மஹாபாரதக் கதைகள்---- ஜராசந்தன்
------------------------------------------------------
பலவகைத்
தலைப்புகளில் பதிவுகள் எழுதியாகி விட்டது. சிலர் சில தலைப்புகளில் கண்டதையும்
கேட்டதையும் எழுதும்போது’அட, இந்தத் தலைப்பில் நாமும் எழுதி
இருக்கிறோமே; என்னும் எண்ணம் வர அதைக்குறிப்பிட்டால் “ நீ எழுதாத தலைப்பே இல்லையா” என்று கேட்கும் போது அதில் சில சமயம் ஒரு நையாண்டிச் சுவை தெரிகிறது. ஆகவே
பதிவு எழுதப் போகும் முன் என்ன எழுதுவது என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
கண்ணதாசன் பாடல்கள் பலவற்றின் கருத்து நம் பண்டைய இலக்கியங்களில் இருந்தும் புகழ்
பெற்றவர் எழுத்துக்களில் இருந்தும் கையாளப் பட்டதே. கருத்து அவர்களது எழுத்து
இவரது. இப்படி எழுதியே மிக்கப் புகழ் பெற்றுவிட்டார். ஆகவே நம் இதிகாசங்களிலிருந்தும்
இலக்கியங்களில் இருந்தும் கதைகளைச் சுட்டு என் வரிகளில் எழுதுவது தவறாகாது என்று
எண்ணுகிறேன். அப்பாடா... எவ்வளவு பெரிய முன்னுரை வேண்டி இருக்கிறது . நானும்
மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் சொல்லப் பட்ட ஆனால் பரவலாக அறியப் படாத சில
கதாபாத்திரங்கள் பற்றி எழுதலாம்
என்றிருக்கிறேன். இதில் எனக்கு முன்னோடியாக வலையுலகில் பிரசித்தி பெற்ற் ஒருவர் பல
ஆண்டுகளுக்கு முன் எழுதப்போவதாக அறிவிப்பு இருந்தது. ஆனால் எழுதியதாகத்
தெரியவில்லை. ஆகவே நான் மகாபாரதத்தில் இருந்து சில கதாபாத்திரங்களைத்
தேர்ந்தெடுத்து எழுதப் போகிறேன். நான் கேட்ட படித்த விவரங்களின் அடிப்படையில்
எழுதப் போகிறேன். நடு நடுவே என் கருத்துக்களையும் கூறிப் போகலாம் It all depends…!
இது
ஒன்றும் புதிதல்ல, என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் நினைவுக்கு நான்
பதிவிட்டிருந்த “சாந்தனுவின் சந்ததிகள்” என்ற
பதிவைக் கொண்டு வருகிறேன்(சொடுக்கிப் பார்க்கவும்) சரி .கதைக்குப் போவோமா...?
உக்கிரசேனர்
என்பவர் மதுராவில் ஆட்சி செய்து வந்தார். அவரது மகன் கம்சன். கம்சனின் சகோதரி
தேவகி. தேவகியின் எட்டாவது குழந்தையின் கையால் கம்சனின் மரணம் என்னும் அசரீரி
வாக்கு கேட்டு தேவகியை அவள் கணவனுடன் சிறையில் அடைத்து வைத்தான் கம்சன் அவனையும்
ஏமாற்றி ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்தான் கிருஷ்ணன்
ஒன்றைச்
சொல்ல வரும்போது தொடர்புடைய கதைகளையும் தொட்டுச் செல்ல வேண்டி இருக்கிறது இந்த
கம்சனுக்கு தன் இரு புதல்விகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தான் ஜராசந்தன். தன்
புதல்விகளை விதவைகளாக ஆக்கிய கிருஷ்ணனிடம் ஜராசந்தனுக்கு கடும் பகை. பல முறை
கிருஷ்ணனிடம் போரிட்டு வந்தவனைத் தவிர்க்க கிருஷ்ணன் மதுராவில் இருந்து துவாரகா என்னும்
தீவில் இருந்து ஆட்சி செய்து வந்தான் கிருஷ்ணன். துவாரகை ஒரு தீவானதால்
ஜராசந்தனால் கிருஷ்ணனை வெல்ல முடியவில்லை. இந்த ஜராசந்தனை தான் கடவுளின் அவதாரம்
என்று தெரிந்த கிருஷ்ணனால் ஏனோ சம்ஹாரம் செய்ய முடியவில்லை. அல்லது கதையை
நகர்த்திச் செல்ல வியாசரின் உபாயமோ விளங்கவில்லை.
இந்த
ஜராசந்தன் ஒரு பராக்கிரமசாலி. இவன் பிறந்த கதையே அலாதியானது.
ப்ருஹத்ரதா என்னும்
அரசன் மகத நாட்டை ஆண்டு வந்தான் அவன் ஒரு சிறந்த சிவ பக்தன். அண்டை அரசுகளை அடக்கி
பேரும் புகழுமாக இருந்தான் பெனாரசின் இரட்டை அரச குமாரிகளை மணந்து அரசு செய்து
வந்தவனுக்கு வெகுநாட்கள்வரை புத்திர பாக்கியமில்லாதிருந்தது மனம் வெறுத்துக்
கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான்.இவனது
நிலைகண்டு இரங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை
பாக்கியம்கிடைக்கும் என்றார். இரு பெண்டாட்டிக்காரன் பழத்தினை இரு சம பாகமாக்கித்
தன் இரு மனைவியருக்கும் கொடூத்தான் இருவரும் கர்ப்பமுற்றனர், குழந்தைகளும்
பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக்
கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர். அரசன் கோபமுற்று அந்த இரு கூறுகளையும்
கானகத்தில் வீசி எறிந்தான் கானகத்தில் ஜைரை என்னும் அரக்கி அந்த இருகூறுகளையும்
உண்ணப் போகும் முன் ஒன்றாக்கினாள். என்ன ஆச்சரியம்,,,,,! இரு கூறுகளும் ஓருயிராகி
சத்தமாக அழத் துவங்கிற்று. உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பாத அரக்கி அந்தக்
குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றைக் கூறினாள்.அரசன் அக்குழந்தைக்கு
ஜராசந்தன் ( ஜைரையால் சேர்க்கப்பட்டவன்) என்று பெயரிட்டு வளர்த்தான். ஜராசந்தனும்
ஒரு சிவ பக்தன். அவனுக்கு ஒரே குறை. ஆண்வாரிசுஇல்லாத ஜராசந்தன் தன் இரு
புதல்விகளைக் கம்சனுக்குத் திருமணம் செய்வித்தான் கம்சன்
கிருஷ்ணனால்கொல்லப்பட ஜராசந்தனுக்கு
கிருஷ்ணன் மேல் தீராத பகையும் அதன் விளைவாகப் பலமுறை போர் தொடுத்தலும் நிகழ்ந்தது.
கதையின் முன் பாகத்திலேயே சொல்லப் பட்டது. துவாரகை மீது படை எடுத்துக் கிருஷ்ண்னைவெல்ல
யாகம் செய்வதாயிருந்தான்.,இதை அறிந்த கிருஷ்ணன் ஒரு உபாயம் கண்டான் யுதிஷ்டிரன்
ராஜசூய யாகம் செய்ய வேண்டுமானால் எல்லா அரசர்களும் அவன் தலைமையை ஏற்கவேண்டும் .
பராக்கிரமசாலியான ஜராசந்தன் ஏற்க மாட்டான். ஆகவே யாகம் துவங்கும் முன்னே அவனை
ஒழித்து விட வேண்டும் ஜராசந்தன் சிவ பூஜையில் இருந்து வெளிவந்தால் யாரும் கேட்டதை
இல்லை என்று சொல்லாத வள்ளல்.அர்ச்சுனன் பீமன் கிருஷ்ணன் மூவரும் அந்தண வேடம் தரித்து பூஜையில் இருந்து
வெளிவந்த ஜராசந்தனைப் துவந்த யுத்தத்துக்கு(மல்யுத்தத்துக்கு) வருமாறு அழைத்து
மூவரில் யாருடன் வேண்டுமானாலும் போரிடலாம் என்றனர். உடல் பலத்தில் சிறந்தவனாய்த்
தோற்ற மளித்த பீமனுடம் ஜராசந்தன் பொருதத் தயார் என்றான் இரு மலைகள் மோதுவது போல் இருவரும்
பல நாட்கள் இடைவிடாது யுத்தம் செய்தனர்.
பீமன் ஜராசந்தனை
வீழ்த்தி அவன் உடலை இரு கூறுகளாக்கி எறிந்தான். ஆனால் ஜைரை கண்டதே இங்கும்
நடந்தது. இரு கூறுகளும் ஒட்டிக் கொண்டு மீண்டும் ஜராசந்தனாகி யுத்தம் தொடர்ந்தது.
செய்வதறியாது திகைத்த பீமன் கிருஷ்ணனை நோக்க அவன் உடலின் இருகூறுகளை திசை மாற்றி
வலப் பாதி இடது புறமும் இடப்பாதி வலப்புறமும் வருமாறு எறிய ஒரு குச்சியை ஒடித்து
சைகை காட்டினான் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட பீமன் அவ்வாறே செய்தான் திசை மாறிய
இரு கூறுகளும் மீண்டும் ஒன்றாகச் சேர முடியாமல் ஜராசந்தன் மாண்டான்.
அவனால்
சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் மீட்கப் பட்டனர்.
இந்தக் கதை
எழுப்பும் சில கேள்விகளும் பொதுவாகக் கூறப்படும் பதில்களும் அவதாரக் கடவுள்
கிருஷ்ணனால் வெல்ல முடியாதவனா ஜராசந்தன். ?ஜராசந்தனைப் பற்றிய கதைகளுள் அவன் தீயவன் என்றோ துர்க்குணம் படைத்தவன் என்றோ
கூறப்பட்டதாகத் தெரியவில்லை.அந்தக் கால அரசர்களுக்குள் இருந்தகுணங்கள்தான் ஜராசந்தனிடமும்
இருந்தது.
அவதாரக் கடவுள்
கிருஷ்ணன் கையால் கொல்லப் பட்டால் ஜராசந்தன் முக்தி அடைந்து விடுவான். அது நேராமல்
தடுக்க கிருஷ்ணனின் உபாயம்தான் இந்த பீம ஜராசந்த மல்யுத்தம்.
யுதிஷ்டிரன்
ராஜசூய யாகம் செய்து அதன் விளைவால் போர் நடந்து ஏற்படும் உயிரிழப்புகளைத்
தவிர்க்கவே விரும்பினான். ஆனால் பீமனையும் அர்ச்சுனனையும் உசுப்பி விட்டு நேர்
வழியில் செல்லாமல் பீமனுடன் மல்யுத்தம் செய்வித்து அவனை ஒழித்துக்கட்ட
கிருஷ்ணனின் லீலை இது என்று பக்தர்கள் கூறுவார்கள்.
ஜராசந்தன் பீமன் துரியோதனன் கீசகன் பகாசுரன் அனைவருக்கும்
நட்சத்திரம் ஒன்றே என்று கூறப் படுகிறது இதில் யாராவது ஒருவர் கையால் ஒருவர் மரணம்
நேரிட்டால் அவர் கையாலேயே மற்றவரின் மரணமும் சம்பவிக்கும் என்பதால் பீமன் கையால்
மற்ற நால்வருக்கும் மரணம் என்பது விதி என்றும் கதை உண்டு. ஜராசந்தனின் மனைவிக்கு
கிருஷ்ணன் ஜராசந்தனைத்தன் கையால் கொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தாகவும்
ஒரு கதை உண்டு.கதைகளைப் படிக்கும் போது பல துணைக்கதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன.ஜராசந்தனைக் கொல்ல இரு கூறுகளும் திசை மாற்றிப் போட்டால் மீண்டும் சேராது என்பது கிருஷ்ணனுக்கு எப்படித் தெரியும்?அவர் எல்லாம் அறிந்த ஆண்டவன் அவதாரமல்லவா/?
இப்போத் தான் ஜராசந்தனைப் பற்றி எழுதிட்டு பதிவை வெளியிட்டு வந்தேன். இங்கேயும் அவனா? :)))) மறுபடியும் வரேன்.
பதிலளிநீக்கு//ஜராசந்தன் பீமன் துரியோதனன் கீசகன் பகாசுரன் அனைவருக்கும் நட்சத்திரம் ஒன்றே என்று கூறப் படுகிறது//
பதிலளிநீக்குஇது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மகாபாரதம் சம்பந்தப்பட்ட எதுவும் எந்த ரூபத்தில் படித்தாலும் சுவாரஸ்யம்தான்.
கதை மட்டுமல்ல
பதிலளிநீக்குசொல்லிப் போனவிதமும் வெகு சுவாரஸ்யம்
தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வோம்
மகாபாரதக் கதையின் மாந்தர்களை உங்களின் சுவாரஸ்யமான எளிய நடையில் படிக்கையில் மகிழ்வு. இளைய தலைமுறையினருக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். ஜயத்ரதனின் கதையைச் சொல்லுங்களேன் இதுபோல...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
உங்கள் பதிவைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன். மீண்டும் வந்து கருத்துக் கூற வேண்டுகிறேன்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கவனித்தீர்களா.?கதாபாத்திரங்களின் நட்சத்திரங்கள் பற்றி நானும் அண்மையில் படித்தேன் இதையே நாலு பேர் படித்தால் உண்மையோ என்று நம்பிவிடுவார்கள்.
பதிலளிநீக்கு@ ரமணி
சார் பாராட்டுக்கு நன்றி. மஹாபாரதக் கதா பாத்திரங்களை ஒரு வழி செய்து விடவேண்டும் என்ற எண்ணம் உண்டு.
பதிலளிநீக்கு@ பாலகணேஷ்
இளைய தலை முறையினருக்குப் பயன் உள்ளதோ இல்லையோ, அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி அடைவேன். ஜயத்ரதனும் என்னிடம் மாட்டுவார் என்று நினைக்கிறேன். வந்து கருத்துப் பதிவிட்டதற்கு நன்றி சார்.
ஜராசந்தன் தாங்கள் சொல்லிச் சென்ற விதம் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
சுவாரஸ்யமான கதை...!
பதிலளிநீக்குநேற்றுதான் இந்தக் கதையின் டி.வி. யைப் பார்த்தேன். உங்கள் வர்ணனை அதில் சொல்லாத அம்சங்களைச் சொல்லுகிறது.
பதிலளிநீக்குபாரதம் என்றாலே படிக்கப் படிக்க விருப்பம் தரும் உட் கதைகள். ஜராசந்தன் கதையை குழப்பாமல் கதைத் தொடர்பை விட்டு விலகாமல் எளிமையாகச் சொன்னதற்கு நன்றி!
பதிலளிநீக்குமஹாபாரதக் கதைகள் - இதில் இருக்கும் எண்ணற்ற கதாபாத்திரங்களை உங்கள் பாணியில் படிக்க ஆசை. எழுதுங்கள்....
பதிலளிநீக்குஜராசந்தன் பற்றிய பகிர்வு மிக அருமை. தொடரட்டும்.
ஜிஎம்பி ஐயா, நான் எழுதி வரும் கண்ணன் கதைத் தொடரில் ஜராசந்தன் குறித்து நேற்று எழுதி இருந்தேன். :))) அதன் சுட்டியைப் பின்னர் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குமிகவும் சுவாரசியமான கதைப்பின்னல்! அதன் இழைகளை பாரதம் அறியாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் சுவாரசியம் குறைவுபடாமல் மிக இயல்பாகச் சொல்லிப் போகிறீர்கள்...பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்குஜவின் முன்கதை தெரியாது.
பதிலளிநீக்குகடவுளின் அவதாரம் செய்த லீலைகளைப் படிக்கப் படிக்க புல்லரிக்குது சார்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
/ஜராசந்தன் நீங்கள் சொல்லிப் போன விதம் அருமை/ பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கார்த்திக்சேகர்
வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
ஸ்டார் விஜையில் வரும் பாரதக் கதையில் அவர்களே கற்பனை என்று கூறி விடுகிறார்கள். மஹாபாரதக் கதை ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் கதை. நிறையவே இடைச் செருகல்கள் இருக்கலாம், வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ தி.தமிழ் இளங்கோ
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
/ மஹாபாரதக் கதைகள் - இதில் இருக்கும் எண்ணற்ற கதாபாத்திரங்களை உங்கள் பாணியில் படிக்க ஆசை. எழுதுங்கள்..../ பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன். தொடர முயற்சிப்பேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நான் எழுதும் முறைக்கும் நீங்கள் எழுதும் முறைக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும் சுட்டியைப் பகிர்ந்தால் படிப்பேன். வருகைக்கு நன்றி கீதாமேடம்
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
என் முறையில் நான் பாரதக் கதைச் சொன்னால் வரவேற்பு இருக்குமோ என்ற பயம் இருந்தது. இப்போது போய்விட்டது. வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற எழுதியது. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்.
த்து இவரது. இப்படி எழுதியே மிக்கப் புகழ் பெற்றுவிட்டார். ஆகவே நம் இதிகாசங்களிலிருந்தும் இலக்கியங்களில் இருந்தும் கதைகளைச் சுட்டு என் வரிகளில் எழுதுவது தவறாகாது என்று எண்ணுகிறேன்.//
பதிலளிநீக்குதப்பே இல்லை. நம்ம மணிரத்தினமும் தன்னுடைய படத்தின் கதைகளை ஹிதிகாசங்களிலிருந்துதான் திருடுகிறார், சாரி, அப்படி சொல்லக்கூடாதுதான். கருத்தை மட்டும் எடுத்து தன் பாணியில் அளித்து வருகிறார். ஆனால் அவ்வளவாக எடுபடுவதில்லை என்பது வேறு விஷயம்.
ஓய்வு நேரங்களில் மஹாபாரத்தைப் பற்றி சிந்திப்பது வழக்கம்... பதினாறு வயதில் தொடங்கி - கால ஓட்டத்தில் இதுவரை - இரண்டு முறை வாசித்துள்ளேன்.மேலும் வாரியார் சுவாமிகள் மற்றும் புலவர் கீரன் ஆகியோரின் இலக்கியப் பேருரைகளிலும் ஐக்கியமாகி விடுவேன்.
பதிலளிநீக்குமீண்டும் தங்களால் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. தொடரட்டும் தங்கள் பணி..
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
தப்பில்லை என்கிறீர். ஆனால் எடுபடுகிறதா என்று சொல்லவில்லையே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
ஐயா மஹாபாரதக் கதையை சின்ன வயது முதலே கேட்டு வந்திருக்கிறேன் சிலருடைய எழுத்துக்களையும் படித்திருக்கிறேன் ஆனால் எல்லாக் கதைகளும் ஒருபோல் இருப்பதில்லை. நிறையவே இடைச்செருகல்கள். எதுமூலம் எது ஒட்டவைக்கப் பட்டது என்றே தெரிவதில்லை. படித்த கேட்ட விஷயங்களைத் தொகுத்துப் பதிவாய் எழுதி இருக்கிறேன் அவ்வளவே.
ஜராசந்தனை முதன்முதலாக பிளந்து அவன் பலவீனத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவன் கர்ணன் என விக்கி யில் உள்ளது.
பதிலளிநீக்குhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ சிம்புள்
இருக்கலாம் .மஹாபாரதக் கதைகளில் பாடபேதங்கள் நிறையவே உண்டு. வருகை தந்து கருத்துப் பதிவிட்டதற்கு நன்றி
மாகாபாரதக்கதை படிக்க படிக்க சிலிர்ப்பும் சிந்தனையும் தூண்டும் அப்படியான் ஒரு மாகடலை நீங்கள் இப்படியே தொடரவேண்டும் முன்னைய பகிர்வை விரைவில் படிப்பேன். தொடருங்கள் ஐயா.
பதிலளிநீக்குகுழப்பம் ஏற்படாமல் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். மகாபாரதத்துக்கு இணையான கதை எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தனிமரம் நேசன்
நான் மஹாபாரதக் கதையை எழுதவில்லை. அதில்வரும் சில பாத்திரங்களின் கதையை எழுதுகிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ பக்கிரிசாமி
பின்னூட்டங்களில் பாராட்டுக்கள் பெரும்போது சற்று பயமாயிருக்கிறது. எழுதுவதில் இதே நேர்த்தியைக் கைவிடக்கூடாது அல்லவா.?மஹாபாரதம் ஒரு ஒப்பற்ற மஹா கற்பனைக் காவியம் என்பதில் இரண்டுவித அபிப்பிராயம் இல்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி
எந்தவொரு பதிவிற்கும் முன்னுரை முக்கியமானதாகிறது. தங்களின் முன்னுரை தாங்கள் விவாதிக்க உள்ளவற்றைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. உங்களின் மூலமாக பல புதிய செய்திகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம.
பதிலளிநீக்கு