்டு போகும் வழியில் பெரிய அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்துக் கொண்டு பயணிக்கலாம் என்று திட்டமிட்டோம் காசி ஹரித்வார் தவிர வட மாநிலப் பயணமாக்கலாமே என்றேன் சரி என்று அண்ணா கூறினார். அது 2003-ம் ஆண்டுமுதலில் போகவேண்டிய இடங்கள் எத்தனை நாள் தங்குவது எந்த ரயிலில் போவது என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும்  பொறுப்பை என்னிடமே விட்டார்கள் அகில இந்திய ரயில்வே அட்டவணை ஒன்றை வாங்கினேன் அப்போது சர்க்குலர் பயணத்திட்டம் பற்றித் தெரிந்தது அதன் படி நாம் போக வேண்டிய இடங்களையும்  தேதிகளையும்  முதலிலேயே குறிப்பிட்டு பயணச் சீட்டு வாங்கி ஒவ்வொரு ரயிலுக்கும் முன்  பதிவு செய்து கொண்டால் பயணம் சீராக அமையும்  ஆனால் எல்லாவற்றையும்  துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்  இம்மாதிரி பயணச் சீட்டு வாங்கும்  போது நாம் போனவழியில் மீண்டும் வரக் கூடாது என் திட்டப்படி பயணம் சுமார் 22 நாட்கள். எல்லாவற்றையும்  செய்து வந்தால் சின்ன அண்ணா அவரால் பயணத்துக்கு வர இயலாது என்று கூறி விட்டார் வாங்கின டிக்கட்டுகளைக் கேன்சல் செய்து  எனக்கும்  என் மனைவிக்கும் மட்டும் மீண்டும் டிக்கட் வாங்கினேன் இந்த சர்க்குலர் பயணத்தில் ஒரு அனுகூலம்  மொத்த தூரத்தையும் கணக்கிட்டு அதற்கான பணத்தை மட்டுமே டெலெஸ்கோபிக் ரேட்டாக வசூலிக்கிறார்கள் மொத்த செலவில் கணிசமாகக் குறையும்
முதலில் பெங்களூரில் இருந்து ஜெய்ப்பூர்  அங்கிருந்து மதுரா ஆக்ரா வாரணாசி அலஹாபாத் ஹரித்வார்  டெல்லி பெங்களூர்  என்று திட்டமிட்டு ஒவ்வொரு ரயிலுக்கும் முன் பதிவும் செய்து விட்டேன் எங்கள் பயண நிரலை என்  பெரிய அண்ணாவுக்கும் தெரியப்படுத்த அவரும் அதற்கேற்ப அவருக்கும்  பெரிய அண்ணிக்கும் பயணச் சீட்டை அந்தந்த நாட்களில் முன் பதிவு செய்துகொள்வதாகக் கூறினார் முன் பின் தெரியாத இடங்களுக்கு மிகவும் கவனமாகத் திட்டமிட்டு செய்த பயணம் என்பதால் மறக்க முடியாதது இதில் தங்குமிடங்களை போகும் போது ஆங்காங்கே பார்த்துக் கொண்டோம் இந்தப் பயணம்  பற்றி என் பதிவுகளில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்  இந்தப் பயணத்தின் போது ஒட்டகவண்டி  டோங்கா தொங்கு வண்டி ( WINCH)  மெட்ரோ பயணம் என்று பலவிதப் பயணங்களும்  அடங்கும் ஆடம்பரமில்லாத எளிய பயணம்
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
பொதுவாகவே எனக்குப் பயணிக்கப் பிடிக்கும் சாதாரணமாக சாமான்யமானவர்கள் பயணிக்கும் செகண்ட் க்லாஸ் அல்லது பேரூந்துப் பயணம் பிடிக்கும்  ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரிப்பயணம் செய்ய என் மனைவியும் மக்களும் விடுவதில்லை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப் பட்டு பிரயாணம் செய்வதே அமைந்துவிடுகிறது
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
பயணத்தில் இசை கேட்கவேண்டும் என்றில்லை.  என் மகனுடன் காரில் பயணிக்கும்போது  அவனுக்குப் பிடித்த இசையைப்போடுவான் நானும் கேட்பேன்
5.விருப்பமான பயண நேரம்
ரயில் ஆனால் இரவிலும் கார் ஆனால் பகலிலும் பயணிக்கப் பிடிக்கும்
6.விருப்பமான பயணத்துணை.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் மனைவி மக்களுடன்தான்
7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
பயணத்தின் போது இயற்கைக் காட்சிகளை ரசிக்கவே பிடிக்கும்  பயணிக்கும்போது படிக்கப் பிடிக்காது
8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
இப்போதெல்லாம் மகனுடன் காரில் பயணிப்பது  பிடிக்கும் நானாக வண்டி ஓட்டி ஆயிற்று பல வருடங்கள்
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பாடல்களைப் பிறர் பாடக் கேட்பதுதான்  பிடிக்கும்
10.கனவுப் பயணம் ஏதாவது ?
ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வர வேண்டும் என்பது ஆசை. என் நண்பன் அவனே டிக்கட் எடுத்து எல்லா ஏற்பாடுகளையும்  செய்கிறேன் என்றான்  ஆனால் மனைவி தடா போட்டுவிட்டாள்ஆனால் தடையை மீறி ஒரு முறை அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள ஆசை …கனவு…?

 எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது  ஒருவரிடம் இன்ன பொருளில் எழுது என்று கேட்பது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. இருந்தாலும் பதிவுலகில் நண்பர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. நான்  யாரிடமும் எழுதச் சொல்ல மாட்டேன் 
 
                                                                      
                                                                                                                                            
               
  
   
/37 comments:

 1. உங்கள் அமெரிக்கக்கனவுப் பயணம் விரைவில் நிறைவேறப் பிரார்த்தனைகள். அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. பயண அனுபவங்கள் அருமை. விரைவில் அமெரிக்கா சென்று வர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமை ஐயா பயண விபரங்கள் சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றீர்கள் ஏற்கனவே இந்த பயண அனுபவ பதிவை நானும் படித்து இருக்கிறேன் விரைவில் அமெரிக்கா சென்று வர வாழ்த்துகள் கனவு நனவாகட்டும்.

  ReplyDelete
 4. தடையை மீறுங்கள்
  அமெரிக்காவிற்குப் பறந்து செல்லுங்கள்

  ReplyDelete
 5. உடன் மனைவி வர ஒருமுறை அமெரிக்கா போய் வாருங்கள் நண்பரே!

  ReplyDelete
 6. உங்கள் கனவுப் பயணம் சீக்கிரம் நிறைவேறட்டும். தொடர்பதிவு எழுத அழைப்பதில் தவறில்லை. நமக்கு எழுத திடீரென ஒரு சப்ஜெக்ட் கிடைக்கிறது. சுவாரஸ்யமாய் இருந்தது உங்கள் அனுபவங்கள்.

  ReplyDelete
 7. உங்கள் விருப்ப (அமெரிக்கா) பயணம் நிறைவேற வேண்டும்...

  ReplyDelete
 8. எனது அன்பான வேண்டுகோளை ஏற்று ’பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு” – எழுதிட்ட மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B. அவர்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்.

  போன், செல்போன் போன்ற வசதிகள் இல்லாத அந்த காலத்தில் உங்களது 11 ஆவது வயதிலேயே தனிமையான ரெயில் பயணம் என்பது துணிச்சலான விஷயம்தான். உங்களது வடமாநில பயண அனுபவங்களை, உங்கள் வலைத்தளத்தில் விரிவாக படித்தது நினைவுக்கு வருகிறது. பழைய ரெயில்வே டைம்டேபிள் காலத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

  எல்லோருக்கும் ஒரு கனவுப் பயணம் இருக்கும். உங்கள் கனவுப் பயணம் – பெரும்பாலானவர்கள் விரும்பும் அமெரிக்கா என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் குடும்பத்தார் , உங்களது இந்த கனவுப்பயண விருப்பத்தை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்பலாம். உங்கள் அமெரிக்கப் பயண அனுபவங்களும் பயணக் கட்டுரையாய் வலைப்பதிவில் வந்திட வாழ்த்துக்கள்!

  நண்பர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்கள் சொன்ன,

  // தொடர்பதிவு எழுத அழைப்பதில் தவறில்லை. நமக்கு எழுத திடீரென ஒரு சப்ஜெக்ட் கிடைக்கிறது. சுவாரஸ்யமாய் இருந்தது உங்கள் அனுபவங்கள். //

  என்ற கருத்தினை நானும் வழிமொழிகின்றேன்.

  ReplyDelete
 9. இத்தனை விவரமாகத் திட்டமிட்டுப் பயணம் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள். உங்கள் அமெரிக்கப் பயணமும் உங்கள் இஷ்டப்படி பூர்த்தி ஆக வேண்டும்.

  ReplyDelete

 10. @ கீதா சாம்பசிவம்
  நிறைவேற வாழ்த்துவதற்கு நன்றிகள் மேம்

  ReplyDelete

 11. @ டாக்டர் கந்தசாமி
  தடாவை மீறும் துணிவில்லை எனக்கு. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 12. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உமேஷ்

  ReplyDelete

 13. @ கில்லர்ஜி
  வாருங்கள் ஜி வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete

 14. @ கரந்தை ஜெயக்குமார்
  அதுமாதிரி க்ஷணநேர முடிவல்ல அமெரிக்கப் பயணம் என்று நினைக்கிறென்

  ReplyDelete

 15. @ புலவர் இராமாநுசம்
  இது சரியாய்த் தெரிகிறது. இதில் அவளுக்கல்லவா தயக்கம் ? வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 16. @ ஸ்ரீராம் வாழ்த்துக்கு நன்றி அது சரிதான் எழுத ஒரு சப்ஜெக்ட் கிடைத்தது

  ReplyDelete

 17. @ திண்டுக்கல் தனபாலன்
  நானும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி டிடி

  ReplyDelete

 18. @ தி தமிழ் இளங்கோ
  துணிச்சல் எனக்கல்ல என் மீது நம்பிக்கை வைத்து அனுப்பிய என் தந்தைக்குத்தான் கனவுப் பயணம் நிறைவேறினால் நிச்சயம் எழுதுவேன் ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 19. ! வல்லிசிம்ஹன்
  திட்டமிட்டுச் செய் திட்டமிட்டதைச் செய் என்று அறிவுறுத்தும் நான் திட்டமிட்டதில் ஆச்சரியமில்லை. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்

  ReplyDelete
 20. சிறு வயதில் பயணத்தின் போது தூங்கப் பழகியது இன்றைக்கும் தொடர்கிறது. (உதவுகிறது?)

  அமெரிக்கப் பயணம் குடும்பத்தோடு நடைபெறட்டும்.

  ReplyDelete

 21. நீண்ட நேரம் வானூர்தியில் அமர்ந்து செல்லவேண்டும் என்பதால் தங்கள் துணைவியார் தாங்கள் அமெரிக்கா செல்வதற்கு ‘தடை’ விதித்திருக்கலாம். நேரம் கிடைப்பின் சிங்கப்பூர் சென்று வாருங்களேன். பயண நேரமும் குறைவு. ஒரு தூய்மையான ஊரை பார்த்த மன நிறைவும் கிட்டும்.

  ReplyDelete

 22. @ அப்பாதுரை
  அத்தி பூத்தாற்போல் இருக்கிறது உமது வருகை மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்டம் அண்மையில் மறைந்த என் சகலையை நினைவூட்டியது. பல இடங்களுக்கு என்னோடு பயணித்திருக்கிறார் பேரூந்திலோ காரிலோ உட்கார்ந்ததும் தூங்கிவிடுவார் பயணத்தின் இனிமைகளை ரசிக்காமல் இருக்கிறாரே என்று வருத்தப்படுவேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ வே நடனசபாபதி
  அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் நீண்ட பயணம் என்றால் சில இன்னல்களைத் தவிர்க்க முடியாதே. அமெரிக்கா போக வேண்டும் என்பதே ஆசை மற்றபடி அயல் நாடு அல்ல. நான் துபாய் ஜப்பான் போன்ற இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 24. //எழுதுவது என்பது அவரவராகவே செய்ய வேண்டியது ... நான் யாரிடமும் எழுதச் சொல்ல மாட்டேன் //

  இதான் ஜிஎம்பீ, ஐயா!.. 'எழுதச் சொல்லி கேட்கமாட்டேன்' என்றிருந்தால், முன் சொன்னதற்கு பின்வரும் வரியாக இன்னும் அர்த்தபூர்வமாக இருந்திருக்கும்!

