அன்னையர் தினக் கவிதை
--------------------------------------
அன்றொரு
நாள் என் பேரன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை ஒன்றை தமிழ்ப் படுத்தி எழுதி இருந்தேன்
அன்னையர் தினத்தை ஒட்டி அதனை மீள் பதிவாக்குகிறேன்
தளைகளும்
கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை
உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை
உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.
உன் உதிரத்தின் உயிராய் தொப்புள்
கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங்
கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?.
என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது
நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும்
அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.
விடியலில் என்னை எழுப்பும் ஆதவன்
நீ
அந்தியில் என்னை உறக்கும்
நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.
இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள்
நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
அம்மா என்றால் அன்பு.
பதிலளிநீக்குஅருமையான கவிதை. ஆங்கிலத்தில் படிச்சேனா? நினைவில் இல்லை.
பதிலளிநீக்குவிடியலில் என்னை
பதிலளிநீக்குஎழுப்பும் ஆதவன் நீ..
அந்தியில் என்னை
உறக்கும் நிலவும் நீ..
- இனிய கவிதை.
வாழ்க நலம்!..
//இனிமையின் இருப்பு நீ,
பதிலளிநீக்குபூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா//
அருமை. அன்னையர் தின இனிய வாழ்த்துகள், ஐயா.
மீள் பதிவே என்றாலும் மீண்டும் படிக்க கசக்கவில்லை. அந்த பதிவினில் பேரனின் ஆங்கில கவிதையும் உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதாக நினைவு.
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
அம்மா என்றால் அன்பு ./ அப்படித்தான் இருக்கவேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
அம்மா என்றால் அன்பு ./ அப்படித்தான் இருக்கவேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
/ஆங்கிலத்தில் படிச்சேனா. நினைவில் இல்லை/ மேடம் அப்போது பதிவிட்டபோது நீங்கள் படித்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. உங்கள் பின்னூட்டம் இருக்கவில்லை இப்போது வருகைக்கு நன்றி பேரனின் ஆங்கிலக் கவிதையும் பின்னூட்டத்தில் இணைக்கிறேன்
When i was home alone , I was happy thinking about the freedom
but with out you it was actually boredom.
the fights we have, and the love we share
I missed it all and wanted nothing but care.
Time passed!!
Oh! i never knew , it was cause i was thinking only about you.
Things have changed and so have i , don't know whether its good or bad.
but , my love was always you mom.
You where the sun rays that woke me up,
and the moon that put me to sleep.
Like that i convinced my self that you were there within myself.
You are the one and the only one ,
who is so complete and so damn sweet.
You are mine
and you make me shine.
mom you r d best!!
LOVE YOU MOM!!
பதிலளிநீக்கு@ துரைசெல்வராஜு
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி. பேரனின் ஆங்கில வடிவையும் கீதாம்மாவுக்கு இட்ட மறு மொழியில் இணைத் துள்ளேன்
பதிலளிநீக்கு@ கோபு சார்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ தி. தமிழ் இளங்கோ
ஐயா வாருங்கள். நீங்கள் அன்றைய பதிவை வாசித்து எந்த பின்னூட்டமும் இடவில்லை. பேரனின் கவிதையின் ஆங்கில வடிவை கீதாம்மாவுக்கு இட்ட மறு மொழியில் இணைத்துள்ளேன் நன்றி
அருமை அருமை ஐயா...
பதிலளிநீக்குஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
குழந்தையின் மனத்தில் தாயைப் பற்றிய சிந்தனை தோன்றுவது வியப்பில்லை. அதை அழகாக வார்த்தைகளால் கோர்வையாகவும் கவித்துவமாகவும் வெளிப்படுத்துவது பெரிய விஷயம். தங்கள் பேரனுக்குப் பாராட்டுகள். ஆங்கிலத்தில் எழுதியதை அழகாகத் தமிழாக்கம் செய்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஉறக்கும் - இந்த வார்த்தை வேறுபொருள் தருவதாக உள்ளதே. துயிற்றும் என்றால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//You where the sun rays that woke me up,
and the moon that put me to sleep.’’
ஆங்கிலத்தில் உங்கள் பேரனின் வரிகள் அருமை!அவருக்கு என் வாழ்த்துக்கள்!அவரது கவிதையை தமிழாக்கம் செய்துள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டிடி
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
உறக்கம் என்ற சொல்லையே வினச் சொல்லாகப் பயன் படுத்தினேன் வேறு பொருள் இருந்தால் அது எனக்குத் தெரியவில்லை வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. சரியில்லை என்று தோன்றியதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்
அருமை.
பதிலளிநீக்குஅன்னையர் தினத்தன்று மட்டும் அம்மாவை நினைப்பவர்கள்தான் இன்றைக்கு அதிகம். அன்று ஒரு நாளாவது அவர்களை நினையுங்கள் என்றுதான் இந்த நாளை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. கவிதை தமிழாக்கம் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் பேரனின் கவிதை அருமை!..
பதிலளிநீக்குநல் வாழ்த்துக்கள்!
அந்தக் கவிதையை சுவை குன்றாது தமிழாக்கம் செய்த தங்களுக்கு நன்றி..
பதிலளிநீக்கு@ நண்டு@நொரண்டு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர்.ஜோசப்
எனக்கும் ஒரு நாள் அன்னையரைப் பற்றி நினைப்பது உடன்பாடில்லை இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளிநாட்கள் அன்னையைப் பிரிந்திருந்த என் பேரனின் உள்ளக் கிடக்கைகளை ஆங்கிலத்தில் எழுதி இருந்தான். அதன் தமிழ்வடிவை மீள்பதிவு செய்தேன். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ துரைசெல்வராஜு
உங்கள் மீள்வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ஐயா. தாயைப் பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் எனக்கு கவிதையை படித்ததும் இதயம் லேசாகிறது.
பதிலளிநீக்குஅன்னை என்றாலே அன்புதானே. நல்ல கவிதை.
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
ஆகா அன்னையர் தின சிறப்பு கவிதை சிறப்பாக உள்ளது
அன்னையர் தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு நல்ல கவிதையை உணர்வோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதாமதத்திற்கு மன்னிக்கவும்