Wednesday, July 30, 2014

நினைத்துப்பார்க்க சில காணொளிகள்


                        நினைத்துப் பார்க்க சில காணொளிகள்
                        -----------------------------------------------------
நான் பலமுறை ஆச்சரியப் பட்டதுண்டு. நம் குழந்தைகள் முதலில் கவிழும்போதும், தவழும்போதும் ,நிற்கும்போதும் நடக்கும்போதும் கண்டு பரவசமடைகிறோம். இவற்றைச் செய்து பார்க்க யாரும் பயிற்சி கொடுப்பதில்லை. விலங்கினங்களின் சில செயல்கள் கண்டும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த ஆச்சரியமும் மகிழ்வும் உங்களுக்கும் இதைக் காணும்போது நிகழலாம் .யார் கற்றுக் கொடுத்து இவை செயல்படுகின்றன. ?


ஒரு தந்தையின் அரவணைப்பைக் உணர்த்தும் ஒரு சிம்பாலிக்  காணொளி. கண்டு மகிழ.

குழந்தைகள் எது செய்தாலும் காண மகிழ்ச்சியே. உங்கள் வீட்டிலும் இம்மாதிரிக் குழந்தைகள் இருக்குமே


சாஸ்திரிய சங்கீதம் மூலம் கொடுக்கப் படும் புகார்களையும் ரசியுங்களேன்


மேலே கண்ட காணொளிகளுக்கு கவிதை புனைந்து வாசகர்களை ரசிக்க வைக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த அழைக்கிறேன் 






34 comments:

  1. காணொளிகள் ரசிக்கவைத்தன..

    ReplyDelete
  2. குழந்தை பாட்டுப் பாடுவது சூப்பர்.

    ReplyDelete
  3. இனிய பதிவு!..
    முதலிரண்டும் முன்பே FB வழியே ரசித்தவை. அடுத்த இரண்டும் புதியவை. குழந்தையின் பாட்டு அருமை!.. நன்றி..ஐயா..

    ReplyDelete
  4. மீன் பிடிக்கும் நேர்த்தி வியக்க வைக்கிறது.
    குழந்தையின் ரசனை ரசிக்க வைக்கிறது.
    மற்ற இரண்டும்..... ம்ம்ம்.. ஓகே...

    ReplyDelete
  5. முதல் காணொளிக்கு ஒரு கவிதை (நம்புங்க கவிதை மாதிரிதான்) முயற்சி.

    இரை
    கிடைத்தது
    என்று நம்பி வந்த மீனே
    இரையானது!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா!

    அருமையான காணொளிகள்!
    உண்மையில் அத்தனையையும் லயித்துப் போய்ப் பார்த்தேன் ஐயா!

    சாதாரணமான ஏதோ காணொளியாக்கும் என வந்த எனக்கு,
    இங்கு காணும் காட்சிக்குக் கவிதை பாடச் சொன்னதும் மகிழ்ச்சியும் பிரமிப்புமாக இருந்தது.
    ஆயினும் முயன்றுள்ளேன்.

    முதலாவதற்கும் மூன்றாவதற்கும் குறட்பாக்களாகவும்
    இரண்டாவதற்குப் புதுக்கவிதை நடையிலும் எழுதியுள்ளேன்.
    பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    முதலாவது காணொளிக்கு:

    இரைதனை வீசியே ஈர்க்குதே மீனை!
    உரைத்தலுக் காகுமோ ஓது!

    இரண்டாவதற்கு:

    வாடைக்குள் தொலைந்தே
    வழி மாறிப் போகாமல்
    மகளினுடை காக்குந் தந்தை
    ஆடைக்கும் பாசமுண்டு பார்!

    மூன்றாவதற்கு:

    சின்னக் குழந்தைக்குச் சீரிய ஞானந்தான்!
    என்னவென்பே(ன்) இவ்வியப்பை இங்கு!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    காணொளிகள் நன்றாக உள்ளது..அதில் நல்ல தகவலையும் சொல்லியுள்ளது... பகிர்வுக்கு நன்றி ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  8. நான்கு காணொளிகளுமே அருமை. அதிலும் அந்த நான்காவது காணொளியில் புகார்களை சொன்ன விதம் இரசிக்கவைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. கணொளிகள் மிக அருமை. இரையை ஆற்றில் வீசி மீனை பிடிக்கும் தந்திரக்கார பறவை மிக அருமை.
    பாட்டு பாடும் குழந்தை, பாசக்கார தந்தை எல்லாம் அருமை.
    ஸ்ரீராம், இளமதி கவிதைகள் அருமை.

    ReplyDelete
  10. எல்லாமே அருமை என்றாலும் குழந்தையின் பாட்டும், கடைசியாகப் புகார்களை அருமையான சங்கீதத்தில் கொடுத்ததும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  11. அனைத்து அருமை. நன்றி.

    ReplyDelete
  12. கொக்குக்கொரு ஷொட்டு, அப்பா - அப்பப்பா, மனங்கவர் மழலை, சங்கடங்கள் சங்கீதமாய்

    ReplyDelete
  13. வலைப்பதிவில் அடிக்கடி புதுமை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறீர்களே!

