செவ்வாய், 27 மே, 2014

கதம்பம் ---HOW DARE YOU.......!



                                                  கதம்பம்-- ( HOW DARE YOU.......!)
                                                 ----------------------------------



முதலில் ஒரு காணொளி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. டைம்ஸ் நௌ ல்  NEWS HOUR இரவு ஒன்பதுமணிக்கு வரும். யார் யாரோ வருவார்கள் என்னென்னவோ பேசுவார்கள். எல்லோருக்கும் அவரவர் பக்கமே நியாயமாகத் தெரியும் ஒருவராவது அடுத்தவர் சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்திப்பதே இல்லை.  NEWS HOUR வெறுமே NOISE HOUR பாக இருக்கும் உங்கள் ரசனைக்கு அதன் anchor அர்னாப் கோஸ்வாமி எப்படி நடத்துகிறார் அவருக்குக் கோபம் வரும்போது எப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரு சாம்பிள்.  
      


 இந்தக் காலப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம்? கண்ணோட்டம் ?அதிகப் பிரசங்கித்தனம் ? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்


ஒரு ஜோக் என் மகன் சொன்னது. ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவில் ஸ்வாமி விவேகாநந்தர் ” சகோதர சகோதரிகளே”  என்று அழைத்துப் பேச்சைத் துவக்கினார் என்று  சொல்லத் துவங்கியதும் ஒரு சுட்டிப் பையன் “நான் அப்படியெல்லாம் சொல்லி என் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த மாட்டேன் “என்றானாம்....!
தொலைக்காட்சியில் ரசித்தது. கல்யாணமாலை நிகழ்ச்சியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார் ”கல்யாணத்தில் முஹூர்த்த நேரம் நெருங்கும்போது சாஸ்திரிகள் “நல்ல நேரம் முடியப் போகிறது .பெண்ணை அழைத்து வாருங்ககள் “ என்பார். திருமணம் முடிந்தால் பையனின் நல்ல நேரம் முடியும் என்று அர்த்தமா...!
 இன்னொரு நிகழ்ச்சியில் இந்திர லோகத்தில் பவர் கட் இருக்கிறது. பிரம்ம லோகத்தில் ஏன் இல்லை.?
”பிரம்மாவுக்கு four faces ஒரு ஃபேசில் பவர் போனாலும் மீதி மூன்று ஃபேஸ் இருக்கிறதே”

30 கருத்துகள்:

  1. கடைசி இரண்டு ஜோக்குமே ரசிக்கும்படி இருந்தன.

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்க்குரிய ஐயா. வணக்கம். திரு. அர்னாப் கோஸ்வாமி, பார்க்கும் நம்மை பல முறை வியப்பில் ஆழ்த்துவார். ஒருசில முறை கோபப்பட்டு நம்மை முகம் சுளிக்க வைப்பார். ஆனால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் துணிச்சலாக கேள்விகள் கேட்பார். நான் பார்த்து ரசித்த "Newshour" பாகத்தை இங்கு தங்களிடம் பகிர்கிறேன் ஐயா. காங்கிரஸ், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் எம்.ஐ.எம் கட்சியின் மூத்த தலைவர்களை பேட்டி எடுப்பார் கோஸ்வாமி. காந்தி கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸின் பங்கு குறித்த விவாதம் அது. இதில் ஹீரோ அர்னாப் தான். டக் டக் என குறிப்புகளை எடுத்து வீசுவார். இறுதியாக நான்கு பேரையுமே சங்கடத்தில் ஆழ்த்திவிடுவார். யூடியூப் தளத்தில் "The Newshour Debate Rahul Gandhi's Godse card - Full Debate (10th March 2014)" என தேடி பார்க்கலாம். நேரம் இருந்தால் பாருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. ஜோக்குகள் பிரமாதம். சிகாகோ ஜோக் ஒரு புதிய பார்வை.

    பதிலளிநீக்கு
  4. அர்நாபின் நேர்காணல்களை முடிந்தவரை நான் தவிர்த்துவிடுவேன்.ஏனெனில் அவர் தேவைக்கு அதிகமாகவே முரட்டுத்தனத்தைக் காட்டுவார்.

    ஜோக்குகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. The interview of RAhul Gandhi by Arab go swami was the one I enjoyed!it was amusing to see Rahul's uneasy posture on the chair!his answers were irrelevant most of the time!Arnab dint lose his cool surprisingly,

    பதிலளிநீக்கு
  6. இந்தக் காலத்துப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம், கண்ணோட்டம், அதிகப் பிரசங்கித்தனம் - எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ..

    வேறு வழியில்லை!..

    கலகலப்பான செய்திகள். நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் உட்காருவது இல்லை. அதுவும் அர்நாப் கோஸ்வாமி??? வாய்ப்பே இல்லை! ரொம்பகெட்டிக்காரத்தனமாப் பேசறதா நினைச்சுட்டு தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார். நவாஸ் ஷெரீஃபிடம் அப்படித் தான் கேட்டிருக்கார். :(((

    மற்றபடி உங்கள் வீடியோ எனக்குத் திறக்கலை. என் கணினியிலோ அல்லது இணைய இணைப்பிலோ கோளாறு இருக்கலாம். :)))

    பதிலளிநீக்கு
  8. ஐயா வணக்கம், செய்தித்தொகுப்பாளர்கள் எல்லாத்தருணங்களிலும் பொறுமையாக காப்பதிலேயே அவர்கள் வெற்றி இருக்கிறதென்பது என் தாழ்மையான கருத்து.வடமொழிப்புலமையின்மையால் சின்னப்பையனின் கேள்விகளை ரசிக்க முடியவில்லை.நகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு

  9. @ கரந்தை ஜெயக்குமார்
    ஃபேஸ் என்னும் வார்த்தை விளையாட்டில் ஒரு ஜோக்.வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  10. @ ஸ்ரீராம்
    /கடைசி இரண்டு ஜோக்குமே ரசிக்கும்படி இருந்தது/ முதல் ஜோக் பற்றிய டாகடர் கந்தசாமியின் கருத்தைப் பாருங்கள். வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  11. @ இல.விக்னேஷ்
    நியூஸ் அவர் டிபேட்டை நீங்கள் ரசிப்பதுதெரிகிறது. மேற்கத்திய ஊடகங்களில் அர்னாபின் டிபேட்டுகள் குறித்தே நடக்கும் ஒரு காணொளி கண்டேன். அதில் நான் கொடுத்துள்ள காணொளி பற்றிப் பேசப் பட்டது . அதுவே நான் இதை இங்கு பகிரக் காரணம் வருகைக்கு நன்றி. நான் அவ்வப்போது அர்னாபின் டிபேட்டைப் பார்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு

  12. @ டாக்டர் கந்தசாமி
    வருகைதந்து ஜோக்குகளை ரசித்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு

  13. @டி.பி.ஆர் ஜோசப்
    அர்னாபின் நேர்கணல்கள் எனக்கும் அவ்வளவாகப் பிடிக்காது. உரையாடல்களில் அவர் மாடரேட்டராக இல்லாமல் கட்சிகட்டி வாதாடுவார். வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  14. @ hns. mani
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  15. @ துரை செல்வராஜு
    இந்தக் காணொளிக்குத்தான் நான் அதிக கருத்துக்களை எதிர்பார்த்தேன். அது இந்தக் காலப் போக்கை தெரிவிப்பதாய் நினைக்கிறேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  16. @ கீதா சாம்பசிவம்
    how unfortunate you could not view the videos
    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  17. @ உமேஷ் ஸ்ரீநிவாசன் அது ஹிந்தியில் அல்லவா இருக்கிறது. சம்ஸ்கிருதம்தான் வடமொழி என்பார்கள் என்று நினைத்தேன் . நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு
  18. காணொளிகளை மிகவும் ரசித்தேன்
    நகைச்சுவைத் துணுக்குகள் மிக மிக அருமை
    குசும்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தால்
    அதன் சுவையும் கூடுதலாகத்தானே இருக்கும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. அர்ணாப் கோஸ்வாமி - அவர் கருத்தினையே மற்றவர்களும் சொல்ல வேண்டும் என எதிபார்ப்பவர்..... அதனால் பார்ப்பதில்லை.....

    நகைச்சுவையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. கதம்பமும்
    காணொளியும்
    ரசிக்கவைத்தது..

    பதிலளிநீக்கு

  21. @ ரமணி
    நகைச்சுவையில் குசும்பு இருந்தால் அதற்கு நான் காரணமில்லை. நான் செய்தது வெறும்பகிர்வே. வருகைக்குநன்றி

    பதிலளிநீக்கு

  22. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  23. @ இராஜராஜேஸ்வ்ரி
    வருகைதந்து ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நகைச்சுவை துணுக்குகளை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு

  25. @ வே. நடனசபாபதி
    வருகை புரிந்து ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. நகைச்சுவைகளும் பிற பதிவுகளும் ரசிக்கும்படியாக இருந்தன. மணமகனுக்கு நல்ல நேரம் நகைச்சுவை மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு

  27. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ MNR Savithri
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி . இது சாவித்ரியின் முதல் வருகை.?

    பதிலளிநீக்கு