சந்திக்க ( மீண்டும் ) வேண்டுகிறேன்
---------------------------------------------------
-
அன்பு பதிவுலக நண்பர்களுக்கு
இதை நான்
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதுவதாகப் பாவிக்க வேண்டுகிறேன். சென்ற
ஆண்டு நவம்பர் வாக்கில் சென்னை வந்திருந்தேன். பதிவுலக நண்பர்களை நேரில் கண்டு
பேசி மகிழலாம் என்று எண்ணி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இரண்டு மூன்று பேரை மட்டுமே
சந்திக்க முடிந்தது. நான் சென்னை வருகிறேன், நான் பதிவர்களை அவர்கள்
இருப்பிடத்தில் சென்று சந்திப்பதே முறையாக இருக்கும். ஆனால் அதில் ஒரு சிக்கல்.
என் முதிய பிராயத்தில் பல பயணங்களை மேற்கொண்டு நானாக அவர்களைத்தேடிச் சென்று சந்திப்பதில்
இருக்கும் பிரச்சனைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்
இருப்பிடத்துக்கு நண்பர்கள் வந்து சந்திப்பதானால் அது அவர்களுக்கு ஒரே பயணமாக
இருக்கும். ஆகவே logistics மனதில் கொண்டு சென்னை வாழ் பதிவர்கள் என்னை என்
இருப்பிடம் வந்து சந்திக்க முன் வந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு ஏது.?
நான் 15-ம் நாள் இரவு சென்னை வருகிறேன். சென்னையில் உறவினர்கள்
வீட்டு இரு திருமணங்கள் ஒன்று 16-ம் தேதி
மாலை ரிசப்ஷன் 17-ம் தேதி காலையில் முஹூர்த்தம். இன்னொரு திருமணம் 20-ம் தேதி. ஆக
நான் சென்னையில் நான்கைந்து நாட்கள் இருப்பேன். இந்த இரு தினங்கள் தவிர மற்ற எல்லா
நாட்களிலும் நான் “ரெடி” நீங்க ரெடியா.
வேளச்சேரியில் என் மகன் வீட்டில் தங்குவேன்விஜயநகர் பஸ்
நிலையத்தை ஒட்டி இருக்கும் 80 அடி பைபாஸ் ரோடில் SAI SAROVAR எனும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது
மாடியில் என் மகன் வீடு. சென்னையில் என்னை
096865 95097 என்னும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக்குத்
தெரிந்த சென்னைவாழ் பதிவர்கள் சிலருக்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு எழுதி
இருக்கிறேன். நான் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளாதவர்களும் இதை தனிப்பட்ட
அழைப்பாகக் கருதி சந்திக்க வேண்டுகிறேன். இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி