பதிவுத் துளிகள்.
---------------------
சுமார் ஒரு மாதத்துக்கு முன் ஒரு ஆங்கிலக் கவிதைஒன்றை பதிவிட்டு
வாசகர்களிடம் அதை மொழிபெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோக் கேட்டு வேண்டி இருந்தேன் என்
பதிவுகளைவாசிக்கும் பதிவர்களில் பலரும் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும்
பெற்றவர்கள் என்று எனக்குத் தெரியும் நானே சிலருக்கு தனிப்பட்ட முறையில்
வேண்டியும் எழுதி இருந்தேன் . மொழியாக்கம் செய்யுமளவுக்கு ஆங்கில அறிவு இல்லையென்று
சிலர் பின்னூட்டமிட்டிருந்தனர், இருவர் மட்டும்முயற்சி செய்வதாய் கூறி இருந்தனர்.
ஆனால் இதுவரை யாரும் எழுதி அனுப்பவில்லை. ஆகவே நானே மொழியாக்கம் செய்யலாமென்று
தீர்மானித்துவிட்டேன் நான் பட்டப் படிப்பு பெற்றவனல்ல. பட்டறிவே உள்ளவன்.
மொழிபெயர்ப்பதில் கவிதையின் சிறப்பைக் கொண்டு வரமுடியாது ( எனக்கு ) என்று
தோன்றியது. ஆகவே மொழியாக்கம் கீழே. படித்துப் பார்த்து தட்டிக் கொடுக்கவோ குட்டிக்
கொடுக்கவோ தயக்கம் வேண்டாம் ஆங்கிலக் கவிதை எழுதியவர் T.P.KAILASAM என்னும் பெயருக்குரிய தமிழர். கன்னட மற்றும் ஆங்கில இலக்கியங்களில்
பெயர் பெற்றவர்
Drona
THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
அடியேனின் தமிழாக்கம் கீழே.
பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும்
எனவே.
*****************
நான் வரைந்த இரண்டுபடங்களை கீழே வெளியிடுகிறேன்
படங்களைக்கூர்ந்து பார்த்து அதில் இருக்கும் மறைந்த செய்திகள் ஏதாவது தெரிந்தால்
கண்டுபிடிக்கவும் ஒரு சின்ன சோதனை .அவ்வளவே
**************************
ஒரு சிறுகதை
முகநூலில் அவனும் அவளும் அறிமுகமானார்கள். முகங்காணாப் பதிவர்கள்
ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்வதைப்போல் முகநூலில் எழுதுவதன் மூலமே இருவரும்
ஈர்க்கப் பட்டனர். கடைசியில் ஒரு பொது இடத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்க
முடிவெடுத்தனர். அந்த நாளும் வந்ததுஆவலுடன் அவன் சென்றான் அவளும் வந்தாள். வந்தவளை
இவன் கத்தியால் சரமாரியாகக் குத்தினான்.
பின் தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டு குற்றுயிரும் குலை உயிருமாகக்
கிடந்தவன் தான் ஒரு பெண்ணைக் கத்த்தியால் குத்திக் கொலை செய்ததைக் கூறி இறந்தான்
அவனுக்கு வயது 23. அவளுக்கு வயது 43. 22 வயதில்
அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள்
என்ன நண்பர்களே கதை
படித்தீர்களா. ?உங்கள் எண்ணங்களைப் பகிரலாமே.
******************************************
படங்களில் நிறையச் செய்திகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய்க் கண்டு பிடித்து எழுதவேண்டும். முதல் படத்தில் வயலினும் இரண்டாம் படத்தில் ஆட்டையும் மட்டும் உடனடியாகக் காண முடிந்தது. மற்றவற்றிற்கு இப்போது நேரம் இல்லை. பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குகிழவனார் முகத்தில் வயலின் அல்லது கிடார் வாசிக்கும் குடியானவன்! காதில் ஒரு பெண் (ஜன்னலில் அல்லது உப்பரிகையில்)
பதிலளிநீக்குகிழவியின் தோளில் மாடர்ன் ஆர்ட் முகம். தலையில் மலைப்பாதை போல!
குழலூதும் கண்ணன் நெஞ்சில் பசு!
முகநூல் சம்பவம் படித்து நானும் கொதித்தேன். இப்படியெல்லாமா அலைவார்கள்?
முகநூல் சம்பவம் மனதை பாதித்தது ஐயா
பதிலளிநீக்குகதை கதையாகவே இருக்கட்டும்...
பதிலளிநீக்குநான் ஆங்கிலத்தில் இளங்கலையோ முதுகலையோ இல்லை என்றாலும் முயற்சி செய்தேன். சற்றுக் கடினமாகத் தோன்றியதால் கைவிட்டுவிட்டேன். தங்களுடைய முதல் படத்தில் முதியவளின் முகத்தில் ஒரு பெண் இரு கைகளையும் உயர்த்தி தலையிலிருக்கும் கூடை போன்ற எதையோ பிடித்தபடி அமர்ந்திருப்பதுபோலவும், முதியவரின் முகத்தில் ஒரு ஆண் அமர்ந்து கிடார் போன்ற இசைக்கருவி இசைத்துக்கொண்டிருப்பது போலவும் உள்ளது. இருவருக்கும் நடுவில் ஒரு மதுக்கோப்பை போல வடிவம் புலப்படுகிறது. முதியவரின் காதோர நரையில் ஒரு வீட்டின் கதவு திறந்திருப்பது போலவும் அதன் வாயிலில் ஒரு பெண் சாய்ந்து நிற்பது போலவும் தெரிகிறது. இரண்டாவது படத்தில் நடுவில் உள்ள முகங்களை மட்டும் பார்த்தால் தனியாக ஒரு மாட்டின் முகம் தெரிகிறது. இட,வலப்பக்கம் உள்ள மாடுகளின் உடலில் சங்கு சக்கரங்கள் தெரிகின்றன.
பதிலளிநீக்குமிகவும் அழகான படங்கள். பாராட்டுகள் ஐயா.
தமிழாக்கம் அருமை. மொழி பெயர்த்தல் என்பது வரிக்கு வரி மொழி பெயர்ப்பதல்ல என்பதை உணர்த்தியுள்ளீர்கள். நானும் இது பற்றி ஒரு பதிவிட இருக்கின்றேன்.
பதிலளிநீக்குபடங்களில் ஒளிந்துள்ளவைகளை மற்றவர்கள் கண்டுபிடித்துவிட்டதால் என் வேலை சுலபமாகிவிட்டது. அழகான படங்களுக்கு வாழ்த்துக்கள்!
மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்கள் வரைந்த ஓவியங்கள் அழகு. அதில் ஒளிந்துள்ளவைகளை கண்டு பிடித்தேன் கொஞ்சம் மீதியை மற்றவர்கள் சொன்னதை வைத்து கண்டு கொண்டேன்.
முகநூல் செய்தி போல் அலை பேசியில் பேசி பின் சந்தித்து இது போல சம்பவம் நடந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.
மொழி பெயர்ப்புக்கும்,
பதிலளிநீக்குஅழகான ஓவியங்களுக்கும் பாராட்டுக்கள்..
சித்திரங்கள் அருமை!.. அர்த்தங்கள் பல.. மேலோட்டமாகத் தெரிந்தவற்றை அன்பின் நண்பர்கள் எழுதி விட்டார்கள்..
பதிலளிநீக்குமனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் - என்பது உலக நீதி!..
படஙகளும் பொருளும் எதிர்பார்க்க முடியாத சிறப்பு.
பதிலளிநீக்குமொழியாக்கம் செஞ்சுடுவோம்.
இந்த இரண்டு சித்திரங்களும் நீங்கள் வரைந்தவைகளா? அருமை. உங்களுக்கு தெரியாத விஷயமே இல்லை போலிருக்கிறது?
பதிலளிநீக்குமுகநூல் கதை ஏற்கனவே படித்ததுதான். இது கற்பனையாக இருந்தாலும் கற்பனை செய்தவருடைய மனநிலையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு சித்திரங்களும் நீங்கள் வரைந்தவைகளா? அருமை. உங்களுக்கு தெரியாத விஷயமே இல்லை போலிருக்கிறது?
பதிலளிநீக்குமுகநூல் கதை ஏற்கனவே படித்ததுதான். இது கற்பனையாக இருந்தாலும் கற்பனை செய்தவருடைய மனநிலையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு சித்திரங்களும் நீங்கள் வரைந்தவைகளா? அருமை. உங்களுக்கு தெரியாத விஷயமே இல்லை போலிருக்கிறது?
பதிலளிநீக்குமுகநூல் கதை ஏற்கனவே படித்ததுதான். இது கற்பனையாக இருந்தாலும் கற்பனை செய்தவருடைய மனநிலையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.
படங்கள் இரண்டுமே மிக அருமை. என் மனதில் தோன்றியவற்றை ஏற்கனவே பின்னூட்டம் இட்டவர்கள் கூறிவிட்டார்கள்....
பதிலளிநீக்குமுகப் புத்தகம் - :((((
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
அப்படிச் சொல்லி நீங்களெஸ் ஆக முடியாது.மீண்டும் வருகைதாருங்கள். இதுவரை யாருமேசொல்லாதவையும் இருக்கிறது.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கிழவனார் முகம் பொறுத்தவரை சரி.கிழவியை சரியாகக் காணுங்கள். கண்ணன் படத்திலும் காணவேண்டியது இன்னும் இருக்கிறதுவருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
மனதை பாதித்ததால்தான் பதிவே எழுதினேன். வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்.
? கதை கதையாகவே இருக்கட்டும்/ இது கதை அல்ல நிஜம். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி.
கவிதையின் பொருள்விளங்கினால் தமிழாக்கம் உங்களைப் போல் இருப்போருக்கு எளிதாகும். படங்களி. முதல் படத்தில் அநேகமாக எல்லாவற்றையும் கூறிவிட்டீர்கள். கண்ண்அன் படத்தில் இன்னும் கூர்ந்து பாருங்கள். பதிவில் படத்தின் க்லாரிட்ய் குறைந்து இருக்கிறதோ.? வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ வே. நடனசபாபதி
கவிதையின் பொருள் விளங்குவது சிரமமாயிருந்தது. மற்றபடி மொழியாக்கம் ஓக்கே என்றே தோன்றுகிறது படங்களில் மற்றவர்கள் எல்லாவற்றையும் குறிப்பிடவில்லை. முயன்று பாருங்கள். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
நான் மொழிபெயர்க்கவில்லை மேடம். மொழியாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் அவ்வளவுதான். படங்களில் மறைந்தவை இன்னும் இருக்கிறது/ வருகைக்கு நன்றி
@ இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
சித்திரங்களைப் பாராட்டியதற்கு நன்றி. படங்களில் மறைந்தவை இன்னும் உண்டு. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
உங்களை வர வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. படங்களையும் பொருளையும் பாராட்டியதற்கு நன்றி. மொழியாக்கம் செய்வீர் என்னும் நம்பிக்கையில் நான் இருந்த நாட்கள் அதிகம் .உங்கள் மொழியாக்கம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. சித்திரமும் ஓவியங்களும் வரைய நான் முயன்றபோது எனக்கு வயது அறுபதுக்கும் மேலாகி இருந்தது.(பதிவிடவும் கணினியில் ஏதாவது புரிந்து கொள்ளவும் தொடங்கியது போல) /முகநூல் கதை ஏற்கனவே படித்ததுதான். இது கற்பனையாக இருந்தாலும் கற்பனை செய்தவருடைய மனநிலையில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்./ கதை கற்பனை அல்ல . பத்திரிக்கை செய்தி பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்
/
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி. படங்களில் மறைந்தவை அனைத்தும் இன்னும் சொல்லப் படவில்லை
வணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மொழியாக்கம் பற்றிய முயற்சி சிறப்பு... தொடருங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்கு@ நிகண்டு தமிழ்ப் பதுவர் வலைத்தளம்
வருகைக்கு நன்றி.பகிர வரவேண்டும் விரைவில்
பதிலளிநீக்கு@ ரூபன்
வருகைக்கு நன்றி.முயற்சி ஓக்கே,மூக்கில்லா ராச்சியத்தில் அரை மூக்கன்ராஜா என்பதுபோலா.?
எந்த அளவு செய்திகளை உள்வாங்கிக் கொண்டு மொழியாக்கத்தில் வெளிப்படுத்துகிறோமோ அந்த அளவு வெற்றி பெறுகிறோம் என்பது என் எண்ணம். ஆங்கிலக்கவிதையைவிட தமிழ் (ஒப்புநோக்கும் நிலையில்) மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு