Tuesday, September 16, 2014

கடிகார நினைவுகள்


                                       கடிகார நினைவுகள்
                                      ----------------------------


ஒரு செய்தி படிக்கும்போது மனம் அந்த செய்தியை ஒட்டிய நினைவுகளில் சங்கிலித் தொடர்போல் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது அந்த மாதிரியான நினைவின் ஒரு சஞ்சரிப்பே இப்பதிவு. இரண்டு நாட்களுக்கு முந்தைய THE HINDU பெங்களூர் பதிப்பில் HMT  கைக்கடிகாரங்களின் விற்பனை இரண்டு மூன்று நாட்களாகக் கூடி யிருக்கிறது என்றும் தும்கூரில் இருக்கும் அந்த தொழிற்சாலை மூடப்படலாம் எனவும் செய்தி படித்தேன். கண்கள் செய்தியில் இருந்தபோதே மனசு இறக்கை கட்டிக்கொண்டு பின்னோக்கிப் பயணித்தது. 1964-ம் வருடம் என்று நினைக்கிறேன் அப்போது எனக்கு மனைவியாக வரப் போகிறவள் HMT வளாகத்தில் இருந்த வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தாள்.அவளுக்கு தர உறுதி அளிக்கும் செக்‌ஷனில் பயிற்சி. ஜப்பானியர்களோடு ஏற்பட்ட ஒப்பந்தப் படி தொடங்கப் பட்ட தொழிற்சாலை அது. மூன்றாண்டு  பயிற்சி முடிந்த பிறகு  குறைந்தது ஐந்து ஆண்டுகாலம் பணி செய்வேன் என்று பத்திரத்தில் எழுதிக் கையொப்பமிட்டிருந்தாள். இல்லையென்றால்  அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு தருவதாகவும் ஒப்பந்தம். அதற்கு பொறுப்பேற்று அவளது மாமா surety  கையொப்பம் இட்டிருந்தார்.
எங்களுக்கு 1964-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நிகழ்ந்தது. நான் அப்போது HAL ENGINE DIVISION-ல் பணியில் இருந்தேன். என் பணி முன்னேற்றம் கருதியும் சிலபலகுடும்ப சூழல்களாலும் நான் HAL வேலையை ராஜினாமா செய்து சென்னையில்(அப்போது மெட்ராசில்) லூகாஸ் டிவிஎஸ் சில் பணியில் அமர்ந்தேன். அது ஏப்ரல் மே மாதம் 1965-ல். காதல் மனைவியைப் பிரிந்து சென்னையில் வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. அவளது பய்ற்சி வேலையை ராஜினாமாச் செய்யச் சொல்லி தனிக்குடித்தனம் மெட்ராசில் அமைத்தேன்.
அவள் HMT யில் ஒப்பந்தத்தில் இருந்ததால் எப்பாது கேஸ் போடுவார்களோ என்ற பயத்திலேயே இருந்தாள். நான் என்ன ஆனாலும் சமாளிக்கலாம் என்று தைரிய மூட்டினேன்.அவளுக்கு அவள் மாமா என்ன சொல்வாரோ .செய்வாரோ எனற பயம்.
பயப்பட்டது போலவே HMT ல் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்தாள். நான் அவளிடம் JUST IGNORE என்றேன். பத்து நாட்களுக்குஒருமுறை அம்மாதிரி நோட்டீஸ் வந்து கொண்டிருந்தது. அவளது மாமாவுக்கும் அதே போல் போயிருக்கிறது. நான் அப்படி நிலைமை கட்டுக்கு மீறிப் போனால் நஷ்ட ஈட்டின் தொகையை மாதாமாதம் ஒரு சிறிய தொகை கொடுக்கலாமென்றும் நஷ்ட ஈட்டை ஒரே தடவை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தமில்லை என்றும் சொல்லி தைரியப் படுத்தினேன். ஆனால் அவர்களது ஒரு கடிதத்துக்காவது பதில் போடவில்லை. நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படியும் கடிதங்கள் வந்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எழுதி கடிதங்கள் வந்தது/.நான் அவளிடம் சொன்னபடி we just ignored every letter.  நாளாவட்டத்தில் கடிதங்களும் நோட்டீசுகளும் வருவது நின்றன. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நான் செய்தது சரியா என்னும் கேள்வி எழுகிறது அவள் மொத்தமாக ஒன்பது மாதங்கள் பயிற்சியில் இருந்தாள். எல்லாம் சேர்த்த தொகையாக மாதம் 90 ரூபாய் வருமானம். நஷ்ட ஈடு என்றால் மூன்றாண்டு பயிற்சிப் பணமும்  பிறகு பணியில் கிடைக்கப் போகும் ஐந்தாண்டுகால சம்பளமும் அடைக்க வேண்டி இருந்திருக்கும்.
வாழ்க்கையில் எதையும் சமாளிக்கலாம் என்ற இள ரத்தம் ஓடிய காலம் அது.
நினைவுகள் திசை மாறுகின்றன.
நான் அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோது என் நண்பன் ஒருவன் நல்லவசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் ஒரு கைக்கடிகாரம் கட்டியிருந்தான். அதை மிகவும் பெரூமையோடு எல்லோருக்கும் காட்டிப் பெருமை கொள்வான். அது ஒரு ரோலெக்ஸ் வாட்ச். உலகிலேயே சிறந்தது என்று கூறுவான். அதை அடுத்தது OMEGA வாட்ச் சிறந்தது என்பான். என் கையில் கடிகாரம் ஏதுமிருக்கவில்லை. அப்போது உறுதி எடுத்தேன் நான் காசு கொடுத்து எனக்காக வாட்ச் வாங்குவதென்றால் அது ஒரு ரோலெக்ஸோ அல்லது ஒமேகாவோ வாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஆனால் என்னால் அம்மாதிரி வாட்ச் காசு கொடுத்து வாங்க முடியவே இல்லை.நான் ஜப்பான் போயிருந்தபோது நண்பர்களுக்காக மூன்று சோலார் வாட்சுகள் வாங்கி வந்தேன். 1971-ல் என் நண்பன் ( இப்போது அமேரிக்காவில் இருக்கிறான்)ஒரு சீகோ வாட்ச் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான் அது வைப்ரேஷனில் ஓடும். சாவி கொடுக்க வேண்டாம் பேட்டரி கிடையாது. இன்றும் என்னிடம் இருக்கிறது ஒரு முறையேனும் ரிப்பேர் என்று ஆனதில்லை. ஆனால் சற்றுக்கனமாக இருக்கும்.
அதன் பின் என் மகன் அவனது முதல் சம்பளத்தில் ஒரு TITAN வாட்ச் வாங்கிக்கொடுத்தான் (1988 என்று நினைக்கிறேன்) அதைத்தான் இப்போது கட்டிக் கொண்டிருக்கிறேன்  என் பேரன் சொல்லுவான். அவனது முதல் சம்பளத்தில் அவன் வாங்கிக் கொடுக்கும் கைக்கடிகாரம் என் கையிலிருக்க வேண்டும் என்று. அவனும் படிப்பு எல்லாம் முடிந்து இப்போது வேலைக்குப் போகிறான். எனக்காக வாட்ச் வாங்கி வைத்திருக்கிறானாம்.
HMT வாட்ச் தொழிற்சாலை பற்றிய செய்தி தலை முறை நினைவுகளில் முடிகிறது
 
என் பேரன்
.     

33 comments:

 1. இது ஒரு சந்தோஷம்தான்!

  ReplyDelete
 2. //அந்த தொழிற்சாலை மூடப்படலாம் எனவும் செய்தி படித்தேன். //

  செய்தி படித்ததும் உங்களுக்கு என்னன்னவோ நினைவுகள்!

  இந்த செய்தி உங்கள் வாயிலாகத் தெரிந்ததும் எனக்கென்னவோ'ஐயோ' என்றிருந்தது.

  HMT-யுடன் நேரடி சம்பந்தம் எனக்கு எதுவும் இல்லை தான்; இருந்தும்
  இந்த 'ஐயோ'வுக்கான காரணம் வேறே. அது ஒரு பொதுத்துறை நிருவனம் என்பதால்.

  ReplyDelete
 3. HMT தொழிற்சாலை மூடப்படுவது கேட்டு வருத்தமே. நல்ல நிலையில் இயங்கும் தொழிற்சாலைகளை எப்படி சரியாக நடத்தாமால் நஷ்டத்தில் இயங்கவைத்து மூடு விழா நடத்துவது எப்படி என்பதை நமது HMT போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் போல.

  ReplyDelete
 4. மலரும் நினைவுகள்....

  ReplyDelete
 5. காலத்தைப் பின்னோக்கி நகரச் செய்த கடிகார நினைவுகள் சுவாரஸ்யம் sir.

  ReplyDelete
 6. கடிகாரமுள் முன்னும் பின்னுமாய் நகர்ந்து அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது..

  ReplyDelete
 7. HMT Watches Manufacturing - Bangalore Factory க்கு உள்ளே நேரில் சென்று அனைத்தையும் பார்த்து ரஸித்துள்ளேன்.

