செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பதிவில் கடிதம்


                                    சந்திக்க ( மீண்டும் ) வேண்டுகிறேன்
                                   ---------------------------------------------------

-

அன்பு பதிவுலக நண்பர்களுக்கு
 இதை நான் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதுவதாகப் பாவிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு நவம்பர் வாக்கில் சென்னை வந்திருந்தேன். பதிவுலக நண்பர்களை நேரில் கண்டு பேசி மகிழலாம் என்று எண்ணி இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக இரண்டு மூன்று பேரை மட்டுமே சந்திக்க முடிந்தது. நான் சென்னை வருகிறேன், நான் பதிவர்களை அவர்கள் இருப்பிடத்தில் சென்று சந்திப்பதே முறையாக இருக்கும். ஆனால் அதில் ஒரு சிக்கல். என் முதிய பிராயத்தில் பல பயணங்களை மேற்கொண்டு நானாக அவர்களைத்தேடிச் சென்று சந்திப்பதில் இருக்கும் பிரச்சனைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் இருப்பிடத்துக்கு நண்பர்கள் வந்து சந்திப்பதானால் அது அவர்களுக்கு ஒரே பயணமாக இருக்கும். ஆகவே logistics  மனதில் கொண்டு சென்னை வாழ் பதிவர்கள் என்னை என் இருப்பிடம் வந்து சந்திக்க முன் வந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு ஏது.?
நான் 15-ம் நாள் இரவு சென்னை வருகிறேன். சென்னையில் உறவினர்கள் வீட்டு இரு திருமணங்கள் ஒன்று  16-ம் தேதி மாலை ரிசப்ஷன் 17-ம் தேதி காலையில் முஹூர்த்தம். இன்னொரு திருமணம் 20-ம் தேதி. ஆக நான் சென்னையில் நான்கைந்து நாட்கள் இருப்பேன். இந்த இரு தினங்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் நான் “ரெடிநீங்க ரெடியா.

வேளச்சேரியில் என் மகன் வீட்டில் தங்குவேன்விஜயநகர் பஸ் நிலையத்தை ஒட்டி இருக்கும் 80 அடி பைபாஸ் ரோடில் SAI SAROVAR  எனும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் என் மகன் வீடு. சென்னையில் என்னை
096865 95097 என்னும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக்குத் தெரிந்த சென்னைவாழ் பதிவர்கள் சிலருக்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு எழுதி இருக்கிறேன். நான் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளாதவர்களும் இதை தனிப்பட்ட அழைப்பாகக் கருதி சந்திக்க வேண்டுகிறேன். இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி

13 கருத்துகள்:

  1. நிச்சயம் உங்களை 18 ஆம் தேதிக்குமேல் வேளச்சேரியில் வந்து சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அழைப்பிற்கு நன்றி ஐயா! காலம் ஒத்துழைத்தால் சந்திக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. பதிவர் சந்திப்பு தொடரட்டும், மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  4. பதிவர் சந்திப்பு தொடரட்டும், மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  5. சென்னையில் நண்பர்களின் சந்திப்பு சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் மின்னஞ்சல் கிடக்கப் பெற்றேன்ஐயா!. தங்களை கட்டாயம் சந்திக்க விரும்புகிறேன். முன்னதாக தொலைபேசியில் சொல்லி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சென்னைப் பயணமும், வலைப்பதிவர்களுடனான சந்திப்பும் சிறப்பானதாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு தனி மின் அஞ்சலில் பதில் அனுப்பி இருந்தேன். எனக்கும் வரும் விருப்பம் இருக்கிறது ஸார்.

    பதிலளிநீக்கு
  9. சென்னையில் நடுக்கும் பதிவர் சந்திபைபற்றி படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் உங்களை வந்து சந்திக்க ஆசைதான். ஆனால் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து வேளச்சேரி சுமார் நாற்பது கி.மீ. இருக்கும். இப்போதெல்லாம் அதிக தூரம் self-driving செய்ய முடிவதில்லை. வாடகைக்கு ஒரு ஓட்டுனரை அழைப்பது வழக்கம். ஆனால் சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் வரமாட்டார். வார நாட்களில் அவரை பிடிக்கவே முடியாது. முயற்சிக்கிறேன். வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தெரியவரும். தொலைபேசியில் அழைத்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. சென்னைப் பயணம்.... சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துகள்...

    15 இரவு நான் சென்னையிலிருந்து புறப்பட்டேன். இருந்திருந்தால் சந்திக்க முயன்றிருப்பேன்.

    பதிலளிநீக்கு