Monday, October 21, 2019

பதிவு எப்படி



                                பதிவு எப்படி ஒரு தொகுப்பு
                               --------------------------------------------

என்னென்னவொ எழுதி யாயிற்று  சாதாரணமாக உபயோகத்தில்  இருக்கும் சில செய்திகள் என்ன வென்று பார்க்கலாம்  பெரும்பாலும் தெரியாதது அல்லது நினைவில் வராதது  பசி வந்தால் பத்தும் பறந்துபோம்
மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
-
அவ்வை பாட்டியின் நல்வழி பாடல்.

1.மானம்
2.
குலம்
3.
கல்வி
4.
வண்மை
5.
அறிவுடைமை
6.
தானம்
7.
தவம்
8.
உயர்ச்சி
9.
தாளாண்மை
10
காமம்
ஆயகலைகள் 64 என்று கேள்விபட்டிருக்கிறோம்   அந்த 64 கலைகள்தான் என்ன் என்ன
1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2.
இலிகிதம் - எழுத்தாற்றல்
3.
கணிதம் - கணிதவியல்
4.
வேதம் - மறை நூல்
5.
புராணம்தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7.
நீதி சாஸ்திரம் - நய நூல்
8.
ஜோதிடம் - கணியக் கலை



9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10.
யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11.
மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12.
சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13.
சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.
வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15.
உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16.
இதிகாசம் - மறவனப்பு
17.
காவியம் - வனப்பு
18.
அலங்காரம் - அணி இயல்
19.
மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20.
நாடகம் - நாடகக் கலை
21.
நிருத்தம் - ஆடற் கலை
22.
சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23.
வீணை - யாழ் இயல்
24.
வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25.
மிருதங்கம் (மத்தளம்)
26.
தாளம் - தாள இயல்
27.
அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28.
கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29.
இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30.
கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31.
அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32.
இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33.
பூமிப் பரிட்சை - மண்ணியல்
34.
சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35.
மல்யுத்தம் - கைகலப்பு
36.
ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37.
உச்சாடனம் - ஓட்டுகை
38.
வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39.
மதன சாஸ்திரம் - மதன கலை
40.
மோகனம் - மயக்குக் கலை
41.
வசீகரணம் - வசியக் கலை
42.
இரசவாதம் - இதளியக் கலை
43.
காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44.
பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45.
கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46.
தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47.
காருடம் - கலுழம்
48.
நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49.
மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50.
ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51.
பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52.
ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53.
அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54.
இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55.
மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56.
அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57.
ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58.
வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59.
திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60.
வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61.
சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62.
கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63.
கட்கத்தம்பம் - வாட் கட்டு
64.
அவத்தைப் பிரயோகம் - சூனியம்


அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல் :

