ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

சதிகார உலகம்.....?



                                                  சதிகார உலகம்.....?
                                                  ------------------------- 


ILLUMINATI என்பது ஒரு இயக்கம். 1776-ம் ஆண்டு வாக்கில் நிறுவப் பட்ட பவேரியன் இல்லுமுனாடி ஒரு ரகசிய இயக்கமாக இருந்தது. அண்மைக் காலத்தில் இந்தப் பெயர் ஒரு சதிக் கும்பலை பிரதிபலிக்கிறது. இவர்கள்தான் சதி நிறுவனமாக இயங்கி பல நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தாக்கள் என்று நம்பப் படுகிறது. பல அரசுகளையும் பெரும் நிறுவனங்களையும் கைப் பிடிக்குள் வைத்து காய் நகர்த்தும் சாகசக் காரர்கள். இந்த அகிலத்தையே தங்கள் கட்டுக்குள் கொண்டுவர செய்யும் முயற்சிகள் ,யார் இதன் மூலகர்த்தா என்று அறிய முடியாதபடி செய்யும் காரியங்கள் நம்ப முடியாதவையாக இருக்கிறது.சரித்திரப் பிரசித்தி பெற்ற வாட்டர்லூ  யுத்தம், ஃப்ரென்ச் புரட்சி, ஜனாதிபதி கென்னெடி கொலை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருந்திருப்பார்களோ என்று சந்தேகம் இருக்கிறது.


இந்த இயக்கத்தில் முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ராங்க்லின் பெரும் பங்கு வகித்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.புனித GEOMETRIC DESIGN என்று நம்பப்படுபவை எல்லாம் அமெரிக்க சமூகத்திலும், வாஷிங்டன் டீ.சியின் நெடுஞ்சாலைகளிலும் , முக்கிய தேசியக் கட்டமைப்புகளிலும் , அமெரிக்க அரசாங்க இலச்சினையிலும் விரவிக் கிடக்கிறது.

இல்லுமினாடி இயக்கம் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆனால் அரசை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க FEDERAL RESERVE அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. அமெரிக்கா சுதந்திரம் அடைந்தபோது பணப்புழக்கம் தங்கத்தின் அடிப்படையில் இருந்தது. 1920-களில் பெரிய வங்கி முதலாளிகளான ராக்ஃபெல்லர், மோர்கன் ,வார்பர்க், ரோத்சைல்ட் போன்றோரின் ஆதரவில் வெற்றி பெற்ற வில்சன் FEDERAL RESERVE ACT சட்டம் கொண்டுவந்தார். அந்தச் சட்டமே சில வங்கியாளர்களால் எழுதப் பட்டது. இது தங்கத்தின் அடிப்படை என்பதை மாற்றியது. அரசு வங்கியிலிருந்து கடன் வாங்கும். வங்கி பணத்தை அச்சடித்துக் கொடுக்கும். அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணம் உட்பட எல்லாம் வங்கிக்கே சேரும் அரசு எப்போதும் வங்கியின்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பணப்புழக்கம் FEDERAL RESERVE-ன் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் நிதி நிலைமை தணிக்கைக்கு உட்படுத்தப் படுவதில்லை.ஜான் எஃப். கென்னடி ஒரு புதிய நிதி கொள்கையைக் கொண்டு வருவதன் மூலம் அரசை எப்போதுமிருக்கும் கடன் சுமையிலிருந்து மீட்க நினைத்தார்..அவருக்கு நேர்ந்த கதி தெரிந்த பிறகு பின் வந்த எவரும் எந்த முயற்சியும் எடுக்க முடியாத நிலை அறிந்தவர்களே.


இதை இவ்வளவு தூரம் கூற வேண்டியதன் அவசியம், உலகின் பெரிய ஜனநாயகமே அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா என்னும் சந்தேகத்தால் எழுந்ததே பத்திரிகைகள் தொலை தொடர்பு நிலையங்கள் போன்ற மீடியாவும் இவர்கள் கையில்தான்.
.
 இல்லுமினாடியின் அடையாளம் அமெரிக்க டாலர் நோட்டில் காணலாம்.ஒரு டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிட் உம் அதன் மேல் ஒரு கண் படமும் இருக்கும். இது அவர்களது இலச்சினை. எல்லாவற்றையும் கண்காணிக்கும் கண். பிரமிடின்  அடியில் இருக்கும் ரோமன் எண்களைக் கூட்டினால் 1776 என்ற எண் வரும்.இடது கீழ்புறத்தை ஒரு பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால் ஒரு ஆந்தையின் உருவம் தெரியும்.

அனேக கார்பொரடெ நிறுவனங்களின் இலச்சினைகளில் எல்லாவற்றையும் கண்காணிக்கும் கண்ணின் உருவம் தெரியும். உ-ம். CBS ,AOL போன்றவை. நடந்து கொண்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக்ஸின் மாஸ்காட் உருவ்ங்களிலும் இந்த இலச்சினை தெரிகிற்து. பிரமிட் சின்னமும் இவர்களின் அடையாளமாகும். ஒலிம்பிக் ஸ்டேடியம் முழுவதும் ஒளி வீச ஏற்பாடு செய்திருக்கும் விளக்குகளும் பிரமிட் ஷேப்பில் இருப்பது தற்செயலானதா.?ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாத் இந்தப் போட்டியிலிருந்து அவரது நாடு விலகும் என்று அச்சுறுத்தினார். காரணம் 2012 என்னும் ஆண்டு குரிப்பிடப் பட்டிருந்த விதம் ZION  என்பது போல் தெரிகிறது என்பதால்.

அயல் கிரக வாசிகள் மனித உருக்கொண்டு நம்முள் ஊடுருவி இருப்பார்களொ என்றும் சந்தேகம் உண்டு. அமெரிக்காவின் MAJESTIC 12 என்னும் பெயர்கொண்ட ஏஜென்சி, ஒரு நிழல் அரசாகக் கருத படுகிறது. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் AREA 51 என்ற இடம் பற்றுய தகவலே 1995-ம் ஆண்டுக்குப் பிறகுதான் தெரியும். RFID எனும் ரேடியோ ஃப்ரீகுவென்சி ஐடெண்டிஃபிகேஷன் மூலம் எல்லோரையும் கண்காணிக்கும் திட்டமும் வரக் கூடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் எண்ணம் அனாதி காலமாக இருந்து வருகிறது. அடால்ஃப் ஹிட்லர் அவர்களது இனமே உயர்ந்தது என்று கருதி யூதர்களைக் கொன்று குவித்தான். பண பலத்தால்தான் உலகை கட்டுப் படுத்தலாம் என்ற எண்ணமே , எண்ணை வள நாடுகளை ஆக்கிரமிக்கும் பணியில் அமெரிக்கா போன்ற நாடுகளை ஈடுபடுத்துகிறது. ஈராக், லிபியா, குவைத் என்று ஒன்றன்பின் ஒன்றாக ஆக்கிரமிப்புக்குள் வந்தாயிற்று. அடுத்தடுத்து நிகழும் சச்சரவுகளும் உள்நாட்டுப் போர்களும் இதையே குறிக்கின்றன. எண்ணை வளம் முழுவதும் கட்டுக்குள் வந்தால் உலக அரசு என்னும் அவர்களுடைய இலக்கு அடைய சாத்தியதை ஏற்படும். எண்ணை இல்லாமல் எரிபொருள் தயாரிக்க முடியும் என்னும் ஆராய்சிகளையே மேலை நாடுகள் குலைக்கின்றன.

அமெரிக்காவில் செப்டம்பர் பதினொன்றாம் நாள் நடத்தப் பட்ட பயங்கரமும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி அழிவுகளும் இந்த இயக்கத்தால் நடத்தப் பட்டதோ என்றும் கருத்துகள் உலவுகின்றன.

அங்கும் இங்கும் சில நாடுகளில் மக்கள் பொங்கி எழுகிறார்கள் எனும் மாயை உருவாக்கப் பட்டு , அவற்றைக் கபளீகரம் செய்யும் முயற்சியில் இந்த இல்லுமினாட்டியின் பங்கு நிறையவே இருக்குமோ என்னும் சந்தேகம் எழுகிறது.

இல்லுமினாட்டி பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று என் பேரன் கேட்டான். தெரியாது என்று கூறி வலையில் சற்று மேய்ந்தேன். ஏராளமான பதிவுகள் இருக்கின்றன. அண்மையில் எரிதழல் வாசன் ஒரு ஆதங்கப் பதிவு எழுதி இருந்தார். அநேக செயல்கள் கண்ணுக்குத் தெரியாத சூத்திர தாரிகளால் நிகழ்த்தப் படுகிற்தோ என்னும் சந்தேகம் மற்றும் சாத்தியக் கூறுகளின் விளைவே இப்பதிவு. எல்லாம் நெட்டில் சுட்ட விஷயங்களே. என் கற்பனை சிறிதும் இல்லை.   ,

                                              இல்லுமினாட்டியின்   இலச்சினை




                      லண்டன் ஒலிம்பிக்ஸ் மாச்கட்ஸ். எதையும் காணும் கண்.
               




                                             2012 என்கிறதா  ZION என்கிறதா,?

அமெரிக்க ஒரு டாலர் நோட்டு

13 கருத்துகள்:

  1. Da Vinci Code என்னும் புகழ் பெற்ற நாவலை எழுதிய Dan Brown அவர்கள், தனது மற்றொரு நாவலான Angels and Demons-ல் இல்லூமினாட்டிகளைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்,

    பதிலளிநீக்கு
  2. நிழல் அரசாங்கம் என்றுதான் இதுவரை கேள்விப் பட்டு இருந்தேன். இல்லூமினாட்டிகள் ( ILLUMINATI ) என்று விவரமாக இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பதிவும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய மரமண்டைக்கு ஒண்ணும் புரியல.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பேரனால் புதிய தகவலை தெரிந்து கொள்ள முடிந்தது....

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    பதிலளிநீக்கு
  6. 'உயிர்மை" இத‌ழ்க‌ளில், திரு ராஜ்சிவா இதுப‌ற்றீ சென்ற‌ மாத‌ங்க‌ளில் மிக‌ விரிவாக ப‌ல‌ வார‌ங்க‌ளாய் எழுதி இருக்கிறார். மிக‌வும் நுணுக்க‌மான‌, தெளிவான‌ க‌ட்டுரை. http://uyirmmai.com பாருங்க‌ள்.

    பதிலளிநீக்கு
  7. இதுவரை அறியாத
    அதிர்ச்சியூட்டும் தக்வல்
    அதிகம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    குறிப்பாக உங்கள் பேரனுக்கும்

    பதிலளிநீக்கு
  8. அநேக செயல்கள் கண்ணுக்குத் தெரியாத சூத்திர தாரிகளால் நிகழ்த்தப் படுகிற்தோ என்னும் சந்தேகம் மற்றும் சாத்தியக் கூறுகளின் விளைவுகளைத் தொகுத்தளித்த அதிர்ச்சியான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  9. செப் 11 இல்லூமினாடியின் செயல் என்பது holocaust நடக்கவில்லை என்பதற்கிணையான பொறுப்பற்ற கருத்து. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்து.
    அல்லாவின் அருளால் செப் 11 நல்லபடியாக எதிர்பார்த்ததற்கு மேலாகவே சிறப்பாக முடிந்தது என்று கை கொட்டிய பின் லாடன் விடியோ இன்னமும் கிடைக்கிறது. இதை திசை திருப்புவது விஷமம்.

    பதிலளிநீக்கு

  10. @ கரந்தை ஜெயக்குமார்,
    @ தி. தமிழ் இளங்கோ,
    @ நண்டு@நொரண்டு,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ திண்டுக்கல் தனபாலன்.
    @ வாசன்,
    @ ரமணி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ அப்பாதுரை.
    படித்துப் பின்னூட்டமிட்டவர்களுக்கு என் நன்றி. உயிர்மை இதழ்களில் ராஜசிவா எழுதிய கட்டுரைகள் பல (வாசன் கூறியது )படித்தேன். அயல் கிரக வாசிகள் பற்றியசில அனுமானக்கள் கண்டேன். மற்றபடி அந்த தளமே வேறு. டான் ப்ரௌனின் நாவல் நான் படித்ததில்லை. தகவலுக்கு ஜெயகுமாருக்கு நன்றி. இந்தப் பதிவில் கண்ட விஷயங்கள் ஏதும் என் கற்பனை இல்லை. பொறுப்பற்ற கருத்து , திசை திருப்பும் விஷமம் ஏதும் எனக்கில்லை. நெட்டில் சுட்டது என்று என் பதிவிலேயே குறித்திருக்கிறேன் அப்பாதுரை அவர்களே. மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இன்றைக்கும் இல்லுமினாட்டி பற்றி தமிழில் விரிவான பதிவுகள் இல்லை. சென்ற மாதம்தான் இப்படி ஒரு சொல் இருப்பதையே அறிந்து கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களைப் பற்றிய பதிவுகளையும், கானொளிகளையும் இணையத்தில் ஒருமாத காலமாக அலசி வருகிறேன். இவர்களைப் பற்றி படித்தாலே ஆன்மிகம், அறிவியல், அமானுஷ்யம், மருத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாறு போன்றவற்றைப் பற்றி நமக்கு இதுவரை இருக்கும் பார்வை புரிதல் முற்றிலும் மாறிவிடும். நான்கு வருடங்களுக்கு முன்னரே இதைப்பற்றி நீங்கள் விரிவாக எழுதியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய உலக ஒழுங்கு New World Order ஆபத்து பற்றியும் விரிவான பதிவு எழுதுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இதை முழு வீச்சில் செயல்வடிவம் கொண்டுவருபதற்கான முயற்சிகள் முன்னெப்போதையும் விட தீவிரமாக உலகெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்.
    நுகர்வு கலாச்சாரத்தின் வீழ்ச்சி இந்தாண்டு இறுதியில் தெரியும். அமெரிக்காவுக்கு தேள் கொட்ட உலகெங்கும் நெறி கட்டப் போகிறது.

    பதிலளிநீக்கு

  12. @ ராஜ்குமார் ரவி
    வருகைக்கு நன்றி உங்கள் ப்ரொஃபைலுக்குச் சென்று தொடர்பு கொள்ள முயன்று தோற்றேன்

    பதிலளிநீக்கு