Saturday, July 21, 2012

நான் ஒரு ஹிந்து.


                                                          நான் ஒரு ஹிந்து
                                                          -------------------------

என்னால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்  எழுத முடிகிற அளவுக்கு கிடைக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறதா.? உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு ”நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம். என் எண்ணங்களுக்குத் துணை போவதால் இந்தப் பதிவு பகிர்வு. 


கென்னடி விமான நிலையத்திலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோ விமான நிலையத்துக்குப் பறந்து கொண்டிருந்தேன். என் அடுத்த இருக்கையில் ஒரு அழகான அமெரிக்கப் பெண் கையில் பைபிள் புத்தகம். அமெரிக்க யுவதி  பைபிள் படிப்பது எனக்கு சற்று வினோதமாகப் பட்டது.சிலமணிநேரப் பயணம் என்பதால் பரிச்சயப் படுத்திக் கொண்டேன்.நான் இந்தியாவிலிருந்து வருவதாகக் கூறினேன். அவள் உங்கள் நம்பிக்கை எது என்று கேட்டாள் புரியவில்லை என்றேன்.’  உங்கள் மதம் ( RELIGION)  எது ? நீங்கள் கிருஸ்துவரா, இஸ்லாமியரா?

நான் ‘ இரண்டும் இல்லை என்றேன்.

“ அப்படியானால், நீங்கள் யார் ?
நான் ஒரு ஹிந்து
 
ஒரு சராசரி அமெரிக்கருக்கோ, ஐரோப்பியருக்கோ, கிருத்துவமும். இஸ்லாமுமே கேள்விப் பட்டதும் பிரதானமுமான மதங்கள்.
“ ஹிந்து என்ன.?

நான் அவளுக்கு விளக்கினேன். “நான் ஒரு ஹிந்து தந்தைக்கும் ஒரு ஹிந்து தாய்க்கும் பிறந்ததால் பிறப்பாலேயே ஒரு ஹிந்து “

உங்கள் மத குரு யார்?

“மதகுரு என்று யாரும் கிடையாது.

“உங்கள் புனித நூல் எது.?

எங்களுக்கு புனித நூல் ஒன்று என்று ஏதும் கிடையாது. நூற்றுக்கணக்கான வேதாந்த எண்ணங்களும் எழுத்துக்களும் அடங்கிய நூல்கள் ஏராளம் உண்டு

“ உங்கள் கடவுள்தான் யார் என்றாவது சொல்லுங்களேன்.

“ என்ன சொல்ல வேண்டும் என்கிறீர்கள். 
எங்களுக்கு ஏசுவும், இஸ்லாமியருக்கு அல்லாவும் இருப்பதுபோல் உங்களுக்கு என்று கடவுள் கிடையாதா.?

நான் ஒரு சில வினாடிகள் சிந்தித்தேன். கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒரு கடவுள் ( ஆண் ) இந்த உலகை சிருஷ்டித்ததாகவும் அவர் இவ்வுலகில் வாழும் மனிதர்கள்பால் அக்கறை கொண்டுள்ளவர் என்னும் போதனையில் வளர்ந்தவர்கள்.ஹிந்துமதம் குறித்து அறியாதவர்களுக்கு ஒரு மதகுரு, ஒரு புனித நூல், ஒரு கடவுள் என்னும் கோட்பாடு தவிர மற்றவை புரிந்து கொள்ள முடியாதது, தெரியாதது.

நான் அவளுக்கு விளக்க முயன்றேன்.ஒருவன் ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்

இந்தமாதிரியான எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத ஒரு மதம் மாற்றாரின் தாக்குதலைதாங்கி இத்தனை வருடங்கள் இருக்க முடியுமா என்னும் வியப்பு அவள் முகத்தில் தெரிந்தது
 

“ வித்தியாசமாகவும் இண்டெரெஸ்டிங் ஆகவும் இருக்கிறது நீங்கள் பக்தி உள்ளவரா.?

