காரண காரியங்கள் தெரியுமா.?
-------------------------------------------
ஒரு மாற்றத்துக்கு இப்பதிவில்
நான் சில பழக்க வழக்கங்களை முன் வைக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு என்று பதில்கள்
நிச்சயம் இருக்கும். அறிந்தவர் பகிர்ந்து கொள்வதால் அதைப் பற்றிய சில
விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் இதில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகள் நடைமுறையில்
இருக்கும் பழக்கங்களிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் உருவானது. இப்போது
கேள்விகளுக்கு வருவோம்
கே. 1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக்கூடாது.
சரியா .?
கே.2) கர்ப்பிணிப் பெண் வயிற்றில் சலனம்
அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாய் இருக்கும். சரியா.?
கே.3)கிருகப் பிரவேசம் நடத்தும்போது வாயிலில்
மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள். ஏன்.?
கே. 4) படுத்து எழும்போது வலது
புறமாகவே திரும்பி எழ வேண்டும். சரியா. ஏன்.?
கே. 5) முங்கிக் குளித்த பின்
உடலில் எண்ணை தேய்க்கலாமா.?
கே. 6) காலணி இல்லாமல் நடப்பது
உகந்ததா.?
கே. 7) எண்ணைக் குளியல் ஏன்
எடுக்க வேண்டும். ?
கே. 8)பெற்றோரின் காலில் விழுந்து
வணங்குதல் தேவையா.?
கே. 9) விபூதி தரிப்பது ஏன்?
கே. 10) ஹிந்துக் கோவில்களில்
அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப் பிடிப்பது
அனுமதி இல்லை.ஏன்.?
வணக்கம்
ReplyDeleteஐயா.
நீங்கள் எழுப்பிய வினாக்கள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது.
வினா.இலக்கம்-8வது.
ஆம்...
அன்னையும் பிதாவும் முன்நெறி தெய்வம் அவர்கள்தான் எமது கண்முன் நிக்கும் தெய்வங்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாயில் நிலைப்படிகளில் உட்காரக்கூடாது. சரியா ./
ReplyDeleteசரிதான் .. வாயிற்படி பயன்பாட்டுக்கு
தடையாக இருக்கும்..!
)கிருகப் பிரவேசம் நடத்தும்போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள். ஏன்.? //
ஆக்ஸ்ஜன் என்னும் பிராணவாயுவை வெளிப்படுத்தி உயிர்ச்சத்தை கிரஹிக்க மாவிலைகள் உதவும் என்பதால்..
கட்டாவிட்டால் தோரணம் விழுந்துவிடுமே...
அதற்காகவும் தான் ..!!
பதில்களை நினைக்காமல் கேள்விகளாக கேட்போமே...
ReplyDelete01) திருஷ்டி எடுக்கணும் என்று சொல்லி, அப்போது மட்டும் வாயில் நிலைப்படிகளில் உட்கார வைப்பது ஏன்...?
02) பெற்றோர்களின் வயிற்றில் சலனம் உட்பட கதிகலங்க வைக்க, பத்து மாதங்களுக்கு முன்பே ஆண்குழந்தைகள் பிறக்கிறார்களா...?
03) பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும் என்று பேசியவரின் வீடு உட்பட, பலரின் வீட்டில் - மாவிலை கிடைப்பது அரிதென்பதால் பிளாஸ்டிக் தோரணங்கள் தேவையா...?
04) தினம் இறந்து பிறக்கிறோம்... எழுவது நம் கையில் உள்ளதா...? (நன்றி வள்ளுவர்...)
05) குளிக்க இனி கடல் தான் செல்ல வேண்டுமோ...?
06) இன்றைக்கு ஓரமாகவே நடக்க பயமாக இருப்பதற்கு காரணம் ஏன்...?
07) எண்ணெய் தேய்த்து குளிக்கும் அளவிற்கு, இனி தண்ணீர் கிடைக்குமா...?
08) இதைவிட சிறந்தது எது...?
09) எல்லாமே தூசு என்பதால் இருக்குமோ...?
10) அவரின் கால்களை ஏன் பிடிக்க வேண்டும்...?
செருப்பில்லாமல் நடந்தால் நம் கால்களுக்கு பாதுகாப்பில்லை. பெற்றோரை வணங்குதல் என்பது பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும். ஆண்டவனிருக்க அர்ச்சகரை ஏன் வணங்க வேண்டும்? படுத்து எழும்போது வலதுபுரமாகவெ எழுதல் ரத்தக் கொதிப்புக்கு நல்லதா? இதய நோய்க்கா?
ReplyDeleteஇந்த கேள்விகளுக்கு சரியான விடை தெரியவில்லை. சிலவற்றிற்கு அறிவியல் ரீதியான பதில்கள் உண்டு. இருப்பினும் யாரேனும் சரியான பதில்கள் தருவார்கள் என்று காத்திருக்கிறேன்!
ReplyDeleteசரியான பதில் சொல்பவர்கள்
ReplyDeleteஎதிர்பார்த்து நானும்...
சரியான பதில் சொல்பவர்கள்
ReplyDeleteஎதிர்பார்த்து நானும்...
ReplyDelete@ ரூபன்
@ இராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்
@ ஸ்ரீராம்
@ வே, நடன சபாபதி
@ ரமணி
பதிவில் சொல்லி இருந்தபடி கூறியிருக்கும் சேதிகள் ஒன்றும் புதிதல்ல, பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். சரியான பதில் தவறான பதில் என்று ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்முன்னோர் சொல்லிப் போன பல விஷயங்களை நாம் அறிந்தோ பழக்கத்தினாலோ கடை பிடித்து வருகிறோம் ஏன் எதற்கு என்று அறிய வேண்டியே இவற்றைக் கேட்டேன்.
ரூபனின் ஒரு கேள்விக்கான பதில் சரியாகத்தான் இருக்க வேண்டும் இராரா வின் நகைச் சுவை உணர்வு ரசிக்க வைத்தது.டிடி. எதிர்க் கேள்வி கேட்டு திணர அடிக்கிறார். இதே போல் அவர் வீட்டுப் பெரிசுகளிடம் கேட்டிருப்பாரா தெரியவில்லை. நான் கேட்டுப் படித்து அறிந்தவற்றை விரைவில் பகிர்வேன். வருகைக்கு நன்றி.
சிந்திக்க வைத்த கேள்விகள் ஐயா.
ReplyDeleteவிபூதி கேள்வி, நாமெல்லாம் ஒரு நாள் சாம்பலாக போகிறோம் என்று உணர்த்தவே என்று நினைக்கிறேன். சரி தானே?
விவாதங்களை எதிர் பார்க்கிறேன்.
ReplyDelete
ReplyDeleteஇவற்றிற்கெல்லாமே ஏதாவது நல்ல அர்த்தங்கள் இருக்கத்தான் வேண்டும். நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற எவையுமே வெறும் பேச்சுக்காக சொல்லி வைத்தவை அல்ல. நமக்குத்தான் அது புரிவதில்லை. அருமையான விவாதத்திற்கு கரு அளித்துள்ளீர்கள்.
இத்தகைய பல கேள்விகளுக்கு கண்ணதாசன் தன்னுடைய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பது நினைவுக்கு வருகிறது. என்னிடம் அந்த புத்தகம் இன்னும் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன். இருந்தால் எழுதுகிறேன்.
எனது பெற்றோர்களிடமும் + வீட்டில் உள்ள அனைவரிடமும், சிறுவயதில் நான் கேட்ட சந்தேகங்களை (கேள்விகளை) முதல் கருத்துரையில் சொல்லி விட்டேன்...
ReplyDeleteஇப்போது கூகிள் இடம் கேட்கிறேன்... பலரின் பதில்களில் சிலவற்றை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன்...
கவனிக்கவும் ஐயா... பதில்கள் என்னுடையது அல்ல... (பதில்கள் தேட 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது)
கேள்வி பத்திற்கும் மட்டும் இங்கே... எனது + ஸ்ரீராம் சார் பதிலும் (கேள்வியும் [?]) ஒன்றாகவே உள்ளது...
10. ஹிந்துக் கோவில்களில் அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப் பிடிப்பது அனுமதி இல்லை... ஏன்...?
1) கருடனிடம் முதலில் வேண்டி சொல்வதை போல...
2) நந்தி காதில் சொல்வதை போல...
3) அனுமனை கும்பிட்டால் போதும் என்பதைப் போல...
இன்னும்... இன்னும்...
அர்ச்சகருக்கு இதுவும் ஒரு தொழிலாகவும் இருக்கலாம்... கடவுள் பக்கத்தில். கடவுளுக்கு தினமும் அர்ச்சனை, ஆராதனை, பூஜை செய்வதால்... மறுபடியும் மேலிருந்து 1) 2) 3) இன்னும்... இன்னும்...
புரிதலுக்கு நன்றி ஐயா... அடுத்து :
1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக்கூடாது. சரியா...?
ReplyDeleteவாசற்படியில் இருக்கும் சிறுவர்களை பாட்டிமார் விரட்டி அடிப்பதுண்டு. வாசற்படியில் அமரக் கூடாது என்று அன்புடன் உபதேசிப்பதும் உண்டு. வாசல் வழியாக வரும் போகும் நபர்கள் தட்டி விழும் சாத்தியம் உள்ளதாலே இவ்வாறு கூறுகின்றனர் என்று கருதி வருகின்றோம். ஆனால் வாசற்படியிலோ நிலைப்படியிலோ இருக்கக் கூடாதென்பது சரியான காரணத்துடன் என்பது கண்டறிந்துள்ளனர். 'டெளசிங்ராட்' என்ற கருவியை வாசற்படியில் பிடித்தால் வாசற்படியிலிருந்து எதிர் சக்திகள் (நெகடிவ்ஃபோர்சஸ்) வெளியாவது காணலாம். இதனால் வாசற்படியில் அமர்ந்தால் நம் உடலில் எதிர் சக்திகள் புகுந்து செல்லும். இதை அன்றே புரிந்து கொண்டிருந்த ஆசாரியர்கள் வாசற்படியில் உட்காருவதை சக்தியாக எதிர்த்திருந்தனர். வாசற்படிக்கு உட்பக்கமோ வெளிப்பக்கமோ கூடதென்பதற்கும் சரியான காரணமும் இதுவேதான். வாசல் நிலையின் நாலு பக்கங்களும் சமசதுர வடிவிலுள்ளதானால் நெகடிவ் சக்தி வெளிவருகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை மிக முக்கியமாகக் கருதும் சீன மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கும் வாசல்கள். மற்றும் ஜன்னல்களின் நிலைகள் வேறு வடிவத்தில் மேல் பாகம் நோக்கி வளைந்திருக்கக் காணலாம். இது நெகடிவ் சக்திகளைத் தவிர்ப்பதற்காகவே, நமது கோயில் வாசல்களிலும் இவ்விதமே அமைத்துள்ளனர்.
நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் சமமாகும்
நாம் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதுண்டு அப்போது பல நவரத்தினக் கற்களையும் பஞ்சலோக பொருட்களையும் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து இருப்போம் இப்படி அதற்கு தெய்வீகத் தன்மையை உண்டு பண்ணிவிட்டு இப்போது, அதன் மீது அமர்தால் அது லட்சுமியை அவமதிப்பதாகத்தானே கருதமுடியும்
வாசல் படி என்பது நம் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டில் நுழையும் இடம்,அவர்கள் வரும்போது அவர்கள் காலில் பல அசுத்தங்கள் இருக்கும். அதன் மீத்து நாம் அமர்ந்தால் வாசல் படியில் இருக்கும் அசுத்தம் நம் மீது படவும் அதன் மூலம் வியாதிகள் வரவும் வாய்ப்பு உள்ளதால் நம் முன்னோர்கள் யோசித்து சொல்லிய விஷயம் இது.ஆனா இத அவங்க சொன்னப்பா நம்ம மக்கள் செருப்பு அணியாத காலம்...!
2) கர்ப்பிணிப் பெண் வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாய் இருக்கும். சரியா..?
ReplyDeleteபிறக்கப் போவது ஆணா, பெண்ணா?
கருத்தரித் திருப்பது தெரிந்த உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு பெண் குழந்தையின் மீது விருப்பம் அதிகம். பெண் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்கaர்களா? உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பளபளப்பான தோற்றம்
கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.
வாந்தி, மயக்கம்
கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான் ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். ஆம் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம்.
இனிப்பு உணவுகள்
பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும். ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர்.
இதயத்துடிப்பு அதிகம்
கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும் ஒரு நிமிடத்தில் 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.
3)கிரகப் பிரவேசம் நடத்தும்போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள். ஏன்....?
ReplyDeleteவிழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.
மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
4) படுத்து எழும்போது வலது புறமாகவே திரும்பி எழ வேண்டும். சரியா. ஏன்...?
ReplyDeleteஎப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு.
இதிலிருந்து இடதுபக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறு இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டதைப் பெரியவர்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கையில் இருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது.
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை மேல் நாட்டவர் இப்பொழுது அங்கீகரித்து இருக்கின்றனர்.
காரணம்: நம் உடலை இரு காந்த வளையங்கள் சுற்றி வருகின்றன. இவையில் முதலாவது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்த வளையம் இடப்பக்கத்திலிருந்து முன்பாகம் வழியாக வலப்பக்கத்துக்கும் வலப்பக்கத்திலிருந்து பின்பாகம் வழியாக இடப்பக்கத்திற்கும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்தவளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல் திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலதுபக்கம் திரும்பி எழும்போது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பதை நவீன மின்னியல் ஒப்புக்கொள்கின்றது.
5) முங்கிக் குளித்த பின் உடலில் எண்ணை தேய்க்கலாமா...?
ReplyDeleteபண்டைய இந்து ஆசாரங்களையும் சட்டங்களையும் பற்றின மனுஸ்மிருதியில் தலை மூழ்கி குளித்த பின் உடலின் எந்த பாகத்திலும் எண்ணை தேய்க்கலாகாது என்று பதிவு செய்ய பட்டுள்ளது.
உடல் முழுவதும் எண்ணை தேய்த்து அழுத்தி தடவும் போது நாம் உணராமலே 'Massaging ' நடக்கிறது இது இரத்த ஓட்டத்தை துரித படுத்தும். உடலின் எந்த பாகமும் நோய் வாய் படுவது அந்த பாகத்தில் இரத்த ஓட்டம் குறையும் போது தான். மேலும் உடலில் எண்ணை தேய்த்த பின் வியர்ப்பது உடல் செயல் பாட்டினை பாதிக்கும் என்பதும் கண்டறிந்து உள்ளனர்.
சருமத்தில் உள்ள எண்ணெய் துவாரங்கள் எண்ணை தேய்க்கும் போது அடைத்து போவதால் உடலில் உள்ள அசுத்தங்கள் சரியான முறையில் வெளியேற முடியாமல் போகும்.
தலை மூழ்கி குளித்த பின் எண்ணை தேய்த்தால் தூசி அழுக்கு போன்றவை உடம்பில் படிந்துவிடுவதுடன் உடலினுள் இருக்கும் மாசுக்கள் வியர்த்து வெளியேறாததனால் சிறுநீரகத்தின் வேலை பழு அதிகரிக்கும்.
தலையில் தேய்க்கும் எல்லா எண்ணைகளும் உடலிலும் தேய்க்கலாம். ஆனால் உடலில் தேய்க்கும் எண்ணைகள் அனைத்தும் தலைக்கு சரி வராது என்பதையும் கவனிக்கவும். முடி கொட்டுதல், அகாலநரை என்பவை தவிர்க்க, தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல...
6) காலணி இல்லாமல் நடப்பது உகந்ததா...?
ReplyDeleteஉணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை அந்தஸ்தாக கருதும் தலை முறையில் நாம் வாழுகின்றோம். மிதியடிகள் மட்டும் பாதரட்சைகளாக இருந்த காலத்திலும் வெறும் காலில் நடப்பவர்களை நன்மை உள்ளவர்களின் கணத்தில் உட்படுத்தி இருந்தனர்.
ஒருவர் அணிந்து இருக்கும் செருப்பின் மதிப்பில் இருந்து அவரின் சமூக நிலையை மதிப்பது இன்றைய சமூகம். உடற்பயிச்சிக்காக நடக்கும் போதும் இறுக்கி பிடிக்கும் 'ஷுஸ் ' அணிவது சமூகத்தில் கட்டாயம் ஆகின்றது. "பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பர்கள்" என்ற தாழ்வு மனப்பான்மையே இக்கட்டயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சனை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது.
வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.
கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும். பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதி கால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உருப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரித படுத்தும்.
பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச்செயும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிட்சையின் மறு உருவமே செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பது ஆகும்.
7) எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும்...?
ReplyDeleteவிரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் எண்ணை தேய்த்து குளித்தல் அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதயத்தூயமையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நம் மூதாதையர் கடை பிடித்திருந்தனர். நம் நாட்டில் காலை கடமைகளில் எண்ணை பூசிக்குளித்தல் முக்கியமான இடம் பெற்றுள்ளது. அடி முதல் முடிவரை நன்றாக எண்ணை தேய்த்து மூழ்கி குளிப்பது நம் முன்னோர்கள் சுவர்க்க சுகமாக கருதினர்.
அனால் எண்ணை தேய்த்து குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாக கிடைக்க பெரும் சுக அனுபவத்தை எண்ணி எண்ணை தேய்த்து குளிக்கின்றனர். இதை விட மென்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றது.
ஒன்றாவதாக எண்ணையில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடம்பில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தில் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்கு தெரியாத நோயணுக்கள், எண்ணை பூசியதும் வாயு கிடைக்க பெறாமல் இறந்து விடுகின்றன.
7) எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும்...?
ReplyDeleteஇன்னும் சில தகவல்கள் :
எண்ணையில் ஊறும்போது நமதுதோல் இளன்சூடாகி அதன் கீழ் பகுதியில் உள்ள இரத்த நாளத்தை தளர்த்துகிறது. அதனால் குருதி மிக சுலபமாக உடலில் ஜோராகப் பாய்கிறது, இரத்தம் நன்றாகப் பாயும்போது, பிராணவாயு அதிகம் கிடைக்கும் ..
ஒரு அருமையான இளைபாற்றல் மற்றும் அடுத்த வார அலைச்சலுக்கு தயார் என உடல் சந்தோசத்துடன் சொல்லும் ஒரு உணர்ச்சி. தினமுமே தலைக்கு மட்டும் சிறிது எண்ணை தேய்த்து குளிப்பது கூட அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் கழிய உதவும்.
இத்துடன் ஸ்கின் கேன்சர் வராதபடி ஒரு தடுப்பு, வைரஸ், பாக்டீரியா ஆகியவிடமிருந்து பாதுகாப்பு, தோலுக்கு ஒரு ஒளிர்வு, நல்ல தூக்கம் வர உதவுதல், மூட்டு வலிகளிருந்து விடுதலைஎன பல பயன்கள்
ஏன் சனிக்கிழமை...? எண்ணைக் குளியலுக்கு பிறகு தேவையானது ஓய்வு. அந்நாளில் அதிக வெயிலில் செல்லுதல், பளுவான வேலைகளைச் செய்தல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.எனவே, ஒருவார வேலைக்குப் பின் சனிக்கிழமை எண்ணை தேய்த்துக்கொள், ஓய்வெடு என்று இந்த சொல் வந்ததோ? தெரியாது.. ஆனால் விஷயம் எண்ணை தேய்த்துக் குளிப்பது நல்லது என்பதே. பெண்களுக்கு ஒரு நாள், ஆண்களுக்கு ஒருநாள் என வேறு வேறு தினங்கள் ஏனெனில், எண்ணைக் குளியலுக்குப் பிறகு ஓய்வு அவசியம் எனவேதான் இரு தனி தினங்கள். யோசித்துப் பாருங்கள் வெள்ளிக்கிழமை பெண்களுக்கு, சனிக்கிழமை ஆண்களுக்கு என ஒதுக்கியுள்ளனர். அதாவது வாரக்கடைசியில் ஒரு புத்துணர்ச்சிக் குளியல். அலுவலகம்/பாடசாலை செல்லும் பெண்கள் வெள்ளிக் கிழமையை விட விடுமுறை நாளிலேயே எண்ணைக் குளியல் செய்து ஓய்வெடுப்பது நல்லது. அப்போதுதான் அதன் மருத்துவப் பலன் கிட்டும்.
8) பெற்றோரின் காலில் விழுந்து வணங்குதல் தேவையா...?
ReplyDeleteமார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.அதே போல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள்.
அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் அல்பாயுசு அமைப்பு தெரிய வந்தது.இருந்தாலும் சப்த ரிஷிகளின் ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார் என்பது புரணாமாகும்.
நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே உண்மையாகும்.
9) விபூதி தரிப்பது ஏன்?
ReplyDeleteஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது.
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
மனிதன் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த் தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச் சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.
சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா...?!!!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப் பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா...? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
கேள்விகளும் விளக்கமும் அறிந்தோம்.
ReplyDeleteஆலயம் என்பது இறைவனுக்கு உரியது. அங்கே மற்ற யாவரும் இறைவனை விடக் குறைந்தவர்களே. எனவே, ஆலயத்தினுள் இறைவனைத்தவிர வேறு யாரையும் கைகூப்பி வாங்குதலே தவிர்க்கப்படவேண்டும் என்று அந்த நாளில் 'வைதிக தர்ம வர்த்தினி' இதழில் படித்திருக்கிறேன். கை கூப்புவதே தவறு என்னும்பொழுது, காலைத் தொட்டு வணங்குவது ஏற்கக் கூடியதா?
ReplyDeleteமுன் பதிவில் 'கைகூப்பி வணங்குதலே' என்று வரவேண்டியது, 'கைகூப்பி வாங்குதலே' என்று வந்துவிட்டது.திருத்திக்கொள்ளவும்.
ReplyDelete
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
Hats off to you DD.! என் பதிவு ஒரு விவாதத்துக்கு வழி வகுக்கும் என்று எண்ணினேன். பலரும் கேள்விப்பட்ட விஷயங்கள்தான். ஏன் என்று கேள்வி எழுப்பியதும் முதலில் வேகமாகப் பதில் கேள்விகளாக வந்தது. ஆனால் உங்கள் முனைப்பு சரியான காரணங்களை கண்டறியத் தூண்டி இருக்கிறது. பதிவுகளின் பின்னூட்டங்களை எல்லோரும் பார்க்கிறார்களா தெரியாது. நானும் கேள்விகள் கேட்குமுன் இவற்றுக்காக சொல்லப் படும் காரணங்களை படித்துத் தெரிந்து கொண்டேன்.பெரும்பாலான உங்கள் பதில்கள் நான் எழுதி இருப்பதோடு சில இடங்களில் வரிக்கு வரி ஒத்துப் போகிறது. May be இருவரும் ஒரே இடத்தில் இருந்து பதில்கள் பெறப்பட்டிருக்கலாம். ஒரே வித்தியாசம் நீங்கள் அந்தக் காரணங்களை மிகவும் நம்புவதாகத் தெரிகிறது. ஆனால் இப்படியாக காரணங்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்றே எழுதி இருக்கிறேன். பின்னூட்டங்களைப் படிக்காதவர்களுக்கும் கேள்வி கேட்டவன் என்ற முறையில் பதிலும் நான் தரவேண்டும் அல்லவா. என் அடுத்தபதிவு பதில்களோடு வரும் மீண்டும் உங்கள் முனைப்புக்கு பாராட்டுக்கள். நன்றி.
ReplyDelete@ மாதேவி
உங்களுக்குசிரமம் இல்லாமல் செய்து விட்டார் டிடி. வருகைக்கு நன்றி.
@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
திரு டிடியின் பதில்கள் படித்திர்ர்களா .என் பதில்கள் என் அடுத்தபதிவில் வருகைக்கு நன்றி. .
உங்களது வினாக்களுக்கு வந்துள்ள மறுமொழிகள் மூலமாக பலவற்றை அறிந்துகொள்ளமுடிந்தது. நன்றி.
ReplyDeleteஉங்கள் கேள்விகளும், அதற்கு தனபாலன் அவர்கள் பதிலும் மிக அருமை.
ReplyDeleteமுன்னோர்கள் காரணகாரியத்துடன் சில விஷ்யங்களை சொல்லி சென்று இருக்கிறார்கள்.
அடுத்த உங்கள் பதிவை படிக்கிறேன்.
சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன். அதில் இப்படி கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தார்கள்..... தில்லியில் இருக்கிறது என நினைக்கிறேன்!
ReplyDelete