Monday, April 14, 2014

பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.


                பயணம் - அனுபவங்கள் எண்ணங்கள்.
                ------------------------------------------------------


என் மனைவி( வலமிருந்து இரண்டாமவர்)  தன் உடன் பிறப்புகளுடன்
பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும் . அதுவும் என் சிந்தனைக்கு தீனி போடுவது என்றால் இன்னும் பிடிக்கும். தாய் மொழி எது என்று கேட்டு ஒரு பதிவு எழுதி நான் குழம்பியதல்லாமல் மற்ற வர்களையும் ( ? ) குழம்பவைத்த எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் வந்தது. குலதெய்வம் குடும்பக் கோவில் என்கிறோமே அது எது.எனக்கு என் தந்தையின்  குடும்பக் கோவிலாக பாலக் காட்டில் இருக்கும் மணப் புளிக் காவு என்பார்கள்.எனக்கும் அதுதான் குலக் கோவில் என்று அங்கு என் மனைவி மக்களுடன் சென்று வழிபட்டும் வந்திருக்கிறேன் என் மனைவியின் குலக் கோவில் பரியாம்பத்தக் காவு என்று சொல்லி இருந்தாள். அங்கும் என் பரிவாரங்களுடன் சென்று வந்திருக்கிறேன் இது வரை சரி. இந்த முறை அவள் தந்தையின் குலக் கோவிலுக்கும் அவருடைய தரவாட்டு ( குடும்ப ) வீட்டுக்கும் கோவிலுக்கும் செல்லவிரும்பினாள் . அவளது தந்தையின் இடத்தில் தற்போது வசிக்கும் உறவினர்கள் ( உரிமை இல்லாமலேயே வசிக்கும் ) ஒரு வழிபாடு செய்யப் போவதாகவும் நாமும் அதில் கலந்து கொள்ளஅழைப்பு இருப்பதாகச் சொன்னாள். அவளது உடன் பிறப்புக்ள் அனைவரும் கலந்து கொள்வதாகவும் கூறினாள். உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் ஒரு வழிபாட்டைக் காண எனக்கும் ஆவல் பிறந்தது. அங்கு போனபோது மாங்காட்டுப் பகவதி அவளது தந்தையின் குலதெய்வம் என்றாள், அதுதான் என் சந்தேகத்துக்கு இன்னொரு வித்திட்ட்து. இப்போது குலதெய்வம் குலக் கோவில் என்று எதைக் கூறுவது. எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குலக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க என்னால் முடிவதில்லை. நாளைக்கு என் மக்கள் அவர்களது குலக் கோவில் எது என்று கேட்டால் நான் எதைச் சொல்ல.?என் மூதாதையரின் மணப் புளிக்காவையா, என் மனைவியின் தாய் வீட்டு பரியாம்பத்த பகவதி கோவிலையா.  அவளது தந்தை வீட்டு மாங்காட்டு பகவதி கோவிலையா?  இம்மாதிஎரி குலதெய்வக் கோவில்களை எப்படி நிர்ணயம் செய்வது. இந்த சந்தேகமே என் மாதிரியான காஸ்மோபாலிடன் குடும்பத்தில் எழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் ? பட்டும் படாமல் பதில் சொல்வதைத் தவிர்த்து உங்களுக்குத் தோன்றுவதைக் கூற வேண்டுகிறேன்.
எங்கள் குலக் கோவில் மணப்புளிக்காவில் மனைவி ,பேரன் பேத்தி, மருமகளுடன்
பரியாம்பத்தக் காவு க்ஷேத்திரம்
மாங்கோட்டு பகவதி கோவில்

பரியாம்பத்தக் காவு இன்னொரு கோணம்
மாங்கோட்டு பகவதி கோவில் யானை

இந்தப் பயணமும் ஊரில் நடைபெற்ற வழிபாட்டுச் சடங்குகளும்  அது குறித்த என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இனி ஆரம்பமுதல். , இந்தச் சடங்கில் கலந்து க்ள்ள அழைப்பு என்றதுமே என்ன் இப்போது இந்தச் சடங்கு என்னும் கேள்வியும் எழுந்தது. என் மனைவியின்  தந்தையின் குடும்பவீட்டில் அவரது சகோதரிகளின் வாரிசுகள் வசிக்கிறார்கள். அது பற்றி யாரும் கருத்துக் கூறவுமில்லை, உரிமை கொண்டாடவும் இல்லை. ஆனால் என் மனைவியின் தாயார் அவரது கணவரின் இருக்கும் நிலபுலன்களை விற்கவோ பங்கு போடவோ கூடாதென்பதில் உறுதியாய் இருந்தார். அந்த இடத்தை அனுபவிக்கும் உரிமையில் அவர்கள் “ பானை என்று கூறும் வழிபாட்டுச் சடங்கு செய்வதாய் வேண்டிக் கொண்டிருந்தனர். அதற்கே என் மனைவி மற்றும் உடன் பிறப்புகளுக்கு அழைப்பு. முன்பொரு முறை இந்த மாதிரிஒரு சடங்கைக் கண்டதுண்டு. இதைப் பற்றி கூகிளில் தேடினேன் . எனக்கு எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை. ஆகவே இது பற்றிய ஒரு பதிவினைப் பகிர்ந்து கொள்கிறேன்
 நாங்கள் ஒன்பது பேர் பத்தாம் தேதி காலை எர்ணாகுளம்  இண்டெர்சிடி எக்ஸ்ப்ரெசில் பயணம் செய்ய முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. சடங்கு நடை பெற இருந்த இடம் “ வெள்ளிநாழி “ எனப் பட்டது. அங்கு தங்கும் வசதிகள் குறைவு என்பதால் ஒத்தப் பாலத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஒத்தப் பாலத்தில் நாங்கள் பயணித்த ரயில் நிற்காதாகையால் பாலக்காடு வரை சென்று அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்லவும் நாங்கள் எங்கும் போக்வரவும் 12 இருக்கை கொண்ட வான் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத்தப் பாலத்தில் எங்களுக்கு தங்க “மஹாராஜாஸ் கொட்டாரம் எனப் பட்ட
ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. மதியம் மூன்றரை மணி அளவில் ஹோட்டல் அடைந்தோம். சற்று சிரமப் பரிகாரம் செய்து விட்டு என் மனைவியின் தாயாரின் குலக் கோவிலுக்குச் சென்றோம். எங்களுக்கு எப்பொழுதும் ஒரு ராசி. நாங்கள் பயணிக்கத் துவங்கும் போது மழை வரும் அதேபோல் நாங்கள் சென்றடைந்த இடத்திலும் மழை வரும். நாங்கள் இரு முறை சென்னை சென்றிருந்தபோதும் மழை பெய்து பதிவர்கள் என்னை சந்திப்பதற்கு இடையூறு விளைத்தது. இப்போதும் நாங்கள் பெங்களூரை விடவும் மழை தொடங்கிற்று. மாலை பரியாம்பத்தக் காவு எனப் படும் தேவி க்ஷேத்திரத்துக்குச் சென்றபோதும் மழை பெய்தது. இந்தமழை எங்கள் தொழுகை முடிந்து புறப்படும் நேரத்தில் அடித்துக் கொட்டி வெப்பத்தின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது. அன்றிரவு கொட்டாரத்துக்கு (மாளிகை.?) வந்து உணவுண்டு உறங்கினோம்.

கொட்டார முகப்பில்
கொட்டாரத்தின் முன்னால்
        .  
 . .     மீண்டும் வந்து தொடர்கிறேன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  



   

 





32 comments:

  1. மழை ஒரு நல்ல சகுணம் என்பார்கள்.பயணத்தின் துவக்கத்தில் அது வந்தால் பயணம் தடையில்லாமல் நடக்குமாம். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளதோ தெரியாது. ஆனால் என்னுடைய உறவினர் வீட்டில் எந்த வைபவம் நடந்தாலும் மழை நிச்சயம். ராசி என்பார்கள்!!!

    ReplyDelete
  2. வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு விட்டீர்களே! நான் உங்களைக் காண வரும்போதும் மழை பெய்யுமோ?

    ReplyDelete
  3. அன்புடையீர்..

    இனிய புத்தாண்டு தினத்தில் நானும் - தங்களது குலதெய்வக் கோயிலை தரிசனம் செய்து கொண்டேன்..

    தங்கள் தந்தையாரும் , பாட்டனார், முப்பாட்டனார் - என தங்களுடைய முன்னோர்கள் வணங்கி நின்ற கோயிலே, உங்கள் வீட்டுக்கு குலதெய்வம்.

    உங்களுடைய ஆண் வாரிசுகள் வணங்க வேண்டியது - தங்களது பாட்டனும் முப்பாட்டனும் கும்பிட்ட மணப்புளிக்கா க்ஷேத்ரத்தையே!..

    உங்கள் மனைவியின் தந்தை வீட்டு குலதெய்வ க்ஷேத்ரத்தை அல்ல!..

    //எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குல தெய்வக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க என்னால் முடிவதில்லை.//

    உங்களால் மட்டுமல்ல யாராலும் முடியாது. ஏனெனில் குலதெய்வம் என்பது ஒரு நிலையில் தங்களது முன்னோரே ஆவர்.

    குலதெய்வக் கோயிலில் விநாயகர் இருப்பார். ஆனால் , விநாயகர் குலதெய்வமாக ஆகி விடமாட்டார்.


    குலதெய்வ வழிபாடு பல காலமாக கைவிடப்பட்ட நிலையில் - அடுத்து வரும் ஏதாவதொரு தலை முறையினர் வழிபட விரும்பினால்,

    குலதெய்வம் இருக்கும் இடம் எது எனத்தெரியாமலும் அத்தெய்வத்தின் தன்மை எது எனத் தெரியாமல் அல்லாடும் போதும் பிரச்னையை சுலபமாகத் தீர்க்க வேண்டி,

    பிள்ளையாரைக் கும்பிடுங்க என்றோ பெருமாளைக் கும்பிடுங்க என்றோ சுட்டிக் காட்டப்பட்டு அதுவே தொடர்கின்ற நிலையில் தான் - சிலர் கூறுகின்றார்கள் - எங்களுக்கு பிள்ளையார் குலதெய்வம்.. என்று!..

    பெண்களுக்கு திருமணம் ஆனதும் - அவருக்கு - அவரது கணவர் வீட்டு குலதெய்வமே உரிமையானது.

    தலைக்கட்டு பூஜைகள் அங்கேதான் தொடங்குகின்றன. எனவே - தாங்கள் தங்களுடைய மாமனார் வீட்டு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வரலாமே தவிர, அந்தக் கோயில் தங்களுக்கு பாத்யப் பட்டதாக ஆகாது!...

    குலதெய்வ கோயில் எந்த ஊரில் இருக்கின்றது என அறிய முடியாமல் இருந்தால் - கண்டறியவும் வழிகள் இருக்கின்றன.

    அப்பா.. மூச்சு வாங்குகின்றது. ஏதேது!.. தனியாக ஒரு பதிவே போடலாம் போலிருக்கின்றதே!..

    ReplyDelete
  4. தங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்மை சேர்க்கும் ஆண்டாக மலர வழி செய்யட்டும் மிக்க நன்றி ஐயா .
    இறைவனும் தங்களுக்கு நல்லாசி வழங்க வணங்குகின்றேன் .

    ReplyDelete
  5. பல செய்திகளை தங்களின் பயணம் மூலமாகத் தெரிந்ததோடு பல இடங்களுக்கும் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. இதுபோன்ற வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறான வாய்ப்பை எங்களுக்குத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா... தந்தை, தந்தை வழி பாட்டனார் வகையில் எந்த தெய்வத்தைக் கும்பிடுகிறார்களோ அதுவே குலதெய்வம். என் குல தெய்வம் பற்றிப் படிக்க:

    http://schoolpaiyan2012.blogspot.com/2013/11/blog-post_27.html

    ReplyDelete
  7. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  8. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...ஆலய தரிசனம் அருமை !

    ReplyDelete

  9. திரு துரை செல்வராஜ் செல்வராஜ் அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகின்றேன். தங்களுடைய முன்னோர்கள் வணங்கிய கோவிலே உங்களது குலக் கோவில்.

    ReplyDelete
  10. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    குலதெயவமும் கோத்திரமும் கணவரின் தந்தை வழியே வரவேண்டுமாம்..

    சில கோவில்களில் பெண்களை குல தெயவ வழிபாட்டுக்கு அழைத்து மரியாதை செய்யும் போதும் பிரசாதம் என்று படைக்கும் புடவைகள் அந்த இல்லத்து மருமகள்களுக்கு மட்டுமே உண்டு..

    தலைக்கட்டு வரி என்று அந்த குடும்பத்து ஆண்வாரிசுகளிடமிருந்து மட்டுமே பெறுகிறார்கள்..

    இதன் மூலம் அந்த குலதெய்வத்திற்கும் கோத்திரத்திற்கும் மருமகள் இணைக்கப்பட்டு விடுகிறார்..

    அந்த இல்லத்தில் பிறந்தமகள் விருந்தாளியாக்கப்பட்டு மனதளவில் தன் புகுந்த இல்லத்தின் குலதெய்வத்தை ஏற்கவும், கோத்திரத்திற்கு மாறவும் தயாரிக்கப்படுகிறாள்..

    ஒரு கிளையை விட்டால்தானே அடுத்த கிளையை உறுதியாகப் பற்றமுடியும்..!
    தன் பிறந்த குடும்பத்தின் கோத்திரத்தையும் குலதெய்வத்தையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொண்டு மனதளவில் புகுந்த வீட்டு உறவுகளையும் அடையாளங்களையும் ஏற்க தயாரிக்கப்படுகிறாள் பெண்..

    ReplyDelete

  11. @ டி.பி.ஆர்.ஜோசப்
    முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார். சில நேரங்களில் பயணத்துக்குப் புறப்படும் நேரத்தில் மழை வரும்போது ராசியை நினைத்து சலிப்பே வருகிறது.

    ReplyDelete

  12. @ டாக்டர் கந்தசாமி
    கவலை வேண்டாம் ஐயா. நாங்கள் பயணத்துக்குப் புறப்படும்போதுதான் மழை வருமே தவிர யாராவது எங்கள் வீட்டுக்கு வரும்போதுஅல்ல. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜூ
    வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. என் சென்ற பதிவையும் இதையும் வாசிக்கும்போது சற்று கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் என் கேள்வியின் தாத்பர்யம் புரியும்.நான் மணம் செய்திருப்பது வேற்று மொழி வேற்று சாதிப் பெண்ணை. என் மக்களுக்கு மணம் செய்தபோதும் அதே மாதிரி நேர்ந்து விட்டது. அவர்கள் வழக்கப் படி matriarchy க்கே முதலிடம் . மருமக்கத்தாயம் என்பார்கள், நீங்கள் கூறி இருப்பது ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும் இனத்துக்கும் சாதிக்கும் ஏற்புடையதாகலாம் என் வீட்டுப் பழக்க வழக்கங்களை நான் திணிப்பதாகக் கூடாது. அப்படி இருக்கும் போது அவள் அவளது தந்தை வீட்டுக் குலக் கோவில் என்று கூறியதே என் இப்பதிவின் எண்ணங்களுக்குக் காரணம்

    ReplyDelete

  14. @ அம்பாளடியாள்
    இந்த ஜெய வருடத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டுகிறேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  15. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இதனைத் தொடரும் பதிவில் நான் கண்ட சில சடங்குகள் பற்றியும் பகிர்கிறேன் . வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  16. @ ஸ்கூல்பையன்
    சில வழக்கங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. என் சந்தேகமே எங்கள் குடும்பம் போல் இருந்தால் எது உகந்தது என்பது பற்றியே. திரு .துரை செல்வராஜுக்கு எழுதீருக்கும் என் மறு மொழியைப் பார்க்கவும் உங்கள் பதிவை நான் முன்பே படித்திருக்கிறேன். மீண்டும் ரிஃப்ரெஷ் செய்ய படிப்பேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ நண்டு@ நொரண்டு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இந்த இனிய ஜெய வருடம் அனைத்து நலங்களையும் நல்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

  18. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இன் இனிய தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்

    ReplyDelete

  19. @ தனிமரம்
    உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி. இதன் தொடரையும் வாசிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete

  20. @ வே. நடன சபாபதி.
    வருகைக்கு நன்றி ஐயா. திரு செல்வராஜுக்கு அளித்த மறுமொழியை வாசிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete

  21. @ இராஜ ராஜேஸ்வரி
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. பொதுவாகக் குலதெய்வ வழிபாடுகள் பற்றியும் குடும்பத்தில் வரும் பெண் இணைக்கப் படுவதும் தெரிந்ததே. ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்துவது இல்லை. இதுதான் இது என்று திணிக்க மனம் ஒப்புவதில்லை. ஆகவே சந்தேகங்கள் நிவர்த்தி அடைவது கடினமே.

    ReplyDelete
  22. எங்கள் குலதெய்வம் கோவில் கும்பகோணம் அருகே ஒரு சிற்றூர். வருடத்துக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்பார்கள். நான் சென்று வந்து 15 வருடங்கள் ஆகின்றன.

    ReplyDelete
  23. எங்கள் மாமனார் வீட்டுக்குலதெய்வம் கருவிலி அருகிலுள்ள பரவாக்கரை மாரியம்மன். வருஷத்துக்கு மூணு முறையாவது போய்விடுவோம். அப்பா வழியில் மேல்மங்கலம் கிராமத்திலுள்ள படாளம்மனும், தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மனும். அங்கேயும் இரு முறை எங்கள் குழந்தைகளோடு போய் வந்தோம். ஒரு பரிகார நிவர்த்திக்காக.

    ReplyDelete
  24. .. தந்தை, தந்தை வழி பாட்டனார் வகையில் எந்த தெய்வத்தைக் கும்பிடுகிறார்களோ அதுவே குலதெய்வம்.

    ReplyDelete
  25. தங்கள் தந்தையாரும் , பாட்டனார், முப்பாட்டனார் - என தங்களுடைய முன்னோர்கள் வணங்கி நின்ற கோயிலே, உங்கள் வீட்டுக்கு குலதெய்வம் என்பார்கள்.

    ReplyDelete
  26. நானும் சென்ற மாதம் குலதெய்வக் கோயில் சென்று வந்தேன்.
    துரை செல்வராஜின் கருத்துக்கள் மெய்யானவை. குலதெய்வம் எங்களுக்கு வேங்கிடாசலபதி என்று சிலர் சொல்லும்போது , தங்கள் முன்னோர்களை நீங்கள் மறந்து விட்டர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete

  27. @ ஸ்ரீராம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  28. @ கீதா சாம்பசிவம்
    தெளிவாகவே இருக்கிறீர்கள். ” ”மாமனார் வீட்டுக் குலதெய்வம்”---”அப்பா வழியில்” எல்லாம் குலதெய்வங்களே.....வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  29. @ ரமணி
    சந்தேகத்துக்குப் பதிலில் தெளிவாகவே இருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  30. @ கரந்தை ஜெயக்குமார்
    திரு துரை ராஜுக்கு மறு மொழியாக நான் எழுதியதைச் சற்று பாருங்கள். வருகைக்கு நன்றி

    ReplyDelete

  31. @ சிவகுமாரன்
    நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உங்கள் வலையிலும் உங்கள் பதிவுகளை எதிர் நோக்குகிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete