Wednesday, November 27, 2013

பார்த்ததும் படித்ததும் பகிர்வு


                          பார்த்ததும் படித்ததும் பகிர்வு.
                           ------------------------------------------


சில நேரங்களில் பதிவு எழுத எண்ணங்கள் ஏதும் தோன்றவில்லையானால் , நான் படித்துப் பார்த்து ரசித்த சில விஷ்யங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றும். இப்போது அந்தமாதிரியான பகிர்வே பதிவாகிறது. முதலில் அமெரிக்க நாசா வினர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப் படங்கள் என் நண்பர் ஒருவர் இ-மெயில் செய்தது

இந்தியா சாதாரண நாளிலும்  தீபாவளியன்றும்




இதுவும் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தது, ஒருவருக்கு திடீர் என்று stroke வந்து விழுந்து விட்டார் என்றால் செய்ய வேண்டிய முதலுதவி என்கிறார்.

ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை உடனே இட மாற்றம் செய்யாதீர்கள். இட மாற்றம் செய்வதால் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பழுதாகலாம், ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை அதே இடத்தில் உட்கார வைத்து, ஒரு சிறிய ஊசியால் அவரது கையின் பத்து விரல்களிலும் நகத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் தூரத்தில்  சுருக் என்று குத்தி ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒரு சொட்டு ரத்தம் ( ஒரு பட்டாணி அளவு ) வர வழைக்க வேண்டும். அப்போதே பாதிக்கப் பட்டவரின் பார்வை தெளிவாகும், ஸ்ட்ரோக்கினால் வாய் கோணி இருந்தால் அவரது இரு காது மடல்களையும் சிவக்கும் அளவுக்குப் பிடித்திழுத்து ஊசியால் குத்தி ரத்தம் ( ஒரு சொட்டு ) வரவழைக்க வேண்டும்  சிறிது நேரத்தில் அவர் சுய நிலைக்கு வந்து விடுவார்

இது சீனாவின் ஒரு பழமையான , ஆனால் குணம் தரும் வைத்திய முறையாம் . எதிர்பாராத விதமாக யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால் முதல் உதவியாக இதைச் செய்வதால் எந்த பாதகமும் ஏற்படாது. ஆனால் ஸ்ட்ரோக்கில் இருந்து குணமடைந்தால் நல்லதுதானே. குத்தும் ஊசி ஸ்டெர்லைஸ் செய்ததாய் இருந்தால் இன்னும் நல்லது.


இப்போது உங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து கீழே காணும் புதிருக்கு விடை கொடுக்க முடிகிறதா பாருங்கள்.

Can you answer all seven of the following questions
With the same word?

1. The word has seven letters....
2. Preceded God...
3. Greater than God...
4. More Evil than the devil...
5. All poor people have it...
6. Wealthy people need it....
7. If you eat it, you will eventually
die.

விடை எல்லாப் பின்னூட்டங்களையும் பார்த்த பிறகு. சரியாக பதில் தெரிவிக்கும் நபருக்கு மேதாவி என்னும் பட்டப் பெயர் தரப்படும். 

பின்னூடங்கள் பார்த்ததும் அதிகம் நேரம் கடத்தாமல் பதில்களைச் சொல்லிவிடுவதே உத்தமம் என்று தோன்றியது திரு .திண்டுக்கல் தனபாலனுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கும் மேதாவி எனும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,திருமதி, இராஜராஜேஸ்வரி ஏற்கனவே என்னிடம் இருந்து GENIUS பட்டம் வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. THE CORRECT ANSWER IS  NOTHING and this is how.

NOTHING!

NOTHING has 7 letters.
NOTHING preceded God.
NOTHING is greater than God.
NOTHING is more Evil than the devil.
All poor people have NOTHING.
Wealthy people need NOTHING.
If you eat NOTHING, you will die.
CONGRATULATIONS DD and MEDAM...! 
    






23 comments:

  1. படங்கள் அருமை. தகவல்கள் பயனுள்ளவை. இதுவரை பாதிக்கு மட்டுமே விடைகள் கண்டு பிடிக்க முடிந்துள்ளது.

    ReplyDelete
  2. சுவையான பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  3. ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு செய்யவேண்டிய முதல் உதவி பற்றி தெரிந்து கோள்ள முடிகிறது. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஸ்ட்ரோக் வந்தவர்களைக் காப்பாற்ற உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவியைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  5. தீபாவளி படம் சூப்பர்...

    முதலுதவி விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    NOTHING

    ReplyDelete
  6. பார்த்ததும் படித்ததும் பகிர்வுகள் பயனுள்ளவை ..பாராட்டுக்கள்..


    nothing ....!தான் சரியான விடை..!

    ReplyDelete
  7. அந்த முதலுதவியைச் செய்யவும் தனித் துணிச்சல் வேண்டும்!

    ReplyDelete

  8. @ கோபு சார்.
    பாராட்டுக்கும் முயற்சிக்கும் நன்றி.

    @ s.suresh
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    @ கோமதி அரசு
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

    @ திண்டுக்கல் தனபாலன்
    உங்களைமேதாவி என்று கூறி வாழ்த்துகிறேன்.

    @ இராஜராஜேஸ்வரி
    புதிர் போட்டி என்றால் மேடத்துக்கு இணை இல்லையோ. இதோஇன்னுமொரு பட்டம் “மேதாவி” வாழ்த்துக்கள்.

    பதிவில் இப்பொது சரியான விடையைஇணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  9. ’மேதாவி’ பட்டம் அளிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அளித்துள்ள தங்களுக்கும் பாராட்டுக்கள், நன்றிகள்.

    THEY DESERVE ! ;)

    ReplyDelete
  10. THEY DESERVE

    FOR THE TITLE & HENCE

    N O T H I N G

    TO WONDER !

    ReplyDelete

  11. @ ஸ்ரீ ராம்
    ஊசி குத்த என்ன துணிச்சல் தேவைப்படும் ஸ்ரீ.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஊசி குத்த குத்துபவருக்கு மனத்திடம் வேண்டும். தான் குத்தி ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ற தயக்கத்தை மீறிய மனத்திடம் வேண்டும். 'அந்த சமயத்தில் பார்த்து கையும் இயங்கவில்லை, காலும் ஓடவில்லை' என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  13. DD சொன்ன மாதிரி தீபாவளிப் படம்-- ஒளி வெள்ளத்தில் இந்தியா-- வெகு அழகு.

    ReplyDelete
  14. இந்தியா ஒளிர்வது
    தீபாவளி நாள்தான் மட்டும்தான் போல
    பார்க்காத புகைப்படம் பகிர்வுக்கு நன்றி

    ஸ்ரோக் குறித்த தகவல் பயனுள்ளது
    அதனை நானும் பகிர்வு செய்துள்ளேன்

    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. படங்கள் அருமை. தகவல்கள் பயனுள்ளவை. நன்றி!
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  16. எதையும் சுவைபட எழுதுவதில் நீங்கள் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  17. @ ஜீவி
    வந்து கருத்துப்பதித்ததற்கு நன்றி. காலில் முள் குத்தினால் ஊசி குத்தி எடுப்பதில்லையா.? ஒரு ’சுருக்’ ஒரு ’குபுக்’ஒரு சொட்டு இரத்தம். அவ்வளவுதான். தேவைப்படும்போது திடம் தானாக வரும்.

    @ டாக்டர் கந்தசாமி
    நன்றி

    @ செல்லப்பா யக்ஞஸ்வாமி
    ஆம் . There is much ado about NOTHING. இந்த நத்திங் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் ஒன்றுமில்லாததிலிருந்து உருவானவையே அத்தனையும் கருத்துப் பதிவுக்கு நன்றி

    @ ரமணி
    வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    @ கோவைக்கவி
    அத்தி பூத்தாற்போல் வருகை நன்றி

    @ டி.பி.ஆர். ஜோசப்
    பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.


    ReplyDelete
  18. தீபாவளி அன்று இந்தியா.... அத்தனை பட்டாசுகள்!

    புதிர்.... ரசித்தேன்.

    ஸ்ட்ரோக் வந்தவருக்கு சிகிச்சை - புதிதாய் தெரிந்து கொண்டேன்.....

    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  19. ஆ! லேட்டா வந்துட்டனே.

    ReplyDelete
  20. ஜொலிக்கும் இந்தியா --- ரசித்தேன். புதிர் விடை இன்னொரு ரசனை. பக்கவாதம் வந்தவர்களுக்கு பயனுள்ள உடனடி சிகிச்சை -- மிக எளிதானதும் அதே சமயம் பக்கவிளைவுகள் ஏதுமில்லாததுமாக இருப்பது சிறப்பு. அக்குபங்க்சர் முறையிலான சீன மருத்துவம் போலும். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete