Sunday, January 14, 2018

பொங்கல் கதையுடன் வாழ்த்து


                         பொங்கல்  கதையுடன் வாழ்த்து
                        -------------------------------------------------
 ஒவ்வொரு விழாவுக்கும் ஒரு கதை உண்டு ஜனவரி 14ம் நாள் பொங்கல்  அதே பொங்கல் நாளன்று சபரிமலையில் மகர சங்கராந்தி அன்று மாலை பொன்னம்பல மேட்டில்  அய்யப்பனே ஜோதி வடிவில் காட்சி தருகிறான் என்னும் எண்ணத்தில் சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்  அது அய்யப்பனின் ஜோதிஅல்லச் மனிதர் ஏற்றும் தீப்பந்தமே என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டும் ஜோதி தரிசனம்காண வரும் மக்கள் கூட்டம்  குறைய வில்லைபழையன கழித்து புதியன புகுத்தும்விதமாக பொங்கலுக்கு முதல் நாளா போகி கொண்டாடப்படுகிறது இதற்கு இன்னொரு கதையும்  உண்டு அந்தக்காலத்தில் ஆயர் பண்டிகை இந்திரனுக்கே உரித்தாயிற்று  அதுவே அந்த நாள் இந்திர விழாவாயிற்று
இந்திரனுக்கு விழாகூடாது மரம்நிறைந்த மலைக்கன்றோ விழாவேண்டும்  என்று கூறிய கோபாலன் பால் கோபம் கொண்டு இடியுடன் பெரு மழையும் தோற்றுவித்தான்  இந்திரன் மலைத்தூக்கி கொடையாய் எடுத்து  ஆயர் துயர் துடைத்தான்கண்ணன்
செறுக்கொழிந்த இந்திரனுக்கு தொடரும்விழா போகி அவனிடம் இருந்து ஆயர்களையும் ஆநிரைகளயும்  காத்த நாள் சூரிய நாராயண வழிபாடாயிற்று பரிதிக்கு நன்றி நவில அதுவே பொங்கலுக்கு வித்தாயிற்று  அறுவடை செய்த புது அரிசி கொண்டு  பொங்கல்  படைத்து மக்கள் மகிழும்திருநாளே பொங்கல் உழவருக்கு உதவும்  ஆநிரைக்கு நன்றி சொல்லும்  நாளே மாட்டுப் பொங்கல்

மகரம் என்றால் சூரியன்  அவன் தனுர் ராசி விட்டு
மகர ராசிக்குள் நுழையும் காலம் உத்தராயணம் எனப்படும்        
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளே மகர சங்கராந்தி
இது ஒரு உழவன்  திருநாள் 
தமிழர்களுக்கே உரித்தானது போன்ற
மயக்கம் ஏனோ உழைக்கும்  மக்கள்
மனம் மகிழும் நந்நாள் 

ஆண்டின்  துவக்கமே இந்நாள் என்று
அரசாணை இட்டு மாற்றவும் அந்தோ முயன்றனர்
நாளெல்லாம் ஒன்றுபோல் இருக்க
நன்றி நவிலக் கொண்டாடும் திருநாளில்
தைபிறந்தால் வழி பிறக்கும்என்னும் நம்பிக்கையே ஆதாரம்
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில் பொங்கலாக்கி
படைத்திடும்  இந்த நாளில்  அனைவருக்கும்  வாழ்த்து கூறு கிறேன் 
பொங்கும் மங்களமெங்கும்  தங்குக 

(இதில் ஒரு பாதி மீள்பதிவு )
 


12 comments:

  1. அரசையும் சிறிய தாக்கு நன்று.
    எனது பொங்கல் வாழ்த்துகளும் ஐயா.

    ReplyDelete
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. பொங்கலோ பொங்கல்...
    பொங்கலோ பொங்கல்!...

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. உங்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!

    அன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!

    இன்பத் தமிழ்போல் இனித்து!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநால் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பதிவே பொங்கல் வாழ்த்துதானே என் வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் இங்கு வந்துகருத்திட்டவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  10. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!

    ReplyDelete