அலுவலக அனுபவங்கள்
---------------------------------------
பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
முதல் நாள் பி எச் இ எல்
போனபோது அப்போதிருந்த உதவி எஞ்சினீரின்
ஆஃப்ஃபிஸ் பார்த்தபோது நான்
தவறவிட்டது என்னுள் என்னவோ செய்ததுஒரு பெரிய அறையில் நடு
நாயகமாகஒருடேபிள் அதில்
அமர்ந்திருந்தவர் பிற்காலத்தில் அவ்ர் பிஎச்இ எல்லின் முதன்மை பொறுப்புக்கு வந்தாரென்பது வேறு கதை என் இழப்பைக் கோடி காட்டவே இதைக்
குறிப்பிடுகிறேன் எனக்கான மேல்சதிகாரியிடம் நடந்ததைக் கூறி ஆறுதல்
பெற முயன்றேன் அவர் என்னை ஒரூஉதவி
எஞ்சினிராக நடத்துவதாக ஆறுதல் கூறினார் முதலில் என்னை மெஷின்ஷாப்பின் தரக்காட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பைக் கொடுத்தார் தினப்படி நடக்கும் செய்திகளை
ஸ்கிப் செய்கிறேன் ஒரு முறை
ஆரம்பகாலத்தில் ஃபானுக்கான fan ஒரு பெரியஷாஃப்டில் சிறு குறை இருந்தது சிறுகுறை தெரிந்தும் அதைநான் அக்செப்ட் செய்தேன் அது எப்படியோ தெரிய வந்து
என்மீதுகுற்றம் சாட்டப்பட்டது என்னிடம்கேட்டபோது தெரிந்துதான் செய்தேனென்று
பயப்படாமல் கூறினேன் அப்போது செக்கோஸ்லாவாகியா
உதவியாசளர்களின்
கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது அவர் இது பெரிய குறை
இல்லாவிட்டாலும் பிஎச் இ எல்லின் உள்விவகாரம் தலையிட விரும்பவில்லை என்றார்
அப்போதைய ஜெனெரல் மானேஜரின்பார்வைக்கு எடுத்துச் சென்றனர்அவர் அதன் பாதிப்பு
எனக்குத் தெரியுமா என்று கேட்கச்
சொன்னார் நான் அது குறை என்றாலும் அதனால்
பாதிப்பு ஏற்படாதுஎன்றுகூறினேன் என்
தன்னம்பிக்கை அவருக்குப் பிடித்திருந்தது அந்தஷாஃப்டை அவர் அக்செப்ட் செய்வதாகவும்
பின்னால் பிரச்சனை வந்தால் ஃப்ரீ ரிப்லேஸ்மெண்ட் செய்யலாமென்றும் கூறினார் என்மீதான ஒளி வட்டம்
சிறிதே பிரகாசித்தது
இன்னொரு முறை ரயில்வேயில் இருந்து டெபுடாஷனில் வந்திருந்த வர்க்ஸ் மேனேஜர் தரக்கட்டுப்பாட்டுக்கும் தலைவர்
நான்சில ஐட்டங்களை ரிஜெக்ட் செய்திருந்தேன் அவர் என்னிடம் அக்செப்ட் செய்யச் சொன்னார் நான்மறுதளித்தேன் அவரே எனக்கு பாஸ் ஆனதால் அவரிடமே அதை
அக்செப்ட் செய்யச்சொன்னேன் அவர் அதை எதிர் பார்க்கவில்லை என்னிடம் இருந்தபேப்பரை
வாங்கி கையெழுத்திட்டார் அந்தபேப்பரை நான்
வெகுநாள் வைத்திருந்தேன் என் சக ஊழியர்களிடம் எனக்கிருந்த மதிப்பை உயர்த்திய சம்பவம்
அது என்மீதானஒளிவட்டம் இன்னும் சற்றே ஒளிர்ந்தது
ஜீஎம்பி தைரிய சாலி என்பதோடு தொழில் தெரிந்தவன்
என்றும் பெயர் கிடைத்தது
ஜீ எம் பி எப்பொழுதுமே தைரியசாலிதான்
ReplyDeleteதொடருங்கள் ஐயா
தைரியம் எப்போதும் பலன் தருவ்தில்லை சார்
Deleteதன்னம்பிக்கைதானே ஐயா வாழ்வை அலங்கரிக்கும்.
ReplyDeleteஅது நிறையவே இருப்பதால் பல நேரங்களில் சோர்வடையவில்லை
Deleteஅருமையான சம்பவம்... தொடர்கிறேன்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
Deleteஇளம் வயதில் இப்படி ஒரு துணிச்சல் இருப்பது அபூர்வம்தான்.
ReplyDeleteஅப்படி நினைக்கிறீர்களா
Deleteஅப்போதே துணிச்சல். ஆரம்பம் முதல் அசத்திவந்துள்ளீர்கள் ஐயா.
ReplyDeleteமனதுக்கு சரி என்று தோன்றியதைத்தான் செய்து வந்திருக்கிறேன் செய்தும் வருகிறேன்
Deleteஉங்கள் தன்னம்பிக்கையும் துணிவும் பாராட்டுக்குரியவை.
ReplyDeleteஒரு வேளை அதுவே என் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கலாம்
ReplyDeleteநல்லதொரு நினைவாற்றலும் உங்களிடம் உள்ளது. தொடருங்கள்.
ReplyDeleteஇதில் எழுதியது நினைவாற்றல் கொண்டல்ல வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் மறக்க முடியாதவை
ReplyDeleteஇதுபோன்ற ,சம்பவங்கள் மனதில் நின்று விடுவதில் வியப்பில்லை. சுவாரஸ்யமான அனுபவங்கள்.
ReplyDeleteஎன் அனுபவங்கள் சுவாரசியம் என்பது கேட்க மகிழ்ச்சி
ReplyDelete