நான் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்வதில்லை. எந்த வழிபாட்டு முறையையும் செய்வதில்லை. சின்ன வயதில் செய்திருக்கிறேன்.இப்போது  சில நேரங்களில் செய்யும்போதும் விரும்பிச் செய்கிறேன்.மகிழ்ச்சியாக இருக்கும்.

“ விரும்பிச் செய்கிறீர்களா.? கடவுளிடம் உங்களுக்கு பயம் இல்லையா.?

“ கடவுள் ஒரு நண்பர். அவரிடம் பயம் ஒன்றுமில்லை. மேலும் இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாரும் எப்போதும் கட்டாயப் படுத்துவதில்லை.“

சிறிது நேர யோசனைக்குப் பிறகு மதம் மாற வேண்டும் என்று எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா?என்று கேட்டாள்.

நான் ஏன் மாற வேண்டும்.? எனக்கு சில சடங்குகளும் கோட்பாடுகளும் உடன் பாடில்லை என்றாலும் என்னை யாரும் மத மாற்றம் செய்ய முடியாது. ஹிந்துவாக இருப்பதால் எனக்கு சுதந்திரமாக சிந்திக்கவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகவும் முடியும். எந்தக் கட்டாயத்தின் பேரிலும் நான் ஹிந்துவாக இல்லை. விரும்பியே இருக்கிறேன்.

நான் அவளுக்கு விளக்கினேன். ஹிந்துயிஸம் என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறியும் முறையும் என்று. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் போல் எந்த ஒரு தனி மனிதராலும் தோற்றுவிக்கப் படவில்லை. எந்த அமைப்போ குழுவோ சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை

“ அப்படியானால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.?

“ நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு தெய்விக சக்தியை மறுத்து ஒதுக்கவும் இல்லை. எங்கள் நூல்கள், ஸ்ருதிக்களும், ஸ்மிருதிக்களும், வேதங்களும், கீதையும் உபநிஷத்துக்களும் கடவுள் இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்றே கூறுகின்றன. ஆனால் நாங்கள் எங்கும் நிறைந்த, சர்வ சக்தி மிகுந்த அந்த பரப் பிரும்மத்தை இந்த பிரும்மாண்டத்தை சிருஷ்டி செய்தவராக வணங்குகிறோம்.

“ நீங்கள் ஏன் ஒரு தனிப்பட்ட கடவுளை வணங்கக் கூடாது.?

எங்களுக்கு கடவுள் என்பது ஒரு கோட்பாடு. நம்பிக்கை. விவரிக்க இயலாத எங்கும் விரவி இருக்கும் அரூபம். ஒரு குறிப்பிட்ட கடவுளின் பின் மறைந்து அவரை நம்பாவிட்டால் தண்டனைஎன்றெல்லாம் பயமுறுத்தி அவரை வணங்க வைக்க அவர் ஒன்றும் கொடுங்கோலர் இல்லை. பயத்தையும் மரியாதையையும் திணிப்பவர் அல்ல. ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களை ஏமாற்றி , மூட நம்பிக்கைகளை வளர்த்து ,மதம் குறித்த சிந்தனைகளையே தடம் மாறச் செய்பவர்களும் அவர்கள்போதனையில் மயங்கி ஏமாறுபவர்களும் இருக்கலாம். ஆனால் வேதாந்த ஹிந்துமதம் இவற்றை எல்லாம் மறுதளிக்கிறது.

“ நல்லது கடவுள் இருக்கலாம் என்று நம்பி வழிபடுகிறீர்கள். வேண்ட்வும் செய்கிறீர்கள்..உங்கள் வேண்டுதல்தான் என்ன.?

லோக சமஸ்த சுகினோ பவந்து. ஓம் ஷாந்தி ஷாந்தி.”( அமைதியுடன் வாழ்க வையகம்.)

“ வியப்பாயிருக்கிறது. இந்த வேண்டுதலின் பொருள் என்ன. ?

இந்த உலகும் அதில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் எங்கும் அமைதி நிலவட்டும்

இந்த மதம் பற்றிய விஷயங்கள் ஆர்வத்தை கிளப்புகிறது. ஜனநாயக முறையில் இருக்கிறது.பரந்த விசாலமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

“ உண்மையில் ஹிந்துயிசம் என்பது வேதங்களிலும் பகவத் கீதை போன்ற நூல்களிலும் வேர் விட்டுக் கிளர்ந்த ஒரு தனி மனிதனின் மதம்..அவனது வாழ்வியலுக்கும், எண்ண ஓட்டத்துக்கும் சித்தாந்தங்களுக்கும் ஈடு கொடுத்து அவன் விரும்பும் பாதையில் அவனுடைய கடவுளை அடைய வழி வகுக்கும் மிக எளிமையான மதம்

“ ஒருவன் ஹிந்து மதத்துக்கு மாறுவது எப்படி.?
“ யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி
எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனையும் அவனது சிருஷ்டியையும் நேசிப்பதேஅவனைத் தேடும் முயற்சியின் முதல் படி. இசவஸ்யம் இதம் ஸர்வம் ( ISAVASYAM  IDAM  SARVAM ) எங்கும் நிறைந்திருக்கும் அவனை எதிலிருந்தும் பிரித்து அறிய முடியாது. உயிருள்ள மற்றும் ஜடப் பொருளை கடவுளாக மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது ஹிந்துயிசம் .அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது. வாழ்வின் நியதிகளைக் கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது. அவனவனுக்கு உண்மையாக இருப்பதே முக்கியமாகக் கருதப் படுகிறது.ஹிந்துயிசத்தில் கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரமில்லை. எல்லோருக்கும் பொதுவானது. ஹிந்துக்கள் ஒரு ஆண்டவனை பல உருவங்களில் பல நிலைகளில் வழிபடுகிறார்கள் அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
எம்மதமும் சம்மதமே என்றே முன்னோர்கள் அறிவிறுத்தினர். ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது.



நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.  
  
    ( ஆங்கிலத்தில் இருந்த பதிவைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன்.) 
      ------------------------------------------------------          .





34 comments:

  1. //யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.” //

    அருமை. அதுவே உண்மை.

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  3. உரையாடல் மூலம் நல்ல கருத்துக்களை தெளிவாக விளக்கி விட்டீர்கள்... நன்றி !

    ReplyDelete
  4. மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்துக்கள்!

    ReplyDelete
  5. \\ஒருவன் ஒரு கடவுளை நம்புபவனாக, ஹிந்துவாக இருக்கலாம். பல கடவுள்களை நம்புபவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளையே நம்பாதவனும் ஹிந்துவாக இருக்கலாம். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம்” \\


    இறை மறுப்புக் கொள்கையுடைய என் மாமனாரும் இதே கருத்துக்களை முன்வைத்து இந்து மதத்தினைப் புகழ்வது எனக்கு வியப்பளிக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  6. யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ’ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி’

    அருமையான வரிகள் ஐயா. அனுபவச் சாறு

    ReplyDelete
  7. யாரும் யாரையும் ஹிந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு மதமே அல்ல. அது ஒரு வாழ்வியல். பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. அதற்கு எம்மதமும் சம்மதமே. சரி தவறு என்று கூறும் யாருடைய அதிகாரத்தின் கீழும் அது இல்லை. வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மதம் விட்டு மதம் மாறவோ, ஒரு குருவை விட்டு இன்னொரு குருவை வழி காட்ட நாடவோ தேவை இல்லை உண்மையைத் தேடுபவனுக்கு பைபிளிலேயே வழி காட்டப் பட்டிருக்கிறது. ’ஆண்டவனின் அரசு உன்னுள்ளேயே இருக்கிறது. உன்னைப் போல் அடுத்தவனையும் நேசி’

    அருமையான வரிகள் ஐயா. அனுபவச் சாறு

    ReplyDelete
  8. ஆஹா ஹிந்து மதம் பற்றிய தெளிவான விளக்கங்கள் ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. என்ன கொடுமை. ஹிந்துயிசம் என்று சொன்னவர்கள் இன்று ஹிந்து என்பவர் ஒரு மதமே இல்லை என்று சொல்வது. "தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குபவற்போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள்தான் உங்களுக்கு நல்ல புத்தியை தரவேண்டும். ஒரு சகோதரனின் வேண்டுகோள்தான் இது.

    ReplyDelete
  10. நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
    யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.”


    அருமையான விளக்கம்
    தெளிவான விரிவான பதிவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. தரமான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  12. It sounds really strange when someone tries to explain hinduism to someone who has no idea about it.
    but one aspect of the post - the reply which the author had given- i liked was- hinduism is not a religion- but a way of life, not a form of thought... very well made comment.
    i am no expert on religion- nor am i interested in it. it's a sad concept which has led to the butchering of this country and still continues to do so.
    problem arises when we feel the "necessity" for religion. people don't understand difference between spirituality and religion (aanmeegam and matham). the day they would realise it- would be the day that would change the fate of this world!

    ReplyDelete
  13. ஹிந்து மதம் குறித்து இப்போது மேற்கில் பலருக்குத் தெரிய ஆரம்பித்து விட்டன, ஹிந்து மதம் என்பதை விட இது இந்திய மதங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் பௌத்தம், சமணம், சீக்கியம் அடங்காதே. ஹிந்து மதம் என்பது வேதங்களை ஏற்கும் மதங்களின் தொகுப்பு எனலாம். ஆனால் வேதம் ஓதாமல் இருக்கும் நாட்டுப்புற வழிபாடும் இருக்கே. இருந்தாலும் வேதங்களை அவை எதிர்ப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை ..

    ஹிந்து ஒரு வாழ்க்கை முறை என்றுக் கூட சொல்ல முடியாது .. ஹிந்து பல இந்திய வாழ்க்கை முறைகளின் தொகுப்பு .. உத்தராஞ்சலில் இருக்கும் ஹிந்துவும் திருவாங்கூரில் இருக்கும் ஹிந்துவும் ஒரே வாழ்க்கைமுறையா வச்சிருக்கான் .. இல்லையே.

    ஹிந்துக்களுக்கு ஒருக் காலத்தில் ப்ரம்மா என்ற ஒற்றைக் கடவுளும் வேதம் என்ற புனித நூலும் இருந்தது தான் .. ஆனால் அவையாவும் இந்திய சமயங்களோடு கலந்து கலந்து ஹிந்து சமயங்களாக மாறிவிட்டன.

    ஜெய்ன், புத்தம், சீக்கியம் என்பது ஹிந்துவில் அடங்காது .. அவர்களும் அதனை ஏற்பதில்லை . ஜெய்ன், புத்தத்தில் கடவுள் கொள்கையே இல்லை. அது நாஸ்திக மதங்கள். இருந்தும் ஜெய்ன், புத்தமும் மதங்கள் கிடையாது அவையும் வாழ்க்கைமுறைகள் தான். ஹிந்துக்களிடம் இருந்து சற்றே வேறுபட்ட இந்திய வாழ்க்கைமுறைகள்.

    ReplyDelete
  14. //யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.” //

    அப்படி சொல்லிவிட முடியாது. பலரால் பல இடங்களில் தோற்றுவித்த அலகுகளை ஹிந்து என ஒன்றாக நாம் அழைக்கின்றோம். அவ்வளவே !