  இந்தத்தொழிற்சாலை நலிவடைந்து வருகிறது என்பதாலேயே, நம் BHEL இல் 10 ஆண்டுகள் Service முடித்தவர்களுக்கெல்லாம், ஓர் HMT Watch வீதம் தருவதாக முடிவெடுத்து, அதுபோல நமக்கெல்லாம் கொடுக்கப்பட்டு வந்தது. இன்றும் இது தொடர்வதாகவே அறிகிறேன்.

  காலம் மாற மாற Science & Technology வளர வளர இதுபோன்ற மூடுவிழாக்கள் தவிர்க்க முடியாதவைகளாகவே உள்ளன.

  எனினும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் ஓர் பிரிவு இவ்வாறு மூடப்போவதை நினைக்க மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

  ReplyDelete
 8. HMT பிரியத்துக்குரிய கைக்கடிகாரம்.மூடப்படுவடஹி அறிந்து மனதில் எதற்கோ பாரம்.. இதே போல ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் (ஊட்டி) மற்றும் BSNL மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களையும் மூடப் போவதாக இன்று செய்தி வாசித்தேன்..

  காலம் மாறுகின்றது. காட்சியும் கருவியும் கூடவே மாறுகின்றன.

  ReplyDelete

 9. @ ஸ்ரீராம்
  என் சந்தோஷத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete

 10. @ ஜீவி
  நீங்கள் ‘ஐயோ’ என்று சொல்லும்படியாக பல பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழா கண்டு விட்டன.HMT Machine tool factory. Indian Telephone Industries போன்ற பல நிறுவனங்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. பொதுவாக இம்மாதிரி நிறுவனங்கள் மிகவும் மெத்தனமாக செயல் பட்டது என்பதே முக்கிய காரணம்

  ReplyDelete

 11. @ வே.நடனசபாபதி
  பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு காலத்தில் எந்த போட்டியும் இல்லாமல் இருந்தது. காலத்துக்கு ஏற்றாற்போல் அவர்களின் தொழில் கலாச்சாரம் மாறவில்லை.

  ReplyDelete

 12. @ கோபு சார்
  நான் பணி செய்த காலத்தில் எனக்கு எந்த வாட்சும் அன்பளிப்பாகக் கிடைக்கவில்லை.

  ReplyDelete

 13. @ ஸ்கூல் பையன்
  மலரும் நினைவுகளே இப்போது வாழ்க்கை என்றாகி விட்டது. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 14. @ ராமலக்ஷ்மி
  நினைவுகள் என்னும் டைம் மெஷினில் பயணம் தொடர்கிறது. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 15. @ இராஜ ராஜேஸ்வரி.
  நான் எனக்கு வேண்டியவர்களிடம் கூறுவது ‘கையில் கடிகாரம் கட்டிக்கொண்டதால் காலத்தையே கட்டி ஆள்வதாக நினைக்கக் கூடாது’ வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 16. @ துரை செல்வராஜு
  இது ஒரு போட்டி உலகம் இங்கு survival of the fittestஎன்பதே நிஜம். பொதுத்துறை நிறுவனங்களில் hire and fire என்னும் கொள்கைக்கு இடமில்லை. உரிமைகளுக்கே முதலிடம் கடமைகள் பேசுபவன் பின்னால் தள்ளப்படுவான்.
  பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழா நடத்தினாலும் real estate தொழில் நடைபெறுகிறது என்றே தோன்றுகிறது. hmt வளாகத்தில் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் காண்கிறேன்
  வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 17. BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி. :( பார்ப்போம். எச் எம்டி கைக்கடிகாரம் பத்தி எனக்கும் சில மலரும்நினைவுகள் உண்டு. டைடனும் இருந்தது. ஆனால் இப்போ ஓடவில்லை. எச் எம்டி, கீ கொடுத்தால் இப்போதும் ஓடும். இப்போல்லாம் கைக்கடிகாரமே கட்டுவதில்லை. :)

  ReplyDelete
 18. ஒரு செய்தியைத் தொடர்ந்து
  பின்னப்பட்ட பதிவு மிக மிக அருமை
  வாட்ச் குறித்து நிச்சயம் அனைவரிடமும் ஒரு
  சுவாரஸ்யமான கதை இருக்கும்
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நானும் இந்த செய்தி பார்த்தவுடன் சில நினைவுகளில் மூழ்கினேன்......

  இப்போதெல்லாம் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வதே இல்லை என்றாலும் முதன் முதலில் கட்டியது அப்பா பயன்படுத்திய HMT Watch தான்.

  ReplyDelete

 20. @ டாக்டர் கந்தசாமி
  வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 21. @ கீதா சாம்பசிவம்
  BSNL மூடப்படும் செய்தி என் கண்ணில் படவில்லை. ஆனால் தொலை பேசிகள் உற்பத்தி செய்யும் ITI மிகவும் க்ஷீண தசையிலோ, அல்லது மூடப்படும் நிலையிலோ இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

 22. @ ரமணி
  நான் என் பேரன் தரப்போகும் வாட்சை எதிர்நோக்கி இருக்கிறேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 23. @ வெங்கட் நாகராஜ்
  உண்மைதான் .பலருக்கும் நினைவுச் சுழல்கள் வரலாம். என் நினைவுக்கு எட்டிய வரை என் அப்பா வாட்ச் ஏதும் கட்டியதில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 24. //BSNL மூடப்போறாங்க என்பது எனக்குப் புதிய செய்தி.//

  BSNL பொன் முட்டையிடுகிற வாத்து. விஷயம் தெரிந்தவர்கள் அதை அரியத் துணிய மாட்டார்கள்!

  ReplyDelete
 25. //பொதுவாக இம்மாதிரி நிறுவனங்கள் மிகவும் மெத்தனமாக செயல் பட்டது என்பதே முக்கிய காரணம்.. //

  அதுவல்ல காரணம். சில தயாரிப்புகள் out date ஆகும் பொழுது அந்த தயாரிப்புகளையே ஒட்டிய வேறு தொழிலாக புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்.

  மொபைல் வருகையால், லேண்ட் லைன் டெலிபோன்கள் மவுஸ் இழந்தாலும், இணையத்திற்கு அது அவசியமாகியிருப்பது போல!

  இன்றைய மொபைல் உலகம் என்பது சாதாரணமானதல்ல;அமிர்தவர்ஷினியாய் அத்தனையையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இணையமும், மொபைலும் கைகோர்த்துக் கொண்டு நாளைய உலகில் நாஸிக் பிரஸ் வேலையையே ரீபிளேஸ் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அந்தளவுக்கு வளர்ச்சி கொடிகட்டிப் பறக்கிறது!

  ReplyDelete
 26. முதல் கைக்கடிகாரம், முதல் சைக்கிள் என்று எல்லாமே சந்தோஷம்தான்.

  ReplyDelete

 27. @ ஜீவி
  BSNL மூடப் போகிறார்களா என்பது தெரியவில்லை. சில உர்ஜிதமாகாத செய்திகள் எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கலாம்

  ReplyDelete

 28. @ ஜீவி
  மெத்தனம் என்பதே போட்டிகள் இல்லாதபோது வருவது. இப்பொழுது பல தனியார் நிறுவனங்களுடன் போட்டி என்று வரும்போது எதிர்கொள்ளும் சக்தி மாற்று செயல்திறன்களுடன் மோதுவதுபோன்று குறைந்து அல்லது இல்லாமல் போய் விட்டது. உங்கள் மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 29. @ தி. தமிழ் இளங்கோ
  முதல் காதல் ,முதல் முத்தம் என்று சொல்லிக் கொண்டேபோகலாம் சந்தோஷமான நினைவுகளுக்கு. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 30. பிஎஸ் என் எல்லையும், மஹாநகர் டெல்காமையும் ஒன்று சேர்க்கப் போவதாகக் கேள்விப் படுகிறேன். எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியாது. பி எஸ் என் எல்லின் தரம் இதனால் மேம்படும் என்கிறார்கள். பார்ப்போம்.

  ReplyDelete
 31. D O T,Banks,L I C,போன்ற பானங்காய்ச்சி மரங்களை வேறிலேயே குழி பறித்த்து கபளீகரம் செய்ய

  வல்லவர்களான ஆட்சியாளர்களால் நிறைந்த சுதந்திர இந்தியா ...B S N L ஐ இழுத்த்துமூடி சாவியை

  Reliance இத்யாதி corporate boss களிடம் கொடுத்த்து ,அவன்களிடம் நன்றிக்கடன் செலுத்த்த அமர்த்த்தப்ப்பட்டிருப்பவர்கள்..இன்னும் பார்க்கத்‌தான் போகிறோம்...Govt bus-ல் போகாதே;போய்ச்சேராது.private

  bus-ல் போ;Govt hospital போகாதே;நோய் குணமாகாது; private hospital -க்குப் போ;Govt school -க்குப் போகாதே

  படிப்பு வராது;private school-க்குப் போ..இவை தான் சுதந்திர இந்தியா-வின் மறுமலர்ச்சி..சாதனைகள்...

  மாலி

  ReplyDelete

 32. @ V.Mawley
  வெகு நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது.எனக்குத் தோன்றுகிறது. என்னதான் நாம் நினைப்பதாயிருந்தாலும் இந்திரா காந்திக்கு வங்கிகளை தேசிய மயமாக்கியதற்கு நன்றி செலுத்த வேண்டும்.

  ReplyDelete