ஒரு பகிர்வு
----------------
-
கிராமமென்று சொன்னால் பலருக்கும் பல நினைவுகள் வரலாம் ஆனால் எனக்கு ஒரு தெருவே நினைவுக்கு வரும் பாலக் காட்டில் இம்மாதிரி பல கிராமங்கள் ஒற்றைத் தெருவுடன் இருக்கும் ஆனால் பிரசித்திபெற்ற கல்பாத்தி கிராமம் என்றால் பாலக் காட்டில் அறியாதோர் இருக்க மாட்டார்கள் கல்பாத்தி விசுவநாதர் கோவிலை காசியில் பாதி கல்பாத்தி என்று அடைமொழியுடன் நினவு படுத்துவார்கள் அதை ஒரு ஹெரிடேஜ் கிராமமாக அறிவித்திருக்கிறார்கள் இந்த கல்பாத்தி கிராமத்தை ஒட்டியே இருக்கும் கோவிந்தராஜபுரம் எங்கள் கிராமம் என்பெயரில் இருக்கும் ஜீ அதனால்தான் வந்தது ஆனால் அங்கு இப்போது எங்களது என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை என்பெயரின் இனிஷியலின் முதலெழுத்தை தவிர
.
இருந்தாலும் அந்த கிராம சமூகத்தினர் ஒரு
முறை என் வீடு தேடி பெங்களூர் வந்தபோது ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் எந்த மூரிங்கும்( mooring ) இல்லாதஎன் விலாசம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது
என்பெங்களூர் விலாசம் எப்படி கிடைத்ததுஎன்பது இன்னும் எனக்கு ஆச்சரியம்தான் என்னைத் தேடி வந்தவர்களுக்கே சொல்லத் தெரியவில்ல
நான் என் பத்து பதினொன்றாம் வயதில் என் தந்தை வழிபாட்டியுடன் கிராமத்தில்
இருந்திருக்கிறேன் சில
நினைவுகளைப்பதிவிலும் அசை
போட்டிருக்கிறேன் எங்கள் கிராமக்
கோவிலுக்கு கும்பாபிஷேகம் என்றும் அதற்கு
நாங்கள் வர வேண்டுமென்றும் ஒரு கணிசமான
தொகயைஎன்னிடம் எதிர்பார்ப்பதும் தெரிந்தது
என் மனைவிஎங்கள் கிராமத்து கோவில்பணிக்காக அவளால் முடிந்த தொகையைத்
திரட்டினாள் என்மூத்தமகன் அப்போது ஹை
எனர்ஜி பாட்டரிஸ் எனும்கம்பனியில் இருந்தான்
கம்பனி சார்பாக ரூ 10000/- விளம்பரம் என்னும் பெயரில் டொனேட் செய்தான் இந்த
சமயத்தை நான் என்மக்களுக்கு அவர்களது வேரையும் ஊரையும் காட்ட உபயோகித்தேன் அதெல்லாம்பழங்கதைகள்
அதன்
சாராம்சம் கோவிலில் ஒரு உப தேவதையின் (நாக
சுப்பிரமணிய சுவாமி) நெற்றிப்பகுதி சேதமடைந்ததால் தாம்பூலப் பிரச்நம்
பார்த்ததில் சிலையை அது நல்ல சக்தி
உள்ளதால் மாற்ற வேண்டாமென்றும் கடு
சர்க்கரப் பிரயோகம் மூலம் ரிப்பேர் செய்து பூஜைகாரியங்களை செய்து விடலாமென்றும் முடிவெடுத்து
இருக்கின்றனர்
மேலும் கிராமமக்களின் மேலும்பக்தர்களின் மேலும்
தர்ம சாஸ்தா அவர்கள் சில
ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த சில நிகழ்வுளுக்குமன்னிப்பு
கோராததால் கோபம்கொண்டிருப்பதாகவும் அவர் கோபத்தைத் தணிக்க ”க்ஷமாபானம்” செய்து
அவரிடம்மன்னிப்பு வேண்டிப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்து இருக்கின்றனர் இன்னும் ஒரு முக்கிய தகவலாக பக்தகோடிகள்தினசரி மற்றும்விசேஷ
காலநிகழ்ச்சிகளில் சரியாகக் கலந்துகொள்ளாததையும்
குறிப்பிட்டுஅனைவரும் உத்சவ காரியங்களில் பங்கு
வகிக்க வேண்டுமென்றும் கூறி இதன் படி நடக்க இருக்கும் பூஜா காரியங்களில் கலந்து
கொள்ள வேண்டியும் அதற்காகும் செலவுகளுக்கு
பண உதவியும்கோரி இருந்தனர்
இதெல்லாம்சரிதான் ஒரு கிராமக் கோவிலுக்கு செலவு செய்வதும் பூஜைபுனஸ்காரங்ளில் மக்கள் பங்கு பெற வேண்டியும்கோருதல்
தவறாகப்படவில்லை
ஆனால் அதற்காக மக்களின் GULLIBILITY யை பயன்படுத்தி( உம்மாச்சி கோச்சுண்டிருக்கார்
) அவர்களைக் கட்டாயப்படுத்துவதுபோல் ஒருநிலையை
ஏற்படுத்துவதும் சரியா என்று கேட்கத்தோன்றுகிறது இதையெல்லாம் கேட்டால் நான் கெட்டவனாகி விடுவேன் என்மனைவி சொல்வதுசரிஎன்று தோன்றுகிறது மனம்விரும்பினால்
இதுவரைசெய்ததுபோல் ஒருதொகையை அனுப்பலாம் இல்லையென்றால்
பேசாமல் இருக்கலாம் இருந்தாலும்என் மன நிலையைப் பகிராமல் இருக்க முடியவில்லை