கீதைப் பதிவு அத்தியாயம் -3
---------------------------------------
கர்ம யோகம் அத்தியாயம் -3
அர்ஜுனன் சொன்னது
ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம்
கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1)
முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும்
நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2)
ஸ்ரீபகவான் சொன்னது
பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான யோகம் என்றும்
அதை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கர்ம யோகமென்றும் இரண்டு நன்னெறிகள் முன்பே என்னால் இயம்பப் பட்டிருக்கின்றன. (3)
புருஷன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதீதத்தை
அடைவதில்லை.வெறும் சன்னியாசத்தால் அவன் நிறை நிலையைப் பெறுவதுமில்லை.(4)
யாரும் ஒரு கணப் பொழுதேனும் செயலாற்றாதிருப்பதில்லை.
ஏனென்றால் பிரகிருதியினின்று உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றி
கர்மம் செய்விக்கப் படுகிறது(5)
கர்மேந்திரியங்களை அடக்கி , இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக்
கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கமுடையவன் என்று பகரப் படுகிறான்(6)
அர்ஜுனா ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று
கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவனே(7)
நித்திய கர்மத்தை நீ செய். செயல் இன்மையைவிடச் செயல் சிறந்தது
செயல் இலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது.(8)
யக்ஞ கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது.
குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று.(9)
சிருஷ்டித் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே பிரஜைகளைப்
படைத்து “இதனால் விருத்தியடையுங்கள், இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்” என்றார்(10)
இதனால் தேவர்ளைப் பேணுங்கள்.தேவர்கள் உங்களைப் பேணட்டும்
பரஸ்பரம் பேணி பெருநன்மை எய்துவீர்.(11)
“யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு நாடிய போகங்களை
நல்குவார்கள” அங்ஙனம்
அவர்களால் கொடுக்கப் பெற்று அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன்
திருடன்.(12)
யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப்
பாபங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள்
பாபத்தை உண்கின்றனர்(13)
உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன.மழையினின்று உணவு உருப்படுகிறது.யக்ஞத்திலிருந்து
மழை வருகிறது.யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம்(14)
கர்மம் வேதத்தினின்று உதித்ததென அறிக.வேதம்
பரமாத்மாவிடமிருந்து வந்தது. ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம் யாண்டும்
யக்ஞத்தில் நிலைபெற்றுள்ளது.(15)
இகத்தில் இங்ஙனம் இயக்கப்பெற்றுள்ள சக்கரத்தைப் பின்
பற்றாதவன்,ஓ பார்த்தா,பாபவாழ்க்கை உடையோனாய், புலன்களில் பொருந்தினவனாய், வீணே வாழ்கிறான்.(16)
ஆனால் ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து,
ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.(17)
அவனுக்குக் கர்மம்செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது
இழத்தலும் இல்லை.ஏதாவது பொருளைநாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும்
அவனுக்கு இல்லை.(18)
ஆகையால் யாண்டும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுக.
ஏனென்றால் பற்றற்றுத் தொழில் புரியும் புருஷனே பெரு நிலையைப் பெறுகிறான்.(19)
ஜனகர் முதலானவர்கள் கர்மத்தாலேயே முக்தி அடைந்தார்கள்.உலகத்தை
நல் வழியில் நடத்துதலை நன்குணர்ந்தாவது கர்மஞ் செய்யக் கடமைப் பட்டிரு.(20)
மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்
பற்றுகின்றனர்.அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.(21)
பார்த்தா, மூவுலகிலும் எனக்குக் கடமையேதும் கிடையாது. அடையாத
ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லவே இல்லை.ஆயினும் நான் கர்மம் செய்து
கொண்டே இருக்கிறேன்.(22)
அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில்
மனிதர்களென் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.(23)
நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம்.
ஜாதிக்கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.(24)
பார்த்தா, பற்றுள்ளவராய்ப் பாமரர் கர்மம் செய்வதுபோல பண்டிதர்
பற்றில்லாதாராய்ப் பாரினில் பெருநெறி
புகட்டுதற் பொருட்டுக் கர்மம் செய்ய வேண்டும்.(25)
ஞானியானவன் கர்மப் பற்றுள்ள அக்ஞானிகளிடத்து மனக்கலக்கத்தை
உண்டு பண்ணலாகாது.எல்லா கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களையும்
ஈடுபடுத்த வேண்டும்.(26)
பிரகிருதியின் குணங்களால் யாண்டும் கர்மங்கள் செய்யப்
படுகின்றன.அகங்காரத்தால் மோகமடைந்தவன் ”நான் கர்த்தா” என்று நினைக்கிறான்.(27)
ஆனால் பெருந்தோளுடையோய், குண கர்மத்தின் தத்துவ ஞானியோ,
குணங்கள் குணங்களில் பிரவ்ர்த்திக்கின்றன என்று பற்று வைப்பதில்லை.(28)
பிரகிருதியின் குணங்களால் மோகமடைந்து குணங்களின் தொழில்களில்
பற்று வைக்கின்ற மந்த புத்தியினரைத் தெளிந்த அறிவுடையோர் கலங்கும்படி செய்யலாகாது(29)
கர்மங்களை எல்லாம் எனக்கர்ப்பணித்து, சித்தத்தை சைதன்யத்தில்
வைத்து,ஆசையையும் மமகாரத்தையும் அகற்றி, மனக் கொதிப்பின்றிப் போர் புரிவாயாக.(30)
எனது இக்கோட்பாட்டை எம்மனிதர் சிரத்தையுடனும் பொறாமைப்
படாமலும் பின் பற்றுகிறார்களோ அவர்கள் கூட வினையினின்று விடுபடுகிறார்கள்(31)
எனது இக்கொள்கையை மற்று யார் இகழ்ந்து பின் பற்றுவதில்லையோ,
எவ்வித ஞானமும் விவேகமும் இல்லாத அம்மூடர்களைக் கெட்டுப் போனவர்களென்று அறிக.(32)
ஞானியும் தன் இயல்புக்கு ஏற்றபடி நடக்கிறான்.உயிர்கள்
அவ்வவற்றின் குணங்களைப் பின்பற்றுகின்றன.தடை செய்வதால் ஆவதென்ன.?(33)
இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பு
உண்டு.அவைகளுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்குச் சத்துருக்கள்.(34)
நன்கு இயற்றப்படும் பரதர்மத்தைவிட, குணமில்லாத் தன் தர்மம்
மேலானது. ஸ்வதர்மத்தில் இறப்பது மேல்.பிறர் தர்மம் பயம் தருவதாம்.(35)
அர்ஜுனன் சொன்னது
விருஷ்ணி குலத்தோய் இப்புருஷன் இச்சிக்காதிருந்தும்
பலவந்தமாய் ஏவப்பட்டவனாய், எதனால் தள்ளுண்டு பாபம் செய்கிறான்.?(36)
ஸ்ரீபகவான் சொன்னது.
ரஜோ குணத்து உதித்த, இக்காமம்தான், இக்குரோதம்தான் எதையும்
உண்ணவல்லது.;பெரும் பாபமுடையது; ஈண்டு இதை எதிரியென அறிக.(37)
நெருப்பானது புகையினாலும் கண்ணாடி அழுக்கினாலும் , சிசு
கருப்பையினாலும் மூடப்பட்டிருப்பது போன்று ஞானம் ஆசையினால் மூடப்
பட்டிருக்கிறது(38)
குந்தியின் மைந்தா,ஞானியின் நித்திய சத்துருவும்,
காம வடிவெடுத்ததும் ,நிரப்ப முடியாததும், போதும் எனாததும் ஆகிய இந்த ஆசையினால்
மூடப்பட்டிருக்கிறது,(39)
இந்திரியங்களும் மனதும், புத்தியும் அதற்கு இருப்பிடம் என்று
சொல்லப் படுகிறது.இவைகளால் இது ஞானத்தை மறைத்து மனிதனை மயக்குகிறது.(40)
ஆகையால் பரதவீர ,நீ முதலில் இந்திரியங்களை அடக்கி ஞான
விக்ஞானத்தை அழிக்கின்ற பாப வடிவமான ஆசையை அறவே ஒழித்துவிடு.(41)
இந்திரியங்கள் (உடலினும்) பெரிதாம். அவற்றினும் மேலானது மனம்.
புத்தியோ மனத்தைவிடப் பெரியது.புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா.(42)
மஹாபாகுவே, இங்ஙனம் புத்தியிலும் மேலான ஆத்மாவால் ஆத்மாவை
அடக்கி. வெல்ல முடியாததும் ஆசை வடிவு உடையதுமாகிய சத்துருவை அழைத்து
விடுவாயாக.(43)
கர்ம யோகம் நிறைவு.
படித்தேன்.
பதிலளிநீக்குசெயல் இன்மையைவிடச் செயல் சிறந்தது செயல் இலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது..
பதிலளிநீக்குஅருமையான தத்துவங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!
கீதையின் கர்மயோகம்..
பதிலளிநீக்குதொடர்கின்றேன் ஐயா!..
தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குமீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்....
ஆஜர், சார்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
ரசித்த சுலோகத்துடன் கருத்து நன்று. வருகைக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
தொடர்ந்துவருகை தருவதற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி வெங்கட் சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகை நன்றியுடன் ஏற்கப் படுகிறது ஐயா.
கர்மயோகம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் வாழ்வில்.
பதிலளிநீக்குஅருமை.
அருமையாக செல்கிறது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு//யக்ஞ கர்மம் தவிர மற்ற கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்கிறது. குந்தியின் மைந்தா, யக்ஞத்துக்கான கர்மத்தைப் பற்றற்று நன்கியற்று.(//
பதிலளிநீக்குகட்டுண்கிறது= இங்கேயும்
நன்கியற்று= இங்கேயும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லி இருக்கலாமோ!
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமேடம்.
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
/அருமையாகச் செல்கிறது/ நன்றி சார்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
/கர்மத்தால் இவ்வுலகம் கட்டுண்றது/
கடை நிலை உயிர்கள் பறித்துப் புசித்து உயிர் வாழ்கின்றன. இடை நிலை உயிர்களிடம் பறித்தல் குறைந்து பங்கிடுதல் அதிகரிக்கிறது. தலை நிலை என்பது தனக்கென்று தேடாது பிறர்க்கென்றே பண்புடன் படைப்பது.ஆக கர்மத்தால் கட்டுண்பதில் இம்மூன்றும் அடங்கும்
யக்ஞத்துக்கான கர்மம் என்றால் தன்னலம் கருதாப் புண்ணியச் செயல், தியாக புத்தியுடனான சேவை ஈசுவர ஆராதனையாக ஆற்றும் வினை இவை யாவும் யக்ஞம் எனலாம்
கீதா மேடம் நான் தமிழில் சுலோகங்களை பதவுரையாக எழுதுகிறேன் விரிவுரையாகச் சொல்லப் போனால் ....என்னால் இயலுமோ தெரியவில்லை. இம்மாதிரி ஏதாவது குறிப்பிட்டுக் கேட்டால் மறு மொழியாக எழுத முயற்சிக்கிறேன் வருகைக்கௌ நன்றி.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன். தொடருங்கள்.
பதிலளிநீக்கு