Saturday, August 3, 2013

ஒரு இழப்பும், சில அதிர்வுகளும்





ஒரு இழப்பும் சில அதிர்வுகளும்.
--------------------------------

“ நானு இவங்கப்பாவக் கல்யாணம் கட்டி வந்த போது எனுக்குப் பதினாலு வயசு. வாழ்க்கைல எல்லாத்தையும் பாத்தாச்சும்மா.ஹூம்”- வயதானவர்கள்  சுபாவப்படி, அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி விடுவார்.பொறுமை இருந்தால் பல சுவாரசியமான செய்திகளைக் கேட்கலாம்.இப்போதுதான் ஒரு இடத்தில் எங்கும் போகாமல் நினைவுகளிலேயே காலங்கழிக்கிறார், காலில் சக்கரம் கட்டாத குறைதான். ‘ உம்என்று நினைப்பதற்குமுன் அங்கே ஆஜராகிவிடுவார். இப்படித்தான் ஒரு முறை மகளுக்கு திடீரென்று அப்பெண்டிக்ஸ் ஆப்பரேஷன் என்று இரவு செய்தி கிடைத்தவுடன் இரவோடிரவாக பஸ்ஸைப் பிடித்து அதிகாலையிலேயே அங்கு போய் விட்டார். அவருடைய வரவே பாதி கவலையை போக்கிவிட்டது.

தன் சிறுவயதில் தங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தார் தற்சமயம் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஊருக்குப் போய் துணிமணிகளுடன்  பணமும் கொடுத்து உதவியதோடு நில்லாமல் , சிறு வயதில் உதவியதைக் கூறி நன்றியும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களை அறியாதோரே இல்லை எனலாம். வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து அனுபவித்த அவர் சிரித்துக் கொண்டே உயிர் விட்டது மறக்க முடியாதது.

காலையில் பாத் ரூமுக்குப் போக எழுந்தவர் ( பிறர் உதவி இல்லாமல் எழுவது கடினம் ) சற்றே நிலை தவறி சாய்ந்திருக்கிறார். சாய்ந்தவர் தலையில் சிறிது காயம் ஏற்பட்டு இரத்தம் வழியவே அடுத்து இருந்த மருத்துவர் ( லேடி டாக்டர் ) வரவழைக்கப் பட்டார். அவர் வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டு ஒரு இஞ்செக்‌ஷனும் போட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் தலைக் காயத்தைக் காண்பிக்கச் சொன்னார். இது நேர்ந்ததும் மூத்தமகன் அன்று காலையில் ரயிலில் வர இருந்தவனுக்கு செய்தி போயிற்று. தொலைபேசியில் பிரச்சனை ஏதும் இல்லை, வீட்டுக்குப் போய் நிதானமாக வந்தால் போதும் என்றிருக்கிறார். இரண்டாம் மகனிடமும் சிறிய காயம்தான் கவலை வேண்டாம் என்றிருக்கிறார். ரயில் தாமதமானாலும் மூத்தமகன் வந்தபோது சிரித்துக் கொண்டே , ‘எனக்கேதும் இல்லை கவலை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பேசிக் கொண்டே இருந்தவர் “ என்னவோ செய்கிறது என்று சொல்லவும் மகன் அவரைத் தன் காரில் எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் தன் குறிப்பில் brought dead என்று குறிப்பிட்டு கூடவே head injury என்று எழுதி ஒரு கேள்விக்குறியும் இட்டிருக்கிறார்,இந்தப் பதிவே அதிலிருந்துதான் தொடங்குகிறது.

உடலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாமென்றால், உடலைப் பெற காவல்துறை அனுமதி வேண்டும் என்றார்கள். காவல்துறையினரோ தலையில் காயம் என்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உடலைப் பெறலாம் என்றார்கள். 85 வயது நிரம்பியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தவர்களை பிரேதப் அரிசோதனைக்கு உட்படுத்தல் நியாயமில்லை என்று எவ்வளவோ வாதாடியும் அவர்கள் தலையில் காயம் என்பது சந்தேகத்துக்குரியது. என்று கூறி உடலைத் தர மறுத்துவிட்டார்கள். பின் என்ன.? காவல்துறையினருக்குக் கப்பம் மருத்துவரை கவனிக்க என்றுஅவரவர் கையில் பணம் வைத்து சமாளித்து பிரேதப் பரிசோதனை செய்ததாக மருத்துவச் சான்று வாங்கி உடலை சேதமில்லாமல் பெறுவதற்குள் மாலை மணி ஆறாகிவிட்டது. அந்திமக் கிரியைகள் அடுத்த நாள்தான் சாத்தியமாயிற்று.. இந்த நிலைமை வசதியற்ற ஏழைகளுக்கு நேர்ந்திருந்தால்..? ஒருவரது இழப்பிலும் பணம் பார்க்க நினைக்கும் காவல்துறையினருக்கும் மருத்துவருக்கும் மனசாட்சியே கிடையாதா.?பணத்தின் முன் சட்டம் வளைந்து கொடுப்பதை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா.?

மனம் கனக்கிறது. பொறுக்க முடியாமல் இதை எழுதுகிறேன். உற்றவரின் இழப்பு ஒரு புறம் என்றால் அதன் அதிர்வுகள் வேறு வகையில். நாம் எங்கே போகிறோம்.?
       


   "


     
                              

18 comments:

  1. இவையெல்லாம் மிகவும் வருந்தத்தக்க விஷயங்கள் தான், ஐயா.

    படிக்கும் போதே மனதுக்கு மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  2. இதையெல்லாம் கேட்கும்போது நாக்சலைட்கள் செய்வது நியாயம்தானோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. emotion aside, மருத்துவர் காவல்துறையின் சந்தேகம் நியாயமானது தானே சார்? ஊழல் தான் அவர்கள் பொறுப்பான செயலை அசிங்கப்படுத்துகிறது.

    ReplyDelete
  4. ஒருவரிடம் எவ்வளவு கறக்க முடியும் என்பதை முன்கூட்டியே கூடி முடிவு செய்து கொள்கிறார்கள். சில இடங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிற்கும் இவ்வளவுதான் என்று ரேட் நிர்ணயம் உண்டு. கொடுக்க முடியாதவர்கள் ஊரைக் கூட்டி பத்திரிகை வரை அலம்பல் செய்து விடுகிறார்கள்.

    ஒரு கேள்விக்குறி எங்கெங்கோ சென்று உங்கள் பதிவு வரை வந்துவிட்டது.

    ReplyDelete
  5. மோசமான நிகழ்வுகளைப்பார்த்துப் பார்த்து
    எதையும் சந்தேகப்படும் அவர்களது நிலை
    சில சமயங்களில் இதுபோன்ற சங்கடங்களை
    உண்டாக்கிவிடுவது நிஜம்
    ஆயினும் இது தவிர்க்க இயலாதது எனவே
    கருதுகிறேன்
    ஆயினும் இதில் கொஞ்சம் வசதியானவர்கள் என்றால்
    அவர்கள் அதிகப் பட்சம் பணம் கறப்பதற்காகச் செய்யும்
    பிரயத்தனங்கள்தான் சகித்துக்கொள்ள முடியாதவை

    ReplyDelete
  6. மிகவும் வருந்தத்தக்க நிகட்ழ்வு அய்யா. மனசாட்சி இல்லாத மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  7. வருத்தம் தந்த நிகழ்வு.....


    ReplyDelete
  8. மிகவும் வருத்தப்படும் நிகழ்வு... பணத்திற்கு முன் மனச்சாட்சி உட்பட எதுவும் வேலை செய்வதில்லை... கொடுமை...

    ReplyDelete
  9. மிகவும் வருத்தமாகத்தான் இருக்கின்றது. மன சாட்சி அற்றுப் போன நிலையில் பணம் ஒன்றே பிரதானம் ஆகின்றது. எந்தவகையில் எப்போது தீர்வு இதற்கெல்லாம்?...

