மகளிர் தினம்
----------------------
இன்று 8-3- 2020 மகளிர் தினம்
இன்று காலை என் மனைவிக்கு happy womens day என்று வாட்ஸ் ஆப்பில் செய்திகள்வந்திருந்தது அவள் same to you என்று பதில் அனுப்பினாள் இதில் தமாஷ் என்னவென்றால் அனுப்பியவர்களில் ஆண்களும் இருந்தனர் jokes
apart நான் விழித்ததும் அவளுக்கு வாழ்த்து
சொன்னேன் மகளிர் தினத்தில்
வலைப்பதிவுகளில் இருக்கும் தாய்க்குலங்களைப்
பற்றி எழுதலாம் என்னும் எண்ணமும் வ்ந்தது
தமிழ் வலை உலகில் எனக்கு தெரிந்த என்னை அறிந்த பெண் பதிவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் நான் அறியும்பெண்வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் என்பக்கமே
வருவதில்லை வலைக்கு வருவது டூ வே ட்ராஃப்ஃபிக் அல்லவா முன்பெல்லாம் பலரும் என்தளம் வருவார்கள்
பலரையும்நினைவு கூர இது ஒருசந்தர்ப்பம்
அல்லவா இப்பொது என் பதிவுகளில் காணும் பெண்பதிவர்கள் அவர்களைப் பற்றிந எழுதும்போது என்னையும் மீறி அவ்ர்கள்
பற்றிய கருத்துகளூம் வந்து விழலாம் no
offence meant அது என்சுபாவம் பாணி என்பதைப்பலரும் அறிவார்கள் குடத்திலிட்ட விளக்காய் இருப்பவரை
குன்றின் மேல் ஏற்றும்என் முயற்சி
மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப்
பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன்.
ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ உள்ளத்தின் அடியில் பெண்களை
சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய
நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே
கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின
நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ்
பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான்
எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில்
சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள்
பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும்
துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக்
கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை. நான் பார்த்துப்
பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும்
பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்
1)கீதா சம்பசிவம் நான்நேரம் எடுத்துசந்தித்தபதிவ்ர் ஸ்ரீரங்கவாசிதுறை
போகியவர் என்று பெயரெடுத்தவர் பழங்கதைகளை இண்டர்ப்ரெட்
செய்யும்விதமே அலாதி எதையுமே அவருக்கு நேர்ஃந்த
அனுபவம்போல் சொல்வார்ஒரு முறை திருமணம் பற்றிய
கருத்து தெர்விக்கும்போது ஆண்பெண் திருமண்மே இருவர் இணைவதற்கு மட்டுமான லைசென்ஸ் மட்டுமல்ல அதை
யும் தாண்டி புனிதமானதுஎன்பது போல்கருத்து
தெரிவித்திருந்தார்அவரிடம் என்க்குப் பிடித்த விஷயமே ஒரு அதாரிடி போல் சொல்வதுதான் வெகுகாலமாக பதிவு எழுதி வருபவர் சமையல்விஷயங்களில் அவருக்கு
இல்லாத அனுபவமே இல்லை போல் இருக்கும்
செல்வி மாதங்கி மஹாலிங்கம்
சென்னையில் இரு முறை என்னை சந்திக்க வந்தவர் ஐ டி பணியில் இருந்தவர் இப்போது