எண் - தமிழ்க் கலை - வடசொல் - English Word

1.
பாடல் - கீதம் - Song
2.
இன்னியம் - வாத்யம் - Music Instruments
3.
நடம் - நிருத்யம் - Dance
4.
ஓவியம் - சித்ரம் - Drawing Instruments
5.
இலைப் பொட்டுக் கத்தரிக்கை - பத்ர திலகம் - Art of leaf-cutting design
6.
அரிசிப் பூக்கோலம் --- Art of rice-powder drawing
7.
பூமளியமைக்கை -- ---
8.
ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை --- Art of colouring for cloths
9.
பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை -- Art of embedding gems in bedrooms
10.
படுக்கையமைக்கை - மஞ்சம் - Art of bed-making
11.
நீர்க்கிண்ண இசை - ஜலதரங்கம் - Art of making music with watter-filled cups
12.
நீர்வாரியடிக்கை --- Art of water-sparying
13.
உள்வரி - வேடங்கொள்கை - Art of Camaflage
14.
மாலை தொடுக்கை --- Art of making garlands
15.
மாலையணிகை --- Art of wearing Garlands
16.
ஆடையணி சுவடிக்கை --- Art of make-up with clothes
17.
சங்கினால் காதணி -- Art of making ear-rings with shells
18.
விரை கூட்டுகை --- ---
19.
அணிகலன் புனைகை --- Art of self make-up
20.
மாயஞ் செய்தல்- இந்திர ஜாலம் - Art of magic
21.
குசுமாரரின் காமநூல்நெறி - கௌசுமாரம் - Kousumar's art of kamasutra
22.
கைவிரைவு - ஹஸ்த லாவகம் - Speedy hands
23.
மடைநூல் - பாக சாத்திரம் - Art of cooking
24.
தையல் வேலை --- Art of Stiching.
25.
நூலால் வேடிக்கை -- Art of magic with strands
26.
வீணையுடுக்கைப் பயிற்சி - வீணை டமருகப் பயிற்சி - Art of handling Veena Instrument
27.
விடுகதை - ப்ரேளிகை - Art of Riddling
28.
ஈற்றெழுத்துப் பாப்பாடுகை - அந்தாக்ஷரி - Art of Play Singing(last words)
29.
நெட்டுரு சொற்றொடர் --- Art of playing with words
30.
சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை --- Reading with music rythm
31.
நாடக உரைநடை - வசனம் - Prose
32.
குறித்தபடி பாடுகை - ஸமஸ்யா பூரணம்- To sing from the word given
33.
பிரம்பால் பின்னுதல் --- Art of Caning chair objects
34.
கதிரில் நூல் சுற்றுகை --- Art of hand-spinning
35.
மரவேலை --- Carpentry
36.
மனை நூல் - வாஸ்து சாத்திரம் - Art of house construction
37.
காசு, மணி நோட்டம் - கனக,ரத்ன பரிட்சை - Gemology
38.
நாடிப் பயிற்சி - தாது வாதம் - Human Pulse reading
39.
மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் --- Gemology/geology
40.
தோட்டக் கலை --- Horticulture
41.
தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு --- Cock/Bull fights
42.
கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை --- Art of teaching parrots
43.
உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை --- Art of ordinary/oil massage
44.
குழூவுக்குறி - சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை - Cryptography
45.
மருமமொழி - ரஹஸ்ய பாஷை - Code wording
46.
நாட்டுமொழியறிவு - தெசபாஷையுணர்வு - Linguistics
47.
பூத்தேர் அமைக்கை - புஷ்பரதம் - Decorating Chariat with flowers
48.
முற்குறியமைக்கை - நிமித்தம் - Observing Superstitions
49.
பொறியமைக்கை --- Making of traps
50.
ஒருகாலிற் கொள்கை - ஏகசந்தக்ராகித்வம் - With one leg
51.
இருகாலிற் கொள்கை - துவிசந்தக்ராகித்வம் - With two legs
52.
பிதிர்ப்பா விடுக்கை --- Singing about fore-fathers
53.
வனப்பியற்றல் - காவ்யம் - Writing Story songs
54.
உரிச்சொல்லறிவு - நிகண்டுணர்ச்சி - Idioms and Phrases
55.
யாப்பறிவு --- Writing poems
56.
அணியறிவு - அலங்காரம் - Sense of dressing
57.
மாயக்கலை - ஜாலவித்தை - Art of Magic
58.
ஆடையணி திறன் - உடுத்தற் சாமர்த்யம் - Sense of dresses
59.
சூதாட்டம் --- Gambling
60.
சொக்கட்டான் - கவறாட்டம் முதலியவை - Gambling with dice
61.
பாவை, பந்து வைத்தாடுதல் --- Playing with dolls / balls
62.
யானை/குதிரையேற்றம் - கஜ/துரக வாகனாதிகள் - Art of riding horse/elephant
63.
படைக்கலப் பயிற்சி --- Armed Combat
64.
உடற் பயிற்சி - தேகச் சதுர் - Physical Exercise

முன்காலத்தில் பெண்களை பருவ வாரியாக விவரித்தார்கள்
> பேதை : 1 முதல் 8 வயது வரை
> பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...
> மங்கை : 11 முதல் 14 வயது வரை...
> மடந்தை : 15 முதல் 18 வயது வரை...
> அரிவை : 19 முதல் 24 வயது வரை...
> தெரிவை : 25 முதல் 29 வயது வரை...
> பேரிளம் : பெண் 30 வயது முதல்.
 ஆண்களை விட்டு விட முடியுமா ..
Top of Form
Bottom of Form
1---7 பாலன்
8---10 மீளி
11—14 மறவோன்
15 திறவோன் 
16  விடலை
17  30 காளை
30க்கு மேல் முதுமகன்
 முக்கிய வைபவங்களில்  முக்கியமாக திருமண்ம் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறார்கள்  16 பிள்ளை  செல்வங்கள் அல்ல பின் என்னவாம் 
1.      கல்வி
2.      புகழ்
3.      வலி
4.      வெற்றி
5.      நன் மக்கள்
6.      பொன்
7.      நெல்
8.      நல்லூழ்
9.      நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொநுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

 அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)
1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி 
முன் காலத்தில்பெண்களை வகைப்படுத்தி  இருந்தனர் 
நான்கு சாதிப் பெண்கள் (பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.
சித்தினி
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.

சங்கினி
பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.
அத்தினி
அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

இந்தப்பதிவாவது உபயோகமுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்   









29 comments:

  1. நல்ல சேமிப்பு.   

    முப்பதுக்கு மேலேயே முதுமகனா?   ஹா...   ஹா...     

    ReplyDelete
    Replies
    1. முப்பதுக்கு மேல் முதுமகன் என்றால் வேறு அர்த்தம் இருக்கலாம்

      Delete
    2. ஶ்ரீராம்... ஆமாம் முப்பதுக்கு மேல் முதுமகன்தான். அப்போல்லாம் 40-60 இறப்பு நேரிடும் அல்லவா.

      இன்னொரு வித்த்தில் அடல்ட் என்றும் பொருள் கொள்ளலாம். ஆண்கள் மெச்சூர்டாக ஆவது 25களுக்கு மேல்தான்.

      Delete
    3. முதுமகன் என்றால் மசூர்ட் என்று அர்த்தம்கொள்ளலாம் இதுவும் சரியாக இருக்கலாம்

      Delete
  2. நல்ல பதிவு. தமிழ் வகுப்பில் படித்தவை!

    ReplyDelete
    Replies
    1. நான் எல்லாம் பள்ளியில் படிக்காதது மேலும் தெரியாததை தெரிந்து கொள்ளவும் தெரிந்ததைநினைவூட்டவும்தானே இப்பதிவு நன்றி

      Delete
  3. ஆஹா எல்லா விடயங்களுமே சேமித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு நல்லவைகளே ஐயா மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அடிக்கடி கேள்விப்படும் செய்திகள் விளங்கி கொள்ளலாம் அல்லவா

    ReplyDelete
  5. சூப்பர் சார். அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள்! சேமித்து வைக்க வேண்டிய பதிவு!

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் சேமிக்கும் வகையில் பதிவாக்கினேன்

      Delete
  6. ஏற்கனவா தெரிந்தவைகள் ஆனாலும் உருப்படியான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தது நினைவில் இருக்காதே

      Delete
  7. 10 + 64 + 64 + 16  ஆகிய இவற்றை எப்படித்தான் நீங்கள் நினைவில் வைத்திருந்தீர்களோ? வியப்பாக இருக்கிறது. உபயோகம் உள்ள விவரங்கள். Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நினைவிலிருந்து அல்ல ஐயா தேடி எடுத்தவை

      Delete
  8. Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  9. Replies
    1. அதற்குத்தானே இந்த மெனக்கடல்

      Delete
  10. அருமையான தொகுப்பு ஐயா ! பாராட்டுகள்!

    ReplyDelete
  11. நன்றி தேடாமல் இருக்க சேமிப்பில் வைக்கலாம்

    ReplyDelete
  12. நல்ல பதிவு சார். சில தெரியாதவை. சேமித்து வைத்துக் கொண்டுவிட்டேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதற்குத்தானே தொகுத்துஇருக்கிறேன்

      Delete
  13. இதில் கற்றவை சில. தெரிந்தவை சில. மறந்து போனவற்றுடன் அறியாதவை பல. அறியாதவற்றை அறியவும் அறிந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும் உதவியது.

    துளசிதரன்

    ReplyDelete
  14. //..இந்தப்பதிவாவது உபயோகமுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன் //

    ஏன் இப்படி ஒரு சந்தேகம்? இதுவரை நீங்கள் எழுதிய ஆயிரத்தில், உபயோகமானது இல்லாமலா இருந்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உபயோகத்தை புரிந்து கொண்டவரும் உண்டு

      Delete
  15. வாங்க துளசி சார் உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  16. படித்துவிட்டு, பாதுகாக்கப்படவேண்டிய பதிவு. நன்றி ஐயா.

    ReplyDelete
  17. vவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  18. நல்ல தொகுப்பு.

    ReplyDelete