மஹாபாரதக் கதைகள் -- அசுவத்தாமன்
--------------------------------------------------------
அசுவத்தாமன் கதையை எழுதுவதற்கு முன் அசுவத்தாமன் கதைகள்
என்று ஒரு பிரபல பதிவர் வலையில் படித்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தக்
கதைகளுக்கும் மஹாபாரத அசுவத்தாமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதி
செய்து கொண்டேன் ,இன்னுமொரு எச்சரிக்கை. உங்கள் அருகிலேயே அசுவத்தாமன்
சூர்யகாந்தனெனும் பெயரில் இருக்க வாய்ப்புண்டு. அவர் சிரஞ்சீவி என்று கூறப்
படுகிறது. ஆனால் அவரது சிரஞ்சீவத்தன்மை கண்ணனின் சாபத்தின் விளைவு என்றும் ஒரு கதை
உண்டு. அப்படி கண்ணனின் சாபத்தால் சிரஞ்சீவித்துவம் பெற்ற அசுவத்தாமன் நோய்
நொடியால் அவதியுற்று குஷ்ட ரோக நோயால் அவதிக்குள்ளாகி கலியுகத்தின் முடிவில் மஹாவிஷ்ணுவின்
அவதாரம் கண்டு முக்தி பெறுவான் என்றும் கதை உண்டு. இந்த மஹாபாரதக் கதையே
வேதவியாசரின் கதையிலிருந்து அநேக பாடபேதங்கள் புனையப்பட்டு ஒவ்வொருவிதமாய் பேசப்
படுகிறது
. துரோணர், பாரத்வாஜ மகரிஷியின் மைந்தர். மகரிஷி
அக்னிவேசர் என்பவருக்கு ’அக்னி அஸ்திரம் ‘ எனும் ஆயுதப் பயிற்சியைக் கற்று கொடுத்தார்.தன் மகன்
வளர்ந்ததும் அவனுக்கு அதைக் கற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டார் இந்த அக்னிவேசரிடம்
மாணாக்கராய் துரோணர் பயின்றார். கூடவே பாஞ்சால இளவரசன் துருபதனும் மாணாக்கராய்
இருந்தார். அந்த இளவயது நட்பில் துருபதன் துரோணரிடம் தான் அரசனாய் பதவி ஏற்றதும் பாதி ராஜ்ஜியம் தருவதாக
வாக்களித்தார் நாட்கள் செல்ல அவரவர்
வழிகளில் அவரவர் சென்றனர்
துரோணாச்சாரியார் கிருபாச்சாரியரின் சகோதரி கிருபியை
மணந்தார்.அவர்களுக்குப் பிறந்தவரே அசுவத்தாமன் பிறந்தபோது குதிரையின் குரலில்
அழுததால் அசுவத்தாமன் என்னும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. அசுவத்தாமனின் இளவயது ஏழ்மையில் கழிந்தது.பாலைக்
குடிப்பதாக பாவித்து வாயில் மாவுக் குழம்பை பூசிக் கொள்வானாம். துரோணர்
தன் ஏழ்மையைப் போக்க பரசுராமரை அணுகினார். ஆனால் பரசுராமர் தன்னிடம் இருந்த
செல்வங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்து விட்டதால் துரோணருக்கு அஸ்திர
சாஸ்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்
துரோணருக்கு தன் மகன் அசுவத்தாமனிடம் அளவில்லா
அன்பிருந்தது. தன் ஏழ்மையைப் போக்கஅப்போதைய பாஞ்சால மன்னன், தன் இளவயது நண்பன்
துருபதனிடம் சென்று அவரது பழைய வாக்குறுதியை நினை வூட்டினார். பாஞ்சாலமன்னன் அவரை
அவமானப் படுத்திவிட்டான் தன்னுடன் நட்பு பாராட்ட ஒரு மன்னனுக்கே தகும் என்றும் ஒரு
ஏழைப் பிராமணன் அதைக் கனவிலும் எண்ணமுடியாது என்றும் கூறி அனுப்பிவிட்டான்
துரோணர் ஹஸ்தினாபுர இளவரசர்களுக்கு ஆசாரியராய் சேர்ந்தார்.
பாண்டவ, கௌரவர்களுடன் அவர் மகன் அசுவத்தாமனும் பயிற்சி பெற்றான் குருதட்சிணையாக
தன் மாணாக்கர்களிடம் தன்னை அவமானப் படுத்திய துருபதனைப் போரில் வென்று
கைதியாக்கிக் கொண்டுவர விரும்பினார். கௌரவர்களால் முடியாததை பாண்டவர்களில்
அர்ச்சுனன் நிகழ்த்திக் காட்டினான்.இதுவே பாஞ்சால மன்னனுக்கு துரோணரிடம் பகையை
ஏற்படுத்தியது. அவரைக் கொல்வதற்கென்று வேள்வி நடத்தி ஒரு குமாரனைப் பெற்றார்.அவனே
திருஷ்டத்யும்னன்
துரோணருக்கு அர்ச்சுனன் மேல் தனிப் பிரியம் தன்னுடைய சிறந்த
மாணாக்கன் என்று கூறிக் கொள்வார். அவருடைய மகன் அசுவத்தாமனுக்கு இது பிடிக்காமல்
கௌரவர்களுடன் அதிக நட்பு பாராட்டினான் .
துரோணர் அர்ச்சுனனுக்கு பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கவும்
அதை மீண்டும் அழைத்துக் கொள்ளவும் கற்பித்தார். அசுவத்தாமன் தந்தையிடம் தனக்கும்
அந்த அஸ்திர வித்தையைக் கற்றுக் கொடுக்கக் கேட்கிறான் . துரோணர் அவனுக்கு
பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை பிரயோகிக்க மட்டும் கற்றுக் கொடுத்தார். அதனை மீட்கவும்
மீண்டும் மீண்டும் பிரயோகிக்கவும் தகுதி
இல்லையென்று மறுத்து விட்டார்.இதெல்லாம் அசுவத்தாமனுக்கு அர்ச்சுனன் மேல்
பகையையும் பொறாமையையும் வளர்த்தது
குருக்ஷேத்திரப் போரில் துரோணர் தலைமையில் கௌரவர்கள் வெற்றி
முகத்தில் இருந்தனர் யுதிஷ்டிரரைப் பிடிக்க வைத்த வியூகத்தில் அர்ச்சுனன் மகன்
அபிமன்யு கொல்லப் படுகிறான் துரோணர் இருக்கும் வரை கௌரவர்களை வீழ்த்துவது கடினம்
என்று உணர்ந்த கிருஷ்ணர் துரோணருக்கு அசுவத்தாமன் மேல் உள்ள அன்பை தமக்குச்
சாதகமாய் பயன் படுத்த எண்ணி அசுவத்தாமன் இறந்தான் என்று பீமனிடம் முழக்கமிடச்
சொன்னார். உண்மையில் பீமன் அசுவத்தாமன் என்னும் பெயருடைய ஒரு யானையைக்
கொன்றிருந்தான். தருமனின் வாய்மையில் நம்பிக்கை கொண்டிருந்த துரோணர் அது உண்மையா
என்று கேட்க தருமனும் அசுவத்தாமன் இறந்தான் என்று சத்தமாகக் கூறிப்பின் “என்னும்
யானை“ என்று மெல்லியகுரலில் கூறினான். புத்திர சோகத்தால் தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு
தியானம் செய்ய அமர்ந்தார். துரோணரைக் கொல்வதற்காகவே பிறப்பெடுத்த திருஷ்டத்யும்னன்
ஓடிச் சென்று துரோணரின் தலையைக் கொய்கிறான்
குருக்ஷேத்திரப்போர் முடிவு பெற்று துரியோதனனும் இறந்தான் (
இறக்கும் தருவாயில் இருந்தான் ஒரிஜினல் கதையில் எப்படி என்று தெரியவில்லை.
தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கவும் துரியோதனனுக்கு இறக்கும் போது மகிழ்ச்சியைத்
தரவும் என்ன செய்வது என்று சஞ்சலத்தில் இருந்த அசுவத்தாமன் இரவு நேரத்தில்
கோட்டான் ஒன்று காகங்களைத் துரத்தி அடிப்பதைக் கண்டான் யுத்த தருமம் மீறித் தன்
தந்தையைகொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு
இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான் அங்கே உறங்கிக் கொண்டிருந்த
உப பாண்டவர்கள் ஐவரையும் கொன்றான் களேபரத்தில் எழுந்த மற்றவர்களைக் கிருபரும்
கொல்ல பாண்டவர்களைக் கொன்று பழிவாங்கிய சந்தோஷ சமாச்சாரத்தை துரியோதனனிடம் சொல்லச்
சென்றான்
அங்கிருந்து வியாச மகரிஷியின் அசிரமத்துக்குச் சென்றான்.
இரவில் வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை
கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரம்ம் சென்றனர் பாண்டவர்களைக் கண்ட
அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்று
உணர்ந்து பாண்டவர்களை எதிர்க்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை
பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான் . கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ச்சுனனும்
பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை
வியாசமுனி
தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்ப்பப் பெறக் கோருகிறார்.
திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ச்சுனன் தன் அஸ்திரத்தை திரும்பப்
பெறுகிறான் அதனைத் திரும்பப்பெறத் தெரியாத
அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல அவன்
அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான் கிருஷ்ணர் தன்
சுதர்சனச் சக்கரத்தால் கருவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காக்கிறார் அப்படிக்
கருவில் காக்கப்பட்டவரே பாண்டவர்களின் வாரிசான பரீக்ஷித்து மஹாராஜா. ( இன்னொரு
விதமாகவும் சொல்லப்படும் கதையில் உத்தரை ஒகருவில் இறந்தகுழந்தையைப்
பிரசவித்ததாகவும் கிருஷ்அர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும் கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீக்ஷித்
எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.)
கிருஷ்ணர் அசுவத்தாமன் நெற்றியில் இருந்த சமந்தகாமணி போன்ற மணியை தோல்வியை
ஒப்புக் கொண்டு கழற்றித் தரச் செய்து அவனை சபித்து அனுப்புகிறார்
அஸ்வத்தான் பற்றி
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்..
//ஒரிஜினல் கதையில் எப்படி என்று தெரியவில்லை//
பதிலளிநீக்குஒரிஜினல்தான் எது?
அசுவத்தாமன் பற்றி அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
@ ஸ்ரீராம்
@ கரந்தை ஜெயக் குமார்
@ கீதா சாம்பசிவம்
அன்பான வருகைக்கும் கருத்துப் பதிவுகளுக்கும் நன்றி .
அசுவத்தாமன் பற்றி (சிறிது குழப்பத்துடன்) அறிந்தேன்...
பதிலளிநீக்குதெரிந்த கதையோடு தெரியாத தகவல்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
மஹாபாரதக் கதை மாந்தர்கள் ஏறத்தாழ அனைவருமே குழப்பம் ஏற்படுத்துவார்கள். என்ன ஏது என்று சிந்திக்கக் கூடாது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ வே. நடனசபாபதிவருகை தந்து ரசித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குஅர்ச்சுனன் - அஸ்வத்தாமனின் குடுமியை வெட்டி விட்டு - விரட்டி விடுவதாக சில உபன்யாசங்களில் கேட்டிருக்கின்றேன்.
மஹாபாரத தொடர் பதிவில் அடுத்து யார் என ஆவல்!..
சில தகவல்கள் புதிதாய் தெரிந்து கொண்டேன்.....
பதிலளிநீக்குதொடரட்டும் மஹாபாரதக் கதைகள்.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
அதுதான் எழுதி இருக்கிறேனே சார், பாரதக் கதையில் நிறையவே பாடபேதங்கள் இடைச் செறுகல்கள் என்று. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வாருங்கள் வெங்கட். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி
அசுவத்தாமன் எனக்கு பிடித்த மகாபாரத மாந்தர்களில் ஒருவர். அவரைப் பற்றி இன்னும் நிறைய விவரங்கள் இருக்கின்றன சார்.
பதிலளிநீக்குஅந்த விவரங்களை எனக்கு அனுப்ப முடியுமா...?
நீக்குDharmaece1992@gmail.com
நீக்குஅந்த வேண்டுகோளை அவரிடம் அன்றே வைத்தேன்
நீக்கு
பதிலளிநீக்கு@ அப்பாதுரை.
வருகைக்கு நன்றி. என்னிடம் இருப்பது சிறிய கரண்டி. அதில் முடிந்த அளவு கிளறி இருக்கிறேன் இன்னும் தகவல்களை நீங்கள் பகிர்வதானால் மகிழ்ச்சி அடைவேன்
அஸ்வத்தாமனைப் பற்றிய தங்களின் பதிவினைப் படித்தேன். பல புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.