அடைவங்கிப்பணியில் இருப்பவர் முன்பெல்லம் என் தளட்துக்கு தவறாமல் வருவார் வர மறந்தாலு அப்பா வரவழைப்பாராம் முகநுலில் த லோன் லி பேர்ட் என்னும்கவிதை எழுதி இருந்தார் அதை நான் தமிழ்ப்படுத்தி எழுதியதை மிகவும்சிலாகித்து எழுதி இருந்தார் என்ன இருந்தாலும் தனக்கென ஒரு வழியில் செல்பவர்
செல்வி அருணாசெல்வம் கவிதையில்
மட்டுமே எழுதுகிறார் ஆரம்ப காலத்தில் இவர் ஆணா பெண்ணா என்னும் கேள்வி இருந்திருக்கும்போல நான் அவரதுஆரம்பகாலத்தில்
இருந்தே தொடர்கிறேன் ஃப்ரான்ஸ் தேச வாசி என்று
நினைக்கிறேன்
தேனம்மை லக்ஷ்மண்ன் இப்போது போட்டி போட்டு நூல்களை மின் பதிவாக்குகிறார்என்னைக் காணவருவதாக் எழுதி இருந்தார் பலமுறை பெங்களூர் வந்தும் இன்னும் சந்தித்தபாடில்லைநாட்டுக்
கோட்டை பற்றியும் அவர்கள்கோவில்கள்பற்றியும் எழுதி இருக்கிறார் என்னிடம் அவருடையசாட்டர்டே போஸ்டுக்காக எழுதக் கேட்டுஇருந்தார்
கொடுத்திருந்தேன் திருமதி துளசி கோபால் நியூசி யில் இருப்பவர் ஆனால் பெரும்பாலும் க்ஷேத்ராடனம்தான்
எனக்கு அவர் தேர்ந்ஹெடுக்கும்கோவில்கள் பெரும்பாலுவிஷ்ணு கோவில்களாக இருப்பதால் அவருக்கு வைணவ bias இருக்குமோ என்னும் எண்ண்ம் வருவதுண்டு எல்லாமேநம்பிக்கைதான் என்று
எண்ணுபவர்டீச்சர் என்று அறியப்படுகிறார் ஏன் என்றுஇன்னும் தெரியவில்லை இவரை ஒரு முறை
என் வீட்டிலும் இன்னொருமுறை மதுரை பதிவர் விழாவிலும் சந்தித்து இருக்கிறேன்பழக இனிமையானவர்என் வீட்டுக்கு வந்ததை சிங்கத்தின் குகையில்
என்று எழுதி இருந்தார்
அதிரா ஏஞ்செல் இருவரும் எனக்கு
அறி முகமானதே தமாஷாகதான் என் மீசையே என் அடையாளம் அதைப்பார்த்துன் என்னோடு தொடபு கொள்ள தயங்கினார்களாம்அவர்களதுபடமோ
முகவரியோ என்னிடம் கிடையாது நகைச்சுவை என்று நினைத்து எழுதுவதை ரசிக்கபலருண்டு
இன்னொரு ஆதிரா உண்டு கல்லூரியில்
ஆசிரியை சென்னையி ல் என்னை சந்திப்பதாக இருந்தார் ஏனோ முடியவில்லை சாதனைகள் பல புரிந்து அதனால்பேரும் புகழும்பெற்றவர் இயற்பெயர்பானுமதி
தென்றல் சசிகலாவை நான் புதுகை
பதிவர்சந்திப்பில்பார்த்தேன் என்னை அறி முக்ப்படுத்தி தெரிகிறதா என்று கேட்டபோது
எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால் என்னுள் நிறைந்தவள் நீயே யன்றோ என்னும்
நான் எழுதிய வரிகளைச் சொல்லி என்னைபிரமிக்க வைத்தார்
திருமதி உமாமோஹன் பதிவுகள் ஒன்றாக வராது ஒருகாஸ்கேட்போலவரும்
அவர் எழுத்டி லெவலே வேறு இதுவரை
நான் கருத்திட்டது இல்லை
திருமதி பவள சங்கரி
நித்திலம் தளத்துக்குஉரிமையாளர் திருஅப்பாதுரை
மூலம் தெரிந்தவர் இவர்கள்தவிரான்புடன் ம்ல்லிகா சாகம்பரி போனறோரை பதிவுகளில் நான் பார்க்கவில்லை அவ்சரவருக்கு ஒரோர் பாணி
திருமதி கோமதி அரசுநான் மயிலாடுதுறையில்
சந்தித்தேன் மல்லிகைப் பூ பொல் இட்லி கொடுத்து அசத்தி விட்டார் நான் தமாஷாக இவரை ஒரு ஆர்நிதாலஜிஸ்ட் என்பேன் பறவைகள் மேல் அவ்வளவுபாசம் வேதாத்திரி சுவாமிகள் மேல் அத்தனை அபிமானம் அதென்னவோ
தெரிய வில்லை நான் சந்தித்த பதிவர்கள்பல்ரும் என்னிலும் மிகவும் மாறு பட்டவர்கள்
இதைதான் opposite poles attract என்கிறார்களோ
பானுமதி வெங்கடேஸ் வரன் இப்போதெல்லாம் காணொளி
மூலம் அவ்வப்போது பதிவிடுகிறார் திரைப்படசெய்திகள்விரல்
நுனியில்
தில்லையகத்து கீதா துளசிதரனுடன் சேர்ந்து இயங்கு கிறார் தற்போது பெங்களூர் வாசி பதிவு பக்கமே வருவதில்லைஎதையும் சுருங்கச் சொல்ல
மாட்டார்