Saturday, June 7, 2014

வித்தியாசமான போட்டி....(?)


                        வித்தியாசமான போட்டி.......(?)
                        ------------------------------------


எழுதுவதற்கு புதிதாய் விஷயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இருந்தாலும் புதிதாய் ஏதாவது செய்ய மனம் விழைகிறது. டி.பி. கைலாசம் அவர்களின் ஆங்கிலக் கவிதை துரோணரை தமிழ்ப் படுத்தினேன் . ஒரு தமிழ் கவிதையை ஆங்கிலப் படுத்தினால் என்ன என்னும் எண்ணம் ஓடியது. எந்தக் கவிதையை எடுத்துக் கொள்வது? என் கவி(வ)தையை நான் சிதைத்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள்.ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப் படுத்தும்போது பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியைப் பார்த்துப் பொருள்  தெரிந்து கொள்ளலாம். தமிழில் ஓரளவு எழுதும் திறமை கை கொடுக்கலாம் . ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலப் படுத்தும்போது அதற்கேற்ற ஆங்கில அறிவு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாய் வந்து நின்றது. இருந்தாலும் முயற்சித்துப் பார்ப்போமே என்னும் எண்ணமே இதை செய்யத் தூண்டியது. என் பழைய பதிவான “செய்யாத குற்றம் சோதனை எலி ஆனது. இர்ண்டையும் தருகிறேன் என் படைப்பை ஆங்கில மொழியாக்கம் செய்ய நான் வலை நண்பர்களை இதன் மூலம் அழைக்கிறேன் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் தேர்ச்சி உடையோர் என் பதிவை வாசிப்பவரிலும் உள்ளார் என்று எனக்குத் தெரியும் நல்ல ஆங்கில மொழியாக்கத்துக்கு பாராட்டு நிச்சயம் . பரிசும் கிடைக்கலாம் என்ன நண்பர்களே தயாரா.?

                    செய்யாத குற்றம்
                    ----------------

தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்

        என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
       
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
       
மறந்தாலும்   பாதகமில்லை
       
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

       
எழுத்தில்   கொண்டு வந்தால்
       
இனிதே   ரசிக்கலாம்,
       
இடுகையில்   பதிக்கலாம்
        
என்றெல்லாம்   கனவினூடே  
       
நினைவுகளும்   கூடவே   வரும்,

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
அதிகாலை   நடை பயிலுகையில் எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
 
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

         பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும்
        
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
         
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
        
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
        
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
        
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
        
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே,
        
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?

இனி என் ஆங்கில மொழியாக்கம் 

---------------------------------------------


On to bed before you go to sleep

The day’s tidings just linger around

Lot of unfinished work loom past
Matters nothing  so long they are unimportant

It takes some time to go asleep-but
Once  in slumber, colorful dreams
Unfold in waves as stories aplenty

Pen them on paper  or post them in blogs
They might be interesting to read
Suggestions  occur even as the dream is on 

Chew the cud of  the dreams in the morn
Only hazy thoughts and images
Nothing worth reproducing in black and white


In the early morn-walk

Words and thoughts artistic and

Beautiful would flow in stream
Happy and back home and try to pen
Words and thoughts will get unstuck

Why this happens , questions arise.
Face is familiar but the name just don’t come on board
Pleased to see children at play colorful and gay
But your parts of body wouldn’t let you play

You are young in your thoughts and feel but
Niggles of your old age  would just remind you
You are old and unfit

Fellow men , pray say
Is old age a punishment  for a
Crime  not committed..!
  
(ஆங்கில  மொழியாக்கம் செய்து அவரவர் வலையில் பதிவு செய்து எனக்குத் தெரியப் படுத்தினால் போதும் பரிசுப் பரிசீலனைக்கு ஜூன் மாதம் 20-ம் தேதிவரை எனக்கு அறிவிக்கப் படும் பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படும் )

      
 

53 comments:

  1. போட்டியில் வெற்றி பெறப் போகும் நண்பர்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அழகான ஆங்கிலத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே... அவ்வ்வ்வ்! பரிசு பெறப் போகிற மொழிபெயர்ப்பைத் தரப் போகிறவருக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஹிஹிஹி... நானும் வெற்றி பெறப்போகும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  4. போட்டி சிறக்க வாழ்த்துகின்றேன் ஐயா

    ReplyDelete
  5. கவிதையும் அதன் மொழி மாற்றமும் அருமை. கவிதை எழுத தனித் திறமை வேண்டும் அதுவும் மொழி மாற்றம் செய்ய இரண்டு மொழிகளிலும் புலமை வேண்டும். அது எனக்கு இல்லாததால், விளையாடுபவர்களை வேடிக்கைப் பார்க்கும் இரசிகர் போல, போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற இருக்கும் பதிவர்களை வாழ்த்த காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  6. ரசிக்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  7. கவிதையின் உணர்வு சிதையாமல் அழகாக ஆங்கிலமாக்கியமை சிறப்பு. தங்கள் அற்புதத் திறமைக்குத் தலைவணங்குகிறேன். தாங்கள் சொல்வது போல் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்க முயற்சி ஓரளவு கைகூடலாம். தமிழிலிருந்து ஆங்கிலம்... சரியான மொழியறிவும் கவியாக்கத் திறனும் புரிதலும் இல்லையெனில் கடினம்.

    ReplyDelete
  8. நீங்க ஒரு சகலகலாவல்லர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். உங்களுக்கு எழுத விஷயமே தேவையில்லை. கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. தொடர்ந்த அனுபவம் இருப்பின் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் அதே அளவு ஆங்கிலத்திலிருந்து தமிழும் மொழிபெயர்க்க முடியும் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். அனைத்திற்கும் மேலாக மூலத்தையொட்டிய (original) கருத்து இருந்தாலே நாம் ஓரளவு வென்றுவிடுகிறோம் என்பதே உண்மை. அப்படியே மொழிபெயர்ப்பு சொல்லுக்குச் சொல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து. தங்களின் மொழிபெயர்ப்பு சற்றொப்ப பொருத்தமாக உள்ளது.

    ReplyDelete

  10. @ கீதா சாம்பசிவம்
    உங்களை எழுத வற்புறுத்தி இருந்தால் ஒரு வேளை போட்டிக்கு எழுதி இருப்பீர்களோ என்னவோ. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  11. @ பாலகணேஷ்
    உங்கள் தன்னடக்கம் வியக்க வைக்கிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  12. @ ஸ்ரீராம்
    அட்வான்ஸ் வாழ்த்துக்களா. இப்போதெல்லாம் வலைப் பூவைவிட ஃபேஸ் புக் உங்களை ஈர்க்கிறது போலும். வருகைக்கு நன்றி

    ReplyDelete

  13. @ கரந்தை ஜெயக்குமார்
    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  14. வற்புறுத்தி எல்லாம் என்னை எழுத வைக்க முடியாது ஐயா. யாராக இருந்தாலுமே இப்படி ஒரு கவிதை மொழிபெயர்ப்பை வற்புறுத்தலுக்காக எழுதுவது மிகக் கஷ்டமே! :))))) ஊற்றுப் போல் அதுவாகக் கிளம்பணும்.

    ReplyDelete

  15. @ வே.நடனசபாபதி
    பாராட்டுக்கு நன்றி. படிப்பு என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத நானே எழுதும்போது இன்னும் பலர் முன் வரக்கூடும் என்று எண்ணியே வாசகர்களை அழைக்கிறேன் நானும் காத்திருக்கிறேன்

    ReplyDelete

  16. @ திண்டுக்கல் தனபாலன்
    உங்களோடு நானும் காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  17. @ கீத மஞ்சரி
    தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிந்த உங்களிடம் இருந்து போட்டிப் பதிவை எதிர் பார்க்கிறேன் கடினமானாலும் முடியாததல்ல. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete

  18. @ டி.பி.ஆர் ஜோசப்
    உங்களிடம் திறமை உண்டு என்று எனக்குத் தெரியும் . வெளிப்படுத்த இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete

  19. //இப்போதெல்லாம் வலைப் பூவைவிட ஃபேஸ் புக் உங்களை ஈர்க்கிறது போலும்.//

    இல்லை ஸார்... வலைப்பக்கமும் இருக்கேன். முக நூலிலும் இருக்கேன். உங்களைத்தான் எங்கள் ப்ளாக் பக்கம் காணோம் கொஞ்ச நாளா....! :))))

    ReplyDelete

  20. @ சோழ நாட்டில் பௌத்தம்
    நீங்கள் பல மொழி மாற்றங்களைச் செய்தவர் என்று அறிகிறேன் எனக்குத் தமிழும் சரியாகத் தெரியாது. ஆங்கிலமும் அதேபோல்தான் கவிதை என்பது நான் எழுதும்போது கவதை ஆகிறது. ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல்தான் எழுத வைக்கிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ ஸ்ரீராம். என் மெயில் பாக்சில் உங்கள் பதிவு பற்றி தகவல் வரும் . நானும் உங்கள் ப்லாகுக்கு வந்து கொண்டிருந்தேன்அந்த சங்கிலி போய் விட்டிருக்கிறது போலும் . அறிவித்ததற்கு நன்றி

    ReplyDelete

  22. @ கீதா சாம்பசிவம்
    என் மீதிக்கதை போட்டிக்கு நான் தொடர்ந்து கேட்டதால் எழுதியதாகப் படித்த நினைவு. ஊற்றுப் போல் கிளம்ப வேண்டுகிறேன் உங்களால் முடியும். மீள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  23. மூலக் கவிதையின் முழுப் பொருளே ஊற்றுப்போல் பீறிட்டுச் சுரந்து வெளிப்படாத ஏமாற்றத்தைச் சொல்வது தானே?...

    ReplyDelete
  24. //வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையா..?//

    மூப்பு என்பது இயல்பான ஒன்று. அதை ஏன் தண்டனையாக எடுத்துக் கொள்ள வேண்டும்?..

    பச்சைப் பசேலென்று தளிராக மரத்தின் இலைகள் என்றென்றும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?.. பச்சை பழுப்பாவதும் உதிர்வதும் பக்குவப்பட்ட ஒரு வளர்ச்சியின் அறிகுறி.

    பழுப்பு உதிர்வதும் பச்சை தளிர்ப்பதும் காலத்தின் கட்டாயம் அல்லவோ?..

    ReplyDelete
  25. //மூப்பு என்பது இயல்பான ஒன்று. அதை ஏன் தண்டனையாக எடுத்துக் கொள்ள வேண்டும்?..//

    மூப்பு தண்டனையாக சில சூழல்கள் அமைகின்றன ஜீவி ஸார்... இளமைத் துள்ளல்களின் பலம் இல்லாததால் எதிர்க்க முடியாத அவமரியாதைகளை எதிர்கொள்ளும் முதுமை தண்டனைதானே.... பழுத்த இலையின் அனுபவம் சமாளித்து நிற்க உதவலாம். மனக்காயம் மனக்காயம்தானே!:))

    ReplyDelete

  26. @ ஜீவி
    முதல் பின்னூட்டத்தில்/மூலக் கவிதையின் முழுப் பொருளே ஊற்றுப்போல் பீறிட்டுச் சுரந்து வெளிப்படாத ஏமாற்றத்தைச் சொல்வது தானே?.../ என்று கூறி இருப்பது விளங்கவில்லை ஜீவி சார்
    சில நேரங்களில் வயோதிகத்தினால் விளையும் இயலாமை , முதுமை தண்டனையோ என்று நினைக்க வைக்கிறது. இப்படி எழுதிய நான் முதுமை ஒரு வரமா என்றும் கேட்டு எழுதி இருக்கிறேன் படித்திருக்கிறீர்களா.?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

  27. @ ஸ்ரீராம்
    என் பதிவில் வயோதிகம் தண்டனை என்று அறுதியிட்டுச் சொல்லவில்லை. தண்டனைபோல் தோன்றுகிறது என்னும் பொருளே தொக்கி நிற்கும் என் முதுமையின் பரிசு ? என்னும்பதிவின் சுட்டி தருகிறேன் .அடித்துப் பாருங்கள்.
    gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html பதிவின் உட்பொருளை புரிய செய்த முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete
  28. //மசமசவெனத்
    தெளிவின்றித் தோன்றுவதை எழுத்தில்
    வடிக்க வார்த்தைகளும் வராது,
    கற்பனையும் கை கொடுக்காது.

    சற்றே மலர்ந்து வீடு வந்து,
    பேனா பிடித்தால் என்னதான்
    எழுதுவது, ஒன்றும் தோன்றாது..//

    இந்த 'வராது, கொடுக்காது, தோன்றாது' -- போன்ற வார்த்தைகளால் ஊற்றின் செயல்பாடு இல்லை என்பதைச் சொன்னேன்.

    ReplyDelete
  29. //மூப்பு தண்டனையாக சில சூழல்கள் அமைகின்றன ஜீவி ஸார்... இளமைத் துள்ளல்களின் பலம் இல்லாததால் எதிர்க்க முடியாத அவமரியாதைகளை எதிர்கொள்ளும் முதுமை தண்டனைதானே.... //

    நீங்கள் குறிப்பிடுவது உடல் மூப்போடு சேர்ந்து விளையும் உள்ள மூப்பு என்று நினைக்கிறேன், ஸ்ரீராம்.

    உள்ளம் மூப்பு கொள்வது சிலருக்கு இளமையிலும் விளையலாம்.

    இங்கு ஜிஎம்பீ சார், உடல் மூப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதாகக் கொள்கிறேன்.

    உள்ளம் செயல்படத் துடிக்கிறது; ஆனால் உடல், உடல் சார்ந்த செயல்பாடுகளில் சுணக்கம் காணுகிறதே என்பது அவரது ஆதங்கமாக இருக்க வேண்டும்.

    மனசின் வேகம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். அது நாம் வளர்ந்த
    சூழ்நிலை, அடைந்த அனுபவங்கள்,
    கிடைத்த சந்தர்ப்பங்கள், அவற்றை நாம் உபயோகப்படுத்திக் கொண்ட பாங்கு இவற்றின் அடிப்படையில் அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

    இந்த வயதில் இந்த செயல்பாடே பெரிதாக சிலருக்குத் தோன்றலாம்.
    சிலருக்கு அது போதாமையாகத் தெரிகிறது. அவ்வளவு தான்.

    மூப்பின் தளர்ச்சியில் உடலுழைப்பு இருந்தால் தான் அடுத்த வேளைக்கு சாப்பாடு என்கிற நிலையில் இந்த தேசத்தில் இருப்பவர்கள் நிலை தான் பரிதாபம். பாரதி கொதித்தெழுந்த
    'தனியொருவருக்கு உணவில்லை எனில்....' என்னும் நிலை அது.

    தேசத்தின் பொருளாதார கொள்கைகளில் வெகுவாக மாற்றம் கொள்ள வேண்டிய தருணம் கனிந்திருப்பதாகத் தெரிகிறது.

    அது வெகு நெடிய பாதை. பார்க்கலாம்.

    ReplyDelete
  30. தாங்களே நன்றாக மொழிபெயர்த்துவிட்டீர்களே ஐயா!!!!!

    வயோதிகம் தண்டனை அல்ல ஐயா!

    போட்டியில் வெற்றி பெறுவதைவிட நன்றாக மொழிபெயர்க்கப் போகும் அன்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. வணக்கம்
    ஐயா.

    போட்டியில் வெற்றிபெறப்போகும் உறவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு போடடியார்களின் சிந்தனை மேல் ஓங்கும் செயல்.


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  32. போட்டியில் இறங்கும் தகுதி எனக்கில்லை வருவோர் ஓலைச்சுவடி படிக்க காத்து இருக்கின்றேன் மன்னா!ஹீ

    ReplyDelete
  33. அன்பு ஐயா. வணக்கம். நலமாக உள்ளீர்களா? தங்கள் பதிவை படித்தவுடன், நம்மை நாமே தர ஆய்வு செய்து பார்ப்போம் என எனக்கு நானே சோதனை வைத்து மொழிபெயர்த்து எனது பதிவில் இட்டுள்ளேன். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறேன் பேர்வழி என அழகான தங்கள் கவிதையை நான் கொலை செய்திருந்தால் அடியேனை மன்னிக்கவும் ஐயா..எனது வலைப்பூ பதிவு:
    http://indianreflects.blogspot.in/2014/06/blog-post.html

    ReplyDelete

  34. @ ஜீவி
    மீள்வருகைக்கும் சிறந்த தெளிவூட்டலுக்கும் நன்றி.உங்கள் பின்னூட்டத்தில் ஊற்றின் செயல்பாடு வெகுவாகவே வெளிப்படுகிறது. ஒன்றைச் சார்ந்து ஒன்று என்று தனிமனிதனுக்கு உணவிலையெனில் செய்ய வேண்டியது என்று போகிறது.உடலின் மூப்பு உள்ளத்தின் மூப்பு என்று எண்ணங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள் நிறையக் கற்க வைக்கும் பின்னூட்டம்மீண்டும் நன்றி சார்.

    ReplyDelete

  35. @ துளசிதரன் தில்லையகத்து
    ஆங்கில ஆசிரியர் நீங்கள் மொழியாக்கம் செய்வீர்கள் என்று நினைத்தேன் நான் எழுதி இருந்தால் என்ன. ?அதிகம் படிக்காத நானே செய்யும்போது உங்களுக்கெல்லாம் இன்னு எளிதாக இருக்கும் அல்லவா.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  36. @ ரூபன்
    ஒன்றை கவனித்தீர்களா? நான் மொழியாக்கம் என்றுதான் கூறி இருக்கிறேன். இதில் ஒருவர் தன் கருத்துக்க்ளையும் சிறக்கக் கூற வாய்ப்பிருக்கிறது. மொழி பெயர்த்தல் என்றால் மூலம் முற்றிலும் வழி நடத்தும் .வருகைக்கு நன்றி

    ReplyDelete

  37. @ தனி மரம்
    நானும் காத்திருக்கிறேன்.வருகைக்கு நன்றி

    ReplyDelete

  38. @ இல.விக்னேஷ்
    உங்கள் பதிவுக்குப் போய் பார்க்கிறேன் தர ஆய்வு என்று ஒன்றும் இல்லை. முடியும் என்னும் எண்ணமே முயற்சிக்கத் தூண்டும் அது உங்களிடம் இருப்பது பாராட்டுக்குரியது. பார்ப்போம் இன்னும் யார் யார் எழுதுகிறார்கள் என்று. பங்கு கொள்வதற்கு நன்றி.

    ReplyDelete
  39. சோதனை எலியா?
    இதையாவது முயற்சி செய்து பார்ப்போம்.

    ReplyDelete

  40. @ அப்பாதுரை
    ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி

    ReplyDelete
  41. ஹிஹி.. நானும்.. எதையோ எழுதி.. உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்..

    eyes drift away from the tube
    as body retires to sleep;
    the mind starts to ruminate
    all day's events in keep

    planned tasks are many; lay forgotten
    incomplete, or left in abandon;
    omission seems acceptable, if
    the important ones are done

    slumber isn't imminent; and when
    eyes swoon down to sleep
    colorful dreams parade in waves
    like a story broad and deep.

    dreams crafted in words
    a thing of pleasant savor;
    be posted in blogs - such
    thoughts in dreams waver.

    attempts to translate dreams
    get foggy; lost in reformation
    failed by elusive language
    let down by own imagination

    in early morning strolls - words
    that tend to flow in a stream,
    when armed with pen on return
    why disappear as if in a dream?

    faces remain familiar
    but names tend to fade
    mind desires to play with children
    yet body has become a jade.

    thoughts remain forever young
    bodily discomforts, those bookmarks of age!
    mind pursues what it desires; yet
    alerts nothing can be done at this stage.

    oh, dear world
    to you this question is remitted
    is dotage a fit retribution
    for a crime never committed?

    ReplyDelete
  42. ஜீவி சார் - மிகவும் கனமான பின்னூட்டங்கள்.

    ReplyDelete
  43. அப்பாதுரை, இதை விட அழகாக எவராலும் மொழி பெயர்த்திருக்க முடியாது. அருமை! வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. போட்டியில் வெற்றி பெறப் போகும் நண்பருக்கு வாழ்த்துகள்.....

    அப்பாதுரையின் மொழிபெயர்ப்பு - மிக அருமை.

    ReplyDelete

  45. @ அப்பாதுரை
    மொழியாக்கத்துக்கு நன்றி.இன்னும் பலரும் கலந்து கொண்டிருக்கவேண்டும் . பார்ப்போம் இன்னும் சில நாட்கள் இருக்கிறதே.
    ஜீவியின் பின்னூட்டங்களெப்போதும் கனமானவையே . சில நேரங்களில் நான் படித்துத் திணறுவதூண்டு,

    ReplyDelete

  46. @ கீதா சாம்பசிவம்
    மீண்டும் வந்து பின்னூட்டங்களைக் கவனிப்பது மகிழ்ச்சி தருகிறது. பலரும் கலந்து கொண்டால்தான் போட்டி. வருகைகு நன்றி.

    ReplyDelete

  47. @ வெங்கட் நாகராஜ்
    அப்பாதுரை பன்மொழி வித்தகர். அவர் மொழிபெயர்ப்பு நன்றாக இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  48. ரொம்ப நன்றி.
    மொழிபெயர்ப்பும் சுவாரசியமான அனுபவம்.

    ReplyDelete

  49. @ அப்பாதுரை,
    இன்னுமொரு வேண்டுகோள் கிடப்பில் இருக்கிறதே. T.P.Kailasam எழுதிய DRONA எனும் ஆங்கிலக் கவிதை தமிழில் எழுத வேண்டிய என் வேண்டுகோளை நினைவூட்டுகிறேன் நன்றி.

    ReplyDelete
  50. dronaவைப் படித்தால் தமிழில் எதுவுமே தோன்ற மறுக்கிறது... :)

    ReplyDelete

  51. @ அப்பாதுரை
    /drona வைப் படித்தால் தமிழில் எதுவுமே தோன்ற மறுக்கிறது/ உங்களுக்குமா ?

    ReplyDelete
  52. நானும் மின்னல்வரிகள் கணேஷ்
    உடன்பிறப்புத்தான்
    அப்பாத்துரை அவர்களின் கவிதையில்
    தங்கள் உணர்வு மிகச் சரியாக பிரதிபலிப்பதாக
    உணர்கிறேன்
    வித்தியாசமான சிந்தனை
    கவிதை மட்டும் அல்ல
    இந்தப் போட்டியும் கூட

    ReplyDelete

  53. @ ரமணி
    ஆங்கிலத்தில் எழுத வேண்டி கொடுத்திருந்த காலம் முடிந்து விட்டது.இருவர் மட்டுமே ,இல. விக்னேஷ்.மற்றும் அப்பாதுரைமட்டுமே எழுதினர். போட்டியே இல்லாத போட்டி நிச்சயமாய் வித்தியாசமாய் இருந்தது. நாள்பட்ட வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete