Thursday, January 11, 2018

நினைவுகளுக்கு பஞ்சமில்லை


                                     நினைவுகளுக்கு பஞ்சமில்லை
                                   --------------------------------------------------

நினைவுகளுக்குப் பஞ்சமில்லை
இம்மாதம் ஐந்தாம்  தேதியே மனைவி  நினைவு படுத்தி விட்டாள் சனிக்கிழமை ஆறாம்  தேதி பஹுள பஞ்சமி திருவையாறு  ஆராதனைகள் நேரலையில் ஒளிபரப்பாகும்   கேட்கவேண்டும் என்றாள் எனக்கு திருச்சியில் இருந்தபோது 1980 களின்  துவக்கத்தில் திருவையாறு பஞ்சமி கீர்த்தனைகளைக் கேட்கச் சென்றது நினைவிலாடியது இன்னும் ஒருமுறை பெங்களூரில் இருக்கும் பொது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கிடையே நடந்தடெஸ்ட் மாட்சை யும்   ஆராதனையையும்  விட்டு விட்டுக் கேட்டதும் நினைவுக்கு வந்தது அன்று போல் இன்றும் டெஸ்ட் மாட்ச்தான்   ஆஃப்ரிகா இந்தியா இடையே ஆனால் பஞ்சமி    கீர்த்தனைகள்முடிந்த பின்  ஆட்டம் தியாகராஜர் எத்தனையோ கீர்த்தனைகள்பாடியிருந்தும்  ஐந்து கீர்த்தனைகள் கொண்டு மட்டுமே ஆராதனை நடத்தப்படுகிறது  மேலும்  நான்காவது கீர்த்தனையான கனகன ருசி என்னும்  கீர்த்தனை வராளி ராகமாம் ( இதெல்லாம்  ஸ்ரீராமுக்கு அத்துபடியாயிருக்கும்  ) அந்த ராகத்தை யாரும்  சொல்லிக் கொடுக்க மாட்டார்களாம்   சொல்லிக் கொடுக்காமலா இத்தனை பேரும் ஆராதனையில், பாடுகிறார்கள்
நாங்கள் திருவையாறுக்கு ஆராதனைக்குச் சென்றுவந்ததெல்லாம்  நினைவில்  வருகிறது  காலையில் உணவு எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் கரையில் உண்டதும்  பாடல் வரிகளைப் பார்க்க கொடுக்கப்பட்டிருந்தசின்ன ஏட்டுடன்  கூடவே  பாடமுயற்சி செய்ததும் இப்போது நினைத்தால் தமாஷாக இருக்கிறது  இந்தமுறை ஆராதனை ஒளிபரப்பாகும்போது காமிராவில் சில பகுதிகளைப் பதிவாக்கினேன்  ஆனால் பகிர முடியவில்லை நீளம்  அதிகமானபடியால்பகிர முடியவில்லை

பழைய நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்த விஷயம்  இன்னொன்றுண்டு இந்தவிலை வாசிகள். அன்றும் இன்றும்   எண்ணி பார்க்கவும் முடியவில்லை என்மகன்  எனக்கு அனுப்பி இருந்த சில படங்கள் அந்தக் காலநினைவுக்கு இழுத்துச் சென்றது அதற்குமுன் 

  ஒரு பாட்டின்  வரி

அஞ்சு ரூபா நோட்டு  கொஞ்ச முன்ன மாத்தி மிச்சமில்லை  காசு மிச்சமில்லை 
கத்திரிக்காய்  வெல கூட கட்டவில்ல ஆச்சு காலங் கெட்டு போச்சு 

  என் மனைவி அந்தக் கால செலவுகளை அங்கும் இங்கும்  குறித்து       வைத்திருக்கிறாள்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 26 /- என்றுஎழுதப்பட்டு இருக்கிறது இன்னும்  சில விலைகளுமிருக்கின்றன ஆனால் குவாண்டிடி குறிப்பிடப்படாததால் இங்கு சொல்ல முடியவில்லை நாங்கள் விஜய வாடாவில் இருந்தபோது (1976-1980) தங்கம் ஒரு சவரன்  ரூ 200. என்னும் அளவில் இருந்தது நாங்கள்பெங்களூர் வந்தபோது நாங்கள் தங்கியிருக்கும்   இடத்துக்கும்   சிவாஜி நகருக்கு ம்பேரூந்து கட்டணம் ரூ. ஒன்று அதுவே இப்போது ரூ25 /- சிலபடங்களை இடுகிறேன்   எழுத  இருப்பதை விட அவை நன்குவிளக்கும்

பெட்ரோல் விலை ஒரு பில் 
சினிமா டிக்கெட் 

 சில அரிய புகைப்படங்கள் 

      
  
இப்போது எப்படி இருக்கிறது 

.
மாற்றமொன்றுதான் மாறாதது



நான் பிறக்கும் முன் 


அரசியல் தலைகள் 

அந்த நதி எங்கே 

விலையை பாருங்கள் 
பதிவில் நான் எழுதி இருந்த விலையைப் பாருங்கள்

சங்கீத வித்தகிகள்

















.

57 comments:

  1. "சொல்லிக் கொடுக்காமலா இத்தனை பேரும் ஆராதனையில், பாடுகிறார்கள்" - சார்... வராளி ராகம் சொல்லித்தந்தால் குருவிற்கு (சொல்லித் தருபவருக்கு) ஆகாது என்ற நம்பிக்கை. அதனால், வராளி ராகப் பாடல் எதுவுமே சொல்லித்தரப்படுவதில்லை. பாடும்போது கேட்டுக் கேட்டுத்தான் கற்றுக்கணும். இதுவெல்லாம் நம்பிக்கை. அதில் எப்படி குறை காணுகிறீர்கள்?

    பொதுவா பழையகால விலையையும் இந்தக்கால விலையையும் ஓரளவுதான் கம்பேர் செய்யமுடியும். சில, மிக அதிக விலையாகவும், பல, Proportionateஆ விலை அதிகமாகவும் ஆகியிருக்கும்.

    நான் கேரியர் ஆரம்பித்தபோது 1000 ரூ சம்பளம் என்பது (30 வருடம்) நல்ல சம்பளம் (Starting salary). இப்போ அது 10,000 ஆக ஆயிருக்கு. Demand and Supplyயில் சில பொருட்கள் அதீத விலையேற்றமாயிருக்கு.

    எங்க அப்பா 7 பைசாவுக்கு 1 கூறு வெண்டைக்காய் 1975ல் வாங்கினார். இப்போ அது 5 அல்லது 10 ரூபாய் ஆயிருக்கு. 3 ரூபாய்க்கான பெரிய முழு பலாப்பழம், சீசனில் இப்போது 200 ரூபாய் ஆகியிருக்கு. தங்கம், 20 வருடத்துக்கு முன்பைவிட இப்போ மூணு மடங்கு விலை ஜாஸ்தியாயிருக்கு. நிலம், 75 மடங்கு விலை ஜாஸ்தியாயிருக்கு.

    எனக்கு இந்த பழைய புகைப்படங்களை (இடங்களின்) பார்க்கும்போது, அப்போதே வீடு வாங்கியிருக்கலாமே என்றுதான் தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. அப்போதே வீடு வாங்கினால் இப்போது பழசாயிருக்கும்.

      Delete
    2. @ நெத சொல்லிக் கொடுப்பது என்பது எனக்குப் புரியவில்லையோ நாம் சொல்வதைசொல்லச்சொல்வதும்சொல்லிக் கொடுப்பதுதானேவிலை ஏற்றத்துக்கு தக்கபடி வரவு உயர்ந்திருக்கிறதா இதை ஒரு ஒப்பீட்டுப்பதிவாகவே காண வேண்டும்

      Delete
    3. @ விநாயகம் மதிப்பும் கூடி இருக்குமே

      Delete
    4. ஆம் ஜி.எம்.பி சார். ஒரு பாடல் சொல்லிக்கொடுப்பது என்பது, ஒவ்வொரு வரியாக சொல்லிக்கொடுத்து, கடைசியில் பாடல் முழுமையடையும். தியாகராசர் பஞ்சரத்ன கீர்த்தனைக்கெல்லாம் 15 நாளாவது ஒரு பாடலுக்கு ஆகும். மற்ற நாலையும் சொல்லிக்கொடுப்பார்கள் (ஜகதா, சாதிஞ்சனே, எந்தரோ, துடுகுகல, அப்புறம் கன கன). வராளி கீர்த்தனையை மட்டும் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கமாட்டார்.

      வரவு, எல்லோருக்கும் எல்லாத் தொழிலுக்கும் ஒப்புமையோடு உயரவில்லை. நீங்க சொல்ற காலத்துல ஆசிரியர் சம்பளம் 500, இப்போ 50,000 ரூ.

      Delete
    5. நான் பார்தவரை குரு பாட சிஷ்யன் /சிஷ்யை பாடுவார்கள்அதைத்தான் சொன்னேன் நான் எச் ஏ எல் லில் பயிற்சிக்கு சேரும்போது தினம்ருஒன்றும் மாத அலவன்சாக ரூ39ம் தான்கிடைத்தது என் மனைவியிடம் 1992ல் மாதம் எவ்வளவு பணம் செலவுக்கு ஆகுமென்று கேட்டபோது ரூ1000/ இருந்தால் கஷ்டமில்லாது போகும் என்றாள் எங்கள் இருவருக்கு

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  3. இப்படிப் பழைய விஷயங்களையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் படித்துக்கொண்டே இருக்கிறேன். உங்களைப் போலவே எனக்கும் வயதாகிவிட்டதாக மற்றவர்கள் கருதிவிடப் போகிறார்கள்! (சும்மா ஒரு 'இது'க்காக சொன்னேன்!)
    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. வயதாவது வருத்தம் தருகிறதா ஆனா;ல்,அதுதானே மறுக்க முடியாத உண்மை

      Delete
  4. 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' படங்கள் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயதில் பார்த்த மெட்ராஸ் சரியாக நினைவுக்கு வருவதில்லை நாகேஷ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று பாடிவரும் காட்சியே இப்போது இல்லையே

      Delete
  5. முதல் இரண்டு படங்களைத் தவிர்த்து மற்றவை பார்த்தவையே! இந்த விலை வாசி விஷயம்! என்னிடமும் கணக்குகள் சில,பல இருக்கின்றன. 1980 ஆம் ஆண்டில் கூடப்பால் ஒரு லிட்டர் 2 ரூபாய்க்கு வாங்கி இருக்கேன். :)

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை கவனித்தீர்களா நினைவுகளுக்குப் பஞ்சமில்லை

      Delete
    2. தலைப்பைகவனித்தீர்களா நினைவுக்குப் பஞ்சமில்லை

      Delete
  6. //கனகன ருசி என்னும் கீர்த்தனை வராளி ராகமாம்//

    அப்படியா! எனக்கு அதில் ஸ்ரீ ராகமும், ஆரபியும்தான் பிடிக்கும்!

    //இதெல்லாம் ஸ்ரீராமுக்கு அத்துபடியாயிருக்கும் //

    நான் அப்படி இல்லை ஸார். கீதா ரெங்கன் கில்லாடி. எனக்கு 'கா வா வா...' பாடல்தான் வராளியில் தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. 'நான் மிகவும் ரசிப்பது, நான் பாடிக்கொண்டிருப்பது (ரொம்ப தாளகதிலாம் பார்க்ககூடாது) 'கா வா வா', 'சபாபதிக்கு வேறு தெய்வம்', 'சரவண பவ எனும்', 'நகுமோ', 'கைவிடமாட்டான் கனக சபேசன்', 'காரணம் கேட்டு வாடி' போன்ற பாடல்கள். இதுல எது 'வராளி' எது 'சீவாளி'ல்லாம் எனக்குத் தெரியாது. இது தெரிஞ்சிருக்கே உங்களுக்கு ஸ்ரீராம். அப்போ நீங்க கில்லாடிதான்.

      Delete
    2. கர்னாடக இசைப் பாடல்களைப் பயாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள்தான் பெரிய ஆள். அவற்றை நான் கேட்பதோடு சரி. சபாபதிக்கு பதிலாக வணக்கம் பலமுறை சொல்லி விடுவேன். அல்லது இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே என்று காலைநேர பூங்குயிலைக் கேட்பேன்! சினிமாப பாடல்கள்தான் வாயில் வரும்! எனக்கு வா பொன்மயிலே பாடல் மிகப் பிடிக்கும். ஏனென்று காரணம் பின்னர் புரிந்தது. அது அந்த அருமையான ஆபேரி ராகம் (நகுமோமு) நகுமோடு கேட்கும்போது - அதுவும் பாலமுரளி பாடிக் கேட்கும்போது - உள்ளம் உருகிவிடும்.

      Delete
    3. நெல்லை வாவ்!! பாடுவீங்களா சூப்பர்...அருமையான பாடல்கள் நீங்கள் சொல்லியிருப்பது..வராளி,.ஆபோகி, ஷண்முகப்பிர்யா, ஆபேரி, பூர்விகல்யாணி...வாவ்!!! கலக்கறீங்க போங்க...

      ஸ்ரீராம் நீங்க சொல்லியிருக்கற பாடல்களும் செம.... வா பொன்மயிலே சூப்பர்ப் பாடல்...நகுமோ பாலமுரளி அருமை...
      கீதா

      Delete
    4. ஸ்ரீராம் நான் கில்லாடி எல்லாம் இல்லை...நீங்களும் தான் கில்லாடி...ஆனா அடக்கம்!!!

      கீதா

      Delete
    5. @ஸ்ரீராம் உங்கள் பதிவுகள் என்னை அப்படி நினைக்கச் செய்தது சரிதானே

      Delete
    6. @நெத நீங்கள் பாடிக் கேட்கவேண்டுமே

      Delete
    7. ஸ்ரீராம் என்வீட்டில் என்னை சந்தித்த பதிவர்களில் மது ஸ்ரீதர் ஷைலஜா அய்யப்பன் கிருஷ்ணன் ஆகியோர் பாடிக் கேட்டிருக்கிறேன் எனக்கும் பாட விருப்பம்தான் கர்நாக் இசையும் நானும் என்னும் ஒரு பதிவுகூட எழுதி இருந்தேன்

      Delete
    8. @ கீதா எனக்கு பல ராகங்களின் பெயர்கள் தெரியும்

      Delete
    9. @ கீதா யார் கில்லாடி என்பது பாடக் கேட்டால் தெரிகிறது

      Delete
    10. //ஸ்ரீராம்... என்வீட்டில் என்னை சந்தித்த பதிவர்களில் மது ஸ்ரீதர் ஷைலஜா அய்யப்பன் கிருஷ்ணன் ஆகியோர் பாடிக் கேட்டிருக்கிறேன்//

      ஸார்... நான் பாடினால் அடுத்தமுறை நீங்கள் என்னைப் பார்க்க விரும்ப மாட்டீர்கள்...!!

      Delete
    11. ஜி.எம்.பி சார்... எனக்கு சில (பல?) சமயங்களில் எனக்கு அதீத திறமை சிறிய வயதில் இருந்தது ஆனால் அதை வளர்த்தெடுக்கவில்லை என்று ஒரு நினைப்பு (பிரமை) உண்டு. அப்போ நல்ல குரல் வளம், சபைக் கூச்சமின்மை, கத்துக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவேயில்லை. அதனால தாளம், லயம் இல்லாம சும்மா நானும் பாடுவேன் (ராகம் வரலயே, இங்க ஏன் இழுக்கறான், என்ன ஆபேரியை ராகமாலிகா மாதிரி பாடறான்னு நினைக்கறவங்களுக்காக நான் பாடலை, எனக்கு நானே பாடிப்பேன், சமயத்தில் தனிமை உணர்வு தோன்றினால்). இப்போ 10 வருஷமா அந்த குரல் இல்லை. அதற்காக தனிமை மனதில் தோன்றும்போது பாடுவதை நிறுத்தவில்லை ( நாந்தானே ஆடியன்ஸ்)

      Delete
    12. மீள்வருகைக்கு மிக்க நன்றி சார்நீங்கள் உங்கள் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எனக்கும் கர்நாடக இசை பயில விருப்பமிருந்தது என் வீட்டில் யாராவது அதில் தேர்ச்சி பெற வேண்டுமென்பதும் கனவாகி இருந்தது. அதை நான் 2012ம் ஆண்டிலேயே பகிர்ந்திருக்கிறேன் என் அனுபவங்களுக்கு பார்க்கவும் சுட்டி /http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_27.html

      Delete
    13. @ ஸ்ரீராம் நீங்கள் கூறுவதை நான் தன்னடக்கமாகவே எடுத்துக் கொள்கிறேனின்னொன்றும்நினைவுக்கு வருகிறது நவராத்திரி சமயங்களில் விட்டுக்கு வரும் பெண்குழந்தசிகள் முதலில்பாட வெட்கப்படுவார்கள் பாட ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள் நன் உங்களை மனதில் வைத்து எழுதவில்லை

      Delete
  7. அப்போதைய விலையையும் இப்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ஆச்சர்யமாகத்தான் இருக்கும் (என் மாமா கேஜி உடனே கேட்பார் "அப்போ பவுன் என்ன விலை?") நான் 96 ல் நாலு பவுன் 12,000 த்துக்கு வாங்கினேன் - ஸ்ரீராம் சிட்ஸ் சேர்ந்து!

    ReplyDelete
    Replies
    1. அப்போதைய விலைகள் கொடுத்ததுஒருஒப்பிடலுக்கே அப்போது வாங்கிய சம்பளம் என்ன என்று கேள்வி கேட்பதில்லையா

      Delete
  8. ஓ... தீவார் படம் பார்த்த டிக்கெட் இன்னமும் வைத்திருக்கிறீர்களா? என்ன ஆச்சர்யம்? நான் தஞ்சையில் பார்த்த படம். இந்த ரேர் ஃபோட்டோஸ் பி டி எஃப் எனக்கும் இந்த வருடம் இப்போதுதான் மறுபடி வந்தது!

    ReplyDelete
    Replies
    1. அந்தடிக்கட் என் மகன் எனக்கு அனுப்பிக் கொடுத்தது 1975ல் ராஜ் கோட் டில் ஒரு தியேட்டரில் வாங்கியது....!

      Delete
  9. பழைய படங்கள் அருமை.
    ஐயா இதில் சில படங்கள் பதிவுக்காக வைத்து இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜி தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள்

      Delete
  10. சார் இந்தப் படங்கள் எல்லாம் பார்க்கும் போது சென்னை எவ்வளவு அழகாக இருந்திருக்கு முன்பு...20 வருடம் முன்பு கூட இந்த அளவு ட்ராஃபிக், கடைகள், ஜன நெருக்கடி இல்லை...இப்போது ரொம்பவே அதிகமாயிருப்பது போல் உள்ளது.

    விலை வாசி பற்றி...ஒரு சில தான் அதீதமாகக் கூடியிருக்கு ஸார். மத்ததெல்லாம் அப்போதைய விலையையும் இத்தனைவ் வருடங்களுக்குப் பிறகும் கூடாமல் இருக்குமா ஸார்...இப்போதைய சராசரி தனிமனித வருமானம் கூடும் போது அதுவும் கூடத்தானெ செய்யும்..

    துளசிதரன், கீதா

    கீதா: நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ...

    ஆமாம் ஸார் வராளி கற்றுக் கொடுக்கமாட்டாங்க. குரு பாடுவதைக் கேட்டுக் கேட்டு நாம் கற்கலாம்...அப்படித்தான் வழக்கமாக இருந்து வருகிறது...

    நானும் இப்படி எழுதி வைத்திருந்ததைச் சமீபத்தில் பார்த்தப்ப...அரிசி கிலோ விலை 2, 5 க்கு எல்லாம் 1987-88ல்...30 வருடங்களில் 45 லிருந்து கிடைக்கிறது...55ரூ 60 என்று...ஆனால் ஒரு சிலரது வருவாய் அதிகரித்திருக்கலாம்..ஆனால் பலரது வருவாய் அதற்கு ஏற்றாற் போல் உயரவில்லை என்பதுதான் வருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. துளசி கீதா 1945ல் மெட்ராசில் பைகாஃப்ட்ஸ் ரோட் சந்தில் இருந்தோம் பைக்ராஃட்ஸ் ரோடின் ஒரு சந்தில் வீடு தெருவின் கோடியில் ஒரெ சேரி அது நன்றாக நினைவில் இருக்கிறது விலை வாசி ஏற்றத்துக்கு தக்கபடி ஊதியம் உயர்ந்திருக்கிறதா என்னும் கேள்வியும் எழுகிறதே

      Delete
  11. அருமையான தொகுப்பு
    சிந்தனைக்கு விருந்து

    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

      Delete
  12. Replies
    1. நினைவுகளைக் கிளறி விடுகிறதா

      Delete
  13. பழைய படங்கள் - அவற்றைப் பார்ர்க்கும் போது ஏக்கப் பெருமூச்சுதான்..

    ReplyDelete
    Replies
    1. நிறையவே மாற்றங்கள் சார் கட்டிடங்களும் சாலைகளும் நிறையவே மாறி இருக்கிறது அப்போது சென்னழியில் ட்ராம் வண்டி ஓடிக் கொண்டிருந்தது

      Delete
  14. படங்கள் மிக அருமை.. விலைவாசி ஏறிவிட்டதைப்போல சம்பளமும் ஏறி விட்டதே.. அதை ஒளிச்சிட்டீங்களே:) ..

    அந்த நதி எங்கே? என இன்று.. கேட்காமல்.. இன்றிருக்கும் நதியையாவது பாதுகாத்து நாளைய தலைமுறையினருக்கு குடுக்கோணும் என்பதே நல்ல எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சேப்பாக்கம் ஏரி பாதுகாக்கப்படுகிறது. பார்த்து வாருங்கள்.

      Delete
    2. @அதிரா விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி சம்பளம் உயரவில்லை என்பதுதான் உண்மை கூவத்தில் படகு விடுவோம் என்று சொல்லியே நிறையப் பணம் ஏப்பமாகி இருக்கிறதுஅதையும் சொல்ல வில்லையே லழியே

      Delete
    3. @ விநாயகம் சேப்பாக்கமேரி மட்டும் என்னபுண்ணியம் செய்தது

      Delete
  15. உண்மையிலேயே மிகச் சுவையான பதிவு.

    எனக்கு இசையில் அவ்வளவு நாட்டம் இல்லை. ஆனால், நீங்கள் காட்சிப்படுத்தியிருந்த புகைப்படங்கள் அருமை! எது எப்படியோ, இன்றை விட அன்று சுற்றுச்சூழல் நன்றாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இன்று அறிவியலாளர்கள் பூமியின் வாழ்நாளை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    காலச்சக்கரம் என ஒன்றிருந்தால் கட்டாயம் அந்தக் காலத்துக்குச் சென்று விட வேண்டும். இப்படி ஒரு பதிவுக்காக மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதேபோல் ஒரு பதிவு பெங்களூர் பற்றி எழுதி இருந்தேன் அதைப் படித வாசகர் ஒருவர் என்னை சந்திக்க விரும்பினார் இன்னும் வருகிறார்

      Delete
  16. கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி செல்ல வைத்துவிட்டீர்கள். அதற்கு நன்றி! அப்போது சம்பளம் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக இருந்தது. அந்த நாட்களை நினைத்து பெருமூச்சு விடவேண்டியதுதான்.

    ReplyDelete
  17. இருக்கும் நில்சையை விவரிப்பதே நோக்கம் வருகைக்கு நன்றிஐயா

    ReplyDelete
  18. //வராளி ராகம் சொல்லித்தந்தால் குருவிற்கு (சொல்லித் தருபவருக்கு) ஆகாது என்ற நம்பிக்கை.//
    "அப்படியெல்லாம் கிடையாது, நான் என் குருவிடம் கற்றுக் கொண்டேன், என் சிஷ்யர்களுக்கும் சொல்லி கொடுக்கிறேன்" என்று நெய்வேலி சந்தான கோபாலன் சொல்லியிருக்கிறார்.

    இதைப் போல ஆபேரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று ஒரு நம்பிக்கை. ஒருவன் இது பொய் என்று நிரூபிக்க விரும்பி காலையில் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது கையில் சோத்து மூட்டையோடு கிளம்பினானாம். "என் கையில் சாப்பாடு இருக்கிறது, எப்படி சாப்பாடு கிடைக்காமல் போய் விடும் என்று பார்க்கிறேன்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, சாப்பாட்டு மூட்டையை பக்கத்தில் இருந்த ஒரு மரக் கிளையில் கட்டி வைத்து விட்டு, ஆபேரி ராகத்தை ஆலாபனை பண்ண ஆரம்பித்தானாம். விரிவாக ஆலாபனை பண்ணி முடிக்கும் பொழுது உச்சி பொழுது வந்து விட்டது. "சரி, சாப்பிடலாம்"என்று பார்த்தால்...சாப்பாட்டு மூட்டையை கட்டி வைத்த மரக் கிளையை காணவில்லை. ஆமாம் அது மூங்கில் மரம். காலையில் வளைந்திருந்த கிளை நேரம் செல்லச் செல்ல நிமிர்ந்து உச்சிப் பொழுதில் உயரே சென்று விட்டது. ஆபேரி தன் வேலையை காட்டி விட்டது. இது கதை. நிஜத்தில் எப்படியோ தெரியாது.

    அமிர்த வர்ஷினி ராகம் பாடினால் மழை வரும் என்பதும் ஒரு நம்பிக்கை.

    ReplyDelete
    Replies
    1. /ஆபேரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று ஒரு நம்பிக்கை. //

      அது ஆபேரி இல்லை. ஆஹிரி!

      நீலாம்பரி பாடினால் தூக்கம் வராத காலம் இது!

      Delete
    2. சில செய்திகளுக்கு தீ போல் பரவும் சக்தி உண்டு அது போலவேதான் இந்த ராக சமாச்சாரங்களும் பாட்டை ரசிக்கத்தெரியும் ராகம் பெயர்கள் கேட்டிருக்கிறேன் வித்தியாசம் காணத் தெரியாது எது எப்படியோ இன்னொருகத்சை தெரிகிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
    3. @ஸ்ரீராம் என் கணிப்பு சரி என்றே தோன்றுகிறது மழை பெய்விப்பது மிகவும்சுலபமான விஷயம் போல் இருக்கிறதே தூங்கச் செய்வடும் ஈசியா

      Delete
  19. அருமை! அப்போ எல்லோருக்கும் சம்பளமும் கம்மிதானே! அந்த விலைவாசி அப்போதுள்ள நிலைமையில் அதிகம்தான்!

    எங்க பாட்டி சொல்வாங்க.... அவுங்களுக்கு ஆரம்ப சம்பளம் பத்து ரூபாயாம். அதுலே ஒன்னரை ரூபாவுக்கு ஒரு புடவை வாங்கிப்பாங்களாம். அந்தக் கால ஆரம்ப்பள்ளி டீச்சர் அவுங்க !

    1976 இல் பூனாவுக்குப் புதுவேலையில் கோபால் சேரும்போது 950 ரூ. சம்பளம். அதுவும் எவ்ளோ சம்பளம் எதிர்பார்க்கறீங்கன்னு கம்பெனி கேட்டப்ப.... ஆயிரம் ரூ சொன்னால் அதிகமுன்னு நினைச்சுப்பாங்களோன்னு ஒரு அம்பதைக் குறைச்சுக்கிட்டுச் சொன்னார். இதைச் சொல்லிக்கொடுத்தது உள்துறை அமைச்சர்னு தனியாச் சொல்லணுமா ? :-)

    ReplyDelete
  20. மீண்டும் இரசித்தேன்

    ReplyDelete