Friday, February 19, 2016

எண்ணத் துணுக்குகள்


                            எண்ணத் துணுக்குகளா எண்ணிய துணுக்குகளா?
                            ------------------------------------------------------------------------------
    பழைய புகைப்படங்களை அவ்வப்போது புரட்டுவதும் ஒரு பொழுது போக்கு அப்படி செய்கையில் எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேனே என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை. 
1955-ல் நான்        

1962-ல்  நான் 
2015-ல் நான் 
சில எண்ணங்கள் உடல்நலம் குறையும் போது வந்து மோதுகின்றன. பழைய இடுப்புவலி சில நாட்களாய்ப் படுத்துகிறது. இந்த இடுப்பு வலி இப்போதெல்லாம் யாருக்கெல்லம் வராது என்று கூற முடியவில்லை. உடலின் எந்த ஒரு பாகமும்  தன் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கக் கூடாது. கையோ காலோ கண்ணோ  காதோ தான் இருப்பதைத் தெரிவிக்காமல் இயங்கினால் நலமாக இருப்பதாக எண்ணலாம்  அம்மாதிரி இல்லாமல் இருக்கும்  போது பல நினைவுகளும்  வருகின்றன. எனக்கானால் இதை மூப்பின் குணம் என்று எடுத்துக்கொள்ள முடியும்  மூப்பின் குறைபாடுகளைக் குறித்து எழுதிய பதிவொன்று நினைவுக்கு வருகிறது
செய்யாத   குற்றம்.
-----------------------------
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள்
நிறையவே   பார்த்து  விட்டு,
நித்திரை  செல்லப் போகுமுன்,
அன்றைய   நிகழ்வுகள் 
நினைவினில்  நிழலாடும்.

 
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும்.
மறந்தாலும்   பாதகமில்லை
முக்கியமானதாய்   இல்லாதவரை.

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும்
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்
எழுத்தில்   கொண்டு வந்தால்
இனிதே   ரசிக்கலாம்,
இடுகையில்   பதிக்கலாம்
என்றெல்லாம்   கனவினூடே  
நினைவுகளும்   கூடவே   வரும்,

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
     
அதிகாலை   நடை பயிலுகையில்
 
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
 
நடையினூடே   வார்த்தைகளும்
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து,
பேனா   பிடித்தால்   என்னதான் 
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?
 பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
 
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே, உன்னால்  முடியாது  என்று  கூடவே உடல்  கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன்
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட   தண்டனையா..?
------------------------------------------------------------------
கூடவே மூப்பு என்பதை ஒரு வரமாகப் பார்க்க வேண்டும் என்று  எழுதி இருந்தேன் ஒரு நெகடிவ் அண்ட் பாசிடிவ் அப்ரோச். வாசகர்களுக்கு எப்போதும் பாசிடிவ் அப்ரோச் தான் பிடிக்கும் 
முதுமை ஒரு வரம்..?
-------------------------------
சுருங்கிய தோலும்,சரிந்த தொப்பையும்,
நீர் கோத்த பை போன்ற கண்களுடன்,
கண்ணாடியில் காணச் சகிக்காத தோற்றம்
காணுமுன்பே,கண்களை உறுத்தும் பிம்பம்.,
முதுமை அளிக்கும் பரிசா.? இருந்தால் என்ன.?

செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

.கருத்த முடிக்கும் இருகிய இடுப்புக்கும்
என் இப்போதைய இருப்பை நான் பணயம்
வைக்க மாட்டேன்.வயது முதிர்ந்து,அறிவும்
வளர்ந்த என்னை முன்னைவிட நேசிக்கிறேன்.


என் குறைகள் மறந்து முன்னை விட
என்னை நான் நேசிக்கிறேன்..விரும்பும்
இனிப்பை உண்ணும்போதும் படுத்த
படுக்கை சுருட்டாதபோதும் வேண்டாத
பொருள் ஒன்று வாங்கும்போதும் யாருக்கும்
பதில் சொல்லத் தேவையில்லாத இருப்பும்
கிடைத்த விடுதலை உணர்வின் வெளிப்பாடல்லவா?.

.சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
கண்டவன் நான்.கிடைத்த வாய்ப்பை விடுவேனா
உறங்கச் செல்வதோ விழித்து எழுவதோ,
புத்தகம் படிப்பதோ கணினியில் ஆடுவதோ
என் விருப்பம்.-இனிய அறுபது எழுபதுகளின்
இன்னிசைப் பாடல்களை கண்மூடி ரசிப்பேன்,
தோன்றினால் துள்ளி எழுந்து ஆடவும் செய்வேன்.
சில நேரம் இளமையில் தொலைத்த காதலுக்கு
கண்ணீர் வடிக்கவும் செய்வேன்.யாருக்கு என்னைக்
கட்டுப் படுத்தவோ கேட்கவோ முடியும்?

கடலோரம் நடப்பேன்,நீரில் கால்கள் நனைப்பேன்
மணலில் மல்லாந்து கிடப்பேன்.- எனைக் கடந்து
ரசித்துப் போகும்,எள்ளி நகையாடும்
பார்வைகளை அலட்சியம் செய்வேன்.

தஞ்சாவூர் ஓவியம் தீட்டுவேன் கண்ணாடியில்
கடவுளர்களை வரையவும் செய்வேன். அதை
சட்டமிட்டு மாடத்தில் வைத்து அழகு பார்ப்பேன்
எனக்குப் பிடித்த என்னைப் பிடித்தவர்களுக்கும்
பரிசாகக் கொடுத்து மகிழ்வேன், மகிழ்விப்பேன்


சில நேரங்களில் மறதி வந்து அவதிப் படுத்தும்.
மறக்க வேண்டியதை மறந்துதானே ஆகவேண்டும்
நான் வளர்ந்த விதம்,இருந்த இருப்பு,இருக்கும் நிலை.
என்றும் என் மனம் விட்டு அகலாது.

ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.

நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.

வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
என்னை நானே ஏதும் கேள்வி கேட்பதில்லை.
தவறு செய்யும் உரிமையும் எனக்குண்டு
முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
பிடித்திருக்கிறது. என்றும் நான் இருக்கப்
போவதில்லை.- இருந்த காலம் இருக்கும்
காலம் இப்படி அப்படி இருந்திருக்கலாமோ
இருக்க வேண்டுமே எனக் கவலைப் பட்டுக்
கழிப்பதில் எனக்கேதும் உடன்பாடில்லை.
உள்ளத்து உணர்வுகள் உண்மை பேசுகின்றன.
அடி மனத்தின் ஆழத்தில் இருந்து வருகின்றன.
அனைவரும் இன்புற்றிருக்கவும் வானவில்லின்
நிறங்கள் முகத்தில் தோன்றி ஒளிர் விடவும்
வேண்டுதல் செய்வதன்றி வேறொன்றும் வேண்டேன்.

அப்போது என்னையே நான் எண்ணிப்பார்த்து எழுதியதும் மீண்டும் உங்கள் பார்வைக்கு
 .
எண்ணிப்பார்க்கிறேன்
 --------------------------------
அன்றொரு நாள் பதிவொன்றில் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
முண்டாசுக் கவிஞனின் வரிகளை எண்ணி,
காலா, அருகினில் வாடா, சற்றே மிதிக்கிறேன் உனை என்
காலால் என்றே எழுதினேன். காலன் யானையின் காலாக
வந்து அவனையே மிதித்து விட்டான். நான் எம்மாத்திரம்.?

காலனுக்கென்ன பைத்தியமா பிடித்தது என் காலருகே வர.?
என் தோளில் தொற்றி ஏறி,காதருகே முணுமுணுக்கிறான்,
உன் நாட்களை எண்ணிக்கொள்”.எண்ணிப் பார்க்கிறேன்
இருக்கும் நாட்களை அல்ல, இருந்து வந்த நாட்களை.

பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?

ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
யாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
-----------------------------------
என் எண்ணத் துணுக்குகள் சில மீள்பதிவுக்கு வழிவகுத்துவிட்டன முழுவதும் படியுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்





   





.













