வலைப் பதிவர் மைய அமைப்பு சில கருத்துப் பகிர்வுகள் --------------------------------------------------------------------------------------
வலைப்
பதிவர்களுக்கான ஒரு மைய அமைப்பு தேவை என்று புலவர் ஐயா கூறிவருவதை ரமணி சார் அவர்
பதிவில் குறிப்பிட்டிருந்தார் மூன்று நான்கு பதிவர் சந்திப்புகள் நடந்து முடிந்தபின்னும் அடுத்த சந்திப்புக்கான
நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்தத்
தேக்க நிலை ஒரு மையஅமைப்பு இருந்தால் இருந்திருக்காது எந்த பதிவர் சந்திப்பும்
தானாக நடப்பதில்லை. சிலர் முன் நின்று முயற்சி செய்ததனாலேயே நிகழ்ந்தது இம்மாதிரி
பதிவர் சந்திப்புகளை நடத்த நிறையவே உழைக்க வேண்டும் நடத்த தேவையான பணமும் வேண்டும்
சந்திப்பு நடத்த யாரிடமும் கையேந்தும் நிலை வரக் கூடாது எதையும் துல்லியமாக
திட்டமிடவேண்டும் ஒருவர் முன் நின்று
நடத்த முன் வரும்போது எல்லாப் புகழும் அல்லது எல்லா வசவுகளும் அவருக்கே சேரும் என்று அப்படித் தனிப்பட்ட முறையிலிருப்பது சரியல்ல
எதையும்
கொண்டு நடத்திச் செல்ல ஒரு அமைப்பு இருந்தால.சில பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் .
ஆனால் பதிவுலகில் யாரும் யாருடைய ஆலோசனைகளையும் கேட்க விரும்புவதில்லை. பதிவர் சந்திப்பு நடக்கிறதா முடிந்தால் சென்றோமா
வந்தோமா என்கிற நிலையில்தான் பலரும்
இருக்கிறார்கள் நடந்து முடிந்த பதிவர் சந்திப்புகளின் அனுபவங்கள் இதை இன்னும் நல்ல
முறையில் எப்படி எடுத்துச் செல்வது
என்பதற்கு அடி கோலவேண்டும் நடந்து
முடிந்த சந்திப்புகளில் அபிப்பிராய பேதம் இல்லை என்று கூற முடியாது
இம்மாதிரியான
நிலையில் எண்ணங்களைப் பகிரவும் யோசிக்க வேண்டி இருக்கிறது இன்னும் சிறப்பாகச்
செய்திருக்கலாமே என்று கூறினால் :” வா நீயே வந்து நடத்திக் காட்டு” என்பது போல்
பேசப்படுகிறது ஆகவே ஒரு மைய அமைப்பின் முக்கியத்துவம் தெரிய வருகிறது
” பதிவுலகை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்ல இனிச் செய்ய வேண்டுவது
என்ன என்று ஒரு அமர்வு உட்கார்ந்து கருத்துப் பகிர்வுகள் நடந்தால் அது ஒரு ஆக்கப்
பூர்வமான முயற்சியாக அமையும் என்பது திண்ணம்”
என்ன எங்கேயோ படித்ததுபோல்
இருக்கிறதா? கூடவே இதுவும் நினைவுக்கு வந்தால்
// ஓர் // // அமர்வு // // உடகார்ந்து // // கருத்துப் பகிர்தல்கள் //
1) //ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...
2) // அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?
3) // உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...
4) // கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...
1) //ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...
2) // அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?
3) // உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...
4) // கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...
கருத்துப் பகிர ஏன் பலரும் தயங்குகிறார்கள் என்பதும் விளங்கும்
வலை
உலகில் புகழ்ந்து பேசுவதே நட்பை வளர்க்கும் என்பது போல் ஒரு கருத்து இருக்கிறது
தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டுவதும் நட்பை பாதிக்கக் கூடாது என்பதே என்
கருத்து. வலையுலகை பொறுத்தவரை நட்பு என்பதை விட அறிமுகங்கள் என்பதே சரியாய் இருக்கிறது
என்பது என் கருத்து. பதிவுலகில் பலரும்
தொட்டாவாடிகளாக இருக்கிறார்களோ என்னும் சந்தேகம் எனக்குண்டு. இருந்தாலும் என் கருத்துக்களைப் பகிர நான்
தயங்குவது இல்லைஆனால் அது நான் எண்ணிய விதத்தில் போய்ச் சேருகிறதா என்பதும் பெரிய கேள்விக்குறிதான்
இப்போது
மையக் கருத்துக்கு வருவோம் . வலை உலகுக்கு
தமிழ் வலை உலகுக்கு ஒரு மைய
அமைப்பு தேவை அதில் ஒரு தலைவர் ஒரு உபதலைவர்
ஒரு காரியதரிசி ஒரு உப காரியதரிசி ஒரு பொருளாளர் என்று சிலர் இருப்பது
அவசியம் பதிவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் இருந்து இந்த மையம்செயல்
பட்டால் பல அனுகூலங்கள் உண்டு பதிவர்கள் இந்த மைய அமைப்பில் உறுப்பினர் ஆகலாம்
ஒவ்வொரு பதிவரும் ஒரு கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்இது மைய அமைப்பின்
கார்பஸ் நிதியைத் துவக்க உதவும் எந்த அமைப்பும் பணம் இல்லாமல் செயல்பட முடியாது
இதல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சாப்டர்
இயங்கலாம் பதிவர் சந்திப்பு என்று வரும்போது எந்த மாவட்டத்தில் அது நடந்தாலும்
பதிவர்கள் கலந்து கொள்ள உரிமை உண்டு அப்படிப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும்
வலைப்பதிவர்கள் கலந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னாலேயே செலுத்த வேண்டும் இப்படி செலுத்த வேண்டிய தொகை என்ன என்பதை மையக் குழுவும் மாவட்டக் குழுவும் செலவாகப்
போகும் கணிப்புக்கு ஏற்ப தீர்மானிக்கலாம்
பதிவர் மாநாட்டில் செலவு போக மீதம் பணம்
இருந்தால் அது மையக் குழுவின் கார்ப்பஸ் ஃபண்டில் சேர்த்து விட வேண்டும் வசூலிக்கப்படும்
தொகையிலிருந்தே செலவுகள் ஏற்கப்பட வேண்டும் இந்தமாதிரியான வரவு செலவுகள் சரியாகத் தணிக்கை செய்யப்படவேண்டும்
இந்த
எண்ணங்களை வெகுவாக சர்க்குலேட் செய்து
பதிவர்களின் அபிப்பிராயங்களைக் கோரலாம்
நான்
முன்பே சொன்னது போல் கருத்துச் சொன்னவர்களை கூட்டி ஒரு அமர்வு நடத்தி
முடிவெடுக்கலாம்அல்லது எழுதிக் கேட்டுப் பின் முடிவெடுக்கலாம் எந்த முடிவானாலும் அவை
செயல் படுத்தப்படும் முன்பு பதிவர்களின் ஒப்புதலைக் கேட்கலாம் இப்படியான அமர்வு
மாவட்டப்பதிவர்கள் பலரையும் கொண்டிருக்கவேண்டும்
முக்கியமாக இதுவரை சந்திப்பு நடத்தியவர்களின் பங்கெடுப்பு அவசியம் இருக்கவேண்டும்
புதுகை
சந்திப்பில் பணம் நிறையவே வீணாகி
நடத்தியவர்கள் கையைக்கடித்தது
என்று அறிகிறேன் யாரும் பதிவர்
சந்திப்பை நடத்தி நஷ்டப்படக் கூடாது ஏறத் தாழ முன்னூறு பதிவர்கள் வருவதாக வாக்களித்து நூற்றுக்கும் குறைவாகவே வந்தால் விரயம்
ஏற்படத்தானே செய்யும் வருபவர்கள் ஒரு தொகை செலுத்தி பெயர்களைப் பதிவு செய்து
கொண்டால் அவர்களுக்கு ஒரு கமிட்மென்ட்
இருக்கும்
பதிவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே எதையும் செய்ய ஒரு கன்சென்சஸ் தேவை அல்லவா
பதிவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே எதையும் செய்ய ஒரு கன்சென்சஸ் தேவை அல்லவா
( இது என்னுடைய எழுநூறாவது பதிவு உருப்படியாக
இருக்கிறது என்று நம்புகிறேன் )
/
இது குறித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியவில்லை! பொதுவாக வெளியூரில் பதிவர் மாநாடு நடந்தால் எல்லோராலும் கலந்துக்க முடியுமா என்பதும் சந்தேகமே! :)
பதிலளிநீக்குபுதுகை பதிவர் மகாநாட்டில் பதிவர்களைத் தவிர பிற விஷயங்களும் இருந்ததால் பொருள் செலவு நிறைய ஆகிவிட்டது. குறிப்பாக எஸ்ரா என்பவருக்கும் பதிவுலகத்திற்கும் என்ன சம்பந்தம்? அவருக்கு எதற்காக அவ்வளவு செலவு?
பதிலளிநீக்குஅய்யா வணக்கம். இந்த முன்மொழிவை நான் வரவேற்கிறேன். மூத்த பதிவர்கள் ஒப்புதல் தந்தால், அமைப்பு ரீதியாகப் பேசும் மூத்த (மற்றும் இளைய) பதிவர் கலந்தாய்வுக் கூட்டத்தைப் புதுக்கோட்டையில் நடத்துவது பற்றி புதுக்கோட்டை நண்பர்களுடன் கலந்துபேசி ஒப்புதல் பெறுவேன். நீங்கள் எழுதியிருக்கும் இப்பதிவில் ”புதுகை சந்திப்பில் பணம் நிறையவே வீணாகி நடத்தியவர்கள் கையைக்கடித்தது என்று அறிகிறேன்” என்ற குறிப்பு தவறு! செலவு போக சுமார் ரூ.5000 இருக்கிறது என்பதே உண்மை.
பதிலளிநீக்குபதிவுலக பீஷ்மர் அய்யா ஜிஎம்பி அவர்களின் 700ஆவது பதிவுக்கும், விரைவில் “ஆயிரம் பதிவுகண்ட அபூர்வ சிகாமணி” விருது பெறவும் எனது வாழ்த்தும் வணக்கமும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ நா முத்து நிலவன்
உடன் வருகைக்கு நன்றி ஐயாஎன் பதிவு முன்பு புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு என்னும் பதிவுகளில் படித்ததின் நினைவே ஆகும் சந்திப்பு நடந்தது 11-10-2015-ல் ஆக அதற்குப் பின் வந்த நன்கொடைகள் பலவும் புதுக் கோட்டை வலை நண்பர்களால் கொடுக்கப் பட்டவை செலவை ஈடு செய்யவே என்று எண்ணினேன் மேலும் வரவு செலவுக்கணக்கில் கையில் இருக்கும் பணம் இரண்டாயிரத்துக்கும் சொச்சமே என்று காட்டப் பட்டிருக்கிறதுமேலும் முன்னூறு பேர்களை எதிர்பார்த்து வந்தவர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் நிறையவே விரயம் ஆகி இருக்கும் என்றும் எண்ணினேன் அது தவறு உபரியாகவே நிதி என்றால் மகிழ்ச்சியே
என்னை இப்பதிவு எழுதத் தூண்டியதே திரு ரமணி அவர்களின் பதிவுதான் பதிவுலகில் என்னிலும் மூத்தவர்கள் திறம்பட இயங்குகிறார்கன் என்னைவிட அதிகஎண்ணிக்கையில் பதிவெழுதியவர்களும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா
ஐயா G.M.B அவர்கள், நல்ல யோசனயை முன் வைத்துள்ளார்... முதலில் அனைத்து தமிழ் பதிவர்களையும் ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில்....ஒரு பதிவு செய்த அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும். எளிய உறுப்பினர் கட்டணத்தோடு, பல்வேறு காரணங்களால், நீண்ட தூர பயணம் செய்து பதிவர் கூட்டத்திற்கு வரமுடியாதவர்களும், உறுப்பினர்கள் அவரவர் வசிக்கும் இடங்களில் ஒரு சிறு குழுக்களாக ஒன்றிணைந்து செயல்படவும் வாய்ப்புக்களை ஏற்ப்படுத்தி..... சர்வதேச அளவில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தும்வகையில் 2 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை என்கிற சர்வதேச விழாவாக கொண்டாடினால் பயனுள்ள மாபெரும் பதிவர் சபையாக உருவாக வாய்ப்புள்ளது. ஏராளமான எழுத்தார்வம் கொண்ட இளம் தமிழ்த் தலைமுறையினரின், தமிழ் மொழி ஆர்வத்தை வளப்படுத்தும் வழிகாட்டியாக இந்த அமைப்பு இருக்கவேண்டும் என்பதுதான்.... அனைவரது எண்ணங்களாக இருக்கும் ..... அன்புடன் ரேடியோ கோகி.... புது தில்லியிலிருந்து.
பதிலளிநீக்கு700 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குமற்றபடி இதற்குக் கருத்துச் சொல்லும் அளவிற்கு எங்களுக்கு அறிவோ, அனுபவமோ இருப்பதாகத் தெரியவில்லை சார். பெரியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் நீங்கள், முத்துநிலவன் அவர்கள் போன்றோர் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்..
வணக்கம் ஐயா தெளிந்த நீரோடை போல் அழகாக விளக்கிய விதம் நன்று
பதிலளிநீக்குஎந்த ஒரு அமைப்புமே பணமில்லாமல் இயங்குவது நடவாத செயலே
அந்தப்பணம் பதிவர்களிடமிருந்தே பெறப்படல் வேண்டும் வேறு வழியில்லையே அதே நேரம் பல அமைப்புகள் பணத்தாலேயே பிரச்சினைகள் வளர்கிறது ஆகவே பொது நலத்துடன் இயங்கும் மூத்த பதிவர்கள் இதற்கு முன் வர வேண்டும்
நான் யூ.ஏ.ஈ-யில் சங்கம் அமைத்து அதன் பொருளாளராக செயல்படுகிறேன் இதை முன்னின்று எனது நேரத்தையும், சொந்த பணத்தையும் செலவு செய்து உருவாக்கியதால் என்னை பெருமையும் படுத்தியது, மறுபுறம் சிலரால் சிறுமையும் படுத்தியது ஆகவே எல்லாவற்றையும் பொறுமையாக கடந்து செல்லும் பதிவர்கள் தலைமை பொருப்புகளை ஏற்க முன் வரவேண்டும் அமையப்போகும் அமைப்புக்கு எமது வாழ்த்துகளும், ஒத்துழைப்பும் இன்றே தயார்
பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
தங்களின் 700 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா
யோசனைகள் செயல் வடிவம் பெற காலம் பிடிக்கும். முதலில் யோசனைகள் வர வேண்டும். புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பில் ஒரு கையேடு அச்சடிக்க பதிவர் விவரம் கேட்ட போதே பல பதிவர்கள் விவரம் அனுப்பவில்லை. குறைந்த பட்சமாக இவ்வளவு பதிவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று அறியவாவது உதவியாயிருந்திருக்கும், நண்பர்கள் அந்தப் புத்தகத்து முழு ஆதரவு அளித்திருந்தால்! இப்போதும் கூட அந்தப் புத்தகத்தின் விவரங்களை உபயோகப் படுத்திக் கொண்டு முஹர்கட்ட வேலைகளைத் தொடங்கலாம்.
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குதாங்கள் கூறிய கருத்துக்கள் யாவும் உண்மை. நடப்பில் வந்தால் நல்லது தான். ஆனால் internet என்ற வலை உருவானதே ஒரு மைய அமைப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே. அதனால் தான் தனி சட்ட திட்டங்கள் இல்லாமல் internet இயங்குகிறது.
இந்த வலைக்குள் ஒரு தமிழ் வலையாக தமிழ்ப் பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பதிவு எழுத வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். மற்றபடி ஒரு கட்சி போன்றோ அல்லது ஒரு கம்பெனி போன்றோ நிலையான கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் இல்லாதவர்கள். நிலையான கொள்கையோ இலக்கோ இல்லாதவர்கள். பல வகையிலும் வேறு பட்டவர்கள்.
இப்படிப்பட்டவர்களை ஒன்று சேர்த்து ஒரு மையம் உண்டாகுவது, சட்டங்கள் கோட்பாடுகள் உருவாக்குவது என்பன போன்றவை செய்ய registration அவசியம். கணக்கு பராமரித்தல் போன்ற சில்லறை அனாவசியங்களும் உண்டாகும்.
பதிவர் சந்திப்பு உள்ளூர் கோவில் திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை மற்ற பதிவர்களைக் கண்டு உரையாடி மகிழ ஒரு சந்தர்ப்பம். அவ்வளவே. கண்டிப்பான சட்டங்கள் இல்லாமல் ஒரு குடும்ப விழா போன்று நடத்தப்படுகிறது. ஆகையால் நிலவில் உள்ள வழக்கம் மட்டுமே நிற்கும். மையம் என்ற கூண்டுக்குள் அடைத்தால் பதிவர்களிடையே பிளவு ஏற்படும் என்பது எனது கருத்து.
நான் பதிவர் இல்லை. ஆனாலும் வலை சம்பந்தப் பட்டதால் பின்னூட்டம் இடுகிறேன்.
--
Jayakumar
ஜேகே ஸாரின் கருத்துதான் என் கருத்தாகவும் இருந்தது. மறுபடியும் இருக்கிறது. உடன்படுகிறேன்.
பதிலளிநீக்குJK Anna is right! :)
பதிலளிநீக்குஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா! எழுநூறாவது பதிவுக்கு என் பணிவன்பான நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குமிக அருமையான ஒரு கருத்துருவை முன்வைத்திருக்கிறீர்கள். இதே எண்ணத்தை நானும் வெகு நாட்களாக மனதில் ஊறப் போட்டு வைத்திருக்கிறேன் என இப்பொழுது சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை!
'புதுகை வலைப்பதிவர் திருவிழா'வில் நடத்தப்பெற்ற கட்டுரைப் போட்டிக்கு நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். கணித்தமிழ் என்கிற பெயரில் கணினிக்கான தமிழ்த் தொழில்நுடபங்களை நாம் ஓரளவுக்கு நன்றாகவே வளர்த்தெடுத்து விட்ட நிலையில், இனி இணையத்தமிழை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் முயலும் விதமாகத் தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் இடம் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், அதற்காகப் 'புதுகை வலைப்பதிவர் திருவிழா'விலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி இருந்தேன். அந்தக் கட்டுரையை எழுதும்பொழுது வெகு நாட்களாக நான் நினைத்திருந்த மேற்படி கோரிக்கையையும் சொல்லலாமா என்று மிகவும் சிந்தித்துப் பார்த்தேன். அதாவது, எப்பொழுதாவது ஒருமுறை நடைபெறும் ஒரு விழாவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை விட அரசுப் பதிவு பெற்ற ஓர் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானத்துக்கு வலிமை பன்மடங்கு கூடுதல். மேலும், இப்படிப்பட்ட விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெறவும் இப்படி ஓர் அமைப்புத் தேவை. எனவே, தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒரே குடைக்கீழ்க் கொண்டு வரும் முகமாகத் 'தமிழ் வலைப்பதிவர் சங்கம்' என ஒன்று தொடங்கினால் என்ன என்றும், அதற்கான முதல் விதையை அந்தப் புதுகை விழாவிலேயே ஊன்றச் செய்ய வேண்டுகோள் ஒன்றைச் சேர்த்து விடுத்தால் என்ன என்றும் அந்தக் கட்டுரையை எழுதும்பொழுது தோன்றியது. ஆனால், சங்கம் என்று வந்தாலே சிக்கல்தான். நீங்கள் கூறுவது போலவே, பணம் இல்லாமல் சங்கம் என ஒன்றை நடத்த முடியாது. அப்படிப் பணம் உள்ளே வந்தாலே அதன் தலைவர், பொருளாளர், பொதுச் செயலாளர் போன்ற பதவிகளுக்குப் போட்டி வரும். போட்டி வந்தால் கூடவே அதன் தம்பியான பொறாமையும் வரும். எழுத்து - தமிழ் - சமூகம் எனப் பணத்துக்குத் தொடர்பில்லாத விதயங்களை முன்னிறுத்தியே எல்லோரும் இயங்கி வலைப்பதிவர் உலகம் பின்னர் 'நடிகர் சங்கம்' போல் ஆகி விடும் என்றெல்லாம் கூடவே தோன்றியது. தவிர, இவற்றையெல்லாம் தவிர்க்கும் விதமாக ஆலோசனைகளை முன்வைத்துச் சங்கம் தொடங்கச் சொல்லலாம் என்றால் கூட அத்தகைய ஆலோசனைகள் சாத்தியமானவை என எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற தயக்கமும் இருந்தது. ஆகவேதான், கடைசியில் அப்படி ஒரு விதயத்தையே தொடாமல், அரசு நிறுவனமான 'தமிழ் இணையக் கல்விக்கழக'மும் இணைந்து இவ்விழாவை நடத்துவதாலேயே அவர்கள் முன்னிலையில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலே அதற்குப் போதுமான வலிமை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துக் கட்டுரையை முடித்திருந்தேன்.
மேற்படி பிரச்சினைகளெல்லாம் வராத அளவுக்குக் கூடக் கட்டுக்கோப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சங்கம் அமைக்கலாம். ஆனால், மேலே திரு.ஜே.கே அவர்கள் கூறியிருந்தது போல வலைப்பதிவர் உலகுக்கென இருக்கும் தனித்தன்மை, சார்பிலாத்தன்மை ஆகியவை எப்படியும் பறி போய்விடுமே எனத் தோன்றுகிறது. வேண்டுமானால் ஒருமுறை நடத்திப் பார்ப்போம். பிரச்சினை ஏதும் வந்தால் பிடிக்காதவர்கள் சங்கத்திலிருந்து விலகி விடுவோம். எல்லோரும் விலகி விட்டால் சங்கமும் தானாகவே காணாமல் போய்விடும். எல்லோரும் தொடர்ந்து இருந்தால், சங்கமும் தொடர்ந்து நீடிக்கும்.
எதற்காக இப்படிச் சொல்கிறேன் எனக் கேட்டால், முன்பே சொன்னது போல் அரசுப் பதிவு பெற்ற ஓர் அமைப்புக்கு எனச் சில அதிகாரங்கள் உண்டு. அவை நமக்குக் கிடைத்தால் இணையத்தமிழை நாம் நினைத்துப் பாராத அளவிலான இன்னோர் உயரத்துக்கு எடுத்துச் செல்லலாம்.
அருமையான யோசனைகளை முன்வைத்துள்ளீர்கள். எடுத்துச்செல்வதில்தான் சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன். தொட்டாவாடிகளாக என்ற சொல்லை அதிகம் ரசித்தேன், பொருள் புரியாவிட்டாலும்கூட.
பதிலளிநீக்குநல்லாத்தானே கீறோம் ?
பதிலளிநீக்குயாருனாச்சும் கண்ணு போட்டுட்டாகளா !!
சீக்கிரம் சுத்தி போடுங்கப்பா !!
சுப்பு தாத்தா.
தங்களின் வெற்றிகரமான 700 ஆவது பதிவுக்கு முதலில் என் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குMr. JK Sir அவர்களின் கருத்துக்களில் பலவும் மிகவும் நியாயமாகத் தோன்றுகிறது.
கவிஞர் முத்துநிலவன் ஐயா போல்
பதிலளிநீக்குஊருக்கு ஒருவர் வேண்டும் ஐயா
அப்பொழுதுதான்,இவ்வெண்ணம் சாத்தியமாகும்
என எண்ணுகின்றேன்.
மேலும் பதிவர் சந்திப்பு என்பது,
பதிவர்களிடம் கட்டணம் வசூலித்தே நடத்துதல் நலம் பயக்கும்என
எண்ணுகின்றேன்.
கவிஞர் ஐயாவிடம் ஆள் பலம்இருந்தது,மக்கள் தொடர்பு இருந்தது
அதனால் அவரால் பெரும் தொகை வசூலிக்கவும்,சாதிக்கவும் முடிந்தது
அனைத்து மாவட்டப் பதிவர்களாளும் இது இயலாத காரியம்
எனவே பதிவர்களின் பங்களிப்பை வைத்தே சந்திப்புகளை நடத்தலாம்,
அமைப்பு பற்றி ஒரு முறை அல்ல பல முறை ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டி
முடிவெடுக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
நினைவுக்கு நன்றாகவே வருகிறது ஐயா - உங்களுக்கு...
பதிலளிநீக்குநன்றி...
வாழ்த்துகள் 700...
சொல்லுதல்... வேண்டாம் உங்களுக்கு குறள் பிடிக்காதென்பதால்... இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்...
பதில் சொல்லும் நிலையில் அடியேன் இல்லை... தகவல் சொன்ன நண்பருக்கு நன்றி...
பதிவர் அமைப்பு தேவை. சில நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்தனர். இதில்
பதிலளிநீக்குபதிவர்கள் சங்கம் /மன்றம் அமைப்பது அவசியம். என்னால் முடிந்த அளவு உதவ முடியும். ஆயுள் சந்தா கூட வாங்கலாம்.
பதிவர் அமைப்பு தேவை. சில நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்தனர். இதில்
பதிலளிநீக்குபதிவர்கள் சங்கம் /மன்றம் அமைப்பது அவசியம். என்னால் முடிந்த அளவு உதவ முடியும். ஆயுள் சந்தா கூட வாங்கலாம்.
எழு நூறாவது பதிவிற்கு என்
பதிலளிநீக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் பதிவின் மூலம் அதிகம் பேருக்கு
மைய அமைப்புக் குறித்துச் சென்றதும்
அனைவரது ஒட்டிய வெட்டிய கருத்துக்கள்
பதிவானதும் மகிழ்வளிக்கிறது
குறிப்பிட்ட எதிர்பார்க்கிற சிலரிடம் இருந்து
இது குறித்த பதிவுகள் வராததும்
திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்டமும்
ஏமாற்றமளிக்கிறது
அய்யா G.M.B. அவர்களுக்கு வணக்கம். தங்களது 700 ஆவது பதிவினுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவலைப்பதிவர் மைய அமைப்பு குறித்தான தங்களது பார்வையை வெளிப்படையாகவே சொல்லி ஆலோசனை தந்தமைக்கு நன்றி. உங்களது கருத்து சந்தா தொகை, உறுப்பினர்கள், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், நன்கொடை வசூல் என்று, ஒரு தொழிற்சங்க அமைப்பை போன்று செயல்பட வைக்கும் யோசனையாகவே தோன்றுகிறது. எனவே தொழிற்சங்கத்தில் வரும் பிரச்சினைகள் யாவும் இந்த மைய அமைப்புக்கு (குறிப்பாக பண வசூல் விவகாரத்தில்) வரும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே தாங்கள் சொல்லியது போல ” கருத்துச் சொன்னவர்களை கூட்டி ஒரு அமர்வு நடத்தி முடிவெடுக்கலாம் அல்லது எழுதிக் கேட்டுப் பின் முடிவெடுக்கலாம் ”.
யார் இதனை எடுத்து நடத்துவது என்பதில்தான் தற்போதைய முடிச்சு உள்ளது. பார்ப்போம்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
எல்லோராலும் கலந்துகொள்ள இயலாது என்பதும் சரியே ஒரு சந்திப்பு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்றாவது கருத்துக் கூறலாமே வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ கோபால் கிருஷ்ணன்
பெரும்பாலும் பதிவர்களை அவர்கள் பதிவின் வாயிலாக அறிகிறோம் அவர்களையே நேரில் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உரையாடி மகிழவுமே இம்மாதிரியான பதிவர் சந்திப்புகள் தேவை இதை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்பதே பதிவின் முக்கிய எண்ணம் எல்லோரும் கருத்துப் பகிர்ந்தால் நன்றாயிருக்கும் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
ஒரு பணியைச் செய்யும்போதுதான் அறிவும் அனுபவமும் வருகிறதுநான் எனேன்னங்களைக் கூறி இருக்கிறேன் அதுவும் ஒரு மைய அமைப்பு என்றால் எப்படி இயங்க ஏண்டும் என்றும் எழுதி இருக்கிறேன் இந்தப்பதிவு பலருடைய கருத்துக்களையும் கண்டறியும் முனைப்புதான் யார் பூனைக்கு மணி கட்டுவது ?வருகைக்கு நன்றி சார் /மேம்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
மேலே என் எண்ணங்களை என்று வாசிக்கவும் தட்டச்சில் தவறு
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
ஒரு மைய அமைப்பு இருந்தால் அடுத்து எங்கே எப்படி சந்திப்புகளை நடத்துவது என்பது பற்றித் தீர்மானிக்க எளிதாகும் சந்திப்புகள் தொடர வேண்டும் என்றால் யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் அணுகி இருத்தல் தவிர்ப்பது நன்றாயிருக்கும் வருகைக்கு நன்றி ஜி
@ ஸ்ரீராம்
பதிலளிநீக்குசெயலின் முதற்கட்ட யோசனை என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன் இந்த யோசனைகளை யார் பரிசீலிப்பது என்பதும் முக்கியம் வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@jk22384
வருகைக்கு நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.இந்த யோசனை பதிவர்களை தொடர்ந்து சந்திக்க வைக்கவே எழுதப்பட்டது சங்கமோ கழகமோகட்சியோ கம்பனியோ போன்று நடத்தும் நோக்கமல்ல யாரையும் எழுதுவதில் எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கும் உரிமை பற்றி எழுதவில்லை.இப்படி ஒரு அமைப்பு அடுத்து எங்கு சந்திப்பு யார் கொண்டு நடத்துவார்கள் என்பதை தீர்மானிக்கமட்டுமே இருக்க வேண்டும் மையக் குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தும் போது விவரமாகக் கூறலாம் நிலுவையில் இருக்கும் வழக்கம் தடை இல்லாமல் தொடரவே ஒரு மைய அமைப்பு தேவை என எழுதினேன் இது குறித்த புலவர் ஐயாவின் விருப்பமும் திரு ரமணி அவர்களின் பதிவுமெ இதை எழுதத் தூண்டியது சில மிகக் குறைந்த கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
ஜேகே சாரின் கருத்துக்கு மறுமொழி எழுதி இருக்கிறேன் தயை கூர்ந்த பார்க்கவும் மீள்வருகைக்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
மீள்வருகை தந்து ஜேகே அண்ணா சரி என்று கூறியதற்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ஞானப்பிரகாசம்
சங்கம் என்றோ கழகம் என்றோ நான் கூறவில்லை. சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்த உதவும் ஒரு மைய அமைப்பு என்பதே சாரம் கருத்துக்கள் சில எண்ணாதவகையில் புரிந்து கொள்ளப்படுவதற்கு இதுவும் சான்று,.பதிவர் சந்திப்புகளை நடத்திச்செல்ல வழிகாட்டியாக இருக்கும் அமைப்பேதேவை. ஆனால் அதற்கு யாரையும் நம்பி இருக்கக் கூடாது பதிவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே மையக் கருத்து வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
சிக்கல்கள் இல்லாமல் கொண்டு செல்வதில்தான் வெற்றி இருக்கிறது தொட்டாற் சிணுங்கி என்றொரு செடி உண்டு அதைத் தொட்டாலே வாடிவிடும் தன்மையுடையது. பதிவுலகில் பலரும் எதிர்க்கருத்து சொன்னால் மனம் வாடுகிறார்கள் என்பதை குறிக்கவே அப்படி எழுதினேன் ரசித்ததற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ சூரி சிவா
எதிலும் நகைச்சுவை காணும் உங்கள் பாணி பிடித்தது நன்றி சார்
பதிலளிநீக்கு@ கோபு சார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் ஜேகே அவர்களின் பின்னூட்டத்ட்க்ஹுக்கு மறு மொழி அளித்துள்ளேன்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
/அமைப்பு பற்றி ஒரு முறை அல்ல பல முறை ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டி
முடிவெடுக்கலாம் என்று எண்ணுகின்றேன்/ அதற்கு முன்னோடியாகக் கருத்துக்கள் பகிரப்பட வேண்டும் அல்லவா பதிவர் சந்திப்புகள் பிரம்மாண்டமாய் இருக்க வேண்டும் என்றில்லை முக்கிய நோக்கமெ சந்திப்பாக இருக்க வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா .
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் எனக்குக் குறள் பிடிக்காதெபதை விட குறள் அதிகம் தெரியாது என்பதே உண்மை
பதிலளிநீக்கு@ சேதுராமன் அநந்த கிறுஷ்ணன்
வருகைக்கு நன்றி ஐயா அமைப்பு வேண்டும் என்னும்போது அது எவ்வாறு இருக்கவேண்டும் எனக் கருத்தும் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்
பதிலளிநீக்கு@ ரமணி
என் பதிவுகளை வாசிப்பவரை விட உங்கள் பதிவுக்கு நிறைய வாசகர்கள் இருப்பார்கள் ஒட்டியும்வெட்டியும் கருத்துக்கள் இருந்தன என்றாலும் எந்த முடிவும் எடுக்க இயலாது பலரும் அவர்கள் கருத்தைச் சொல்ல முன் வருவதில்லை. சந்திப்புகள் தொடர என்ன ஆக்க பூர்வமான கருத்து என்று அறிய முடியவில்லை. உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் திண்டுக்கல் தனபாலனுக்கு முன்பிருந்தே இதில் விருப்பம் இல்லை என்றே எண்ணுகிறேன் என்பதிவு புதுக் கோட்டை via மலைக்கோட்டை ஆறாம் பதிவைப் பாருங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
இந்த அமைப்பு தொழிற்சங்க ரீதியாக இருக்காது யாரும் முதலாளி தொழிலாளி கிடையாதே சந்திப்பு நடத்த பொருள் தேவை அதற்கான சில ஆலோசனைகள்தான் கூறி இருக்கிறேன் பூனைக்கு யார் மணிகட்டுவது பார்ப்போம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
@ ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா!
பதிலளிநீக்குபுரிகிறது ஐயா! அப்படியெனில் எந்தச் சிக்கலும் இல்லை.
1. எந்த அமைப்பிற்கும் ஒரு பெயர் முக்கியம். அந்தப் பெயர் பொத்தாம் போக்கில் இல்லாமல் நம் நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாய் இருந்தால் நல்லது. (உ-ம்) தனிழ் இணையப் பதிவர்கள் கூட்டமைப்பு.
பதிலளிநீக்கு2. அடுத்த கட்டம் இணையப் பதிவர்களை அடையாளம் காண்பது. ஜி+, ஃபேஸ் புக், ட்விட்டர், ப்லாக்குகள் என்று இணையப் பதிவர்கள் சிதறி இருக்கிறார்கள். இணைய என்ற வார்த்தையைக் கொடுத்தால் எல்லோரையும் திரட்டுவதாகவும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இது சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்கிற வேலை.
இது விஷயத்தில் யோசியுங்கள். Blogers மட்டும் என்றால் அதற்கேற்ப அமைப்பின் பெயர்.
3. அமைப்பிற்கும் அதன் உறுப்பினர்களான வலைப்பதிவர்களுக்குமான உறவு என்ன என்பது அடுத்த விஷயம். அமைப்பு என்பது மாதத்திற்கு ஒரு முறையானும் பதிவர்கள் ஓரிடத்தில் (கடற்கரை கூட இருக்கலாம்) கூடி வலைப்பதிவுகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழிவகை செய்வதற்கு (2) பதிவர்கள் தங்கள் ஆக்கங்களைக் கொண்டு நூல் போன்ற வெளியீடுகள் வெளியிட்டிருந்தால் அதை பரவலாக எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி அதன் விற்பனைக்கு உதவுவது (3) மாவட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது போன்ற விஷயங்கள் இப்போதைக்கு. பிறகு இதையெல்லாம் விரிவாக்கிக் கொள்ளலாம்.
4. இந்த அமைப்பு முழுஅலவில் தமிழ் வலையுலகினரை ஒன்றிணைக்கவும் வலையுலக நண்பர்களுக்கிடையான உறவுப் பாலத்தை எளிதாக்கவும் பாடுபடுகிற அளவில் தன்னை மிகவும் குறுக்கிக் கொண்ட அமைப்பாக இருத்தல் நல்லது. மைய அமைப்பு என்பது மாவட்ட அமைப்புகளை சங்கிலியாய் கோர்த்த ஒரு அமைப்பு. மற்றபடி மாவட்ட, மற்றும் பதிவர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பல்ல.
5. பதிவர்கள் சுதந்திரமானவர்கள். அதேப் போல அவர்கள் பதிவுகளும் சுதந்திரமானவை. இணையத்தின் சுதந்திரத்தை இந்த அமைப்பிலும் பிரதிபலிக்க வேண்டும்.
6. பதிவர்களே தங்கள் பதியும் விஷயங்களுக்கு முழு அளவில் பொறுப்பானவர்கள். அமைப்பிற்கும் அவர்கள் பதியும் விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே பதிவர்களின் பதிவுகளுக்கு அமைப்பு பொறுப்பேற்காதவாதும், எந்த நிலையிலும் வேறு சட்ட பிரச்னைகளில் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாததாகவும் இருக்க வேண்டும்.
7. அமைப்பு எல்லா விதங்களிலும் கட்சி அரசியலிருந்து விலகியே இருக்கும். எந்தப் பதிவருக்குமான கட்சி அரசியலுக்கும் அமைப்பிற்கும் அறவஏ சம்பந்தமில்லை என்பதை அமைப்பு வெளிப்பட தெரிவித்து இயங்க வேண்டும். இது மற்ற சிக்கல்களிலிருந்து அமைப்பையும் அமைப்பு உறுப்பினகளையும் விடுவிப்பதாகா இருக்கும். இதில் அமைப்பு மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பதிவர் உறுப்பினர்களும் அமைப்பை அரசியல் சம்பந்தபட்ட தங்கள் சொந்த ஈடுபாடுகளுக்கு பிணைக்காமல் இருக்க வேண்டும்.
8. அமைப்பிற்கான அரசியல் மிகத் தெளிவானது. தமிழ் மொழியின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்ப்பது. வலையுலகின் மேம்பட்ட பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வளர்ச்சிக்கு துணையாக இருப்பது. பதிவர்களுக்கிடையான நல்லுறவுகளைப் பேணிக் காப்பது, பதிவர்களை தமிழ் எழுத்துலகிற்கு அடையாளப்படுத்துவதில் ஆக்கபூர்வமான முயற்சிகளைச் செய்வது.
9கொண்டு தகுந்த நேரம் எடுத்துக் கொண்டு மாவட்ட அமைப்புகள் கூட நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கு பிறகு உருவானால் சிறப்பாக இருக்கும். இதில் அவசரம் கூட்டாது தீர்மானமாக அமைப்பு ரிதியில் செயல்பட இந்த கால அவகாசம் உதவி செய்யும்.
.
பதிலளிநீக்கு@ ஜீவி (contd)
10. நாளடைவில் நமது அமைப்பு சீறும் சிறப்பும் பெருகுகையில் பதிவர்கள் நூல்களையும் வெளியிடலாம். இணையம் மூலம் விற்கலாம். பதிவர்களின் சிறப்புகளுக்கு உறுதுணையாக இருந்து எல்லாவகைகளிலும் பதிவுலகை மேம்படுத்தலாம்.
10. ஆரம்ப அளவில் மாவட்ட அளவில் இந்த உறுதிப்பாடுகளை முன்னிலைப்படுத்தி மாவட்ட குழுக்காக செயல்பட ஆரம்பித்தால், அப்படிச் செயல்படும் மாவட்ட குழுக்களை ஒன்றிணைத்து மைய அமைப்பை ஏற்படுத்தலாம். இப்போதைக்கு சென்னையும் ஒரு மாவட்ட அளவிலேயே செயல்பட வேண்டும். வளர்ந்த நிலையில் இயல்பாகவே மைய அமைப்பு உருவாகும்.
11. வெளிநாட்டில் தமிழ்ப் பதிவர்களை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக்குவது பற்றி ஆக்க பூர்வமான கருத்துக்களை உருவாக்க வேண்டும்.
13. தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழ்ப்பதிவர்களையும் எப்படி ஒன்று சேர்ப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் உருவாக வேண்டும்.
14. கடைசியாக சந்தா விஷ்யம். இப்போதைக்கு எந்த முதலீடும் இல்லாமல் நண்பர்கள் கூடி மாவட்ட அமைபபுகளை உறுவாக்கிய பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
15. மைய அமைப்பு உருவான பிறகு மாவட்டங்களின் சந்தா வசூலிருந்து ஒரு பகுதி (Say 15%) மைய அமைப்பின் செயல்பாட்டிற்கு உதவித் தொகையாக அனுப்பி வைக்கலாம்.
மைய அமைப்பு உருவான பிறகும், சென்னை மாவட்ட அமைப்பு என்பது அதன் உறுப்பினர்களுடன் தனியாகத் தான் செயல்படும்.
16. எல்லா கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து அடிப்படை விஷயங்களில் மிகுந்த கவனம் கொண்டு தகுந்த நேரம் எடுத்துக் கொண்டு மாவட்ட அமைப்புகள் கூட நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கு பிறகு உருவானால் சிறப்பாக இருக்கும். இதில் அவசரம் கூட்டாது தீர்மானமாக அமைப்பு ரிதியில் செயல்பட இந்த கால அவகாசம் உதவி செய்யும்.
மேற்கண்ட கருத்துக்கள் எல்லாம் ஒரு அமைப்பை ஆரம்பித்து வைப்பதற்கான தொடக்க கால என் தரப்பிலான யோசனைகளே தவிர இதில் கொள்ள வேண்டியதைக் கொண்டு தள்ள வேண்டியதைத் தள்ளி எல்லோரும் கலந்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
அனுபவங்கள் தாம் நமக்கு ஆசான். அந்த அனுபவங்களை நல்ல நல்ல சிறப்புகளை நோக்கி நம்மை வழிநடத்தும்.
வலைப்பதிவர்களுக்கான ஒரு அமைப்பு குறித்து யோசனைகளைக் கிளர்த்திய ஜிஎம்பீ ஐயா அவர்களுக்கு நன்றி.
(உங்கள் தளத்தில் பதிவு செய்ய முடியாமையால், வலையுலக மைய அமைப்பு பற்றிய எனது கருத்துக்களை மெயிலில் தங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.. இதை தாங்கள் பதிவில் பதிப்பித்துக் கொள்ளலாம்..)
பதிலளிநீக்கு@ ஜீவியின் கருத்துக்கள் எனக்கு மெயிலில் வந்தது அதை அப்படியே மேலே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்ஜீவிசார் உங்கள் கருத்துக்களை இரண்டு பாகமாகப் பிரித்து எழுதியதால் பதிவிட முடிந்தது. வருகைக்கும் மெயிலுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஞானப் பிரகாசன்
மீள்வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி ஐயா
ஓ.கோ. அப்படியா?.. இரண்டு பகுதிகளாக நான் பிரித்திருந்தால் ஏற்றுக் கொண்டிருக்குமா? வெகு நீளமாகப் பின்னூட்டம் அமைந்து விட்டது. காலை தான் கண் மருத்துவரிடம் போய் வந்தேன். கண்ணாடி மாற்ற வேண்டும். மங்கிய வெளிச்சத்தில் சில எழுத்துப் பிழைகளும் ஏற்பட்டு விட்டன. வாசிப்பவர்கள் தாம் திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஉங்கள் மெயிலுக்கு நான் அனுப்பிய வைத்திருந்ததைப் பிரசுரித்தமைக்கு நன்றி. இந்த வயதிலும் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, ஐயா!
பதிலளிநீக்கு@ ஜீவி
எனக்கு ஆர்வமிருந்து என்ன பிரயோசனம் பலரும் அவர்கள் கருத்தைச் சொல்லவில்லை. பலரும் கருத்தே சொல்ல வில்லை. எதிர்பார்த்த பலரும் வரவே இல்லை. மைய அமைப்பு பற்றி விருப்பம் தெரிவித்த புலவரோ மதுரைப் பதிவர்கள் சீனா ஐயாவோ தமிழ் வாசிப் பிரகாஷோ திரு ரமணி அவர்களோ அவர்கள் கருத்து சொல்லவரவில்லை அல்லது சொல்லவில்லை. பல இடங்களில் முனைப்பாகப் பின்னூட்டமிடும் மதுரைத் தமிழன் வந்தாரா தெரியவில்லை. எனக்கு என்னாயிற்று என்று நானும் சும்ம இருந்திருக்க வேண்டுமோ
நீங்கள் சும்மா இருந்திருந்திருந்தால், நானும் என் கருத்துக்களை பதிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காதில்லையா? அதனால் எந்த முயற்சியும் வியர்த்தமில்லை. எல்லாம் நன்மைக்கே.
பதிலளிநீக்குGMB Sir-வாழ்த்துக்கள் 700-ஆவதற்காக.
பதிலளிநீக்குகொஞ்சம் சூடுபிடிக்கட்டும்- பதிலெழுதுவோம் என நினைத்திருந்தேன். இரண்டு நாட்கள் ஓடிவிட்டன! திருவாளர்கள் ஜேகே, ஜீவி -இவர்களின் inputs நிறைய சொல்கின்றன.
பொதுவாக, `வலைப்பதிவர்களுக்கு என ஒரு மைய அமைப்பு என்றிருந்தால் நன்றாக இருக்குமே` என்கிற சிந்தனை தவிர்க்க இயலாதது. நல்நோக்கம் கொண்டது. ஆனால் எந்த ஒரு கட்டமைப்பும், மாவட்ட அளவிலோ, மையநிலையிலோ அது ஏற்படுத்தப்பட்டபின், கொஞ்சம் அதிகாரத்தையும், பின்விளைவான சில கட்டுப்பாடுகளையும் வழங்கத்தான் செய்யும். தேவையில்லாத அரசியல் தலைக்காட்டக்கூடும். அல்லது நாளடைவில் அப்படி ஆகிவிடலாம். இந்த இருத்தலியல் சிக்கல்களைத் தாண்டி ஒரு அமைப்பு உருவாகி, low profile-ல் சர்ச்சை ஏதுமின்றி, திறமையோடு நடத்தப்பட்டால் நலமே. மாவட்ட அளவிலும், மையநிலையிலும் பொருத்தமானவர்கள், திறமையாளர்கள் கிடைக்கவேண்டுமே!
பதிலளிநீக்கு@ஜீவி
ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ இந்த மைய அமைப்பு விஷயமே புலவரின் ப்ரெயின் சைல்ட் என்று அறிகிறேன் என்னை எழுத வைத்தவர்கள் ஏனோ வாளா இருக்கிறார்கள் பட்டும்படாமலும் எழுதிய பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
என் கருத்துக்களுக்கு உங்கள் கருத்தை நீங்கள் இன்னும் சொல்லவில்லை. சொன்னீர்கள் என்றால் அதன் அடிப்படையில் வருகைகள் நிகழலாம்..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஜீவி
ஒரு அமைப்பு ஏற்பட்டபின் செய்ய வேண்டிய காரியங்களையும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்களையும் பற்றி சிந்திக்க வேண்டும் முதலில் ஆரம்பகட்ட நிகழ்வாக பதிவர்கள் அவர்களதுகருத்துக்களைப் பகிர வேண்டும் இப்படிப்பகிர்ந்தவர்களைஒன்றிணைத்த ஒரு செயல் கூட்டம் நடக்க வேண்டும் அதில் செயல்பாடுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கவேண்டும் இப்போதே என் கருத்தை நான் கூறுவது என்ன பயன் அளிக்கும் என்று தெரியவில்லை. மேலும் பலரும் கருத்து சொல்ல முன்வராத நேரத்தில் நமக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது பலன் அளிக்குமா. ஒரு பதிவீன் ஆயுட்காலம் அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து நாட்களே அதற்குள் வருவதே பெரும்பாலான கருத்து. முதலில் கருத்துபதித்தவர்கள் மீண்டும் வந்து பிறர் என்ன கூறுகிறார்கள் என்று கவனிப்பதில்லை என்றே எண்ணுகிறேன்
முதலில் தங்கலின் 700வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நல்ல யோசனை. முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். என் ஆதரவு உண்டு.
பதிலளிநீக்குமைய அமைப்பு என்று ஒரு சித்திரத்தை உருவாக்குகிறீர்கள். குறைந்தபட்சம் எதற்காக அப்படியான ஒரு அமைப்பு, அந்த அமைப்பின் வேலைகள் என்ன என்று தெரிந்தால் தானே அந்த அமைப்பு அமைவதற்காக செயற்கூட்டத்திற்கு நாம் ஒன்று கூட வேண்டுகிற உத்வேகமும் அவசியமும் ஏற்படும்?...
பதிலளிநீக்குவழ்க்கமாக இப்படியான மைய அமைப்புகளின் பணிகளையும், அதற்கான வரையறைகளையும் விசேஷமான இணைய மைய அமைப்புக்குப் பொருத்தி விவரிக்க முயன்றிருக்கிறேன். இதன் மூலம் இணைய மைய அமைப்பு என்றால் என்ன என்று ஓரளவு தெளிவு பிறக்கலாம். கூடிச் செயல்படுவதற்கும் ஆர்வம் பிறக்கலாம்.
நம்மிருக்குமான கருத்துப் பரிமாற்றம் இல்லை, இது. எதற்காக மைய அமைப்பு அமைவதற்கான செயல்கூட்டத்திற்குக் கூட வேண்டும் என்று முன்னோட்டமாகவேனும் தெரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே இது.
உங்களிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவன் என்பதினாலேயே இதையானும் எழுத முடிந்தது.
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
வாழ்த்துக்கு நன்றி நான் கூறி இருப்பது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்
பதிலளிநீக்கு@ ஜீவி
மூன்று நான்கு வலைப்பதிவர் சந்திப்புகள்நடந்து முடிந்த வேளையில் அடுத்து எங்கு எப்போது என்று அறிய முடியாத ஒரு தேக்கநிலை காண்கிறேன் மேற்கொண்டு நடத்திச் செல்ல ஒரு அமைப்பு இருந்தால் நலமாயிருக்கும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. இல்லாவிட்டால் யாராவது எழுச்சி பெற்று முன் வந்து நடத்த தயாராகும் வரை பதிவர் சந்திப்புகள் நடக்காமல் போகலாம் வருகைக்கும் மனம் திறந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி சார்
வலைப்பதிவர் சந்திப்புக்களை நடத்திச் செல்ல ஒரு மைய அமைப்பு என்று நான் நினைக்கவே இல்லை.
பதிலளிநீக்குநான் நினைத்தது, வேறுவித மேம்பட்ட உயர்வுகளுக்காக வலைப்பதிவுகளை வழிநடத்திச் செல்லவும், வலைப்பதிவர்களின் எழுத்தாள மனோபாவத்திற்கு தோன்றாத் துணையாய் இருக்கக் கூடிய மைய அமைப்பு.
வெகு சாதாரணமான ஒரு அமைப்பை அசாதாரணமான ஒன்று என்று மனசில் வரித்துக் கொண்டு புரிந்து கொண்டது என தவறு தான். நான் சொல்கிற அமைப்பு ஏற்பட்டதென்றால், மேலே பின்னூட்டமிட்டிருக்கிறாரே நம் வலையுலகக் கவிஞர் சிவகுமாரன், அவர் கவிதை நூலகளை அமைப்பின் பொறுப்பில் பிரசுரம் பண்ணி, வெகு சுலபமாக 2000 பிரதிகளுக்கு மேல் சந்தை படுத்தி, கவிஞருக்கு பொற்கிழி வழங்கலாம்.
கற்பனை விலகி தெளிவு பிறந்தது. தங்கள் அன்பான பதிலுக்கு நன்றி, ஐயா!
700-வது பதிவிற்கு வாழ்த்துகள்....
பதிலளிநீக்குசங்கம், மைய அமைப்பு - இது பற்றி எனக்கு ஒரு அபிப்ராயமும் இல்லை என்பது தான் உண்மை. என்னால் இது போன்ற அமைப்புகளில் செயல்பட முடியாது என்பதும் ஒரு காரணம்.
பதிலளிநீக்கு@ ஜீவி
நான் உண்மையிலேயே வெட்கப் படுகிறேன் மிகச் சாதாரண முறையில் மைய அமைப்பைக் கற்பனை செய்திருந்தேன் உங்களைப்போல் தெளிவான சிந்தனை எனக்கிருக்கவில்லை. நான் நினைக்கும் அமைப்பு நிகழுமானால் போகப் போக அதை நீங்கள் கணித்திருக்கும் அளவுக்கு மேம்படுத்த சாத்தியக் கூறுகளும் இருக்கலாம் மீண்டும் வந்து தெளிவு படுத்ட்க்ஹியதற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்களுக்கு நன்றி அமைப்புகளுக்கு தார்மீக ஆதரவு கொடுப்பதும் ஒருவித செயல்பாடே இந்த அபிப்பிராயம் யாரோஒருவருக்கு உதித்து நான் எழுதி விட்டேன் அவ்வளவே
GMB சார்! சற்று தாமதமாகவே இந்தப் பதிவைக் கண்ணுற்றேன்.ஜி.வீ. சாரின் கருத்துக்கள் மிகச் சரி. மைய அமைப்பு பற்றி இன்னமும் விரிவான எண்ணங்கள்தொகுக்கப் பட வேண்டும்.
பதிலளிநீக்குஒரு ஆரோக்கியமான விவாதம் உருவாக்கப்பட வேண்டும்.இங்கு நடைபெறும் விவாதம் உங்கள் வாசகர்கள் சிலரை மட்டுமே அடையும்.. பரவலாக பலரும் அறிய வேண்டுமென்றால், ஒரு திட்ட வரைவை தயாரித்து எல்லாப் பதிவர்களையும் தத்தம் பிளாகில் உள்ளவாறே பதிவிட வேண்டுகோள் விடுத்து,கருத்து பரிமாற்றம் பரவலாகி ஒரு தெளிவு ஏற்ப்பட்ட பின் நேரில் கூடி விவாதிக்கலாம். உங்கள் பொதுநோக்கின் நல்முயசிக்கு என் பங்களிப்பு அவசியம் உண்டு.
பதிலளிநீக்கு@ மோகன் ஜி
பிரச்சனையே பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதான் என்னை எழுதத் தூண்டியவர்களே இது பற்றி கருத்தோ பதிவோ போடவில்லை. வருகைக்கு நன்றி