எழுதாவிட்டால் என்னதான் நடக்கும்
--------------------------------------------------------------
மூன்று நாட்கள் வலைப் பக்கமே வர முடியவில்லை உள்ளூரில் இருக்கும் உறவுகளுக்கு நாங்கள் அவர்களை சந்திக்க செல்வதில்லை என்னும் ஆதங்கம்
ஒரு முறை வெளியே போகும் போது கூடியவரை
பல செயல்களையும் க்ளப் செய்வது வழக்கம்
மனைவிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார்
அதற்கு இரண்டு முறை செல்ல வேண்டும் காலி வயிறுடனும் உணவு உட்கொண்டபின்னும் பரிசோதனைக் கூடம் வீட்டிலிருந்து சுமார் 25 கி மீ தூரம் அங்கு செய்தால் செலவை பிஎச் இ எல் ஏற்கும் மனைவியின் அக்கா வீட்டுக்குச் சென்றோம் மதிய உணவு அங்கே மாலை வேலை முடித்து வரும் மகன்
பிக் அப் செய்வான் மனைவியின் அக்கா வீட்டில்
ஹோம் தியேட்டர் இருக்கிறது எல்லாமே இன்றைய
சூழலுக்கு ஏற்ப அப் டு டேட் பாடல்கள் பல கேட்டோம் கர்நாடக சங்கீதம் மேற்கத்ட்க்ஹிய இசையுடன் மனைவியின்
அக்கா பையனுக்குப் பிடித்தது ப்யூரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் ஆனால் சங்கீத
வாத்திய இசை துல்லியம் இது குறித்து வலையில் கருத்துகள் இருந்தன எனக்கு
திரையிசைப் பாடல்களில் கர்நாடக இசையின் சாயல் இருந்தால் ரசிப்பேன் ஒரு மாற்றத்துக்கு நான் ரசிக்கும் பாடல்
பாலமுரளி கிருஷ்ணா சுசீலா குரலில் தங்கரதம் வந்தது
p
என்ன எழுதுவது என்னும் சங்கட மிருந்தது எதை வேண்டுமானாலும்
எழுதலாம் என்றபடி பின்னூட்டங்கள் இருந்தன ஒரு வேளை நான்
எழுதாவிட்டால் என்ன நடக்கும் ஒரு சின்ன
கற்பனை
ஜீஎம்பி எழுதுவதில்லை
என்னும் செய்தி கேட்டவுடன்
செய்தி வீட்டுப்பரண்மேல்
ஏறியது மனைவியும் குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் வீழ்ந்தனர் தொழுவத்தில்
பசுவும் கன்றும் கயிறு அறுத்து ஓடியது காசியில் கங்கை கலங்கி ஓடியது ஒரு காசின் பரப்பு வானம் ஓட்டையாகிற்று
காரணம் தெரியாமல் வலைஞர்கள் திடுக்கிடுகின்றனர்
மெல்ல மெல்ல காரணம் புரியத்தொடங்க ஜீஎம்பி
வீட்டின் முன் வலைப்[ பதிவர் கூட்டம் தாள் வில்லை எழுதுங்கள் எழுதுங்கள் என்னும் கோஷம் எங்கும் சட்டென்று ஒரு அடி விழ விழித்துப்
பார்த்தால் மனைவி என்னாச்சு என்னாச்சு என்று கேட்கிறாள் கண்டது கனவில் வந்த நிமித்தங்கள் என்றதும் சப்பென்று போயிற்று
எதை எழுதுவது என்று நினைத்தவன் இதையே எழுதத் துணிந்தேன்
என் மச்சினி வீட்டுக்குப் போனபோது அங்கு வைக்கப் பட்டு
இருந்த விநாயகர் ஓவியம் என்னை ஈர்த்தது ஏன் என்றால் அது நான் வரைந்து சகலைக்குக் கொடுத்தது இப்போது அவர் வீட்டில்
அவர் இல்லை ஆனால் நான் வரைந்த ஓவியம் இருக்கிறது
நான் வரைந்த ஓவியம் மேலே |
என் மனைவிக்கு இந்த ஆண்டு ஒரு காலண்டர் பரிசாக வந்தது அதில் என்ன விசேஷம் இது மத்ரையில் இருந்து கொண்டுவரப்பட்டு என் மனைவிக்கு பரிசாகக் கொடுக்கப் பட்டது அதைப் பார்த்ததும் என்கைகள் துறு துறுக்கத் தொடங்கியது
அதில் இருந்த ஓவியங்களை தீட்ட வேண்டும் போல் இருந்தது ஒவ்வொரு பக்கமும் மதுரைக் க்லோவில் மூர்த்திகள் அத்தனைஅழகு அதில் ஏதாவது ஒன்றையாவது கண்ணாடி ஓவிய மாக்க வேண்டும்
போல் ருக்கிறதுஆனால் இப்போதெல்லாம் ஓவியம்தீட்ட
கையும் கண்களும் ஒத்த்ழைப்பதில்லைஇருந்தாலும் முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன்
எத்தனை காலண்டர்கள் வந்தாலும் தேதி கிழிக்கும்படியான காலண்டர் வந்தால்தான் திருப்தி
நீங்கள் எழுதாததால் தொழுவத்தில் பசுவும், கன்றும் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடியது இரசிக்க வைத்தது.
ReplyDeleteஎல்லா நிகழ்வுகளும் ஒரு பதிவுதான் ஐயா சலிக்காமல் எழுதுங்கள்.
எப்படியோ ஒரு பதிவு தேறிவிட்டது வருகைக்கு நன்றிஜி
Deleteஉங்கள் ஆர்வம் அதிசயிக்க வைக்கிறது ஓவியம் தீட்டுங்கள். முடிந்தவரை வரட்டும். வாழ்த்துகள். இங்கே நிறைய தினசரி காலன்டர்கள் கிடைக்கின்றன. இப்போ வந்த உறவினர்களுக்கெல்லாம் கொடுத்தோம். :)
ReplyDeleteபிள்ளையார் பிடிக்க குரங்காகக் கூடாது என்னும் அச்சமே என்னை தடுக்கிறது வருகைக்கு நன்றி மேம்
Deleteநீங்கள் எழுதாமல் இருப்பதை கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை.
ReplyDeleteகற்பனை ஊற்றுதான் என்னை எழுத வைக்கிறதோ நன்றி சார்
Deleteதொடர்ந்து எழுதுங்கள் சார். உங்கள் ஓவியம் நன்றாக இருக்கு.
ReplyDeleteஅந்த ஓவியம் தீட்டி ஆயிற்று ஆறு வருடங்களுக்கு மேல் வருகக்கு நன்றி சார்
Deleteஎழுதாவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தவுடன் நண்பர்கள் எழுதியிருப்பதை வாசிக்காவிட்டால் என்ன நடக்கும் என்று என் கற்பனை ஓடியது.
ReplyDeleteஎழுதுவதெல்லாம் பிறர் வாசிப்பதற்காகவே.
எழுதுவதும் பிறர் வாசிப்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இது இல்லாவிட்டால் அது இல்லை அது இல்லாவிட்டால் இது இல்லை என்கிற நிலை.
முன்பெல்லாம் நான் எழுதியதை நானே படித்துக் கொள்வேன் வலை தொடங்கியபின் தான்பகிர்கிறேன் பிறர் வாசிக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி
Deleteஆஹா நீங்கள் எழுதாததால்தான் தமிழ்மணம் சர்வீஸ் செய்ய போய்விட்டதோ....ஹீஹீ
ReplyDeleteஅதனால் தான் வருகை புரிந்தோரின் எண்ணிக்கை குறைகிறதோ இந்தப் பதிவு மொக்கைஉயானாலும் நீளம்குறைந்ததுதான் அல்லவா சார்
Deleteதங்கரதம் வந்தது நல்ல பாடல். ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இன்னும் சில பாடல்களையும் சொல்லலாம். அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் 'காலை நேரப் பூங்குயில், வைதேகி காத்திருந்தாள் படத்தில் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே', அவன் ஒரு சரித்திரம் படத்தில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்'
ReplyDeleteஅருமையான பாடல்கள் ஸ்ரீராம்...நீங்களே சொல்லிட்டீங்க!!!
Deleteகீதா
உறவினர் வீட்ட்டில் நிறையவே பாடல்கள் கேட்டேன் ஆனல் அவை மேற்கத்திய பின்னணியில் பாடியது ப்யூரிஸ்டுகள் ரசிக்க மாட்டார்கள் மேலும் காணொளிகாண்போரெண்ணிக்கை குறைவே
Deleteகீதா ஸ்ரீராமின் தன்னடக்கம் இதை ஏற்காது
Deleteஎல்லாத் திரையிசைப் பாடல்களுமே ஏதாவது ஒரு ராகத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
ReplyDeleteஎப்படித்தான் கண்டுபிடிக்கிறீங்களோ. எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவே கர்னாடக இசை ஞானத்தில் கில்லாடிகள்.
Deleteஏதாவது ராகத்தின் அடிப்படையாயிருக்கலாம் ஆனால் முக்காலும் ம்யூட்டிலேட் செய்யப்பட்டிருக்கும்
Deleteஸ்ரீராம்பாடிக் கேட்க ஆசை என்றேன் ஆனால் அவர்வேறு ஏதோசொல்கிறார்
Deleteபதிவு எழுதாததால் வந்த கற்பனையை ரசிக்க முடிந்தது. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக படம் வரைந்து பாருங்களேன். பிடித்த பொழுதுபோக்கு என்கிறீர்கள். மனதுக்கும் உற்சாகமாக இருக்கும்.
ReplyDeleteபதிவுக்கு விஷயம்கிடைக்கவில்லை என்றால் இப்படிஏதாவது மொக்கை தேறலாம் ஓவியம்வரைந்து பார்க்க வேண்டும் ஆனால் தொடங்குவதுதான் பிரச்சனையே
Deleteஎப்படியோ, எதையாவது எழுதி, எங்களைப் படிக்க வைத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்! வாழ்க உங்கள் நெஞ்சுரம்! -இராய செல்லப்பா சென்னை
ReplyDeleteபதிவுகளில் மொக்கைகளுக்கே மவுசு என்று தெரிகிறது நெஞ்சுரம் இல்லாவிட்டால் என்றோ ஓடிப்போயிருப்பேன்
Deleteஉங்கள் சேவை, வலைஞர்க்குத் தேவை!
ReplyDeleteஉண்மைதானே சொல்கிறீர்கள் உமேஷ்
Deleteஓவியங்களைப் பார்த்தாலே, நாமும் ஒன்று தீட்டவேண்டும் எனப் பரபரக்கும் உங்களது மனம் உன்னதமானது.
ReplyDeleteதீட்டவேண்டுமென்னும் ஆசை நிஜம் ஆனால் அது வெற்றி பெறுமா தெரியவில்லை சார்
Deleteஎழுதாவிட்டால் என்ன நிகழும்.. யோசனையின் விளைவாய் விளைந்த கற்பனை அருமை ஐயா...
ReplyDeleteபிள்ளையார் அழகு.
தொடர்ந்து மொக்கை போட முடியுமா தெரியவில்லை குமார்
Deleteதொடர்ந்து எழுதுங்கள் உங்களின் ஒவ்வொரு பகிர்வும் தன்நம்பிக்கையூட்டும் உற்சாக வழிகாட்டிக்கருத்துக்கள் ஐயா!
ReplyDeleteதன்னம்பிக்கையோடுதானே எழுதுகிறேன் விளைவு சரியானால் மகிழ்ச்சியே
Deleteவாழ்க உங்கள் சேவை..
ReplyDeleteவளர்க தங்கள் வலைத் தளம்..
ஏதோபொழுது போக்கு சேவையானால் சந்தோஷம்
Deleteஆஹா அருமை.. உங்களுக்குள்ளிருக்கும் நகைச்சுவை உணர்வு போஸ்ட்டில் எட்டிப் பார்க்கிறது.
ReplyDeleteஎனக்கு நகைச்சுவை உணர்வு உண்டுமெல்லப் புன்சிரிப்பாக இருக்கும் ரசிப்பேன் ரசிக்க வைக்க முயற்சி செய்ய வேணும்
Deleteசார் முதலில் உங்களுக்கு எங்கள் இருவரின் வணக்கங்கள். எதற்கு என்றால் இந்த வயதிலும் இளம் வயதைப் போலச் சிந்திப்பதற்கு. ஆம் இந்த ஆர்வம் எத்தனை வயதானவர்களுக்கு இருக்கும் சொல்லுங்கள்? வரைதலில், ரசித்தலில்....என்று...
