திங்கள், 24 ஜூன், 2019

நான் க ற்றது பெற்றது etc


                             நான் கற்றது பெற்றது  etc/
                             ---------------------------------------

கற்றதும்பெற்றதும்  என்றாலேயே பலருக்கும்  எழுத்தாளர் சுஜாதாதான் நினைவுக்கு வருவார் மற்றவர்கள் எல்லாம் கற்றுப் பெற்றுக் கொண்டது இல்லையா
   ஒரு பதிவின் பின்னூட்டத்தில்  திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!
மறுபடியும் முதலில் இருந்து
கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையேmanifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில்‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்தது, ஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .

இந்த சேவல் சண்டையைப் பாருங்களேன் கொசுராக 

   


வியாழன், 20 ஜூன், 2019

சுவிஸ் நேர வங்கி


                            சுவிஸ் நேர வங்கி
                                 ------------------------


சுவிட்சர்லாந்தில்  ஒரு மாணவன்படித்துக் கொண்டு  இருந்தான்  அவன் சொன்னது
“ படிக்கும் பொது பள்ளியின்  அருகேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருந்தேன்
அதன் உரிமையாளர்  ஒரு 67 வயதுமூதாட்டி தனியே இருந்தார்  ஓய்வு பெறும் முன்  ஒரு பள்ளியில் ஆசிரியையாக  இருந்தவர்  சுவிட்சர்லாந்தில் நல்ல ஓய்வூதியம்  உண்டு  எதற்கும் கவலைப்பட வேண்டாம்  இருந்தும்   அந்த மூதாட்டி  ஒரு 87 வயது  முதியவரைபார்த்துக் கொள்ளும் பணியில் இருந்தார்
இனியும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்டேன்  நான்  பணம் சம்பாதிக்க உழைக்க வில்லை என்னுடை ய நேரத்தை வ்ங்கியில் இடுகிறேன்  வயசாகி என்னால் முடியாத போது  அந்த நேரத்தை நான் வித்ட்ரா  செய்யலாம் நேர வங்கி என்பது நான் புதிதாக தெரிந்து கொண்டேன் இன்னும்  தெரிந்து கொள்ள  மூதாட்டியை விளக்கம்   கேட்டேன்
 மக்கள் நேரத்தை வங்கிகளில் சேமித்தார்கள்
 உடல் உழைக்க தயாராய் இருக்கும்போது  வயதான முடியாதவர்களுக்கு   பணி புரிந்தார்கள்  அவர்கள் வயதாகும் போது சேமித்த நேரத்தை தேவைக்கேற்றபடி  வித்ட்ரா  செய்யலாம் இது சுவிஸ் ஃபெடெரல் மினிஸ்ட்ரி  ஆஃப்  சோஷுயல் செக்யூரிடி  யால்  ஏற்படுத்தப்பட்டது இள வயதில்  செய்யும் சேவை வயதானபின் உதவலாம் இதற்கு அப்ளை செய்பவர் உடல் நலமோடும் அன்புடன் பழகுபவராகவும் இருக்க வேண்டும்  தினமும் அவர்கள்  தேவைப்படும்   முதியோரை கவனித்துக் கொள்ள வேண்டும்அப்படி அவர்கள் உழைக்கும் நேரம்   அவர்களது நேரவங்கிக் கணக்கில்  வைக்கப்படும்  என் வீட்டு சொந்தக்கார மூதாட்டி வாரம் இருமுறை  இரண்டு மணிநேரம்  வயதானவருக்கு பணிவிடைசெய்யும் பணியில் இருந்தார் முதியோரிடம்  பேசுவது அவர்களை வெளியே அழைத்துச் செல்வதுஅவர்கள்  இடத்தை  சுத்தப்படுத்துவது போன்றவையே முக்கியமான பணிகள்
அவர்களது ஒப்பந்தப்படி சோஷியல் செக்யூரிடி ஏஜென்சி ஒரு வருடம் கழித்து எத்தனை மணிநேரம்  வங்கி கணக்கில் இருக்கிறதுஎன்று   கணக்கிட்டுச் சொல்வார்கள்
ஒரு நாள் பள்ளியில் நான் இருந்தபோது மூதட்டி விழுந்து அடிபட்டுக் கிடக்கிறார்கள் என்னும் செய்தி வந்து பதறி போய் மருத்துவமனைக்குச் சென்றேன் மூதாட்டி நேர வங்கிக்கு நேர வித்ட்ராவலுக்கு  அப்ளை செய்திருந்தார் இரண்டு மணி நேரத்துக்குளவரைப் பராமரிக்கநேரவங்கி ஒரு நர்சுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் உடல் நலம்பெற்றபின்  மூதாட்டி  மீண்டும்வேலைக்குச்செல்லத்துவங்கினார் நேர வங்கியில் சேமிக்க
சுவிட்சர் லாந்தின்  இந்த கான்செப்ட் நம் நாடுகளிலும்  முறைப்படுத்தினால் நலமாய் இருக்கும் 

கண்டு களிக்க ஒரு காணொளி     



திங்கள், 17 ஜூன், 2019

பகிர்வுகள் சில



                                            பகிர்வுகள் சில
                                          --------------------------


கம்பனி சேர்மன்  வாராந்திர மீட்டிங் ஒன்றில் பங்கு பெறும்போது  ஒரு தொழிலாளி  முக்கியமான ஒரு பிரச்சனையைக் கிளப்பினார்  சுத்தம் சுகாதாரம்  என்று பேசும் போது அதிகாரிகளின் கழிப்பிடங்கள் சுத்தமாகவும் தொழிலாளிகளின்   கழிப்பிடங்கள்நன்றாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்  சேர்மன் ஒரு உயர் அதிகாரியிடம் சரிசெய்ய எத்தனை நாள் பிடிக்கும் என்று கேட்டார் உயர் அதிகாரி ஒரு மாதத்தில் சரிசெய்யலாமென்றுகூறினார்
 சேர்மன்  ஒரு நாள்போதும் என்று சொல்லி என்னிடம் ஒரு கார்பெண்டரை அனுப்புங்கள என்றார் அடுத்தநாள் வந்த கார்பெண்டரிடம் கழிப்பிட போர்டுகளை இடம்மாற்றச் சொன்னார்  தொழிலாளிகள் கழிப்பிடத்தில் அதிகாரிகள் என்னும் போர்டும் அதிகாரிகள் கழிப்பிடத்தில் தொழிலாளிகள் என்னும் போர்டும் இடம் மாறின வாராவாரம் போர்டுகளை மாற்றச்சொல்லி உத்தரவும்பிறப்பிக்கப்பட்டத்து
மூன்று நாட்களில்  இரண்டு கழிபிடங்களும் ஒருபோல மின்னின  லீடர்ஷிப் என்பது அதிகாரியாய் இருப்பதை விட முக்கியமானது
 இதில் இருக்கும் படிப்பினை
- _Problem identification requires critical thinking_
*But*
- _Problem solution requires creative thinking_


உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது

மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!

எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!

இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்..

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்.

 டெல்லியில்  எந்தக்  காரை எடுத்துப்போவதுஎன்று தெரியாதவர்  அதிகம்
 துபாயில் எந்தமனைவியை  கூட்டிப் போவது என்பது தெரியாதவர் அதிகம் 
லா வெகாசில்  யாருடைய மனைவியை  அழைத்துபோவது என்பதே சங்கடம்   இடத்துக்கு ஏற்ற மாதிரிபிரச்சனைகள்
 பெங்களூரில்  எந்த சாலையில் போவது என்பதே  கேள்விக்குறி 





மைசூரில் இந்த சுவாமிஜிகளின் ஆசிரமத்துக்குச்சென்றிருக்கிறேன் ஆனால் அப்போது இது பற்றி தெரிந்திருக்கவில்லை  ஒரு வித்தியாசமான சாமியார் ஆர்நிதாலஜ்ஸ்ட்  கோமதி அரசு இதை ரசிப்பார் என்று நம்புகிறேன்  
கீழே காணும்   வீடியோ ஒரு பாட்டு பாடுபவரால் ஈர்க்கப்பட்டேன் பாடறியேன் ராகமறியேன்  தாளம் அறியேன் இருந்தும் பாட்டுஈர்த்தது நீங்களும்  ரசிப்பீர்கள் 


  
தந்தையர் தின நினைவாக எந்தந்தை +சிற்றன்னை  சேர்ந்தெடுத்தபுகைப்படம் 1943 ல் எடுத்தது  பதிவிடுகிறேன்

தந்தை தின நினைனவாக