வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதல் காதல் காதல்.. காதல் போயின்......


 காதல் காதல் காதல் ... காதல் போயின்.( திடங்கொண்டு போராடு.)   
 ------------------------------------------------------
காதலர் தினத்துக்காக எழுதியது. கூர்ந்து படியுங்கள்  பதிவின் முடிவில் இந்தக் கதை சம்பந்தமாக ஒரு போட்டி.




 பாபு காதல் வயப் பட்டிருந்தான். கண்டதும் காதல் கேஸ்தான் இருந்தாலும் என்ன. ? யாரைக் கண்டாலும் காதல் வந்து விடுமா என்ன.?ஏதோ ஒரு ஈர்ப்பு.நிச்சயம் உடல் சார்ந்தது அல்ல.  பாபு நிச்சயம் எந்தக் கோவிலிலும் வேண்டுமானாலும் சூடம் ஏற்றி சத்தியம் செய்வான் இத்தனைக்கும் அந்தப் பெண்பற்றிய எந்த விவரமும் பாபுவுக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அமர காதல் என்று நிச்சயம் நம்பினான்.கூடவே இது அமர காதலாயிருக்கக் கூடாது என்றும் வேண்டினான். ஏனென்றால் அமர காதல் என்று சொல்லப் படுபவை எல்லாம் தோல்வியில் முடிந்தவையே என்பதால் அச்சம் கொண்டான். சரி காதல் வந்தாய் விட்டது. ஆனால் இது ஒருதலை ராகமாக இருக்கக் கூடாதுஎன்றும் நினைத்துக் கொண்டான். அவளுக்கும் இவன் மீது “இது இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.?

அவளை சந்தித்துத் தன் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் எப்படி எங்கு சந்திப்பது. அடுத்து இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லலாமா? சரி எப்படிச் சொல்வது. ? திடீரென்று அவள்முன் தோன்றி..... தோன்ற என்ன இவன் மந்திரவாதியா...யோசித்து யோசித்து தலையில் இருக்கும் முடிகளைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதையாவது செய்யப் போய் சும்மா சொதப்பி விடக் கூடாது. யாரை கொண்டாவது அவளை அறிமுகப் படுத்தச் சொல்லலாமா. ? தன்னை ஒரு gang  அலைக் கழித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி செய்ய இவன் ஒன்றும் தாதா இல்லையே. பார்க்க வாட்ட சாட்டமாயிருந்தாலும் இவன் மனதில் கோழை. கோழைகள் காதலிக்கக் கூடாதா....கோழையான இவனிடம் சிலர் அவனது எதிர் வீட்டுப் பெண்ணின் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொடுக்கச்சொன்னதும் இவன் “ஐயோ அண்ணே , எனக்கு முடியாது என்னை விட்டுடுங்கோ என்று கதறி அழுததும் நினைவுக்கு வந்தது.

காதல் வயப் பட்டால் பயப் படக் கூடாது. எதையாவது செய்து அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் முதலில் பேசவேண்டும் ஒரு நாள் திடீரென வந்த ஒரு வேகத்தில் பேப்பர் பேனாவை எடுத்தான் சில வரிகளைக் கிறுக்கினானவள் வரும் வழியில் திடீரென அவள் முன் தோன்றி” ”எனக்கு உன்னிடம் பேச வேண்டும் நாளை மாலை .  5 மணி எல்லா விவரங்களும் இந்தக் கடிதத்தில் “ என்று மூச்சு விடாமல் கூறி சிட்டாய்ப் பறந்து விட்டான். அவன் அப்படிப் பறக்க்க இரண்டு காரணங்கள் இருந்தன. இந்த திடீர் தாக்குதலில் அவள் என்ன செய்வதென்றோ என்ன நடக்கிறதென்றோ அறியும் முன்னர் இடத்தைக் காலிசெய்து விட வேண்டும். ஒரு வேளை அவள் சுதாரித்துக் கொண்டு கூக்குரல் இட்டால் தர்ம அடிதான் மிஞ்ச்லாம். ஆனால் ‘ அவள் வருவாளா. நாளை மாலை என்னைச் சந்திக்க வருவாளாஎன்று ஏதோ ராகத்தில் முணுமிணுத்துக் கொண்டான்

 சந்தியாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை போகும் போதும் வரும் போதும் சும்மா முறைத்துப் பார்க்கிற பிள்ளைப் பூச்சிதான் என்று நினைத்திருந்தாள் ஆனால் இப்போது...... கடிதம் கொடுக்கிற வரை வந்து விட்டது இதன் தைரியம்.... இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறது என்று பார்க்க மனம் துடித்தது. வழியில் நின்று படித்துப் பார்க்கத் தயாராயில்லை. வீட்டுக்குப் போனதும் பாத் ரூமுக்குச் சென்று ஒருவித பட படப்புடன் அந்தத் துண்டுச்சீட்டை எடுத்துப் படித்தாள். படித்தவளுக்குச் ச்சேஎன்றாகி விட்டது. ஏதோ காதல் கடிதமென்று எண்ணியவள் ஏமாற்ற மடைந்தாள்.கன்னா பின்னாவென்று ஏதோ எழுதி இருப்பான் என்று எதிர் நோக்கியவள் அப்படி இல்லையே என்று ஏமாற்ற மடைந்தாள்.  அது சரி காதல் கடிதமாயிருந்தால் என்ன செய்திருப்பாய்.? என்று அவளது உள்மனம் கேட்டாலும் ‘என்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்றால் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ யார் இவன் ? இவன் பேரென்ன.?என்ன எழுதி இருக்கிறான்? நாளை மாலை 5/-மணி......பூங்காவில் சந்திக்க வா. நிறையப் பேச வேண்டும்  என்ற அந்தத் துண்டுக்காகிதம் இவளைப் பார்த்து கேலி செய்வ்து போல் இருந்தது.இவன் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் தான் என்ன இவனது காதலியா என்ன..? ஒருவேளை சென்று பார்த்தால் காதலிக்கத் துவங்கி விடுவேனோ.. அவனைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா.... ஏன் பார்க்க வேண்டும்..? பார்த்தால் என்ன ... என்னதான் செய்து விடுவான் ... கடித்துக் குதறுவானோ... சே அது மாதிரி செய்யத் தைரியம் வேண்டும் ச்சீ என்ன நினைப்பு இது .?காதல் வார்த்தைகள் பேசுவானா என்பது,தவிர என்ன மாதிரி கடிப்பானா குதறுவானா என்றெல்லாம் எண்ண வைக்கிறது வெகு நேரம் பாத்த்ரூமில் இருந்தால் சந்தேகம் வந்து விடும். ஆகவே இன்னொரு தரம் அந்தத் துண்டுக் காகிதத்தை படித்துப் பார்த்தாள் நேரம் இடம் எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அந்தக்காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து டாய்லெட்டில் சிஸ்டெர்னைத் திறந்து அதில் போட்டாள்.காகிதத் துண்டுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெகு நேர சிந்தனைக்குப் பின் அவனைப் போய் பார்ப்பது என்று தீர்மானித்தாள். அவளை அந்த முடிவுக்கு வர வைத்தது எது. அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்போ? அப்போது எங்கோ ஒரு பாடல் ஒலித்தது “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று.சந்தியாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இன்னும் அவனைப் போய்ப் பார்க்க இல்லைபேசவில்லை. அதற்குள் இன்னார்க்கு இன்னார் என்ற நினைப்பு வருவது ஏன்

சந்தியா படித்தவள் பலதும் கற்றவள். இந்தக் காலத்துப் பிரதிநிதி. எதையும் சிந்தித்தே செயல் படுவாள். ஆனால் இந்த மாதிரித் தருணங்களில் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியது காதலும் அதன் விளைவுகளும்.

சரி.. சந்தியா பாபு சந்திப்பைப் பார்க்கலாம்.

பாபு பூங்காவில் சந்தியாவுக்காகக் காத்திருக்கிறான் ஆட்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியில் காத்திருந்தான் அவள் வருவாளா மாட்டாளா என்றே குழம்பிக் கொண்டிருந்தவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் நான்கு மணிகூட ஆகவில்லை. கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைத்தால் காலம் வேகமாக ஓடிவிடுமா....அவசரமாகப் போக வேண்டியவன் ரயிலில் சீக்கிரம் போய்ச் சேர கடைசிப் பெட்டியிலிருந்து முதல்பெட்டிக்கு வந்தானாம்  என்னும் நினைப்பு ஏனோ வந்தது. நேரம் காலம் எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன..?அந்தப் பெண் வந்தால்....வருவாளா ... அட வந்தால் என்ன பேசுவது. முதலில் அவள் பெயரைக் கேட்கவேண்டும். காதலிக்கும் பெண்ணின் பெயர் கூடத் தெரியாமல்...இருந்தால் என்ன. முதலில் எல்லாமே தெரிந்துதான் காதலிக்கிறோமா. பெயர் தெரியாவிட்டாலும் அவளை என்ன சொல்லி அழைப்பது..?அன்பே எனலாமா.... காதலியே எனலாமா.. என்ன சொல்லி அழைப்பது எப்படி அழைப்பது. நேருக்கு நேர் பேசும்போது நாச்சுரலாக இருக்க வேண்டாமா.....முதலில் ஹாய் என்றோ ஹல்லோ என்றும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். பிறகு இருக்கவே இருக்கிறது பேப்பரில் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் அவள்முகம் கோணாமல் படித்தால் நிறையவே பேச வேண்டும் தூரத்தே யாராவது சேலை கட்டி வந்தால் அது சந்தியாவா என்று எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனவன் சந்தியா அருகில் வந்ததை எப்படி காணாமல் போனேன் என்று குழம்பினான் அருகில் வந்த சந்தியா அவனிடம் ஹாய் என்றாள். இந்த ஆங்கில மொழியால் எவ்வளவு சௌகரியம். இவனும் ஹாய் என்று விஷ் செய்தான். “என்ன தைரியம் இருந்தால் துண்டுக்காகிதத்தில் எழுதி வரச் சொல்வீர்கள்..?என்று பிடி பிடிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தவன் அவள் புன்னகையுடன் ஹாய் சொன்னதும் அவனையே நம்பாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.உங்களைப் பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என்னும் ஒரு உந்துதலே அந்தத் துண்டுக்காகிதம். இந்த முறை துண்டுக்காகிதமல்ல . நேர்த்தியாக எழுதப் பட்ட கடிதம். Please take yor time and read it என்றான். தமிழில் சொல்லத்தயங்குவது அன்னிய மொழியில் அனாயாசமாக வந்து விடுகிறது ஆங்கிலத்துக்கு ஜேசந்தியா கடித்ததை வாங்கி தன் ஜாக்கெட் உள்ளே பத்திரப் படுத்திக் கொண்டாள். “ ஐயோ என்ன அங்க வச்சுட்டீங்க படிக்கலையாஎன்று பாபு பதறினான் “ நீங்கள்தானே டேக் யுவர் டைம் என்றீர்கள்என்று சொல்லிக் கல கலவெனச் சிரித்தாள். ஏனோ அவளுக்கு பாபுவிடம் பலகாலம் பழகியதைப் போன்ற ஒரு  (B)பாவம் தோன்றியது.மீண்டும் ஜாக்கெட்டுக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்  அவள் படிக்கும்போது அவளது முக பாவத்தையே பாபு பார்த்துக் கொண்டிருந்தான்.

“ உன்னை எப்படி அழைப்பதென்றே தெரியாமல் இக்கடிதம் எழுதினேன். அன்பே என்றழைக்கவா பேரழகே என்றழைக்கவா கண்ணே என்றழைக்கவா எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் “ இந்த இடம் வந்ததும் சந்தியா தலதூக்கி பாபுவைப் பார்த்துப் புன்னகைத்தாள் அதைப் பார்த்ததும் பாபுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது “ இதையே  சௌந்திரராஜன் குரலில் பாடிப் பார்த்தீர்களா.? என்று சந்தியா கேட்டதும் இவ்வளவு எளிதில் காதல் கைகூடும் என்று எண்ணிப்பார்க்காத பாபு நிறையே அசடு வழிந்தான்
பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு பிடி சாக்கலேட்டுகளை சந்தியாவுக்குக் கொடுத்தான் “ உன் இந்தப் பார்வைக்கு எது கொடுத்தாலும் தகும். ஆனால் தற்சமயம் இந்த இனிப்பே உள்ளது “ என்றவன் மேலே படிக்கச் சைகை காட்டினான்எப்படி அழைத்தாலும் உன் பெயர் சொல்லி அழைப்பதே சுகம் அல்லவா. உன் பெயரென்ன “ இதைப் படித்ததும் “ சந்தியாஎன்று கூறி முறுவலித்தாள்.என் பெயர் என்ன வென்று கேட்க வில்லையே என்ற பாபுவைப் பார்த்து சந்தியா “ பாபுஎன்றாள் “ அதெப்படி உனக்குத் தெரியும்?கடிதத்தின் கடைசியில் உங்கள் பெயரை முதலிலேயே பார்த்து விட்டேனே
“ ஓ.. பலே ஆள்தான் மேலே படி “
நிதானமாகப் படித்துக் கொள்கிறேன் இப்போதான் நேருக்கு நேர் பார்க்கிறோமே பேசிக் கொள்ளலாம் “ என்றாள் சந்தியா. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டுத்தெரிந்து கொண்டனர்
இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும் 
 ( பதிவர்கள் தொடர்ந்து முடிக்க )
Lஎன்ன நண்பர்களே இதுவரை கூர்ந்து படித்து விட்டீர்களா?கதையை நான் ஒருவிதமாக முடித்திருக்கிறேன் அந்த முடிவின் பதிவை நான் சென்னை செல்லும் போது என்னை சந்திக்க வரும் பதிவுலக நண்பர்களிடம் காட்டுவேன்/ கொடுப்பேன் இப்போது நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கதையை நீங்கள் முடித்து எழுதுங்கள் . எழுதியதை உங்கள் வலைப் பூவில் பதிவிடுங்கள் எனக்கும் மின் அஞ்சலில் தெரியப் படுதவும் ( யார் யார் போட்டியில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிய) யாருடைய கதையின் சாராம்சம் நான் எழுதிய முடிவோடு ஒத்துப் போகிறதோ அந்தப் பதிவுக்குப் பரிசு உண்டு. நான் சென்னை விட்டு வரும் வரை அதாவது இந்த மாத இறுதிவரை பதிவர்களின் மீதிக்கதை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப் படும் நடுவர்கள் குழு சென்னையில் தீர்மானிக்கப் படும் நடுவர்களின் முடிவே இறுதி முடிவு பரிசு என்ன என்று சொல்ல வில்லையே அதுவும் சென்னையில் பதிவர் சந்திப்பில் முடிவு செய்யப் படும் இது என்னுடைய 450-வது பதிவு சற்று வித்தியாசமாக. கதையின் என் முடிவினை மார்ச் மாதம் முதல் வாரத்தில் பதிவிடுவேன். வித்தியாசமான இந்தப் போட்டியில் பங்கெடுத்து பரிசு பெறுங்கள்)



23 கருத்துகள்:

  1. 450-வது பதிவிற்கும், போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் 450வது பதிவுக்கு அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. 450ஆவது பதிவைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் இடையறா உழைப்பும், எழுத்தும், பகிர்ந்துகொள்ளும் பாணியும் எங்களை வியக்கவைக்கிறது. தங்களின் பணியில் பிறரையும் ஈடுபடுத்தும் தங்களின் உத்தி அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. 450-வது பதிவுக்கு இனிய் வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான போட்டிதான். 450 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. டபாய்க்கிறீர்களே தலைவரே! எல்லாப் பதிவர்களும் தங்கள் முடிவுகளை எழுதிவிட்ட பிறகு,அவற்றை எல்லாம் படித்துவிட்டு, அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு முடிவை, வேண்டுமென்றே நீங்கள் எழுதிவிட்டால்- யாருக்குமே பரிசு இல்லை என்று சொல்லிவிட்டால்- நாங்கள் என்ன செய்வது? ஆகவே உங்கள் முடிவை இப்போதே எழுதி, ஒரு சீல் வைத்த கவரில் இட்டு அதை, உச்ச நீதிபதி ஒருவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! அந்த நீதிபதியின் பெயரை எனக்கு மட்டும் அறிவிக்கக் கோருகிறேன். (இது எப்படியிருக்கு?)

    பதிலளிநீக்கு
  7. சென்னை போய்ட்டு வந்து கதையோட முடிவை எழுதுங்க. மத்தவங்களும் எழுதட்டும். படிச்சுக்கலாம். :)))))

    பதிலளிநீக்கு

  8. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கோபு சார்
    @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ இராஜராஜேஸ்வரி
    @ ஸ்ரீராம்
    @ செல்லப்பா யக்ஞஸாமி
    @ கீதா சாம்பசிவம்
    நான் 450-வது பதிவு என்று சொல்லி இருக்கக் கூடாதோ. பின்னூட்டங்கள் வாழ்த்தையே தாங்கி வ்ருகின்றன. ஸ்ரீராம் சொல்வதுபோல் ஒரு வித்தியாசமான போட்டிதான். பதிவர்கள் பங்கு பெற்றால்தான் என் விருப்பம் பூர்த்தியாகும் திரு செல்லப்பா அவர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என் முடிவை ட்ராஃப்ட் ஆக சேமித்து இருக்கிறேன் என் கைப்பட எழுதிய முடிவை சென்னையில் நீதிபதிகளிடம் கொடுப்பேன் ( என் கையெழுத்துதான் அச்சமூட்டும்)சென்னையில் கணினி வசதி இல்லை. பார்ப்போம் எத்தனை பேர் முடிவெழுத முன் வருகிறார்கள் என்று. வருகை தந்தவர்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் ஐயா .சுவாரஸ்சியமான இக் கதையின் முடிவை என் சிற்றறிவுக்கு எட்டியவரைச் சிறப்பாக எழுத முயல்கின்றேன் .450 வது பகிர்வினை வெளியிட்டிருக்கும்
    தங்களின் ஆர்வமும் உழைப்பும் மென்மேலும் சிறந்து விளங்கட்டும் .அழைப்பிற்கு மிக்க நன்றி ஐயா .

    பதிலளிநீக்கு
  10. சபாஷ் சரியான போட்டி. சரி பரிசு என்ன் அத சொல்லலையே?

    பதிலளிநீக்கு

  11. @ அம்பாளடியாள்
    எழுத விருப்பம் தெரிவித்ததற்கு நன்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    @ டி.பி.ஆர் ஜோசப்
    நீங்களும் கலந்து கொள்ளலாமே. பரிசு இன்னும் முடிவு செய்யவில்லை. எத்தனை பேர் கதைப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம், வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஆவலைத் தூண்டும் அருமையானப் போட்டி
    யோசிக்கத் துவங்கிவிட்டேன்
    450 வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. ஆவலைத் தூண்டும் அருமையானப் போட்டி
    யோசிக்கத் துவங்கிவிட்டேன்
    450 வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஐயா.
    450 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு பற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. 450-வது பதிவிற்கும், போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான ஒரு போட்டி...... கலந்து கொள்ளப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....

    450-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஐயா !
    தங்களின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கதையின் மீதிக் கதையை எழுதி
    முடித்தும் விட்டேன் அதைத் தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் நன்றாக
    இருக்கும் .போட்டியின் முடிவில் இதனை என் வலைப் பக்கம் வெளியிடலாம் என்று எண்ணுகின்றேன் எதுவாக இருப்பினும் தங்களின் பதிலைக் கண்டதும் நிறைவேற்றி விடுகின்றேன் ஐயா .என்னிடத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரி இல்லை
    ஆதலால் அதையும் கொடுத்து உதவுங்கள் மிக்க நன்றி தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கின்றேன் .

    பதிலளிநீக்கு

  19. அன்பு அம்பாளடியாளுக்கு, உங்கள் மின் அஞ்சல் முகவரி என்னிடமும் இல்லாததால் இதிலேயே பதில். என் முகவரி என் ப்ரொஃபைகில் இருக்கிறது. மேலும் என் பதிவிலேயே கொடுத்திருக்கிறேன். இந்தப் போட்டியின் நடுவராக இருக்க திரு பாலகணேஷிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் கதையின் எனது முடிவை அவரிடம் சேர்த்திருக்கிறேன் உங்கள் மீதிக்கதையை உங்கள் பதிவில் இட்டு எனக்குச் செய்தி சொன்னால் போதும் இது எந்த ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். என் முகவரி
    gmbat1649@gmail.com நன்றி.

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி ஐயா .இக் கதையின் மிகுதித் தொடரை எனது வலையில் பிரசுரித்து விட்டேன் இதோ அதன் லிங்க் http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_6904.html

    பதிலளிநீக்கு
  21. சார்,
    உங்கள் போட்டிக் கதையின் மீதிப் பகுதியை வெளியிட்டு விட்டேன்.
    அதன் சுட்டி http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  22. http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_9.html

    ஐயா, தங்கள் போட்டியின் மீதிக்கதையைத் தெரிந்த அளவில் முடித்து என் பதிவில் வெளியிட்டிருக்கிறேன். நேரம் இருக்கையில் பார்க்கவும். பள்ளி நாட்களில் கூடப் போட்டியிலேயே கலந்து கொள்ளும் ஆசையே இல்லாத என்னைப் போட்டிகளில் கலந்து கொள்ள வைத்த வைகோ சாருக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. :))))

    இதுவும் ஒரு அனுபவமே!

    பதிலளிநீக்கு