கல்வி-- இனி ஒரு விதி செய்வோம்
------------------------------------------------
எத்தனை முறை எழுதினாலும் சரியாகச் சொல்லவில்லையோ
என்ற எண்ணம் அவ்வப் போது எழுகிறது. இந்தக் கல்வி பற்றிதான் கூறுகிறேன்
இப்போது அளிக்கப் படும் கல்வி பலருக்கும் திருப்தி தருவதாயில்லை. .கல்வி என்பதுதான்
என்ன? வெறுமே எழுதப் படிக்கக்கற்பிப்பதா? கணக்குப்போடச் சொல்லிக் கொடுப்பதா.?
என்னை பொறுத்தவரை கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் எழுதப்
படிக்கத் தெரிந்தாலே போதும் கல்வி அளித்ததாக ஆகுமென்றுதான் பலரும் நினைக்கிறோம்
ஏனென்றால்
நூற்றாண்டுகளாக அதுவே மறுக்கப் பட்டு வந்த நிலைக்கு இது முன்னேற்றம்தான் அல்லவா?
இதிலும் இப்போது நூறுசதவீதம் கல்வி என்பதே அவசியமாகப் படுகிறதுமுதலில் எழுதப்
படிக்கத்தெரிந்தால் பல செய்திகள் நிகழ்வுகள் அவற்றின் தாக்கம் எல்லாம் தெரிய
வரலாம் எனக்கு மக்கள் கல்வி அறிவு கிடைக்கப் பெறாமல் போனதற்கு நம் நாட்டில் உலவி
வந்த வருணாசிரம முறைதான் முதல் காரணம் என்று தோன்றுகிறது,இதைப் படிக்கும்போதே
சிலர் மனசு படபடப்பது தெரிகிறது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்
இந்த
வாய்ப்பை அதிகம் பயன் படுத்தி தங்கள் நிலையினை உயர்த்திக் கொண்டனர் உயர்
சாதியினர்.நாம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்னும் எண்ணமே இல்லாமல் அடிமை
வாழ்வில் இன்பம் கண்டவர் நம் முன்னோரில் பலர். இருந்தாலும், இந்த மெக்காலே கல்வி
முறையில் கல்வி கற்றவரின் எண்ணங்கள் சற்று விசாலமடையத் தொடங்கியது கல்வி
கற்றவர்களில் சிலர் சிந்திக்கத் தொடங்க நம் நாடு அடிமைத்தளையிலிருந்து
மீண்டது.சுதந்திரம் பெற்றபோது கல்வியிலும் வாய்ப்பிலும் பின் தங்கப் பட்டவர்கள்
இருக்கிறார்கள் என்று உணரப் பட்டது சுதந்திர இந்தியாவில் குறிப்பிட்ட சதவீதம்
மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்வியிலும் அரசு பணிகளிலும் ஒதுக்கீடு
பெறவேண்டும் என்னும் எண்ணம் பரவலாக இருந்ததுகுறிப்பிட்ட சதவீதம் போதாதென்று
பொராட்டங்கள் நிகழ்ந்ததும் அதற்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்ததும் அண்மைய
சரித்திரம் இந்த ஒதுக்கீட்டின் தேவை எத்தனை காலத்துக்குத் தேவைப் படும்? இதை
இப்படியே PERPETUATE
செய்வது சரியா
என்றும் கேள்வி எழுகிறது தற்போதைய உலக மயமாக்கலின் காரணமாக இன்னொரு ஜாதியும் தலை
தூக்கி இருக்கிறது அதுதான் பணக்கார ஜாதி
நம்மை நாமே ஆளும்போது ,நாம் எல்லோரும் சமம் எனும்போது , வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும். வாய்ப்பு வேண்டிப் போராட கல்வி அறிவு அவசியம். அதுவும் பரவலான நூறு சதவீதக்
கல்வி அவசியம். நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம். படித்தவர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம். படித்தவர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
தற்சமயம் நிலவி வரும் சூழ்நிலையில் கேக் ஊட்டப்பட்டு ஊக்கப்படுத்தப் படுபவர்கள்
முகவரி தெரியாமல் போய்விடுகிறார்கள் என்ற அச்சமும் கல்வியறிவே காசு கொண்டு வாங்கப்பட வேண்டிய அவல நிலையில் நாம் உள்ளோம் என்ற கவலையும் இருப்பது சகஜம்
மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து சக்தியும் இல்லாமல் படித்துயர்ந்து வந்தவர்களும் ஏராளம் உண்டு. நகரங்களில் வசிக்கும் நம் கண் முன்னே படுவது கான்வென்ட் படிப்பும் கூடவே வரும் அதிக செலவினங்களும்தான் .இல்லாதவன் தன தலைமுறைக்குப் பிறகு தன பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபடுவதையும் பார்க்கிறோம். இயற்கைதானே. ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப் படிப்பும்தான் மேலானது என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு அடிமையாகும்போதுதான் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
எழுத்தறிவும் கல்வியறிவும் பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள். முனிசிபல், கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்துப் பெயர் வாங்கும் சிறார் சிறுமிகளும் இருக்கிறார்கள்.,என்பது நமக்குத் தெரிந்ததே. நாம் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்கும்போது மிடில் கிளாஸ் மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின் கருத்தைக் கேட்கவோ எடுத்துச் சொல்லவோ நம்மில் பலரும் முன் வருவதில்லை இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும் படிப்பறிவும் இருநதால் அவர்களை அவர்களே மேம்படுத்திக் கொள்வார்கள்
நான் ஒரு முறை லலிதாம்பிகா கோவிலுக்குச் செல்ல திருமீயச்சூர் சென்றிருந்தேன் அங்கு பள்ளிக்கு சென்று வர சீருடை அணிந்த சிறுவர் சிறுமிகள் சைக்கிளில் செல்வதைக் கண்டபோது மனசுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பசியாற மதிய உணவு, சீருடை, மற்றும் சென்றுவர இலவச சைக்கிள் இவை எல்லாம் கல்வியறிவு பரவலாகச் செய்யும் உந்து சக்திகள்தானே. மேலும் தற்போது
கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி எல்லாப் பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள் ஏழைகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும் முறையில் ஏற்ற தாழ்வு குறைந்து சம வாய்ப்பு கிடைக்கும் ஒரு திட்டம் .ஆனால் இதை நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்
In
a gist,
எல்லோருக்கும் கல்வி போய்ச் சேரவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் நிலவுகிறது இருக்கும் நிலை போதாதென்று ஏழை பணக்காரன் எனும் பாகுபாடும்
கூடிக் கொண்டே போகிறது பிறப்பொக்கும் என்று கூறும் நாம் வாய்ப்புகளையும் சமமாக்க
வேண்டும் காலம் காலமாக ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்துவது இந்த ஏற்ற தாழ்வுகளைக்
களைய முடியாது என்னும் எண்ணத்தினால் இருக்கலாம் அல்லது இந்தஏற்ற தாழ்வுகள் மறையக்
கூடாது என்பதாகவும் இருக்கலாம் பூர்வ ஜன்ம காரணங்களையும் விதியையும் நம்புபவர்கள்
எப்படியாவது எதையாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம் ஆனால்
அது சரியல்ல எல்லோரும் சமம் என்று எண்ணவைக்க சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும் இதை எப்படித்தான் செய்வது. ஏழை பணக்காரன்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை சிறு வயதிலேயே சிறார்கள் மத்தியில்
வரவிடாமல் செய்ய வேண்டும் இன்றைய சிறார்கள் நாளைய குடிமக்கள் நம்மை ஆளப்
போகிறவர்கள்.அவர்களுக்கு இந்தமாதிரியான பேதங்கள் தோன்றாமல் செய்யும் இடம்
கல்விக்கூடமே. பள்ளியில் படிப்பவர் அனைவரும் சமம் என்னும் எண்ணம் இளம்
பருவத்திலேயே விதைக்கப் பட வேண்டும் அதை எப்படிச் செய்வது எனக்கு அதிகாரமும்
சக்தியும் இருந்தால் நான் கல்விச்சாலைகளை முதலில் அரசிடம் கையகப்படுத்துவேன்
எல்லோருக்கும் இலவசக் கல்வி கட்டாயம் என உத்தரவு போட்டு அமல் படுத்துவேன் கல்வி
மட்டுமல்ல சீருடையும் மதிய உண்வும் கட்டாயமாக
இலவசமாக்குவேன் எல்லோருக்கும் சமகல்வி உணவு சீருடை என்றாகும்போது
சிறார்களிடம் உயர்வு தாழ்வு எண்ணங்கள் வராது. பள்ள் இறுதி வரை படிக்க வைத்து
முன்னேற்றம் காண்பவர்களுக்கு உயர் கல்வி அளிப்பேன் இலவசமாக எல்லாம் வழங்குவது
உய்ர்வு தாழ்வுகளை நேர் செய்யவே அல்லாமல் பெறப்போகிறவர்கள் எல்லாம் இல்லாதவர்கள்
என்ற காரணமல்ல
கல்வியை
வியாபாரமாக்கும் குடிமக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் நான் சொல்லும் வழி
எளிதானதல்ல. செயல் படுத்த COURAGE AND CONVICTION மிகவும் தேவை இந்த வழிமுறைகள் ஒரு ஏற்ற தாழ்வில்லாத
சந்ததியினரை உருவாக்கும் என நம்புகிறேன்
நடை
முறை சிக்கல்கள் ஏராளம் இருக்கலாம் அதைஎல்லாம் தாண்டி இதை ஒரு புனித வேள்வியாக
நினைத்துச் செயல் படுத்த வேண்டும்
நண்பர்களே
ஒன்றுக்கு இருமுறைபடித்துப் புரிந்து கொள்ளுங்கள்/ ஒத்த கருத்து என்பது சிக்கலான
விஷயம் என் உரத்த சிந்தனையின் விளைவே இப்பதிவு. மனசில் உள்ளதை உள்ளபடி
கருத்திடுங்கள்