49 comments:

  1. என்ன எழுதுவது என்று தோன்றவில்லை என்று சொல்லியே இவ்வளவு தூரம் தங்களைத் தாங்களே விமர்சித்துச் சென்ற தூரம் அருமை ஐயா

    //எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்//

    ஹாஹாஹா ஸூப்பர் சினிமா டயலாக் உங்களுக்குள்ளும் இருக்கின்றதே....

    ReplyDelete
  2. நல்ல அலசல். சுய விமரிசனம் அருமை!

    ReplyDelete
  3. அமைதியாக உங்களை நீங்கள் அழகாய் கவனித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்து உணர்த்துகிறது. ஒவ்வொரு தருணமும் அழகான பொழுதுகள். உள்ளம் அழகு ஐயா.

    ReplyDelete
  4. சுய அலசல் அதுவும் இரண்டு பக்கமும் யோசித்திருப்பது ரசனை. பொழுது போகாத ஒரு தருணத்தில் இந்த யோசனைகள் பொழுதைப் போக்க உதவும்! ரசித்தேன்.

    ReplyDelete
  5. எண்ணங்களை ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  6. சுயபச்சாதாபம் கூடாது ,சுய அலசல் சூப்பர் :)

    ReplyDelete
  7. தங்களின் எண்ணங்களைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  8. //வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
    விதிக்கப்பட்ட தண்டனையா..?//

    தண்டனை என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்?.. மூப்பு இயல்பில்லையா?

    ReplyDelete
  9. //முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
    நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா.. //

    வயோதிகம் அல்ல தண்டனை.. நாம் நாமாக இருக்க முடியாதது தான் வாழ்க்கையின் மிகப் பெரிய தண்டனை.. முதுமை அப்படியென்ன பரிசும் சலுகையும் அளித்து விட்டது என்று நினைக்கிறீர்கள்?..

    ReplyDelete

  10. @ கில்லர்ஜி
    முதுமை வயோதிஅகம் பற்றி என்னவெல்லாமோ எழுதி இருந்ததும் ஒரு சினிமா டையலாக்தான் உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  11. @ கீதா சாம்பசிவம்
    எழுதியவை மீள் பதிவுகளே சுய விமரிசனம் வெகு குறைவு. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  12. @ டாக்டர் கந்தசாமி
    பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  13. @ உமையாள் காயத்ரி
    சில கருத்துகள் பொதுவானவைஎதிர்மறையாகவும் நேர்மறையாகவும் சிந்திக்க முயற்சி எண்ணிப்பார்ப்பதில் என்னை நானே அறிகிறேன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  14. @ ஸ்ரீராம்
    பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  15. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கு நன்றி டிடி

    ReplyDelete

  16. @ பகவான் ஜி
    எங்காவது சுய பச்சாதாபம் தெரிந்ததா ஜி வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    என் எழுத்து உங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தால் நல்லதே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  18. @ ஜீவி
    நினைத்ததை செய்ய இயலாதபோது காரணமாகும் வயோதிகம் தண்டனையோ என்று எண்ண வைக்கிறது

    ReplyDelete

  19. @ ஜீவி
    /முதுமை அப்படியென்ன பரிசும் சலுகையும் அளித்து விட்டது என்று நினைக்கிறீர்கள்?./ உங்களுக்கு என்று நான் விளக்கிக் கூற ஒன்றுமில்லை. உங்களுக்கே தெரியும் நான் பட்டியல் இட்டிருப்பது மீண்டும் ஒரு முறை வாசியுங்கள் நன்கு விளங்கும் .

    ReplyDelete
  20. அருமையான அலசல் அய்யா!

    ReplyDelete
  21. "எண்ணித் துணிக கருமம்" என்றார் ஔவையார். இது "எண்ணத் துணுக்குகளின் பருவம்" என்கிறீர்கள் நீங்கள். நேர்மறையோ எதிர்மறையோ, ஆக மொத்தத்தில் இந்த இருமுறைகளிலும் முதுமையை - அதுவம் தன் சொந்த முதுமையை - அணுகும் அளவுக்கு இந்த வயதிலும் தாங்கள் மனத்திட்பத்தோடு இருப்பதே பெரிது! இந்தப் பருவத்தை இவ்வளவு ரசனையோடு கழிப்பவராக உங்களுக்கு முன் நான் வேறு யாரைப் பற்றி அறிந்திருக்கிறேன் என அலசிப் பார்க்கிறேன். அப்படி யாரும் மட்டுப்படவில்லை. ரசனை என்கிற ஒன்று மட்டும் இருந்தால் வாழ்வின் எந்தத் தறுவாயும் அழகுதான், இனிமைதான். அழும்பொழுது கூட "அட! நம் கண்ணீரின் உப்பைச் சுவைத்து வெகுநாட்களாகி விட்டதே" என நினைத்துக் கொள்ளலாம். உயிர் பிரியும்பொழுது கூட வாழ்வில் ஒருமுறை மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்த நொடியை நின்று ரசிக்கலாம். தொடருங்கள் ஐயா! தொடர்கிறேன்!

    ReplyDelete
  22. கனவில் வருவதும்...
    நடைப்பயிற்சியில் பார்ப்பதும்...
    பகிர்வாக எழுத
    நினைத்தால் பறந்து போகின்றன
    என்று சொல்லி
    அழகான கவிதைகளைக் கொடுத்து
    ரசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா...
    அருமை...

    ReplyDelete
  23. சுயதேடல் எழுத நினைப்பதும் விழித்தவுடன் வெறுமையும் யாதார்த்தம் போலும்))) அருமையான அலசல் ஐயா!

    ReplyDelete
  24. எண்ணத் துணுக்குகள் நன்று - நாணயத்தின் இரு பக்கம் போல Positive, Negative என இரண்டையும் பற்றிய எண்ணங்கள் நன்று.

    ReplyDelete
  25. முதுமையை நேர்மறையாக அணுகியவிதம் அருமை.

    ReplyDelete

  26. @ எஸ்பி செந்தில்குமார்
    ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  27. @ இ பு. ஞானப்பிரகாசன்.
    எண்ணித்துணிக என்றது ஔவையாரா? யார் சொன்னால் என்ன.? முதுமையை ரசிப்பவர் பலரும் இருக்கக் கூடும் நான் எழுத்தில் கூறுகிறேன் பிறர் அனுபவிக்கின்றனர் அவ்வளவே
    /நம் கண்ணீரின் உப்பைச் சுவைத்து வெகுநாட்களாகி விட்டதே / ரசித்தேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  28. @ பரிவை சே குமார்
    என் தளத்தின் முகப்பில் எழுதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே உண்மை எப்போதும் இனிக்கும் ஜொலிக்கும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  29. @ தனிமரம்
    விழித்திருப்பதே சிந்திக்க வைக்கிறது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  30. @ வெங்கட் நாகராஜ்
    உடல் சோர்விரும்போது மனம் தளர்கிறது நெகடிவ் அப்ரோச் கூடாது என்று நினைக்கும்போது முதுமை ஒரு வரம் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  31. ! டிஎன் முரளிதரன்
    பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete
  32. சுயவிமர்சனம் நம்மை மேம்படுத்தும் என்பதே உண்மை. அதனைத் தாங்கள் தெளிவாகச் செய்ததோடு எங்களுக்கும் உணர்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete

  33. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எண்ணிப்பார்க்கிறேன் மட்டும் சுய விமரிசனம் போல் இருக்கும் மற்ற இரண்டும் வயோதிகர்களுக்குப் பொதுவானதுதானே. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  34. முதுமை ஒரு வரம் மனைவியின் துணை மற்றும் ஆதரவு இருக்கும் வரை. தன்னுடைய தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் பத்து அது சாபம்.
    அது எப்படி முதுமை பற்றி கந்தசாமி ஐயாவும் நீங்களும் ஒரே சமயத்தில் எழுத நினைத்தீர்கள.

    ஜெயகுமார்

    ReplyDelete
    Replies
    1. பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்


      Delete
    2. பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்


      Delete
  35. இணையத்தில் நடந்த ஒரு சிறுகதைப் போட்டிக்காக 'சாயங்காலங்கள்' என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். முதுமையை எதிர்கொள்ளும் ஒரு முதியவரின் கதையாக... பின்னர் அதன் இணைப்பை இங்கு தருகிறேன். நேரமிருக்கும்போது படித்துப் பாருங்கள்!

    ReplyDelete

  36. @ jk22384
    ஐயா வணக்கம் முதுமை என்பது இரு பாலருக்கும் பொருந்துவது பெண்ணுக்கு முதுமை காலத்தில் கணவனின் ஆதரவு இருக்கவேண்டும் அது சரி / யார் சொன்னது நானும் கந்தசாமி ஐயாவும் ஒரே நேரத்தில் முதுமை பற்றி எழுதுகிறோம் என்று கந்தசாமி ஐயா எழுதியவற்றை நான் 2011 லேயே எழுதி இருக்கிறேன் சுட்டி கூட கொடுத்திருக்கிறேனே பாருங்கள் புரியும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  37. @ ஸ்ரீராம்
    சுட்டி கொடுங்கள் ஸ்ரீ .படிக்கிறேன் நன்றி

    ReplyDelete
  38. மூன்று நிலைகளையும் இரசித்துப் படித்தேன்.
    மூன்று நிலைகளிலும் இரசித்து வாழ்ந்தவர்களாலேயே
    இப்படி இரசிக்கும்படி எழுத முடியும்

    முதலில் எதிர்மறையும் அடுத்து நேர்மறையும்
    அடுத்து எதார்த்தமும் இருப்பதே
    இந்தப் பதிவின் சிறப்பு

    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. நான் சொன்ன கதையின் சுட்டி

    http://engalblog.blogspot.com/2011/10/blog-post_31.html

    ReplyDelete

  40. @ ரமணி
    நீங்கள் ரசித்துப் படித்தது பின்னூட்டத்தில் தெரிகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  41. @ ஸ்ரீராம்
    சுட்டியில் கண்ட கதையைப் படித்தேன் ஸ்ரீ என் எண்ண ஓட்டத்தையும் அங்கேயே பதிவிட்டுள்ளேன் சுட்டிக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  42. anbulla ayya

    vanakkam. en kanipporiyil tamil software illai. atharkku neramum othukka mudiyavillai. iruppinum inru ungal pathivaiyavavathu paarthuvidavendum enru vanten. ungal photokkal maariyirunthaalum 1952 ilirunthu inruvarai ungal kampeeram mattum maaravillai. azhku photokkal. miindum santippom. anbudan Harani.

    ReplyDelete

  43. @ ஹரணி
    ஐயா வணக்கம் நெடுநாளைக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது சிலரிடம் அன்பு இருக்கும் போது அவர்கள் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. உங்களுக்கு என்னிடம் அன்பு இருப்பது தெரியும் அடிக்கடி வாருங்கள்.முன்பே சொல்லி இருக்கிறேன் உங்கள் வருகை எனக்கு டானிக் போல. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  44. .சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
    வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது
    கண்டவன் நான்....................எள்ளி நகையாடும்
    பார்வைகளை அலட்சியம் செய்வேன்.// இந்தப் பாராவை மிகவும் ரசித்தோம் சார்..என்ன ஒரு திட மனம்,முதுமையிலும் ரசிக்கும்மனம்...எத்தனை பேர் இது போன்று முதுமையை ரசிக்கின்றனர்? இல்லை...உங்கள் எண்ணங்களை ரசித்தோம் சார்...

    கீதா: மேற் சொன்ன கருத்துகளுடன் .....நான் இதை அடிக்கடிச் சொல்லுவேன்...சார் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று..உங்கள் சுய அலசலும் அசத்தல்...

    ReplyDelete

  45. @ துளசிதரன் தில்லையகத்து
    வருகை தந்து ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி சார் /மேம்

    ReplyDelete
  46. கெட்டிங் ஓல்ட் க்ரேஸ்ஃபுல்லி என்று இருக்கிறேன்.

    ReplyDelete