Saturday, January 4, 2020

படித்ததும் புரிந்ததும்



                                          படித்ததும்   புரிந்ததும்
                                          -------------------------------------

 
WeerWEER ஏஏ ர்படித்ததும் புரிந்ததும் 
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல்-386)

  கட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஏவல் விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, இனமொழி விடை ஆகிய எட்டு விடைகள். மறை என்பது மறுத்தல்; நேர் என்பது உடன்படுதல்; இரண்டும் எதிர்ச்சொற்கள். இவற்றை ஒன்று சேர்த்து ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரைப் பலரும் எடுத்தாள்கின்றனர். இது பிழையாகும்


நேர்மறை என்றால்  என்ன நம் எண்ணங்களை நினைத்தபடி  நாம் கூறுவது நேர்மறையா எதிர்மறையா நான்படித்ததில்புரிந்து கொண்டதைக் கூறுகிறேன்    
  

 
பல விஷயங்களில் கருத்து வேறு பாடு இருக்கும்பொது , நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணங்களை  எப்படி  வளர்க்கமுடியும் மனம்  நோகாதவாறு  நம் கருத்துகளைக்கூறுவது எப்படி
 தவறாகும்  .
ஆனால் பலரும் அதை விரும்புவதில்லை நட்பு பாதிக்கப்படும் என்று  நினைக்கிறார்கள் மனதில் பட்டதை சொல்வதுஎப்படி நட்பை பாதிக்கும்அப்படி பாதிக்குமானால் அது நட்பே அல்ல என்றே  நினைக்கிறேன் எனக்கு வந்த ஒருவாட்ஸாப் செய்தியில் சிலவற்றை இங்குதருகிறேன்  நேர் மறை என்பதன் பொருள் வித்தியாசமாகப் புரிந்து கொள்வதால் வந்தசெய்தியோ என்னவோ
 

  அன்பு வணக்கம் நட்புக்களே
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

எதிர்மறையாக நினைக்காமல் இருப்பதும், நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணங்களை வளர்ப்பதே நேர்மறை எண்ணங்கள் ஆகும்.

இவ்வாறு நடந்து கொள்வது கடினமா?

துவக்கத்தில் இதற்காக உங்களை மாற்றிக்கொள்வது கடினமாக இருக்கும், ஒரு கட்டத்தில் அதுவே பழகி விடும்.

"
எப்படி இருக்கீங்க?" என்று யார் கேட்டாலும், "சூப்பரா இருக்கேன் " என்று கூறுவது
ஒரு நேர்மறை எண்ணம்

ஆனால், நினைப்பது போல அவ்வளவு எளிதாக இல்லை.

காரணம், நம் சமூகம் முழுக்க எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே, எங்கே திரும்பினாலும், படித்தாலும் எதிர்மறை செய்திகளாகவே உள்ளன.

குறிப்பாகச் சமூகத்தளங்கள், ஊடகங்கள் எதிர்மறை எண்ணங்களின் ஊற்றாக உள்ளது.

ஊடகங்களில் நல்ல செய்தியைக் காண்பதே அரிதாக உள்ளது. திறந்தாலே முழுக்க எதிர்மறை செய்திகளே நிரம்பி வழிகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்மறை எண்ணங்கள் உச்சத்தில் உள்ளது. நெறியாளர்கள் எதிர்மறை பேச்சுகளைத் தூண்டுகிறார்கள்.

சீரியல்களில், திரைப்படங்களில், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று அனைத்துப் பக்கங்களிலும் எதிர்மறை எண்ணங்கள்.

எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

யாராவது எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், "எதோ இருக்கேன், வண்டி போகுது, சுமாரா இருக்கேன், மோசமா இருக்கு, நேரமே சரியில்லை" என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைக் கூறாதீர்கள்.

"
ரொம்ப நல்லா இருக்கேன்" என்று உற்சாகமாகக் கூறுங்கள், இதைப் போலக் கூறுவதால் நீங்கள் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. இவ்வாறு கூறுவதால், கேட்டவரையும் மனதளவில் உற்சாகப்படுத்துகிறீர்கள்.

நடக்காது, கிடைக்காது என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் பேசாதீர்கள். நடக்கும் என்று நம்புங்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

நடக்கவில்லையென்றாலும், இதுவும் நன்மைக்கே என்று நேர்மறையாகக் கருதுங்கள்.

அடுத்தவரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாது?

அடுத்தவரைச் சோர்வடைய செய்யும் கருத்துகளைக் கூறாதீர்கள்.

ஒன்றை கூறுவதால் எந்தப்பயனும் இல்லையென்று கருதினால், அதைக் கூறி அடுத்தவரை வருத்த வேண்டாம்.

அடுத்தவரைத் தேவையற்று மன ரீதியாகப் பயமுறுத்த வேண்டாம்.

எதிரில் இருப்பவரை மன உறுதி இழக்கச்செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

அருகில் இருப்பவரின் குறைகளைத் தேடித் தேடி கூற வேண்டாம்.

அடுத்தவர் மனம் நோகும்படியான பேச்சுகளைப் பேசாதீர்கள்.

உடல் / தோற்றம் சார்ந்த குறைகளைச் சுட்டிக்காட்டாதீர்கள்.

பயிற்சியே நம்மை மேம்படுத்தும்

நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்று பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு தான் எத்தனை எதிர்மறை எண்ணங்களை நாம் கொண்டு இருக்கிறோம் என்றே தெரிய வருகிறது.

கடினமாக இருந்தாலும், தொடர் பயிற்சியில் தோராயமாக 80% வெற்றி பெற்று விட்டேன் என்றே கருதுகிறேன்.

தற்போதெல்லாம், எதிர்மறை செய்திகளைப் படிக்கவோ பார்க்கவோ பிடிப்பதில்லை. அந்தப்பக்கமே செல்வதில்லை.

எதெல்லாம் என்னைக் கோபப்படுத்துகிறதோ, பதட்டம் அடைய வைக்கிறதோ, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதோ, கவலையை ஏற்படுத்துகிறதோ அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.

நாம் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டும்

நேர்மறை எண்ணங்களால் பயன்கள்:

எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

யாரையும் பொறாமையாக நினைக்கத் தோன்றாது.

மற்றவர்கள் தவறாகக் கூறினாலும், அவர்களை எளிதாகப் புறக்கணிக்க முடியும்.

மற்றவர்கள் தவறாகப் பேசியதை பற்றி நினைத்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

மனதில் உள்ள வன்மம் குறையும்.

எல்லாமே நல்லதாகவே நடக்கும்.

கெட்டது நடந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கும்.

யாரையும் எதிரியாகப் பார்க்கத் தோன்றாது.

எதற்கு இவ்வளவு நாட்களாகப் பலரிடம் சண்டை போட்டோம் என்று தோன்றும்.

எதுவுமே பிரச்சனையாகத் தோன்றாது.

எல்லோருமே நல்லவர்களாகத் தெரிவார்கள்.

கோபம் குறைந்திருக்கும் / வராது.

மன அழுத்தம் இருக்காது.

மற்றவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.

எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று வியப்பாகக் கேட்பார்கள்.

பிரச்சனைகளே நமக்கு இல்லையா?! என்று சந்தேகம் வரும்.

பதட்டம் இருக்காது.

மனது பாரம் இல்லாமல், பறப்பது போல இருக்கும்.

எதிலும் சிக்காத சுதந்திரத்தை உணர்வீர்கள்.

எதையும் யோசித்து நிதானித்துச் செய்வீர்கள்.

உங்களுக்கு நல்லது நடப்பது அதிகரித்து இருப்பதை உணர்வீர்கள்.

பாருங்க எவ்வளவோ நன்மைகள்!!   . எதிர்மறை எண்ணங்களால் இவற்றை எல்லாம் வாய்ப்பிருந்தும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள்.

எதிர்மறை எண்ணங்களால் நமக்குப் பாதிப்பு மட்டுமே. இதைத் தயவு செய்து உணருங்கள்.

நேர்மறை எண்ணங்களைப் பின்பற்றுவதால், கண் முன்னே பல நன்மைகள், நல்ல செயல்கள் நடக்கும்போது.

ஏன் நீங்கள் மன உளைச்சலை, கவலையை, பதட்டத்தை, சோகத்தை, எரிச்சலை, மன அழுத்தத்தை, பொறாமையை, கெட்டதைத் தரும் எதிர்மறை எண்ணங்களைத் தேடிப்போய்ப் பின்பற்றுகிறீர்கள்.

எல்லோரும் நினைப்பது போல உலகம் மிக மோசமானது அல்ல, சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. பிரச்னை என்று நினைத்தால் எல்லாமே பிரச்சனைகள் தான்.

சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டி உங்கள் எதிர்மறை எண்ணங்களை நியாயப்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

உங்கள் கண்ணில் படும் நல்லதை கவனிக்க ஆரம்பித்தால், இதுவரை காணாத நல்ல காட்சிகளும் இதன் பின் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

நேர்மறை எண்ணங்களின் பலம் அபரிமிதமானது. நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்.

நன்றி

    .





      


25 comments:

  1. Replies
    1. சதரணமகப் புரிந்து கொள்வதை தவறு என்பதைக் காட்டவே பதிவு

      Delete
  2. நேர்மறை க்கு ஒரு குறள் :

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)


    எதிர்மறை எண்ணங்களை மாற்றும் ஒரு குறள் :

    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று. (152)

    ReplyDelete
    Replies
    1. நேர் என்றால் உடன்படுதல் மறை என்றால் மறுத்தல் என்பதே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை சுட்டவே இப்பதிவு

      Delete
  3. நேர்மறை நல்லதுதான். ஆனால் பழகிக்கொள்வது ஆரம்பத்தில் கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன். நாம நல்லா இருக்கோம், பிரச்சனை இல்லைனு சொன்னா, கேட்கிறவன், 'ஆஹா இவனுக்கு வந்த வாழ்வைப்பாரு, ரொம்ப நல்லா இருக்கானாம்' என்று கண்ணேறு பட்டுவிடுமோ எனவும் யோசிக்கத் தோணுகிறது

    ReplyDelete
    Replies
    1. பதிவின் கருத்தே வெறு

      Delete
  4. //மனதில் பட்டதை சொல்வது எப்படி நட்பை பாதிக்கும் அப்படி பாதிக்குமானால் அது நட்பே அல்ல//

    உண்மை ஐயா

    ReplyDelete
  5. Replies
    1. கருப்பு பின்னணியில் இருப்பதும் வாட்ஸாப்பில் வந்ததும் வித்தையாசம் தெரிகிறதா

      Delete
    2. கருப்பு எதிர்மறையையும் வெண்மை நேர்மறையையும் குறிப்பதுபோல் இருப்பதால், எதிர்மறையை பின்னுக்கு தள்ளி நேர்மறையை முன் கொண்டுவரவேண்டும் என சொல்லாமல் சொல்கிறதோ புலனத்தில் (WhatsApp) வந்த தகவல்.

      Delete
    3. நான் அந்த வலைத்தளத்தில் இருந்து தெரிந்தது நேர் என்பது உடன் படுதலையும் மறை என்பதுமாறுபடுவதையும் காட்டுவதால் ந்சேர்மறைஎன்னும் சொல் சரியல்ல என்பதே இருந்தாலும் வேறு பொருளிலேயே அதிகம் கையாளப்படுகிறது என்பதைச்சுட்டவே

      Delete
  6. அருமை
    நல்லதையே நினைப்போம்

    ReplyDelete
    Replies
    1. விதைப்பது விளையும்

      Delete
  7. இது கல்கண்டு தமிழ்வாணன் எழுதியது போல் இருக்கிறது. உங்களுடைய பதிவு போன்று தோன்றவில்லை. Optmists can not be optimists always. There is a murphy's law which also pops up. 

    ReplyDelete
  8. தமிழ்வாணன் who என் எழுத்துதான் எங்கிருந்து என்றும் தெரியுமே படித்தால் இலக்கிய சாரலில் இருந்தும் எனக்கு வந்த வாட்ஸாப்பில் இருந்தும்நேர் என்றால் உடன்படலும் மறை என்றால் மறுப்பதுமெனப்படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நேர்மறை
      பெயர்ச்சொல்-ஆக, -ஆன
      பெருகிவரும் வழக்கு
      1
      பெருகிவரும் வழக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்கிற மனப்பான்மை.

      ‘இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் நேர்மறைச் சிந்தனையுடன் விளையாட வேண்டும்’
      ‘எப்போதும் நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது’

      Delete
    2. நன்னூலில் உள்ளதை இலக்கிய சாரல் தளத்திலிருந்தபடி எடுத்தாண்டிருக்கிறேன் எதிர்ச் சொற்களைச் சேர்த்து நேர்மறை எனக்கையாள்வது பிழையாகும்

      Delete
  9. நேர் மறை x எதிர்மறை -- இரண்டிலும் மறை என்பது பொதுச் சொல் என்று எடுத்துக் கொண்டால்

    நேர் x எதிர் இரண்டும் எதிரும் புதிருமாகக் காட்சியளிக்கும்.

    நீங்கள் எடுத்தாண்டிருப்பது யாரின் நூல்?.. குழப்பியிருக்கிறாரே!

    ReplyDelete
    Replies
    1. பதிவிலேயே இருக்கிறதே நன்னூலில் இருந்து எடுத்திருக்கிறார்

      Delete
  10. நன்னூல் சரி. யாரின் பொருள் கூறல்? பின்னூட்ட மறுமொழியில் இலக்கியச் சாரல் என்று சொல்லியிருக்கிறீர்கள். இலக்கிய சாரல் என்பது ப்ளாக்கா?.. பதிவிலேயே இதையெல்லாம் கோர்வையாகக் குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் துணைக் கேள்விகளுக்கு அவசியமே இருந்திருக்காது.

    மறை என்பதனை பொதுச் சொல்லாக எடுத்து பொருள் கொள்ளும் என் விளக்கம் உங்களுக்கு ஒத்து வருகிறதா?.. இல்லையென்றால் சொல்லுங்கள். வேறு மாதிரி இந்த நேர்மறை - எதிர்மறை விஷயத்தை அணுகவும் வழியிருக்கிறது.

    ReplyDelete
  11. எழுதின்யவர் தளம்கொடுக்கிறேன் சில பின்னூட்டங்கள்ஏன்தான் sceptic ஆக இருக்கிறதோ புரியவில்லை http://sgnanasambandan.blogspot.com/2019/10/blog-post_22.html

    ReplyDelete