வீடு கட்டிய வரலாறு
நான் பப்லிக் செக்டர் கம்பனியில்வேலையிலிருந்ததாலும் பணியில் இருக்கும்போது
குவார்டார்ஸ் இருக்கும் என்பதாலும்
சொந்த வீடு பற்றி நான் நினைக்கவே இல்லை
விஜய வாடாவில் இருந்தபோது என்மாமியார்
மாமனார் தொந்தரவு தாங்காமல் 1979 ல் ஒரு மனை
வாங்கிப்போட்டென் என் எண்ண அலைகளே வேறு மாதிரி இருந்து இந்தியரின்
சராசரி வயது 60 க்கும்
குறைவு என்பதாலும் வீடுகட்டுமளவுக்கு என்னிடம் பணம் இல்லாததாலும் கடன் வாங்குவது உடன் பாடாக இல்லாததாலும்
வீடு அனாவசியமென்னும் நினைப்பே இருந்ததுசொந்த
வீடு உள்ளவனுக்கு அது ஒன்றே இருக்கும் இல்லாதவனுக்கு எங்கும் வசிக்கமுடியும் என்றெல்லாம் நினைத்தேன் மீண்டும் திருச்சி வந்த போது நண்பன் ஒருவன் நான்நினைப்பதுதவறு என்று என்னவெல்லாமோ கூறிஎன்னை சொந்த வீடு கட்ட
வைத்தான்முதலுக்கு எங்கே போவது நான் இருந்ததோ திருச்சியில் மனையோ பெங்களூரில்அப்போது மனை இருந்த இடம் சிடிக்கு
வெளியில் சுற்றி இருந்தஇடம் ஒரே பொட்டல்வெளி
அப்போது தண்ணீர் வசதியு இருக்கவில்லை ஆகவே முதலிலொரு ஆழ்கிணறு தோண்ட வேடிய அவசியம் நேர்ந்தது
இருக்கும் மனையில் எங்கு தோண்டுவது எங்கு தண்ணீர் வரும் என்று எதுவும் தெரியாது மனையின் ஓர் ஓரத்தில் தோண்டு வதே சரியாய் இருக்கும் வாட்டர் டிவைனர் உத்வி நாடலாம்
என்றார்கள் நான்குளிக்கும் போதுவேண்டு நீர் நிலைகள் நான் குறிக்கும் இடத்தில் பிரவாகிக்கட்டும் என்றுவேண்டி
ஓர் இட்த்தை என்மனைவி காட்டினாள் அது மனையில்
வீடுகட்டதொந்தரவு இல்லாமல் இருந்தது சுமர் 90 அடி ஆழத்தில் பாறை தென்பட்டது இன்னு சிறிது ஆழத்தில் நீர் வந்தது 150 அடி ஆழம்
வரை தோண்டச் சொன்னோம் நீர் நல்ல இனிப்பாக இருந்தது60 அடிக்கு 30 அடி மனை அத ந்நடுவே ஒரு சின்ன வீடு என் வடிவமைப்பில் வளர்ந்தது
நாங்கள் இருந்ததோதிருச்சி வீடோ பெங்களூரில் மாதம் ஒரு முறை வருவோம் வீடு படிப்படியாக உருவாவதை
கண்டோம்வீடு கட்டின் காண்ட்ராக்டர்நம்பக மானவராய் இருந்தார்
எப்படியோ 1979 ல் வாங்கிய மனையில்
1985ல் வீடு வந்தது வீட்டை வாடகைகு
விட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்வீட்டின் ஸ்பெஷாலிடியே
கார் போட்டிகோ தான் கான்டி லிவெர் டைப் போர்டிகோ நீண்டு தொங்குவது போல் இருக்கும் வீட்டுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே தந்தையின் பெயரோடு ஐஸ்வர்யமாகவும் இருக்க மஹாதேவ்ஐஸ்வர்யா என்று பெயர்சூட்டினோம்
பின்என்
மூத்தமகனுக்கு திருமணம் 1991ல் நடந்தது வேலையும் பெங்களூரில் இருந்ததால் சொந்த வீட்டுக்கே குடி வந்தனர்
(தொடரும் )
![]() |
| வீட்டில் போர் போடும்போது எடுத்த படங்கள் |
(தொடரும் )