    ReplyDelete
  10. படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை கண்ட பின்னே!

    ReplyDelete

  11. @ கோபு சார்
    @ டாக்டர் கந்தசாமி
    @ அப்பாதுரை
    @ தமிழ் இளங்கோ
    @ ரமணி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ வெங்கட் நாகராஜ்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ துரை செல்வராஜ்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    பின்னூட்டங்களுக்கு நன்றி. அப்பாதுரை, ரமணி அவர்களின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.

    ReplyDelete
  12. என்ன அநியாயம் பாருங்க? இந்தியன்ல வந்த சீன் மாதிரி இருக்கு. ஆனால் எல்லா காவல்துறை அதிகாரிகளும் அப்படி இல்லைன்னு நினைக்கறேன். ஆனால் ஒருசிலர் இப்படி மனசாட்சி இல்லாமல் செய்வது அந்த துறையைச் சார்ந்த அனைவரையுமே மனசாட்சி இல்லாதவர்களைப் போல் காட்டிவிடுகிறது. குறிப்பாக உதவி ஆய்வாளர் ரேங்க் வரையிலும்தான் இத்தகையோர் அதிகம் பேர். அவர்கள் காவல்துறையின் முகம். அதுவே இப்படியென்றால் முழுவதுமே அப்படித்தான் என எண்ணிவிட தோன்றுகிறது.

    ReplyDelete
  13. எல்லாரையும் இயக்கும் ஒரு வார்த்தை...காசு,பணம்,துட்டு,மணி.

    ReplyDelete
  14. முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)
    http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html

    தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
    சுப்புத் தாத்தா ( http://subbuthatha72.blogspot.in )
    G M பாலசுப்ரமண்யம் (http://gmbat1649.blogspot.in )
    மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
    ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
    கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
    யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )

    ReplyDelete
  15. கேட்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது.
    மண்டையில் அடிப்பட்டு இறப்பு என்பதால், மருத்துவருக்கும், காவல்துறையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருக்கும்.
    காலம் அப்ப்டி இருக்கே!
    யார் பொய் சொல்கிறார்கள்? யார் உண்மை சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமல் அவர்கள் இருப்பது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete
  16. இது போன்ற சமயங்களில் மனிதாபிமானத்தை சற்றே காட்டினாலும் மனம் குளிரும். ஆனால்... நடைமுறைச் செயல்பாடோ அதையே காரணம் காட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்ள வழிவகுத்துவிடுகிறது. மனத்தை வருத்தும் நிகழ்வுகள்.

    ReplyDelete
  17. I am writing in Eng. as there is no provision for Tamil fonts. Police and Govt. doctor did their duty. Of course, they should not have collected money. But a certificate from the Lady Doctor, who attended earlier would have solved all these problems and misgivings and of course these heart-burns. The money collected by Police and Doctor is not to be tolerated, of course.

    ReplyDelete
  18. சமீபத்தில் கும்பகோணத்தில் இறந்த என் உறவினரை நினைவூட்டியது இந்தச் சம்பவம். அவரும் குளிக்கச் சென்றபோது அல்லது கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற போது அங்கே வழுக்கி விழுந்து இறந்திருக்கிறார். எப்போனு யாருக்கும் தெரியாது. அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் ஹோட்டலைத் தொடர்பு கொண்டு அறை எண் பெற்றுக் கதவை உடைத்துக் கொண்டு உறவினர் உள்ளே சென்று பார்த்திருக்கின்றார்கள்.

    பின்னர் என்ன! வழக்கமான விஷயம் தான். ஆனால் மருத்துவரோ, காவல்துறையோ எழுப்பியது நியாயமான சந்தேகமே. பெயரில்லாத அநானி கூறி இருப்பது போல் முதலில் கவனித்த பெண் மருத்துவரிடம் ஒரு சான்றிதழ் அல்லது அவருடைய ப்ரிஸ்க்ரிப்ஷன் இருந்தால் காட்டி இருக்கலாம். வேறென்ன சொல்வது! :((

    ReplyDelete