  ReplyDelete

 25. @ஜீவி
  எத்தனை நுணுக்கமாகப் பார்க்கிறீர்கள் நீங்கள் நினைத்தபடி இன்னும் அர்த்த பூர்வமாக எழுதி இருக்கலாம் இருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாய்ப் புரிந்து கொள்ளப்பட்டது மகிழ்ச்சி வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 26. பயணம் நம்மை புதுப்பிக்கும் ஒரு மகத்துவம்.
  உங்கள் பதில்கள் கச்சிதமானவை. அமெரிக்கப் பயணம் விரைவில் அமைய வாழ்த்துக்கள்.
  உங்கள் மனைவியைப் பயணத்திற்காக ஊக்குவியுங்கள் .
  நீங்கள் எழுதிய பிற பயணப் பதிவுகளையும் கண்டு வந்தேன்.
  அலைச்சல்களால் கருத்திட இயலவில்லை.
  பயணங்களின் போது நான் ரசித்து சாப்பிடுவதாய் என் மனைவி சொல்வாள்.
  ஒருவேளை கண்ணுறும் காட்சிகளை விழுங்கியபடி இருந்திருப்பேனோ??

  ReplyDelete

 27. @ மோகன் ஜி
  லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வருகிறீர்கள் நன்றி . சிலர் நம் பதிவுகளுக்கு வந்த அடையாளங்களை விட்டுச் சென்றால் மகிழ்ச்சியாய் இருக்கும் அத்தகையோரில் நீரும் ஒருவர்.

  ReplyDelete
 28. சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

  மாலி

  ReplyDelete

 29. @ வி மாலி
  ஐயா நீங்கள் என் மீது கொண்டிருக்கும் கருத்துக்கு/ நம்பிக்கைக்கு நன்றி கூடிய விரைவில் கேட்டுக் கொண்டபடி எழுதுவேன் நன்றி

  ReplyDelete
 30. மிக மிக அழகான தெளிவான பதில்கள் சார். உங்கள் ஆர்வமும், மகிழ்வும் வெளிப்படுத்திய பதில்கள். கூடியவிரைவில் தங்களது அமெரிக்கப்பயணம் நிறைவேற வாழ்த்துகள்.

  கீதா: இந்த வயதிலும் இன்னும் பயணம் மேற்கொள்ள தாங்கள் விழைவதற்கு ஹேட்ஸ் ஆஃப் சார். மேற்கத்தியர்க்ளின் சிந்தனை. எனக்கும் இந்த எண்ணம் உண்டு. பயணம் என்பது மிகவும் விரும்பும் ஒன்று. அருமையான பதிவு சார்.

  ReplyDelete
 31. இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது தங்கள் .கருத்துக்களை அறிய ..ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

  மாலி

  ReplyDelete

 32. @ துளசிதரன் தில்லையகத்து
  பயணங்கள் நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும்கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி இருந்தேன் அவ்வளவே வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete

 33. @ வி மாலி.
  உங்கள் எதிர்பார்ப்பு என்னை பயமுறுத்துகிறது என்னுள் அடிக்கடி எழும் சிந்தனைகளையே பதிவாக்க எண்ணி இருக்கிறேன் அது சொதப்பலாக இருக்கக் கூடாது ஓரிரு நாட்களில் இப்பதிவு எழுதுவேன் 27-ம் தேதியும் 28-ம் தேதியும் நான் பயிற்சி எடுத்திருந்தபள்ளி மாணவர்களின் சந்திப்பு/ நேரம் குறைவு என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சார்

  ReplyDelete

 34. ":என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் சார்" --என் நம்பிக்கை வீண் போகவில்லை ..நன்றி ஐயா ..
  மாலி

  ReplyDelete

 35. @ வி மாலி
  ஏதோ எழுதி இருந்தேன் எழுதுவேன் என்னும் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதில் ,மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
 36. எனக்கும் கார் பயணத்தில் படிப்பது விருப்பமில்லை. வேடிக்கை பார்க்கணும். கூடவே சிலபல காட்சிகளை க்ளிக்கணும்.

  ReplyDelete