மார்கழித்திங்கள்
---------------------------
-
இந்தப்பதிவை நானெழுதுவதே பலருடைய புருவத்தை உயர்த்தும்
எனக்கு இறை இலக்கியங்களில் ஈடு பாடு உண்டு தமிழ் வளர்ந்ததே அவற்றால்தான் என்று நினைப்பவன்
மேலுமொரு காணொளியும் கிடைத்தது அதை உபயோகிக்கும் விதமாக இந்தப் பதிவு எழுதுமெண்ணம்
எழுந்தது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்துரின் கோபுரங்கள் திருப்பாவையின் பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவை என்று சொல்கிறார்கள்
முதலில் காணொளி
பின் பாடல் வரிகள் தரலாம் என்றிருந்தேன் ஆனால் பாடல் வரிகள் இணையத்தில் இரைந்துகிடக்கின்றன மேலும் திருப்பாவை பற்றி அறியாதோர் மிகக் குறைவே என்று நினைக்கிறேன் பலரது பதிவுகளிலும் வந்தவை வருபவை ஆதலால் பாடல் வரிகள் இடவில்லை
இன்று மார்கழி 19ம் தேதி இன்றைக்கான திருப்பாவை பாடல் மட்டும் இதோ
19) குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
ஏலோர் எம்பாவாய் பொருள் புரியவில்லை தெரிந்தவர் விளக்கலாம்
ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஆடும் நடராஜர் படம்
ஏலோர் எம்பாவாய் பொருள் புரியவில்லை தெரிந்தவர் விளக்கலாம்
ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஆடும் நடராஜர் படம்
பலருடைய புருவத்தை உயர்த்தும் - உண்மைதான் ஜி.எம்.பி சார். எழுதுபவர்களைப் பொருத்து, 'காரணம்' தேடுவது பொதுவான இயல்புதானே. நான் முதலில் தலைப்பைப் படித்தவுடன், உங்களுடைய கவிதையா என்று எண்ணித்தான் வந்தேன்.
ReplyDelete"ஏலோர் எம்பாவாய்" - பொருள் இல்லாத ஓசைச் சொல் அல்லது, 'பாவை போன்ற பெண்ணே' என்று விளித்துச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.
நானாக நினைத்துக் கொள்கிறேன் என்கிறார்ஜீவி எனக்கு இந்த ஏலோர் என்பது இப்படி இருக்குமோ என்று தோன்றுகிறது ஓர் என்றால் நினை என்றும் பொருள்கொள்ளலாம்தானே
Deleteதிருவெம்பாவையிலும் இந்த அசைச்சொல் வந்திருப்பதை இன்றுதான் பார்த்தேன்.
ReplyDeleteஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
திருவெம்பாவை படித்தது குறைவு வருகைக்கு நன்றி சார்
Deleteகாணொளி பார்த்தேன் / கேட்டேன்.
ReplyDeleteகுத்து விளக்கெரிய என்று இன்றைய பாசுரம் ஆரம்ப வரி படித்ததும் மனம் அடுத்த வரியை "கூடமெங்கும் பூ மணக்க..." என்று பாடுகிறது!!!
அடுத்தவரி “கூடமெங்கும் பூ மணக்க “அப்படியா
Deleteஇது சினிமாப் பாட்டு இல்லையோ.....
Deleteஅது சினிமாப்பாட்டா தெரியாமல் மீண்டும் ஒரு முறை திருப்பாவை படித்தேன்
Deleteஶ்ரீவில்லிபுத்தூருக்குச் சில முறை சென்றிருந்தும் அங்குள்ள விமானம் குறித்து இன்றே அறிந்தேன். காணொளி அருமை! விளக்கங்களும் அருமை! நல்ல பதிவு! திருப்பாவையில் இறைவனோடு ஐக்கியம் ஆவதற்காக குரு மூலம் ஓர் சிஷ்யன் என்னும் பாவத்தில் ஆண்டாள் சொல்லி இருப்பதாக ஓவியர் திரு கேஷவ் தன்னுடைய திருப்பாவைப் பாடல்களின் ஓவியங்களுக்கு உள்ள விளக்கத்தில் சொல்கிறார். திருவெம்பாவையிலேயோ நாயகன், நாயகி பாவம்! ஈசனையே கணவனாக எண்ணி அவனுடன் ஐக்கியம் அடைவதற்காகக் காத்திருக்கும் ஓர் பெண்ணாக மணிவாசகர் தன்னை நினைத்துக் கொண்டு பாடிய பாடல்கள். இரண்டுமே இறைவனுடன் ஐக்கியம் அடைவதை, வீடுபேறு அடைவதையே குறிப்பிடுகின்றன.
ReplyDeleteபலநேரங்களில் நாம் பார்ப்பது எல்லாமே விஷயம் புரியாமல்தான் என்று தோன்றுகிறது
Delete//இந்தப்பதிவை நானெழுதுவதே பலருடைய புருவத்தை உயர்த்தும்..//
ReplyDeleteநீங்களா அப்பப்ப இப்படி நெனைச்சிப்பீங்களா?.. தெரிலே!
நான் எது எழுதினாலும் இவன் இப்படித்தான் என்று பல்சரும் நினைப்பது தெரிகிறது நெல்லைத்தமிழனின் பின்னூட்டம் பாருங்கள்
Deleteகாணொளி கண்டேன் ஐயா
ReplyDeleteத.ம.2
வருகைக்கும் தம வாக்குக்கும் நன்றி ஜி
Deleteகாணொளி கண்டேன்
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
வருகைக்கு நன்றி சார்
ReplyDeleteவீடியோப் பார்த்தேன் அதில் குரல் குடுப்பவர் ஜி எம் பி ஐயாவோ???...
ReplyDelete///இந்தப்பதிவை நானெழுதுவதே பலருடைய புருவத்தை உயர்த்தும் ///
ஹா ஹா ஹா உங்களுக்கு கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை போலத் தெரியுதே:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))..
அதிராவுக்கு என் பதிவுகளைப் படித்தும் என்புகைப்படம்கண்டும் என்குரலையும் கேட்க ஆசை போல் இருக்கிறதே. மதுரை வலை பதிவர் விழாவில் நான்பேசியது இணையத்தில் கிடைக்கலாம்
Deleteகாணொளி கண்டேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteகாணொளி கண்டேன். நடராஜரின் நடனத்தை ரசித்தேன்.
ReplyDeleteமார்கழிக்கான பதிவில் ஆருத்ரா தரிசனமாக ஆடும் நடராஜர் வருகக்கு நன்றி சார்
Deleteதங்களது கை வண்ணமும் அழகுதான்..
ReplyDeleteதொடரட்டும் திருப்பணி..
வாழ்க நலம்..
என் கைவண்ணம் ஏதுமில்லை ஐயா வருகைக்கு நன்றி
Deleteகாணொளி கண்டோம் சார். விளக்கமும் அருமை.
ReplyDeleteவருகைக்கும் க்ரிஸ்பான கருத்துக்கும் நன்றி
Delete"ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்துரின் கோபுரங்கள் (சுதைச் சிற்பங்கள்) திருப்பாவையின் பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவை." இந்த தங்கள் பதிவிட்டுள்ள கானோலிக் காட்சி திருப்பாவை பற்றிய புதிய கோணம்.எனலாம். பதிவிற்கு நன்றி...
ReplyDeleteஎன் பதிவுக்கு இதற்கு முன் வந்திருக்கிறீர்களா என் நினைவில் இல்லையே வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சார்
ReplyDelete