மீண்டும் பதிசுகளில் தொடர.......
------------------------------------------
அன்பு பதிவுலக
நண்பர்களே
வணக்கம். நான் சென்னைக்குப் போவதற்கு முன்
காதலர் தினப் பதிவாக ஒரு சிறு கதையினை எழுதி முடிக்காமல்விட்டு பதிவுலக நண்பர்களை
முடிக்கக் கேட்டு எழுதி இருந்தேன். நான் சென்னையில் இருந்தபோது என்னை அன்புடன்
வந்து சந்தித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன் என் சிறு கதையின் முடிவை திரு பாலகணேஷிடம்
கொடுத்து அவரையே சரியான கதையைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டி இருக்கிறேன். அவரும்
ஒப்புக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதம் பத்தாம் தேதி வரை கதைகளின் முடிவை எழுதி
அவரவர் வலைப் பூக்களில் பதிவிட்டு எனக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன் என் மின் அஞ்சல் முகவரி gmbat1649@ gmail.com
சென்னையில் நான் பதிவர்களைச் சந்திக்க வருகிறேன் என்று
தெரிந்ததும் இடி இடிக்கவில்லை. மின்னல் வெட்ட வில்லை ஆனால் மழை பெய்தது.திரு கணேஷ் அவர்கள் நான் கடந்தமுறை வந்தபோதும் மழை
பெய்து சந்திப்பு நடக்கவிடாமல் செய்ததை நினைவு கூர்ந்தார், திரு கணேஷுடன் திரு சீனு( திடங்கொண்டு போராடு) திரு சரவணன்
(ஸ்கூல் பையன் ) வந்திருந்தனர். வயதில் இளையவர்கள் வலையுலகில் கொடிகட்டிப்
பறக்கின்றனர். நான் கேமரா எடுத்துச் செல்லாததால் படங்கள் எடுக்க முடியவில்லை சற்று
நேரம் கழித்து மூங்கில் காற்று முரளிதரனும் சேர்ந்து கொண்டார். துடிப்பான
இளைஞர். அவர் உருவத்துக்கும் பதிவுகளுக்கும் சம்பந்தமில்லை. மிகவும் சீரியசான
சங்கதிகளை எழுது கிறார். மறு நாள் திரு கணேஷுன் சீனுவும் மீண்டும் என்
இருப்பிடத்துக்கு வந்தனர் திரு
செல்லப்பா யக்ஞசாமி எங்கள் ப்லாக் ஸ்ரீராம் மற்றும் கவியாழி கண்ண தாசன் போன்றோரின் வரவும் என்னை
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது
முகம் காணா பதிவுலக
நட்புகளுடன் நேருக்கு நேர் உரையாடல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள
உதவுகிறது
திரு செல்லப்பா
வந்தபோது சுப்புத்தாத்தா என்று வலையுலகில் அறியப் படும் சூரி சிவா அவர்களின்
விலாசம் கொடுத்தார். 20-ம் தேதி நாங்கள் செல்லவிருந்த திருமண மண்டபத்துக்கு அருகில்
அவரது வீடு இருந்ததால்முஹூர்த்தம் முடிந்து மதிய உணவுக்கு இடைப் பட்ட வேளையில்
நானும் என் மனைவியும் திரு சூரி சிவா வீட்டுக்குச்
சென்று அவரையும் துணைவியாரையும் சந்தித்தோம். அவர் ஒரு சுவாரசியமான மனிதர்.
பழகவும் பேசவும் எளிமையான ,ஆனால் பல விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்.என்னைவிட
வயதில் இளையவர்ர். ஆனால் அறிவில் முதிர்ந்தவர் எங்கள் ஐமபதாவது மண நாள் விழாவுக்கு
அவசியம் வருவதாகக் கூறி இருக்கிறார்.சொல்ல விரும்புவதை சொன்னால்மனம் நோகக் கூடாதே
என்று தெளிந்து சொல்கிறார்.அதே வளாகத்தில் என் பழைய நண்பர் திரு. பலராமன் வீட்டுக்கும்
அழைத்துச் சென்றார். திரு பலராமனைப் பற்றி ஒரு செய்தி. அவர் என் வயதுக்காரரோ இல்லை
எனக்கும் மூத்தவராகவோ இருக்கலாம்,அவரது வயது முதிர்ந்த தாயாரை அவர் மனம் கோணாமல் வைத்துக்
காப்பாற்றுகிறார். ( மனைவியை இழந்தவர், தனி ஆளாக ) திரு பலராமனின் தாயாரை திருச்சி
குடியிருப்பில் இருந்த போது கண்டு பழக்கப் பட்ட என் மனைவியை பார்த்தவுடன் பெயர்
சொல்லிக் கூப்பிட்டது மனதை நெகிழ வைத்தது
அன்று மாலை எரிதழல் வாசன் வந்தார்.அவரது எழுத்துக்களில் ஒரு
கனல் இருக்கும் மனிதர் பேசும்போதும் ஆழ்ந்து சிந்தித்துப் பேசுகிறார் இந்த முறை
சென்னைப் பயணத்தில் பல பதிவுலக நண்பர்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
நண்பர்களுக்கு
ஒரு வேண்டுகோள். யாராவது பெங்களூர்
வருவதாயிருந்தால் எப்போதும் என் வீட்டுக்கதவு உங்களுக்காகத்
திறந்திருக்கும்கதைப் போட்டிக்கு நான் எதிர்பார்த்த அளவு ரெஸ்பான்ஸ் இல்லை.
ஏற்கனவே பாதிக்கதை எழுதி கற்பனைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி ஒரு போட்டி. சிரமத்தை
உணர்கிறேன் . இருந்தாலும் கடினமான போட்டி அல்ல. மனம்வைத்தால் “உம்” என்பதற்குள்
எதையும் எழுத வல்லவர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள். செய்தி எல்லோருக்கும்
போய்ச்சேரவில்லை என்றே தோன்றுகிறது இந்த போட்டி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டுகிறேன்
மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய சென்ற பதிவில்
பாதிக்கதை இருக்கிறது. மீதிக்கதைஎழுதி முடிக்க வேண்டும். முடிவு நான் எழுதி
உள்ளதுபோல் இருந்தால் பரிசு. இல்லையென்றாலும்
இதைவிட நல்ல முடிவு என்று நடுவர் கணேஷ் தீர்மானித்தால் அந்தக் கதைக்கும் பரிசு. மார்ச் பத்தாம் நாள்
வரை பங்கு கொள்ளலாம் அவரவர் பதிவுகளில் எழுதி எனக்குத் தெரியப் படுத்துங்கள்,
எல்லா விவரங்களும் கொடுதிருக்கிறேன் என்று நம்புகிறேன் சரிதானே அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன் ஜீஎம்பி.
இன்று மெயிலைத் திறந்தபோது திரு.பாலகணேஷ் அனுப்பி இருந்த சில பிகைப் படங்கள். படங்கள் இல்லாமல் பதிவர்கள் சந்திப்பு முழுமை பெறுவதில்லை அல்லவா.?
திரு.செல்லப்பாவும் சீனுவும் |
நண்பர் ஸ்ரீராம் அவர் படம் வெளியாவது விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். நான் மறந்து போய் வெளியிட்டு விட்டேன் சாரி ஸ்ரீராம் நீக்கிவிட்டேன்.
சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி ஸார்!
பதிலளிநீக்குஅனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.. உங்களையும் கூடவே ஸ்ரீராம் சாரையும்.. நிச்சயம் பெங்களூரு வந்தால் வருகிறேன் சார் :-)
பதிலளிநீக்குதங்களை சந்தித்து பேசியதில் அளவற்ற மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குசென்னையில் பதிவர்கள் சந்திப்பு! தங்கள் மகிழ்ச்சியை கட்டுரை வரிகளில் கண்டேன்!
பதிலளிநீக்குபதிவர்களைச் சந்தித்ததோடு மட்டுமன்றி அந்நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
பதிவுலக உறவுகளை தாங்கள் சந்தித்த மகிழ்ச்சி போலதான் எங்களும் ஐயா.... பதிவை படித்த போது எனக்கும் மகிழ்ச்சிதான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//முகம் காணா பதிவுலக நட்புகளுடன் நேருக்கு நேர் உரையாடல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது..//
பதிலளிநீக்குஉண்மை.. முற்றிலும் உண்மை.
இந்தப் பதிவில் - தங்கள் மகிழ்ச்சி பிரதிபலிக்கின்றது.
பதிவுலக உறவுகளின் சந்திப்பு அருமை இனிமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
வழக்கம் போலவே என்னுடைய வாடகை ஓட்டுனர் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டதால் என்னால் உங்களை வந்து சந்திக்க முடியவில்லை. மன்னியுங்கள்.
பதிலளிநீக்குபதிவுலக நட்புகளை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தான். தங்களது மகிழ்ச்சி எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.
பதிலளிநீக்குada? iththanai perodu santhippa? Sriram padam potiruntheerkaLa? theriyamal pochche! :))))
பதிலளிநீக்குungkal potti kathai ezutha neram illai. paarkkalaam. potti enbathaal konjam yosanai!:))))
பதிலளிநீக்குஇம்முறை மிஸ் பண்ணாமல் தங்களைச் சந்தித்து உரையாடியதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி ஸார்! அதேபோல உற்சாக மனிதர் சுப்புத்தாத்தாவை சொன்னபடி நீங்கள் சந்தித்துப் பேசிய விவரங்கள் அறிந்தும் மகிழ்கிறேன்!
பதிலளிநீக்குபதிவர்கள் அனைவரையையும்
பதிலளிநீக்குசந்தித்து மகிழ்ந்ததைப் படிக்க
இதமாய் இருக்கிறது
கதையைத் தொடர நானும் முயற்சிக்கிறேன்
mazhai varanumnaa rushyasrungarai azhaippaangalaam.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
@ திண்டுக்கல் தனபாலன்
@ சீனு
@ செல்லப்பா
# இராஜராஜேஸ்வரி
@ தமிழ் இளங்கோ
@ ஜம்புலிங்கம்
@ ரூபன்
@ துரை செல்வராஜு
@ கரந்தை ஜெயக்குமார்
@ டி.பி.ஆர் ஜோசப்
@ ஆதி வெங்கட்
@ கீதா சாம்பசிவம்
@ பாலகணேஷ்
@ ரமணி
@ துரை
வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. திரு துரை மழை வேண்டுமென்றால் ருஷ்ய சிருங்கரை அழைக்க வேண்டும் என்கிறார். புரியவில்லை. ஒருவேளை போட்டி கதை அனுப்ப வேண்டுவதைக் குறிக்கிறாரோ. இங்கு யார் ருஷ்ய சிருங்கர்.?
முகம் பாரா பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.....
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் கிடைத்த உணர்வு....
சமீபத்திய தமிழகப் பயணத்தில் நானும் சில வலையுலக நண்பர்களைச் சந்தித்தேன்.....