ReplyDeleteபாடல் அருமையான பாடல் ஸார். வரையுங்கள். இங்கு அதைப் பற்றிப் பதியுங்கள் உங்கள் ஓவியங்களைக் காணக் காத்திருக்கிறோம். உங்கள் ஆர்வங்களைப் பாராட்டுகிறோம். எழுதுங்கள் முடிந்த போதெல்லாம். வாழ்த்துகள் சார்.
கீதா: மேற்சொன்ன எங்கள் இருவரின் கருத்துடன்... கர்நாடக இசை ராகங்களில் அந்த ராகம் பளிச்சென்று தெரியும் வகையில் நிறைய பாடல்கள் உள்ளன. மலையாளத்திலும் நிறைய உள்ளன. அங்கு எப்படியும் சராசரியாக ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு பாடலேனும் ஒரு ராகத்தில் அமைகிறது. படம் முழுவதுமே கர்நாடக இசையுடன் ஆன பாடல்கள் நிறைந்தும் வருகின்றன அங்கு எடுபடுகிறது. ஆனால் அப்படி தமிழ்நாட்டில் வந்தால் எடுபடுமா என்று தெரியவில்லை.
//ஆனால் அப்படி தமிழ்நாட்டில் வந்தால் எடுபடுமா என்று தெரியவில்லை// இருந்தன, இன்னும் சில இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் டண்டணக்க தான் பிரபலம்! :)))))
Deleteதில்லையகத்தாருக்கு இனி வரைந்தால் ஒவ்வொரு மூவையும் பதிய விருப்பம் சிந்தனைக்கு வயதுண்டா சார் /மேம் நானும் அவ்வப்போது மலையாளப்பாடல்கள் கேட்பேன் இப்போதெல்லாம் அவர்களும் தமிழ் சினிமா உலகைக்காப்பி அடிக்கிறார்கள் எனக்கு செம்மீனினில் வரும்மானச மைனே பிடிக்கும்
Deleteகீதாமேம் இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்க்சளே புரிவதில்லை நீங்கள் சொலவ்து போல் டண்டணக்கா தான் அதுதானிளமையைக் குறிக்கிறதோ
Deleteகற்பனை ரொம்ப நல்லாருக்கு சார். ரசித்தோம்..இருவருமெ
ReplyDeleteநீங்களுமா கீதா /துளசி நன்றி
Deleteநல்ல கற்பனை:)!
ReplyDeleteஓவியம் மிக அழகு. மீண்டும் முயன்றிடுங்கள்.
முயற்சிக்கிறேன் மேம் வருகைக்கும் உக்கத்துக்கும் நன்றி
Delete‘எழுதாவிட்டால் என்னதான் நடக்கும்?’ என கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்படியோ வாசகர்களாகிய எங்களுக்கு எதையோ இழந்ததுபோல் இருக்கும்.. உங்களது அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteதங்களின் கைவண்ணத்தில் உருவான விநாயகார் ஓவியம் அருமையாக இருக்கிறது. ஓவியம் தீட்ட திரும்பவும் முயற்சிக்கலாம்.
முயற்சி செய்ய வேண்டும் ஐயா
Deleteநல்ல கற்பனை!!
ReplyDeleteவருகைக்கு நன்றி மேம்
Deleteநீங்கள் எழுதாவிட்டால் பதிவர்களின் விசாரிப்புகள்/கேள்விகள் உங்கள் மின்னஞ்சலை நிறைத்து உங்களை
ReplyDelete(மகிழ்ச்சியில்/உணர்ச்சிப்பெருக்கில்) திக்குமுக்காடச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் முதல் வருகையிலேயே என்னைப் பற்றி கணித்ஹு விட்டீர்களா சார்
Deleteஉங்களது எழுத்தும், கற்பனையும் போட்டி போட்டுக்கொண்டு எங்களுக்கு அதிக கற்பிதங்களைத் தருகின்றன.
ReplyDeleteஎன் எழுத்தல் ஏதாவது நிகழ்ந்தால் சரி வருகைக்கு நன்றி சார்
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் ஐயா
ReplyDeleteமுடிகிறவரை எழுதிக் கொண்டே இருப்பேன் நன்றி சார்
Delete