    ReplyDelete
  15. // நான் ஒரு ஹிந்து. அஹிம்சையில் நம்பிக்கை கொண்டவன். என் மனதை எந்த கோட்பாட்டுக்கும் கட்டுபடுத்தாததால் நான் ஒரு ஹிந்து. பிறப்பில் இருக்கும் மதத்தை மாற்ற விரும்புபவர்கள் போலிகள். வாழ்வின் மதிப்பீடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்காதவர்கள்.
    யாராலும் தோற்றுவிக்கப் படாத அனாதி மதம் ஹிந்துமதம்.அதில் பிறந்த நான் பெருமிதம் கொள்கிறேன்.”//
    மிகச் சரியாகச் சொன்னீர்கள். சத்தியமான வார்த்தைகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ரொம்ப தைரியமான கருத்துக்கள் சார்...அருமையான பதிவு

    ReplyDelete
  17. இந்துமதம் இந்திய மதமா?
    இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது?

    அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

    >> மேலும் படிக்க

    .

    ReplyDelete
  18. இந்து மதம் ஒரு வாழ்வியல் என்பது மிகச் சரி.
    இந்து மதத்தில் பல கடவுள்கள் என்பது மனிதனின் பல குணங்களின் பிரதிபலிப்பு என்றே கருதுகிறேன். மேலாக, இம்மாதம் லௌகீக வாழ்க்கையையும் பேசுகிறது; பிரமச்சரியத்தையும் பேசுகிறது!

    ReplyDelete
  19. ஒவ்வொரு மதத்திற்கும் பன் முகங்கள். அவரவர் அவரவர்க்கு ஏற்றவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். உங்கள் சிந்தனையும் ஆழ்ந்த சிந்தனை.

    ReplyDelete
  20. நாத்திகர்களாலும்,மதவெறியர்களாலும் வலையில் எங்கு கண்டாலும் இந்து மதத்தை தாக்கித்தான் பதிவுகள் இருக்கும் வேளையில் ஒரே..ஒரு பதிவு எந்த தாக்குதலும் இல்லாத அஹிம்சை பதிவு!

    ReplyDelete
  21. @ கோபு சார்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ வரலாற்றுச் சுவடுகள்,
    @ கீதமஞ்சரி,
    @ கரந்தை ஜெயக்குமார்,
    @ லக்ஷ்மி,
    @ ரமணி,
    @ மாதங்கி மாலி,
    @ நாகசுப்பிரமணியம்,
    @ தி.தமிழ்.இளங்கோ
    தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    @ விஜயகுமார்,
    @ அப்துல் அஜிஸ் அப்துல் சத்தார்,
    @ த க்விக்ஃபாக்ஸ்,
    @ மணிமாறன்,
    @ இக்பால் செல்வன்,
    @ அருண் அம்பி,
    @ தமிழன்.
    @ வீடு சுரேஸ்வர்
    அநேகமாக முதன் முறையாக வருகை தந்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இங்கு ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிக்கியம், ஜைனம், புத்தம் போன்ற மதங்களின் வேர் இந்த சனாதன மதம்தான். இதில் நிலவிய சில ஒவ்வாத விஷயங்களுக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு போன மக்களே
    அவர்கள்.ஹிந்து என்ற சொல்லே மேலை நாட்டவரால் குறிப்பிடப்பட்டு வழக்கில் வந்து விட்டது.எனக்கு நல்ல புத்தி தர வேண்டும் சகோதரனுக்கு என் விசேஷ நன்றி.என் மனதில் பட்டதை விருப்பு இருந்தாலும் யாரிடமும் எந்த வெறுப்பும் இல்லாமல் பதிவிட்டிருக்கிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் இங்கு நிலவும் ஏற்ற தாழ்வுகள் எந்த அளவுக்கு என்னை பாதித்து இருக்கிறது என்று.
    /ஆனால் சமீப காலத்தில் நம்பிக்கைகளுக்கு வெறி ஏற்றி சிலரது ஆளுகைக்கும் கட்டுக்கும் கொண்டுவர பிரயத்தனங்கள் நடக்கின்றன. ஆன்மீகத்தை சந்தைப் பொருளாக்கி வியாபாரப் பொருளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து மதமும் விதிவிலக்கில்லாமல் பலியாகிறது./ இதுவும் என் ஆதங்கத்தின் வெளிப்பாடே. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  22. அருமையான பதிவு ஐய்யா..  வலையுலகத்தில் நிலவும் போலி மதவாதிகளுக்கிடையில் சிந்திக்க தூண்டும் பதிவு.

    ReplyDelete
  23. நண்பர் ஒருவரின் அறிமுகப்படுத்தலில் இருந்து வந்தேன் ஐயா...

    நான் மதங்களை ஆதரிக்காத ஒருவனாக இருந்தாலும் தங்களின் கடவுள் மறுப்பில்லாத அத அணுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது...

    ReplyDelete
  24. இக்பால் செல்வன் அண்ணா ஒரு சந்தேகம்...

    பல அலகுகளின் தொகுப்பு தான் இந்து மதமா? அல்லது பல அலகுகளாக பிரிந்துள்ளது தான் இந்து மதமா?

    ReplyDelete
  25. அருமையான பதிவு. யதார்த்தபூர்வமாக வெளிப்படையாக உண்மையை எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  26. இந்து மதம் எப்படிப்பட்டது கிளைபரப்பி விருட்சமாக வளர்ந்துள்ளது. அதன் தாக்கங்கள் மற்ற மதங்களில் உள்ளதை அம்மதங்கள் மறுக்க இயலாது. எனக்கு தெரிந்து இந்து மதம் கற்றுக் கொடுத்ததை அவன் எம்மதம் மாறினாலும் அங்கும் செயல் படுத்துகிறான் என்பதே உண்மை. இம் மதத்தின் தாத்பர்யங்களை அவன் மறப்பதில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  27. @ காட்டான்,
    @ மதிசுதா,
    @ கோபிநாத்,
    @ கலாகுமரன்,
    என் பதிவுக்கு முதன் முறையாக பின்னூட்டமிட்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி. தொடர்ந்து படித்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  28. ஆதியும் அந்தமும் இல்லாதவன் கடவுள்.
    எம்மதமும் சம்மதமே

    சிறப்பான விளக்கங்கள்..

    நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  29. உங்கள் அறிவுரை கேட்டு அந்தப் பெண், இந்துவாக மாறும்பொருட்டு, இங்கு வந்து ஏதாவது (போலிச்சாமியார்) ஆசிரமத்தில் சேர்ந்திருக்கப் போகிறது.

    ReplyDelete
  30. சுட்டிக்கு நன்றி சார். இதைப் படிக்காமல் தவற விட்டிருக்கிறேன்.

    நிறைய விவரமான கருத்துக்கள். இந்து மதத்தை வலுக்கட்டாயமாக வித்தியாசப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.

    இந்து மதம் கடவுள் தொட்டது, தழுவியது - பிற மதங்களைப் போலவே. இந்து மதத்தின் முன்னணிக் கடவுள்கள் சிவா விஷ்ணு சக்தி. இம்மூவரின் ஏதோ ஒரு கிளை அல்லது வழியாகவே அத்தனை இந்து இறையிலக்கியங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

    இந்து மதத்தில் தடுக்கி விழுந்தால் கடவுள் என்பதே உண்மை. அதை ஒரு கடவுளையும் வணங்கலாம், பல கடவுளையும் வணங்கலாம் என்ற யதார்த்த வாதத்துள் வைத்தது உங்கள் சாமர்த்தியம். ரசித்தேன்.

    இந்து மதத்தின் தொன்மை அதன் வலிமை.

    ReplyDelete
  31. சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இன்னொரு மதத்தவருக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள் நன்கிருந்தன. நாணயத்தில் நீங்கள் காட்டிய பக்கம் மிகவும் அருமையான பக்கம்.

    ReplyDelete
  32. // என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு ”நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம்.//

    மதங்கள் எல்லாம் ‘சட்டைகள்’ என்பேன். எந்த சட்டை போட்டால் என்ன .. துணிவு அறிவிலிருந்து வருவது. எனக்கும் கடவுள் என்று ஒன்றும் இல்லை என்றும் சொல்லும் துணிவு உண்டே!

    ReplyDelete