இந்தப் புத்தாண்டில் என்ன
---------------------------------------==
ஓரோர் ஆண்டு பிறக்கும்போதும்
எண்ணங்கள்
முட்டி மொதும் இந்தப்புத்தாண்டில்
பிரமாணங்கள்
ஏதும் இல்லை-- இருந்தாலும்
நிறை வேற்றவா போகிறேன் - புலரியில்
புள்ளினங்கள் பறக்கும்போது அவை
நேற்றை நினைக்கின்றனவா ?. இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்கள் எடுக்கின்றனவா ?..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்கச் செய்வதே
புத்தாண்டுப் பிரமாணங்கள்தானே
எனக்கு நான் ஒரு
விதி செய்வென் இந்த ஆண்டு பிரமாணங்கள்
இல்லை
இருந்தாலும்புத்தாண்டில் இருக்க நினைப்பதைக்
கூறலாம்தானே
பொதுவாக முன்
இரவில்
கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி
வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......
பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-(
இருமுடி
எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம்
இருத்தல்போல்
விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள்
).
பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால்
போதுமா.?.
கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல்
வேண்டாமா.?.
இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன
அடுத்த நொடி
காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும்
பழகும்போதும்
அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம்,
தோள்கொடுப்போம்
ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக அன்பர்களே
வழக்கம் போல வாழ்த்துகிறேன் அனைவருக்கும்
என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சின்ன
சின்ன ஆசைகள் நிறைவேற வாய்ப்பு
அநேகமாக இல்லை என்றாலும் நினைக்க என்ன
காசா பணமா அதில் ஏன் கஞ்சத்தனம்
கைவீசி நான்
நடக்க வேண்டும் காலாற
நான்
நடந்து சாலையைக் அளக்க வேண்டும்
பேரூந்துகளிலும் ரயில்களிலும்
நான் பயணிக்க வேண்டும்
விரும்பும்
நண்பர்களை சந்திக்க என்னால் முடிய வேண்டும்
யாரையும் நான் சார்ந்திருக்கக்கூடாது
நண்பர் ஒருவர் கூறியதுபோல் 2020ல் என்
ஆசைகளும்
அபிலாக்ஷைகளும் இனிதே நிறைவேற வேண்டும்
கனவில் நான் இருப்பது போல் நினைத்தது
நடக்கவேண்டும்
என்
இருப்பையே மறைக்கும் என் இயலாமைகள்
மறைய வேண்டும்
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
ஏதும் செய்ய முடியாது எனினும் விரும்பவும்
கூடாதா
நேற்றைப்போல இன்றைக்கும் ஒரு நாளே... நாளெல்லாம் நல்ல நாளே... நாம் வேறு காரணங்களை வைத்து சில சமயம் சுவாரஸ்யம் கூட்டிக் கொள்கிறோம்!
ReplyDeleteஇனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.
அந்த வேறு கரணங்கள் தான் என்னவோ
Deleteஆங்கிலப் புத்தாண்டுதான் அந்த வேறு காரணம்!
Deleteநான் வேறு ஏதோ சுவாரசியம் என்று நினைத்தேன்
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteபதிவிலேயே கூறி இருக்கிறேன் இங்கு மறு மொழியாக மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Deleteசின்ன சின்ன ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும்!எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
ReplyDeleteஏதும் செய்ய முடியாது எனினும் விரும்பவும் கூடாதா //
ReplyDeleteஏன் கூடாது? கண்டிப்பாய் விரும்பலாம்! விரும்பியவை மாவும் கிடைக்க வாழ்த்துக்கள் .
விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சிதான்
Deleteவாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎப்போதோ வரும் உங்கள் கருத்துக்கு நன்றி
Deleteவிரும்பியது கிடைக்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவிரும்புவதை கூறியிருக்கிறேன் சாதாரணனின் எளிய விருப்பங்கள் தானே கிடைத்தால் மகிழ்வென்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete/கைவீசி நான் நடக்க வேண்டும்
ReplyDeleteகாலாற நடந்து சாலையை
அளக்க வேண்டும்
பேரூந்துகளிலும் ரயில்களிலும்
நான் பயணிக்க வேண்டும்
.......................
என் இருப்பையே மறைக்கும்
என் இயலாமைகள்
மறைய வேண்டும்..
அதற்கு நான்
என்ன செய்ய வேண்டும்?'//
கவிதையென உயிர்ப்பு கொண்ட வரிகள்
காலம் ஒரு தோழன்
உங்கள் விருப்பம் நிறைவேறும்.
வாழ்த்துக்கள், ஐயா!
நான் சொல்லவந்ததைத் தெரிந்து அளித்த பின்னூட்டம் நான் முன்பே கூறி இருந்ததுபோல் நீங்கள் ஒரு discerning reader என்பதைத் தெளிவு படுத்துகிறது நன்றி சார்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபச்சைப் பசும்பொன் அதிராவுக்கு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteதங்களுக்கும் தங்கள் மனைவியாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஎப்போதும் எதையாவது நினைத்துக்கொண்டிருப்பதும், எதற்காவது ஆசைப்படுவதும் மனித இயல்புதானே. படுங்கள்! யார் வேண்டாமென்றது!
மீண்டும்பதிவைப் பார்க்க வேண்டுகிறேன் ----
Deleteசின்ன சின்ன ஆசைகள் நிறைவேற வாய்ப்பு
அநேகமாக இல்லை என்றாலும் நினைக்க என்ன
காசா பணமா அதில் ஏன் கஞ்சத்தனம்/--என் இருப்பையே மறைக்கும் என் இயலாமைகள்
மறைய வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
நான் புத்தாண்டுப் பிரதிக்ஞை எல்லாம் எடுத்துக்கொள்ளுவதில்லை. இந்த நாளும் எல்லா நாட்களையும் போல் ஓர் நாளே! அலுவலக ரீதியாகக்வும் நிர்வாக ரீதியாகவும் கணக்கிட மட்டும் இதைத் தானே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இதற்கு ஓர் முக்கியத்துவம். உங்கள் ஆசைகள் நிறைவேறப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteபிரதிக்ஞைகள் எடுத்து நிறைவேற்றாமல் இருப்பதைவிட பிரதிக்ஞைகள் எடுக்காமல் இருப்பதே மேல் உங்கள் பிரார் த்தனைக்கு நன்றி
Delete//இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன அடுத்த நொடிகாண்பதே நிச்சயமில்லை....காணும்போதும் பழகும்போதும்அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம், தோள்கொடுப்போம்ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்// மிக நல்ல செய்தி. உங்கள் நல்ல விருப்பங்கள் நிறைவேறட்டும். இனிய புத்தாண்ண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
Deleteதங்களது ஆசைகள் நிறைவேறட்டும்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நிறை வேறினால் மகிழ்வேன் வருகைக்கு நன்றி
Deleteஇனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteஉங்கள் ஆசைகளும் அபிலாசைகளும் நிறைவேற, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஉயிர்ப்புடன் இருக்க சின்னச் சின்ன ஆசைகள்தானே வாழ்த்துக்கு நன்றி சார்
ReplyDeleteநீடூழி வாழ்ந்து உங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் தொடர்ந்து பதிய வாழ்த்துகிறேன் .
ReplyDeleteநீடூழி வாழ வாழ்த்து வதை விட நலமாக இருக்க வாழ்த்து விரும்புகிறேன் நன்றி
ReplyDelete