    ReplyDelete

  14. @ இராஜராஜேஸ்வரி
    காணொளிகளைக் கண்டுரசித்ததற்கு நன்றி

    ReplyDelete

  15. @ டாக்டர் கந்தசாமி
    பொதுவாக எல்லாக் குழந்தைகளின் செய்கைகளும் ரசிக்கவைக்கும். நேரம் பார்த்து அவற்றை சேகரித்து வைத்தால் ரசிக்கலாம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்
    வருகை தந்து காணொளிகளை ரசித்ததற்குநன்றி

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    காணொளிக்குக் கவிதை.என்ன சந்தேகம் /இரை
    கிடைத்தது
    என்று நம்பி வந்த
    மீனேஇரையானது/ சூப்பர் ஸ்ரீ.

    ReplyDelete

  18. @ இளமதி
    கலக்கி விட்டீர்கள்....!
    /இரைதனை வீசியே ஈர்க்குதே மீனை
    உரைத்தலுக் காகுமோ ஓது./ பேஷ் பேஷ்
    /வாடைக்குள் தொலைந்தே
    வழி மாறிப் போகாமல்
    மகளினுடை காக்குந் தந்தை
    ஆடைக்கும் பாசமுண்டு பார்/வெரி குட்..!
    சின்னக் குழந்தைக்குச் சீரிய ஞானந்தான்
    என்னவென்பேன் இவ்வியப்பை இங்கு/
    காணொளிகளையும் உங்கள் கவிதைகளையும் உங்கள் ஆசானுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  19. @ ரூபன்
    பதிவுகளில் கவிதை எழுதும் உங்களிடம் சில நல்ல கவிதை வரிகளை எதிர்பார்த்தேன். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  20. @ வே. நடன சபாபதி
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ கோமதி அரசு
    நான் ரசித்தவை வாசகர்களும் ரசிப்பார்கள் என்னும் நம்பிக்கையே இப்பதிவு. மேலும் ரசிக்கும் போது சிந்தனையை கிளறவே கவிதை எழுத அழைப்பு. ஸ்ரீராமும் இளமதியும் வஞ்சனை யில்லாமல் கலக்கி விட்டார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete

  22. @ கீதா சாம்பசிவம்
    வீடியோக்களை ரசித்ததற்கு நன்றி. புகார் பாடல் ஏதோ ராகத்தில் இருக்கிறது. என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete

  23. @ டி.பி.ஆர். ஜோசப்
    வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  24. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    மழலையின் சங்கீதமும் சங்கடங்களின் சங்கீதமும் ரசித்ததற்கு நன்றி உமேஷ்

    ReplyDelete

  25. @ செல்லப்பா யக்ஞசாமி
    /வலைப் பதிவில் அடிக்கடி புதுமை நிகழ்த்தி கொண்டிருக்கிறீர்களே/
    ஏதோ முயற்சி செய்கிறேன். என் பதிவுகளும் கண்ணில் பட வேண்டுமல்லவா. வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  26. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  27. @ துரை செல்வராஜு
    உலகம் சிறியது என்று புரிகிறது ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  28. ஆஹா! சூப்பர் சார்! ரொம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்...புதுமைதான் சார்!! இறுதிக் காணொளி ரொம்பவே புதுமை!

    மனிதா
    என்னைப் பார்த்துத்தான்
    விமானம் பறக்கவிட்டாய்!
    இதையும் கற்றாயோ?
    என்னைக் கண்டு?
    சின்ன இரையை இட்டு
    பெரிய இரையைப் பிடிப்பதை?!

    குழந்தை மொழிக்கு
    கும்பிடு போட்டேன்
    என்னையும்
    குழந்தையாக்கியதால்!

    படும் வேதனைகளைப்
    பதிய வைத்தேன்
    கேட்பார் யாருமில்லை
    பாடிப் பதிய வைத்தால்
    கேட்பாரோ என்று
    பார்த்தார்கள் என்னை
    தலையசைத்துக்
    கேட்டார்கள் பாடலை
    புகார்களை அல்ல!


    ReplyDelete

  29. @ துளசிதரன் தில்லையகத்து
    நினைத்தும் பார்க்காத பின்னூட்டம். இதில் இருந்து ஒன்று தெரிகிறது மனசில் உட்காரும் சில காட்சிகள் கவிதை பாட வைக்கும் மிகவும் ரசித்த பின்னூட்டம். வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றிசார்.

    ReplyDelete
  30. அற்புதமான காணொளிகள். கண்டு கேட்டு எமக்கும் காணச் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  31. காணொளிகளைக் கண்டேன். வாசககர்களாகிய எங்களை குழந்தைகளாக்கிவிட்டீர்கள். பார்க்கும்போது நாங்கள் குழந்தையாக ஆன உணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பதிவு தரும் தங்களுக்கு நன்றி.

    ReplyDelete

  32. @ சந்திரகௌரி சிவபாலன்
    வருகைக்கும் காணொளிகளை ரசித்தமைக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  33. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ரசித்ததை அப்படியே குழந்தை மனதோடு தெரியப் படுத்தியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete